தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், பாடல், விழா!

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
ஏப்ரல் மாதம் தமிழ்மொழி விழாவைக் கொண்டாட இருக்கிறோம். ஆகவே, இம்மாதம் நீங்கள் தயாரிக்கும் காணொளி, பின்வரும் கருப்பொருட்களுள் ஏதாவது ஒன்றை  அடிப்படையாகக் கொண்டு அமைக்க வேண்டும்
1. தமிழ் மொழியை நீங்கள் ஏன் ஏன் நேசிக்கிறீர்கள்?
2. சென்ற ஆண்டுகளில் நீங்கள் கலந்து கொண்ட தமிழ்மொழி விழாவைப் பற்றிய உங்கள் பார்வை / கருத்து.
3. தமிழ்ப் பண்பாடு, நாகரிகக்கூறுகளைப் பற்றிய உங்கள் காணொளி (எடுத்துக்காட்டு: விழாக்கள், திருமணம், ஆடை இன்னும் பல)
4. உங்களுக்குப் பிடித்தத் தமிழ்ப் பாடல்
காணொளியை நீங்களே பேசித் தயாரிக்கலாம் அல்லது மற்றவர்கள் பேசுவதைக் கொண்டும் தயாரிக்கலாம். தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய காணொளிகளுக்கு நீங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதும் ஏற்புடையதே.
நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை (Video), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதை ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
உங்கள் காணொளிகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10  ஏப்ரல் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

3 கருத்துரை

  1. குமரவேல் விக்னேஷ்
    ஆங்கிலோ-சீனத் தன்னாட்ச்சிப்பள்ளி

Your email address will not be published.


*