தமிழுக்கு அமுதென்று பேர்!

கவிஞர் பாரதிதாசன் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று கவிதை வடித்தார். உங்களுக்கும் தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் . தமிழ்மொழியைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் கவிதையாக எழுதி, இங்கு பகிர்ந்து பரிசுகளை வெல்லுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 3 மே 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!
****
மார்ச் 2017 கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

10 கருத்துரை

 1. என் இனிய கவிதை!
  அன்னை தந்த
  தமிழும் அழகு
  இயற்கையின் அழகு
  இலையின் அழகு
  மழையின் போது
  பூவின் அழகு!
  பகலின் போது,
  கண்ணை மயக்கும் அழகு!
  மற்றதின் வண்ணத்தைப் பார்க்கும்போது
  பறவையின் அழகு!
  அது பறந்து செல்லும் போது
  வாழ்க்கையின் அழகு!
  அதை வாழ்ந்துக் காட்டும் போது
  இயற்கை தரும் இயற்கையின் அழகு!
  இதயத்தின் இன்பத்தை
  அள்ளிப்பருகும் போது
  அழகே அழகே!
  இயற்கையின் அழகே!.. … …
  யஸ்வினி
  நியூ டவுன் உயர்நிலைப்பள்ளி

 2. தாய்மொழியாம் எங்கள் தமிழ்மொழி
  கல் தோன்றா முன் தோன்றிய மொழியாம் நம் தமிழ்மொழி
  பண்டைய மொழிளில் பழமையான மொழி நம் தமிழ் மொழி
  பாரினிலே சிறந்த மொழியாம் நம் தமிழ் மொழி
  தமிழ் மொழி போல் இனிமை வேரெங்கும் காணோம்
  இம்மொழிக்கு ஈடு நிகர் ஏதுமொழி
  நன்மொழி நூறு மொழியானாலும்
  எம்மொழி அதிலே முதன் மொழி
  செம்மொழி எங்கள் தமிழ்மொழி
  வாழ் நெறி சொல்லும் மொழி நம் தமிழ்மொழி
  உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு
  நம் மொழியை போற்றி காப்பது நம் கடமை
  தமிழன் என்று சொல்வது நம் உரிமை
  அதனால் நமக்கு கிடைப்பது பெருமை
  நம் மொழியை உணராமல் இருப்பது மடமை
  தாயும், தாய் மொழியும் உடலும், உயிரும் போன்றது
  தலைகீழ் நின்றாலும் தமிழ் எங்கள் தமிழே !
  ஆங்கில மோகம் தலை விரித்து ஆடுது
  நம் தமிழ் தவிச்சு நிக்குது
  எங்கும், எதிலும் தமிழே என்று நாதம் ஒலிக்க
  தமிழர் பெருமை உலகெல்லாம் மலர
  தமிழ் மொழி எங்கும் புலர
  தமிழா! தமிழால் ஒன்றுபடு!
  வந்தே மாதரம் தந்தவன் தமிழன்!
  வாய்மையே வெல்லும் என்றவன் தமிழன்!
  தமிழனாய் தமிழை வணங்குகிறோம்!
  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
  தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!
  வாழ்க தாய்மொழி! வளர்க தமிழ்மொழி!

  SUBATHRA SUNDARBABU
  JURONG WEST SECONDARY SCHOOL

 3. தமிழ் மொழியாய் பிறந்து
  தரணி போற்ற வாழும் தமிழ் மகளே…
  ஜாதி மத வேறுபாடின்றி
  ஒற்றுமையை உணர்த்தும் ஒளி விளக்கே…
  உயிர்களின் சுவாசத்தில்
  உறங்காமல் வாழும் உன்னத மூச்சே…
  உன் பிறந்த இடம் மட்டுமல்லாமல்
  நீ தவழ்ந்து விளையாடும் இந்தத தாயகம் எங்கும்
  உன் புகழ் ஓயாமல் பரவட்டும்…!

  செ.ஹரீஸ்வரன்
  St.Gabriel’s Secondary School

 4. தலைப்பு: பூக்கள்
  பூக்கள் மலரும் சோலை
  நான் அங்கு செல்வேன் தினமும் மாலை!
  என் மனதிற்கு இல்லை தொல்லை
  நான் மறுபடியும் வருவேன் அடுத்த நாளே!
  பூ என்பது இதழ்கள் உதிரும் வரை
  இரவு என்பது விடியும் வரை
  உறவு என்பது பேசும் வரை
  பிரிவு என்பது இணையும் வரை
  நட்பு என்பது உயிருள்ள வரை!
  ரிஷி
  நியூ டவுன் உயர்நிலைப்பள்ளி.

 5. தாய் மொழியான தமிழ் மொழி
  உயிர் நாவில் உருவான
  உலகமொழி
  நம் செம்மொழியான
  தமிழ் மொழியே
  மென்மையும் தொன்மையும்
  கலந்த தாய் மொழியே
  நீ தானே தனித்து தவழும்
  மழலை தேன் மொழியே
  இலக்கண செம்மையில் வரம்பே
  இல்லா வாய் மொழியே
  இலக்கண பொருளின்
  அணிச்சிறப்பாய் அளவெடுத்த
  செய்யுள் மொழியே
  நம் தாய் மொழியான தமிழ் மொழி
  Nandhakumar Ragavi
  Commonwealth Secondary School

 6. சிங்கார சிங்கை
  சிங்கார சிங்கையில் தமிழ் விழா
  ஆம்!சிங்கார சிங்கையில்-என்
  சீரிளம் மங்கை
  செம்மொழி அன்னை
  என் தாய் தமிழுக்கு
  ஓர் உலகளாவிய விழா! அது
  ஒரு மாதகால உற்சவம்
  நிதம் நிதம் ஒர் அவதாரம்
  அது தசமோ!சதமோ அல்ல!
  அதனையும் கடந்த எல்லையில்லாதது!
  தமிழ் தானே என்ற எண்ணமில்லாது!
  தமிழை தேனே என்று எண்ணும் நாவிற்கு
  என்றுமே தமிழ் அமிர்தம்!ஆம்,
  தமிழ் அமிர்தம்!!!
  சிங்கார சிங்கையில் -என்
  தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று-அது
  மக்கள் மனதில் ஆளும் மொழி
  அமரத்துவம் இல்லா மொழி
  கால மாற்றத்ததிற்கு ஏற்றாற்போல்-தமிழ்
  புதுப்பித்து கொள்ளும் மொழி-அதனால்
  இளமை குன்றா மொழி!
  உறவுகளுக்கு தனித்தனியே வார்த்தை கொண்ட
  தன்நிகரில்லலா தீந்தமிழ் மொழி!!!
  பெண்களை ஏழு பருவங்களாக
  பிரித்துக்காட்டும் ஒரே மொழி-என்
  கன்னி தமிழ்மொழி!!
  இனிய மொழி என்
  தாய் மொழி-தமிழ்மொழி!!
  தமிழ்மொழி!!!தமிழ்மொழி!!!
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 7. என் இனிய தமிழ்மொழி
  தேனினும் இனியமொழி
  தெவிட்டாத செந்தமிழ்மொழி
  சிந்தையெல்லாம் நிறைந்தமொழி
  என் இனிய தமிழ்மொழி.
  என் இனிய கம்பனையும்
  என் இனிய பாரதியையும்
  உலகிற்கு அடையாளம் காட்டியமொழி
  என் இனிய தமிழ்மொழி.
  ஏப்ரல் மாதம் முழுவதும்
  கொண்டாடப்படும்
  என் இனிய தமிழ்மொழி
  அதுவே என் தாய்மொழி.
  தொன்மையான மொழி
  என்றும் இளமையானமொழி
  எப்பொழுதும் அழியாதமொழி
  என் இனிய தமிழ்மொழி.
  சிங்காரச் சிங்கையிலே
  ஏப்ரல் முழுவதும் எங்கும் தமிழ்
  எதிலும் தமிழ், அதுவே
  என் இனிய தமிழ்மொழி.
  MONICA DANIEL
  FAJAR SECONDARY SCHOOL

 8. செந்தமிழான தமிழ்மொழியே!
  ஈராயிரம் ஆண்டாய் பேச்சிலும் எழுத்திலும் வாழும் என் பழந்தமிழே!
  இலக்கியமாய் இலக்கணமாய் செழிப்புற்ற என் செந்தமிழே!
  பிறமொழி கலந்தாலும் தன்நிலை மாறாத என் பைந்தமிழே!
  படித்தவரும் பாமரரும் பேசும் என் நற்றமிழே!
  இயல் இசை நாடகமாய் இனிக்கும் என் முத்தமிழே!
  பார் போற்றும் பண்பாட்டை படைத்தளித்த என் தீந்தமிழே!
  உயிர் எழுத்தாய் உதித்து மெய்யோடு வளர்ந்து
  செம்மொழியாய் உயர்ந்து நிற்கும்
  என் தாய் மொழியே!தமிழ் மொழியே! நீ வாழியவே!
  Rethinam Rebecca
  Chua Chu Kang Secondary School

 9. தந்தையை வணங்கினேன் மரியாதைக்காக
  தாயை வணங்கினேன் பாசத்திற்காக
  தமிழே உன்னை வணங்குகிறேன்
  நீ என் நாவில் தவழவேண்டும் என்பதற்காக
  தமிழ் ஒரு மொழி அவ்வளவுதானா? இல்லை,
  தமிழுக்குள் சென்று பார்த்தால் அதில்
  எத்துனை வகை.
  சிங்கப்பூரிலேயே தமிழுக்குள் பல வகை
  சிங்கப்பூருக்கென்று ஒரு கொஞ்சும் தமிழ் உண்டு
  பேசும் வீரத்தமிழ் உண்டு
  கோபத்தையும், பாசத்தையும் காட்டும் தமிழ் உண்டு
  தனிச்சுவை காட்டாத தமிழ் உண்டு
  மழலைச்செல்வங்கள் பேசும் பிஞ்சுத்தமிழ் உண்டு
  தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் கதம்பத்தமிழ் உண்டு
  இவை என் அறிவுக்கு எட்டியவை
  எட்டாமல் இன்னும் எத்துனை தமிழ்?
  இத்துனை தமிழ், தமிழின் சுவை கூட்டவா? அல்லது சுமை
  கூட்டவா?
  தமிழுக்குள் இத்துனை தமிழா?
  vaishnavi
  chua chu kang secondary school

 10. நீயே ஒரு கவிதைதானே
  தமிழே
  நீ
  வள்ளுவன் எழுதிய மொழி
  பாரதி பாடிய மொழி
  ஔவை பேசிய மொழி
  கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும்
  காணப்படும் மொழி
  தமிழே
  இராஜ இராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன்
  போன்ற மன்னர்களின் தாய்மொழி நீ
  கல்கி மற்றும் இளங்கோவடிகள்
  போன்ற எழுத்தாளர்களின் தாய்மொழி நீ
  தமிழே
  உன்னைவிட பழைய மொழியில்லை
  உன்னைப்போல இளைய மொழியில்லை
  தமிழுக்கு மூன்று எழுத்து
  இம்மூவெழுத்தே என் உயிர்மூச்சு
  இந்த உலகத்தில்
  தமிழைப்போல அழகியது இல்லை
  தமிழ் இலக்கியத்தைப்போல ஆழமானது எதுவும் இல்லை
  இனிய தமிழைப் பார்த்து தேன்கூட பொறாமைப்படும்
  ஞான தமிழின் அறிவு இந்த அகிலத்தைவிட பெரிது
  தமிழுக்கு அமுதென்று பேர்
  இல்லை, இல்லை தமிழ் அமுதைவிட சிறந்தது
  தமிழே
  உனக்கா கவிதை தேவை?
  நீயே ஒரு கவிதைதானே!
  சுப்பிரமணியன் கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*