தனிமை தேவையில்லை…

உங்கள் வகுப்புத் தோழர்/தோழியில் ஒருவர் எப்போதும் தனியாக இருக்கிறார். மற்ற மாணவர்களோடு கலந்து பழகுவதில்லை அந்தச் சூழலில் அந்தத் தோழருக்கு / தோழிக்கு எப்படி ஆறுதல் கூறுவீர்கள்? அவர்களுக்கு உதவ என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்? அவர்களைக் கலகலப்பாக மற்றவர்களிடம் பழகக்கூடியவர்களாக எப்படி மாற்றுவீர்கள்? இதைப் பற்றி உங்களுக்குத் தோன்றும் கருத்துகளை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 செப்டம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஆகஸ்ட் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்

Rebecca Chua Chu Kang Secondary school
Samiksha Commonwealth Secondary School
Dheekshitha Chua Chu Kang Secondary school

7 கருத்துரை

 1. தனிமை தேவையில்லை…
  காலை 6.00 மணி. வழக்கம் போல் என் காலை பணிகளை பம்பரம் போல் சுழன்று முடித்தேன். பிறகு என் அம்மாவிற்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன். பள்ளியில் என் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தாள் ராணி. அவள் யாரிடமும் பேசமாட்டாள், எப்போதும் தனியாகவே தன் வேலைகளை செய்வாள். நான் அனைவரிடமும் கலகலப்பாக பழகும் குணமுடையவள். எனக்கு அவளுடைய பழக்கம் விசித்திரமாக இருந்தது.
  எப்படியாவது ராணியை தோழியாக என்னிடம் பழக வைக்க வேண்டும் என்று எண்ணினேன். நானாகவே சென்று அவளிடம் பேசினேன். அவள் நன்றாக என்னிடம் பேசினாள். அவள் தன்னை எல்லோரும் ஒதுக்குவதாகவும், தான் தனிமையில் கஷ்டப்படுவதாகவும் தன் உள்ள குமுறலை என்னிடம் கொட்டினாள். அதை கேட்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்றிலிருந்து நான் முடிந்த வரை அவளுடனேயே இருக்க முடிவு செய்தேன். அவளை தனிமையில் இருக்க விடாமல் தவிர்த்தேன். எங்கு சென்றாலும் நானும் அவளுடனேயே சென்றேன். அவளுடன் பேசிக் கொண்டே இருந்தேன்.
  என் வகுப்பில் இருக்கும் மற்றவர்களையும் அவளுடன் பேச செய்தேன். ஆசிரியரிடம் சொல்லி என் அருகிலேயே அவளை அமர செய்தேன். சாப்பிடும் போதும் அவளுடன் பகிர்ந்து கொண்டேன். விடுமுறை நாட்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து
  விளையாடினோம். ஒன்றாகவே படித்தோம். அவள் தனிமை நிலையிலிருந்து விடுபட்டு, கலகலப்புடன் எல்லோரிடமும் பழக செய்தேன். அவள் இப்போது தனிமையை வெறுத்து, கலகலப்பாக பேசும் தன்மையுடயவளாகிவிட்டாள்.
  சுபத்ரா
  Jurong West secondary school

 2. தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பிளுருந்து இப்போ வரையும் நானும் மேரியும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறோம். ஏன் நாங்கள் நாங்கள் அண்டை வீட்டுனரும்கூட. இதை எல்லாம் படித்தவுடன் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வருமே? நீங்கள் நினைப்பது தவறு. என் வீட்டில் அருகில் குடி வந்த நாள் முதல் நான் மேரியுடன் பேச எவ்வளவோ முயன்றேன் ஆனால் நான் வெற்றி அடைய வில்லை.என் பெற்றோரும் அவள் பெற்றோரும் நெருங்கிய தோழர் தோழியாகி விட்டனர். அனால் இவள் மட்டும் யாருடனும் பேசாமல் அமைதியாக தன் கதை புத்தகத்தை மட்டும் படிப்பாள். அதனால் அவள் ஏன் அமைதியாக இருக்கிறாள், எல்லாத்தையும் யாருடன்வது பகிர்ந்துகொள் என்று கூறி ஒரு மின்னஞ்சலை எழுதினேன்.
  அன்புள்ள மேரி,
  நாம் இருவரும் பேசியதே இல்லை. நீ அமைதியாகவே இருந்தால் உனக்கு பிரச்சனைகள் வரும்போது பேசுவதற்கு ஆள் தேடுவை. யாரை நம்புவது என்று தெரியாமல் திக்கு முக்கடி போய் நிற்பாய். உன்னை எப்பொழுதும் நான் என் தோழியாக தன நினைத்து இருக்கிறேன். ஆனால் நீயோ யாருவுடனும் பேசாமல் இருக்கிறாய். இது போல் இருக்காதே தோழி!!! தீயவர்கள் எல்லாம் உன்னை கேலி செய்து ரசிப்பார்கள். உன்னுடன் தோழியாக வேண்டும் என்ற நான் நீண்ட நாட்களாக ஆசை பட்டு கொண்டிருக்கிறேன். நீ அமைதியாக இருப்பதால் அனைவரும் உன்னை தள்ளி வைத்துவிடுவார்கள். எதிர்த்து நில்! எல்லோருடனும் பேச தொங்கினாள் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தோழி! இதை படித்தவுடன் மனம் மாறி அனைவருடனும் பேச தொங்குவாய் என்று நான் நம்புகிறேன்.
  இப்படிக்கு,
  ரேகா.
  Noorin Ayisha
  St Hildas’ secondary school

 3. எப்போதும்போல் அன்றும் அவள் அமைதியாகவே இருந்தாள் .என் வகுப்பு மாணவியாகிய மாலா எப்போதும் அமைதியாகவே இருப்பாள் .அவள் யாருடனும் பேசவேமாட்டாள் .ஆசிரியர் கேள்வி கேட்டால்கூட சரியாகவே பதில் கூற மாட்டாள் .அதனால் அவளை கண்டாலே எனக்கு பிடிக்காது .ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளுடைய நிலைமையிலிருந்து நான் யோசிக்க தொடங்கினேன் .’இவ்வாறு எல்லோரும் நம்மை ஒதுக்கிவிட்டால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் ?’ என்னும் கேள்வியை என்னிடமே கேட்டேன் .பிறகு ,அவளை எப்படியாவது வகுப்புடன் இணைத்து ,அவள் தன் தனிமையிலிருந்து வெளியேவரவைக்கவேண்டும் என்று நான் எண்ணினேன் .நான் தினமும் அவளுடன் பேச தொடங்கினேன் .”நீ இவ்வாறு யாருடனும் பேசாமல் இருந்தால் யாருக்கும் உன்னை பிடிக்காது .அதனால் நீ உனக்காக நல்ல நண்பர்களை தேடிக்கொள்ளவேண்டும் .பெற்றோருக்கு அடுத்ததாக நண்பர்கள் மட்டும்தான் உனக்கு இறுதிவரை உறுதுணையாய் இருப்பர் .அதனால் நல்ல நண்பர்களை தேடி எல்லோருடனும் நன்றாக பழகுவது நல்லது.” என்று மாலாவுக்கு அறிவுரை கூறினேன் . பிறகு ,அவளையும் எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்ளுமாறு என் வகுப்பு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டேன் .அவர்களும் அவளை வகுப்பு நடவடிக்கைகளின்போது அனலை சேர்த்து கொண்டனர் .இதனால் மாலா தன் தனிமை நிலையிலிருந்த வெளியே வந்து எல்லோருடனும் சாதாரணமாக பழக ஆரம்பித்தாள் .ஒருவருடைய வாழ்க்கையை நல்ல வழியில் மாற்றியதை நினைத்து நான் பெருமை அடைகிறேன் .
  ரெத்தினம் ரெபேக்கா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 4. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு’ என்ற பாரதியாரின் வைர வார்த்தைகளுக்கு ஏற்ப, நம்மை சுற்றி இருப்பவர்களுடன் நாம் ஒற்றுமையாக இருந்தால், நம் வாழ்க்கை சொர்க்கம். ஆனால், தனிமை நம்மை சூழ்ந்துவிட்டால், நமது வாழ்க்கையே நரகமாகிவிடும். அப்படிப்பட்ட தனிமையான நரக வாழ்க்கையைதான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என் வகுப்புத் தோழி, நிவேத்தா. இவள் அமைதியாக இருப்பதால், யாரும் இவளிடம் பேசுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் இருந்த இவளை, தனிமையில் விட எனக்கு மனதே இல்லை. ஆகையால், நான் அவளிடம் அடிக்கடி பேசுவேன். நான் அவளிடம் பேசுவதே, அவளுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. மேலும், நான் அவளுடம் நெருங்கி பழக ஆரம்பித்ததால், அவளுடைய தன்நம்பிக்கை வளர்ந்தது. முன்பெல்லாம், நான்தான் அவளிடம் பேச்சுக்கொடுக்க வேண்டியதிருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம், அவளே என்னிடம் முதலில் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்துவிடுவாள். என் வகுப்பில் இருந்த மற்ற நண்பர்களுடன் விடுமுறையில் வெளியே செல்லும்போது, நிவேத்தாவையும் நான் அழைத்து செல்வேன். அது, அவள் மற்ற மாணவர்களுடன் பேச வாய்ப்பை உருவாக்கும். நிவேத்தாவுடன் பேச பேச, அவளை அனைவருக்கும் பிடித்தது. இவள் அனைத்து வகுப்பு மாணவர்களுடன் ஒற்றுமையாகப் பழக ஆரம்பித்தாள். இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் என்றால், ஊக்குவிப்பவர் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான். இந்தப் பழமொழியைக் கண்மூடித்தனமாகத் தேர்வுக்குப் படித்த எனக்கு, இதன் உண்மையான பொருள் எனக்கு இப்பொழுதுதான் எனக்கு முழுமையாகப் புரிந்தது.

 5. தீரன், எப்போதும் தனியாகவே இருக்கும் ஒரு மாணவன். அவன் எனது வகுப்பில் தான் படிக்கிறான். என்றைக்கும் அவன் அமைதியாகவும் தனியாகவும் இருப்பான். குழு வேலைகளின்போது அவன் ஈடுபடுவதில்லை. எவ்வளவு தான் ஆசிரியரும் பள்ளி ஆலோசகரும் கூறினாலும் அவன் கல்லுலி மங்கன் போல் இருந்தான். அவனைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவனக்கு உதவ வேண்டும் என்று நான் எண்ணி அவனிடம் பேச சென்றேன்.
  அவன் தன்னை எல்லோரும் ஏளனமாக பேசுவார்கள் என பயந்து தான் யாருடன் பழகுவதில்லை என்று கூறினான். ‘ தனி மரம் தோப்பாகாது’ என அவனுக்கு கூறினேன். அவனிடம் எல்லோரும் அப்படியில்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று எடுத்துக்கூறி எல்லோருடன் பழகவேண்டியதின் அவசியத்தையும் கூறினேன். ‘இப்போதே எல்லோருடன் பழக்கம் கொண்டால் தான் எதிர்காலத்தில் நாம் வேலை பார்க்க செல்லும்போது பிரச்சனைகள் ஏற்படாது. ஏனென்றால், பல வேலைகளில் வேலைப்பார்ப்பவர்கள் தனது சக ஊழியர்களோடு வேலைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.’ என்று அவனிடம் உரைத்தேன்.
  அவனை முதலில் கோஞ்சம் கோஞ்சமாக குழு வேலைகளில் ஈடுபட கூறினேன். பிறகு எல்லோருடனும் உரையாட ஆரம்பிக்க கூறினேன். இந்த வழிகளை அவன் மேற்கொண்டால் விரைவில் அவன் எல்லோருடைய நண்பனாகிவிடுவான். அவன் எனக்கு நன்றி கூறி என்னிடமிருந்து விடைப்பெற்றான். கூடிய விரைவில் தீரன் பலரின் நண்பனாகிவிடுவான் என நான் நம்பினேன்.
  சுப்பிரமணியன் கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி

 6. என் வாழ்க்கையில் நான் இந்த சம்பவத்தை மறக்கவே மாட்டேன். இந்த நிகழ்ச்சி என்னை ஒரு பெரியளவில் மாற்றியது. ஒரு நாள் நான் என் நண்பர்களுடன் வகுப்பில் பேசி கொண்டிருக்கும் போது, எங்கள் ஆங்கில ஆசிரியர் வகுப்பிற்கு வந்து ஒரு அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பு ஒரு புதிய மாணவனைப் பற்றியது. அவனும் அருகில் நின்றுக்கொண்டிருந்தான். அவன் பெயர் பாலு.
  பாலு யாரிடமும் அதிகம் பேச மாட்டான். இரண்டு நாள் கழித்து நான் அவனிடம் பேச முயறசி செய்தேன். ஆனால் அவன் என்னிடம் ஒன்றும் கூறாமல் சென்றான். அவன் சட்டையில் எப்போதும் கரைகள் இருக்கும். ஆதலால் நானும் நண்பர்களும் அதிகம் பேச மாட்டோம். ஒருமுறை அவன் எனக்கு குழு வேலையில் உதவி செய்தான். நான் அவனுக்கு நன்றி கூட கூறாமல் வந்து விட்டேன்.
  ஒரு நாள் நானும் என்னுடைய நண்பர்களும் உணவு உண்ண கடைக்குச் சென்றோம். அங்கு உணவுக்கடையில் பாலு வேலை செய்து கொண்டு இருந்தான். அவனிடம் ஏன் இங்கு வேலை செய்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன் அவனுடைய பெற்றோர்கள் விபத்தில் இறந்துவிட்டனர் என்று கூறினான். அதைக்கேட்டவுடன் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.
  அன்றிலிருந்து நான் அவனுக்கு பாடங்களில் உதவ செய்ய ஆரம்பித்தேன். தெரியாத பாடங்களைக் கற்று கொடுத்தேன். அவன் எல்லாபாடங்களிலும் தேர்ச்சி பெற்றான். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பல்களாக இருந்தோம்.
  Adhil
  Teck Whye Secondary School

Your email address will not be published.


*