தனிமையிலே… ஓ… தனிமையிலே!

கீழே நிலமும் மலைகளும்
முன்னே அகன்ற வானம்
அமர ஒரு பெருங்கயிறு
அருகே பிடித்த பொம்மை
சுற்றிலும் தனிமை, தனிமை
இங்கே நீங்கள் இருந்தால், உங்கள் மனதில் என்ன தோன்றும் என்பதை ஓர் அழகிய கவிதையாக எழுதுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 மே 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

17 கருத்துரை

 1. கீழே நிலமும் மலைகளும்
  முன்னே அகன்ற வானம்
  அமர ஒரு பெருங்கயிறு
  அருகே பிடித்த பொம்மை
  சுற்றிலும் தனிமை, தனிமை
  சுற்றிலும் கொள்ளை அழகு
  கொட்டிக்கிடந்தும்
  கொஞ்சிட ஆள் இல்லை
  பிடித்த பொம்மைதான்
  தனிமை ஏக்கத்தில்
  அகன்ற வானத்தில் நிலா…
  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL (2-6)

 2. மார்ச் மாத காற்று மங்கலாக வீச,
  மாசிலா ஓருலகம் என் நினைவுக்கு வருகையளித்தது!
  மாதங்களுக்கும் வருடங்களுக்கும் முன்பு வாழ்ந்த ஓருலகம்-
  இன்று கெட்டுப் போய் இருக்கும் இவ்வுலகம்!
  என் பக்கத்தில் இருக்கும் பொம்மையை அன்று அழகு என்று குறிப்பிட்டனர்,
  ஏன் என்றே தெரியாமல் இன்று அதை பார்க்கும்போது கோபிக்கின்றனர்!
  எத்தனையோ பிரச்சனைகளுக்கிடையே அவர்கள் உருவாக்கிய பிரச்சனைகளை மறந்துவிட்டு,
  ஏராளமான மக்களின் மீது பழி சுமத்துகிறார்களே!
  அன்று இதே கயிற்றில் உட்கார்ந்து கீழே பார்த்தேன்-
  ஆனந்தத்துடன் சேர்ந்த வண்ணமயமான ஓர் உலகம் தெரிந்தது
  இன்று உட்கார்வதற்கான ஒரே இடமான இக்கயிற்றில் உடகார்ந்திருக்கிறேன்,
  இரத்தம் மற்றும் இறந்த உயிர்கள்தான் கீழே தெரிகின்றன!
  குண்டு சத்தம் இங்கே,
  குண்டு சத்தம் அங்கே,
  அலைப்பாய்ந்த எண்ணங்கள் சிதற,
  அபாயத்தில் மாட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்!
  என் பிள்ளை, என் குடும்பம் எங்கே?
  எண்ணத்தின் ஆழத்தில் சற்றே கவிழ்ந்தது அழுகை!
  என்னுடனும் என் பொம்மையுடனும் அமைதியில் அமர்ந்திருந்தது,
  கண்ணீர், கோபம், தாக்கம் மற்றும் தனிமை!
  Fareeha Fareej
  Tanjong Katong Girls’ School (2-6)

 3. தனிமை சற்று வித்தியாசமானது.
  தனிமையை நாம் எடுத்துக்கொண்டால், அது இனிக்கும்.
  ஆனால்,
  தனிமையை பிறர் எங்களுக்கு கொடுத்தால், அது கசக்கும்.
  இதுவே தனிமை.

 4. தனிமை
  நீலவானின் வெண்மேகங்கள் தங்கள்
  கோலத்தைக் காட்டுகின்றன ரகசியமாய்
  மெல்லிய மாலையின் குளிர் காற்று
  அசைத்துப் பார்க்கிறது குழந்தையைப்போல
  கிளையில் பறவையின் அழகு
  அலையெழுப்பப் பார்க்கிறது மனதில்
  எங்கிருந்தோ எழும் தேவகானம்
  ஏகாந்தத்தைக் கலைக்க எத்தனிக்கிறது
  குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிறது
  தனிமை
  ரபீக் முகமது லுபிஃனா ஜோஹார்
  St.Hilda secondary school

 5. அன்றோ….!
  என்னருகில் நீ
  அமர்ந்தயிடதில் ……!
  இன்று …..!
  நான் மட்டும் என் பொம்முகுட்டியுடன்……
  நீ இல்லா வெற்றிடம்…..!
  உயரே பறக்கும் பறவைகள் கூட – நீ எங்கே….!
  என வினவுவதைப்போல் உணர்கிறேன்……!
  மேலிருந்து கீழ்நோக்கும் போது பாரின் கவின்மிகு எழில்…….! என் கண்ணிற்கு வெறுமையுடன் காட்சியளிக்கிறது……!
  உன்னருகில் உன்அணைப்பில் உன்அன்பில் லையித்த நாட்கள் கண்முன்னே காட்சியளிக்கிறது …. உன் வரவை எண்ணி…….

 6. தனிமையிலே …….. ஓ …….. தனிமையிலே
  தனிமையிலே இனிமை காண முடியுமா?
  கீழே நிலமும், மலைகளும் முன்னே அகன்ற வானம் திகழுமா?
  சுற்றிலும் முற்றிலும் தனிமை இனிமை காண முடியுமா?
  தனிமையில் இயற்கையின் புலமை புரியுமா?
  ஏழ்மையின் வறுமை புரியுமா?
  இது தனிமையில் தணியுமா?
  தனிமையில் தனிமையின் அருமை விளங்குமா?
  அது விளங்கினால் ளதன் பெருமை புரியுமா?
  பொறுமையுடன் இருந்தால் நாம் பூமியை ஆள்வோம்
  தனிமையில் இருய்தால் நாம் எதை ஆள்வோம்?
  krishmita shiv ram sec 2
  Riverside Secondary School

 7. தனிமையிலே , தனிமையிலே
  உன்னைச்சுற்றிப்பார்!
  தண்ணீர் மலர்கள்
  வானத்திலிருந்து பூமிக்குப் பயணம் செய்து
  நிலத்தை ஆசீர்வதிக்கின்றது
  அதோ! அதன் அழகைப்பார்!
  தாவரங்கள் ஒவ்வொன்றாக
  தன்னுடைய இறகை விரித்து
  தேனீக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது
  அதோ! அதன் அழகைப்பார்!
  சூரியனும் பொறாமை கொண்டு
  மழையினால் கிட்டும் அற்புதக் காட்சிகளை
  சில நொடிகளுக்கு நிப்பாட்டி
  வானத்திற்கு எல்லோரின் திசையையும் திருப்பி
  வானவில்லை அறிமுகம் செய்த
  அதோ! அதன் அழகைப்பார்!
  இயற்கையின் அழகை ரசித்த எனக்கும்
  இன்றே இயற்கையின் மொழி புரிந்ததே! ஆமாம்
  என் மன பாரத்தைக் குறைத்த
  அதோ! அதன் அழகைப்பார்!
  ஹர்மிதா
  உயர்நிலை ஒன்று
  Riverside Secondary School

 8. இந்து(Indhu Ramesh)
  கீழே நிலமும் மலைகளும்
  முன்னே அகன்ற வானம்
  அமர ஒரு பெருங்கயிரு
  அருகில் பிடித்த பொம்மை
  சுற்றிலும் தனிமை தனிமை
  விடையில்லா வினாக்களுக்கு வினாவே விடையைக் கூறும் தருணங்கள்,
  தனிமை, வாழ்வையே விருந்தாய் படைக்கும் அட்சயப் பாத்திரம்,
  தேடல்களுக்குக் கதவினைத் திறந்து வைக்கும் கடவு மந்திரம்,
  பலருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும் பொக்கிஷம்.
  தனிமையிலே-ஓ-தனிமையிலே,
  என் மனதில் ஓர் ஏகாந்தம்.
  தனிமையிலே-ஓ-தனிமையிலே
  என் மனம் ஒரு வினோதம்…
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி
  Singapore Chinese Girls’ School

 9. கீழே நிலமும், மலையும்
  முன்னே அகன்ற வானம்
  அமர ஒரு பெருங்கயிறு
  அருகே பிடித்த பொம்மை
  சுற்றிலும் தனிமை தனிமை
  சில நேரங்களில்
  தனிமையின் மடியில்
  நான் தவழ,
  இமே இமைக்கும்
  நொடிகூட
  நெடுநேரம் நீள,
  உயிர்துடிக்கும்
  இதயம், உறவின்றி
  வலியோடு ஏங்க ,
  இரு விழியின் கருவிழி
  ஒளி இழந்து ஓய
  வாழ்க்கை பயணம்
  விடியாமல், ஒரு
  புரியாத புதிராய்
  தொடர,
  தனிமை என்றும் வித்தியாசமானது
  நாமாக ஏற்றால் அது இனிமை
  மற்றவர் வழங்கினால் அது கொடுமை
  SUNDARAVADIVEL PRABHAV sec 1HTL
  Riverside Secondary School

 10. கீழே நிலமும் மலைகளும்
  முன்னே அகன்ற வானம்
  அமர ஒரு பெருங்கயிரு
  அருகில் பிடித்த பொம்மை
  சுற்றிலும் தனிமை தனிமை
  விடையில்லா வினாக்களுக்கு வினாவே விடையைக் கூறும் தருணங்கள்,
  தனிமை, வாழ்வையே விருந்தாய் படைக்கும் அட்சயப் பாத்திரம்,
  தேடல்களுக்குக் கதவினைத் திறந்து வைக்கும் கடவு மந்திரம்,
  பலருக்கும் தெரியாமல் மறைந்திருக்கும் பொக்கிஷம்.
  தனிமையிலே-ஓ-தனிமையிலே,
  என் மனதில் ஓர் ஏகாந்தம்.
  தனிமையிலே-ஓ-தனிமையிலே
  என் மனம் ஒரு வினோதம்…
  இந்து ரமேஷ்
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி
  Singapore Chinese Girls’ School

 11. தனிமை
  உனக்கு சுகமாகட்டும்!
  சன்னமாய் தென்றல்
  உன் சரீரம் தொடட்டும்!
  வண்டுகளீன் ரீங்காரம்
  உனக்கு சந்தமாகட்டும்!
  அழகுநிலா உனைக்கண்டு
  பின் தொடரட்டும்!
  பூக்கள் அழகாய்
  உனக்கு புன்னகை செய்யட்டும்!
  நதிகளும் ஓடைகளும்
  உனக்கு வழி விடட்டும்!
  மீன்களும் நீந்த
  உனக்கு செதில் தரட்டும்!
  உன் பாத சுவட்டில்
  முள்ளும் சுகமாகட்டும்!
  மனிதா… உனக்கு
  எல்லாம் சுகமாகட்டும்!

  Senthilkumar Harieswaran 2HT1
  Umar Pulavar Tamil Language Centre

 12. நீளும் நிலம்
  நீர் சுரக்கும் மலைகள்
  அழகான வானம்
  உடன் என் பேரழகான என் டெடி…
  வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது…
  ஆனால், வானத்தைப் போல தெளிவானது…
  சில சமயம் சூழ்நிலையும் பல சமயம் தானேவும்
  தனிமையெனும் கயிறு சுற்றிக் கொள்ளும்…
  அப்போதும் எப்போதும்
  என் டெடி
  என்னுடன்
  என்னை அணைத்தபடி இருக்கும்…
  தனிமை ஒரு தீராத தாகம்…
  ஒரு மரத்தை
  ஒரு மழையை
  ஒரு காற்றை
  ஓர் இசையை
  ஒரு கவிதையை
  ரசிக்க தனிமை வேண்டும்…
  யாருடனும் பேசாத என் டெடி
  எப்போதும் என்னுடன் பேசிக்கொண்டே இருப்பதால்…
  எனக்கு அது என்றென்றும் இனிமை…

  GANGA KANNAN (Sec3 Express)
  ST ANTHONY’S CANOSSIAN SEC SCHOOL

 13. பறக்கின்ற யானைகளாய் தெரியும் மேகங்கள்
  பச்சைப் பட்டாடை உடுத்தி நடனமாடும் மரங்கள்
  குதித்துத் குதித்துக் கூத்தாடும் அலைகள்
  இதமாகத் தழுவிச் செல்லும் தென்றல்
  இத்தனையும் இன்பமும் உணர வழிவகுத்த
  தனிமையை விரும்பாதவர் இன்பதை உணராதவரே!

  ஜீனா
  பொங்கோல் உயர்நிலைப் பள்ளி

 14. தனிமை

  ஒரு வினோதமான உணர்வு
  நம்மை சுற்றி நீல நறமான வானம்
  அதல் வென்மையான மேகங்கள்
  இதை ரசிக்கும் பாக்கியம் எல்லோரும் கிடைக்காது
  அதை கானும்போது நமக்கு நம் மீது இருந்த பாரம் குரையும்
  அப்போது நம்மிடம் தக்கம், சோகம் போன்ற என்ற உணர்வுகளும் இருக்காது
  நம்மிடம் மன நுறைவு மட்டும் இருக்கும்
  அந்த தருணத்தில் நம் வாழ்வு முழுமை அடைந்தது போல் உணர்வோம்

  சண்முகநாதன்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 15. ௨ரிமையோடு சிலரை
  உறவென்று நினைத்ததை
  தவறென்று புரிந்தேன்

  மீண்டும்
  தனிமையே போதும் ௭ன்று
  விலகி விட்டேன்

  Navitaa
  Unity Secondary School

 16. தனிமையே தனிமை
  என்னை வையாதே
  என்னை வட்டு விலகிதடாதே
  தனிமையே என்னை கௌள்ளாதே
  Unity Secondary School
  2E4

Your email address will not be published.


*