சென்னை மழை சொன்னது என்ன?

Indians help a man carry his two-wheeler on a cycle cart as they wade through a waterlogged subway in Chennai, India, Monday, Nov. 9, 2015. Heavy rains continue to lash several parts of the city after the India Meteorological Department alerted a cyclone warning on the Bay of Bengal coast likely to make landfall between Chennai and Puducherry on Monday evening, according to local reports. (AP Photo/Arun Sankar K.)

Indians help a man carry his two-wheeler on a cycle cart as they wade through a waterlogged subway in Chennai, India, Monday, Nov. 9, 2015. Heavy rains continue to lash several parts of the city after the India Meteorological Department alerted a cyclone warning on the Bay of Bengal coast likely to make landfall between Chennai and Puducherry on Monday evening, according to local reports. (AP Photo/Arun Sankar K.)

சமீபத்தில் சென்னை நகரமே பெரும்மழையில் சிக்கி, மூழ்கிக் கிடந்தது. வீடுகளை, உடைமைகளை இழந்தவர் பலர். சிலர் உறவினர்களையும் இழந்தார்கள். அந்நேரம் மனிதாபிமான உணர்வோடு பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு உதவியவர்கள் பல ஆயிரம் பேர். சிங்கப்பூரில் இருந்தும்கூட நாம் உதவிப் பொருட்களைத் திரட்டி அனுப்பி உதவினோம்.  நம்மில் சிலர் நேரடியாக சென்னைக்கே சென்று பாதிக்கப்பட்டவ்ரகளுக்கு உதவினார்கள். சென்னை மழையில் சிக்கிய அந்தப் பேரிடர் உங்களை பாதித்ததா? அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? இதைப் பற்றி உங்கள் கருத்துகளை ஒரு கட்டுரையாக எழுதுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  14 பிப்ரவரி  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

2 கருத்துரை

  1. கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற வெள்ளம் நமக்கு பெரு நஷ்டத்தை உண்டாக்கியது. அது சில மக்களுடைய உயிரை பறித்தது. இதனால் சில மக்கள் உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் இல்லாமல் தவித்தார்கள். ராணுவம் தான் அவர்களுக்கு உதவியது. இந்த வெள்ளம் ஏன் வந்தது என்றால் மனிதர்கள் ஏரியாக இருந்த சில இடங்களில் வீட்டை கட்டினார்கள். எனவே திடீரென்று கனத்த மழை பெய்தால் தண்ணீருக்கு எங்கே போவது என்று தெரியாமல் வெள்ளமாக மாறிவிடும். அதனால் நாம் பல வடிகால் கால்வாய்களை கட்டி எல்லா மழை நீரும் அதன் வழியாக ஆறு மற்றும் கடலில் போய் சேருமாறு செய்ய வேண்டும்.இந்த நீரை நாம் விவசாயத்திற்கும் மற்றும் நீர்த் தட்டுப்பாட்டின் போதும் பயன்படுத்தலாம். இந்த சம்பவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இயற்கையின் சீற்றத்தை யாரும் கணிக்க முடியாது அதனால் நாம் எப்பொழுது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
    பெயர்:சமிக்க்ஷா கிரன்
    பள்ளியின் பெயர்:கேன்பெரா தொடக்கப்பள்ளி

  2. சென்னை மழை சொன்னது என்ன?
    வரலாறு காணாத வகையில் கடந்த நூற்றாண்டுகளுக்குப் பின் டிசம்பர் மாதம் கடுமையான மழை சென்னையில் கொட்டி தீர்த்ததால் சென்னை ஸ்தம்பித்தது, கடுமையாக பாதிக்கப்பட்டது. நகரில் ஓடும் ஆறுகளும், ஏரியும், குளங்களும் தூர் வாராமல் இருந்ததால் அதிகமான மழை பெய்தவுடன் அவை அனைத்தும் நிரம்பின. இதனால் ஏரிகளில் இருந்து தண்ணீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடியது.
    இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தொலைத் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான பால், குடிநீர் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள். குடிசைகள் முதல் மாட மாளிகைகள் வரை தண்ணீரில் மிதந்தன. கோடீஸ்வரர்களே தெருவுக்கு வந்து தங்குவதற்கும், ஒரு வேளை சாப்பாட்டுக்கும் கை ஏந்தும்நிலை ஏற்பட்டது. மளிகைக்கடைகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. பல லட்சம் கார்கள், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
    இந்த மழையினால் அண்டை மாநிலங்களும், வெளிநாடுகளும் சென்னையில் ஏற்பட்ட தீடீர் இயற்கைப் பேரழிவிற்கு மனம் வருந்தி, பணமும், பொருளும் கொடுத்து உதவி செய்தன. தேசிய மீட்புக்குழுவினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களைக் காப்பாற்றினர். உணவுப் பொட்டலங்கள், ஆடைகள், மற்றும் முதலுதவிக்குத் தேவையான மருந்துகள் கொடுத்து உதவி செய்தனர். மீட்புக் குழுவினை சேர்ந்த ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உதவினார்.
    மேலும் உள் நாட்டு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சாதி, மதம், இனம் என்ற பாகுபாடு இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்து தங்கள் அன்பினை வெளிக்காட்டினார்கள். இறுதியாக சென்னையில் பெய்த கன மழை நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையை வெளிப்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
    முருகன் சிநேகா
    தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*