சாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்!

நாம் அன்றாட வாழ்க்கையில் கைத் தொலைபேசி, மடிக்கணினி, புகைப்படக் கருவி என பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனம் எது? ஏன்? அதன் நன்மை, தீமைகளாக நீங்கள் அறிந்தது என்ன? என்பதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி எங்களோடு பகிருங்கள்.

கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  4 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

டிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Janakeswari Jurong Secondary School
Arfin Fathima Yuan Ching Secondary School
Manimaran Vasumathi Clementi Town Secondary School

1 Comment

 1. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி, அனைத்து தரப்பினருக்கும், வயதினருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதிலும், முக்கியமாக நம்மைப் போன்று கல்வி கற்கும் இளையர்களுக்கு நவீனத் தொழில் நுட்பம் என்பது, காலம் நமக்களித்த கொடையே! தொழில்நுட்பச் சாதனங்களில் எனக்கு மிகப் பிடித்தது கைதொலைபேசியே ஆகும்.
  Facebook, WhatsApp, Twitter, Instagram, Snapchat என எண்ணிலடங்கா அம்சங்கள் கைதொலைபேசியில் அடங்கி இருக்கின்றன. எவ்வள்வு சிறிதாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ளது கைதொலைபேசி. இத்தகைய பயனுள்ள தொழில்நுட்பம் நமக்கு தேவையற்ற கசடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாலை மட்டும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவைப் போல், மாணவர்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே, நவீன தொழில் நுட்பம் காலத்தின் பொக்கிஷமே.
  இன்றைய இளையர்கள் கைதொலைபேசியிலேயே மூழ்கிருக்கின்றனர். சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கு நமது அறையிலிருந்தே WhatsApp Message அனுப்புகிறோம். அந்த அளவிற்கு இருக்கிறது இன்றைய காலக்கட்டம்.
  கேட்டதெல்லாம் ஆண்டவர் கொடுக்கிறாரோ இல்லையோ, ஆனால் கூகலாண்டவர் அள்ளி கொடுப்பார். நமது பாடங்களில் எழும் எந்த ஐயப்பாட்டுக்கும், கைதொலைபேசியிலுள்ள தேடுபொறிகளின் துணைக்கொண்டு, நாம் அமர்ந்த இடத்திலிருந்தே விடை அறிந்துகொள்ள முடியும். நாம் குறிப்பிட்ட வார்த்தையை கூகளிட்டால், அது தொடர்பான அனைத்து தகவல்களும் நொடிப்பொழுதிற்குள் கண்ணுக்குமுன் தோன்றிவிடும். அடுத்ததாக, கைதொலைபேசியின் முக்கிய அம்சமே யூடுயூப் என்னும் கானொளிப் பொறி. இதில் இல்லாத தலைப்பே இல்லை எனலாம். திரைப்படங்கள், திரைப்பாடல்கள், உலக நிகழ்வுகள், என அனைத்தையும் இதில் பார்க்கலாம்.
  கையடக்கதொலைபேசி இயங்கும் கல்வி தொடர்பான செயலிகள், வகுப்பறையையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடுகின்றன.
  ‘ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற வாக்குகேற்ப கைதொலைபேசி நவீனத் தொழில் நுட்பத்தின் சிறு எடுத்துக்காட்டே! தொழில் நுட்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  சேவா மாணிக்கம்
  கான் எங் செங் பள்ளி
  உயர்நிலை 2

Your email address will not be published.


*