சண்டையும் சமாதானமும்


சகோதர, சகோதரிகளுக்குள் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவிற்குச் சின்னச் சின்னச் சண்டைகளும், பிறகு, சமாதானம் அடைவதும் இருக்கும். அப்படி உங்கள் சகோதர, சகோதரிகளுடனோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நடந்த சின்னச் சின்ன சண்டைகள் பற்றியோ அல்லது நீங்கள் கேள்விப்பட்ட இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றியோ இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள் – 2 ஆகஸ்ட் 2015. வாழ்த்துகள்!

18 கருத்துரை

 1. சண்டையும் சமாதானமும்
  ”ஆ வலிக்குது” என்று தொண்டைக்கிழிய கத்திக் கொண்டிருந்தேன். என் தம்பி மனோஐ் என்னைச் ‘சட்டு சட்டு’ என்று அடித்துக் கொண்டிருந்தான். என் அம்மா ஒரு பிரம்போடு வந்து எங்கள் முன் நின்றார். அதைப் பார்த்த நாங்கள் இருவரும் உறைந்துபோய் நின்றோம். ”என்ன நடந்தது” என்று அம்மா வினவினார் நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சமதானமாக இருப்பது போல் ஒன்னுமில்லையே, நாங்கள் சும்மா விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று உண்மையை மறைத்தோம். அம்மாவும் ‘சரி சத்தம் போடாமல் விளையாடுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர் அறைக்குள் சென்றுவிட்டார். (இப்பொழுது உங்களிடம் மட்டும் அன்று என்ன நடந்தது? ஏன் நான் அப்படி கத்தினேன் என்ற கதையைச் சொல்கிறேன்). அன்று பள்ளி முடிந்த பிறகு அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தேன். எனக்கு முன்பே என் தம்பி வீட்டிற்கு வந்து கேளிச் சித்திரப் படம் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கோ அன்று பள்ளியில் நடந்த பாட நடவடிக்கைகள், நடந்து வந்த களைப்பு இதோடு எனக்குப் பசியும் இருந்தது. அதனால், நான் என் பையைக் கீழே வைத்துவிட்டு சமையல் அறையிலிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டேன். உரித்த தோலைக் குப்பையில் போட சோம்பேறியாக இருந்ததால் என் தம்பியைப் போடச் சொன்னேன். ஆனால், அவன் மறுத்துவிட்டான். கோபத்தில் நான் தோலை அவன் மண்டையில் தூக்கி எறிந்தேன். அவ்வளவுதான், நாங்கள் இருவரும் எலியும் பூனையும் போல் துரத்தித் துரத்தி அடித்துக்கொண்டோம். (இதாங்க நடந்தது)
  பிரியங்கா (விரைவுநிலை ஒன்று)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 2. சண்டையும் சமாதனமும்
  சண்டை போடுதல் தவறு. சில வீட்டுகளைப் பார்த்தால் பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். நானும் என் அக்காவும் சண்டைப்போடுவோம். ஆனால் என் பெற்ரோர்கள் சொன்னதுபோல பிள்ளைகள் சண்டைப்போட்டால் வீட்டில் அமைதியையும் சமாதானமும் இருக்காது. அதனால், பிள்ளைகள் எதிர்காலத்தில் சண்டைகளை நிறுத்தி ஒற்றுமயாக இருக்க பழக வேண்டும். இவற்றைச் செய்தால் ஒரு குடும்பம் சந்தோஷமாக வாழலாம்.
  பெயர்: எபிநேசர் ஜெயவேந்தன்
  பள்ளி: பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலை பள்ளி

 3. Rasikeshewaran Pasir Ris Crest Secondary School
  சண்டையும் சமாதானமும்
  அன்று நான் என் தங்கையுடன் சண்டை போட்டதை எண்ணி வருந்துகிறேன். அவளுடன் நான் சண்டை போடாமல் இருந்திருந்தால் நான் இப்போது இவ்வளவு பதற்றமாகயிருக்கமாட்டேன்.
  அன்று நான் பள்ளி முடிந்து திரும்பி வந்தேன். நான் தொலைக்காட்ச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்.ஆனால், என் தங்கையோ, நான் பிடித்திருந்த தொலைக்காட்ச்சியின் தானியங்குப் பொத்தானை என்னிடமிருந்து தட்டிப் பறித்தாள்.
  அவள் அதை வைத்து அவளுகுப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை வைத்து பார்த்தாள். எனக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் எனக்கு உடனே ஆத்திரம் ஏற்பட்டது.
  ரஷிகேஷ்வரன்
  பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி

 4. சண்டையும் சமாதானமும்
  எல்லாரும் அவர்களுடைய சகோதரன் சகோதரிகளோடு சண்டை போடுவார்கள்.அதை போல நானும் என்னுடைய தம்பியோடு சண்டை போடுவேன்.ஆனால்,சில நேரத்துக்கு பிறகு,நாங்கள் இருவரும் சமாதானமாகிவிட்டு,சேர்ந்து இருப்போம்.இதுதான் எனக்கு நடந்த சம்பவம்.
  நான் வீட்டில் அமைதியாக என்னுடைய வீட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருந்தேன்.அந்த நேரத்தில் என் அம்மாவும் தம்பியும் வீட்டில் இருந்தனர்.என் தம்பி தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்தான்.அப்பொழுது,என் அம்மா மதிய உணவு உண்ணுவதற்காக,சாப்பாடு அறைக்கு அழைத்தார். நானும் என் தம்பியும் சாப்பாடு அறைக்குச் சென்றோம்.
  அப்பொழுது,என் தம்பி திடீரென கையில் வைத்திருந்த குப்பையைத் தரையில் தூக்கிப்போட்டான்.அதை பார்த்து நான் கோபப்பட்டேன்.
  நான் அவனிடம் குப்பையை எடுக்கச் சொன்னேன்.
  நஃபீஸ்
  பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி

 5. எல்லாரும் எப்போதும் சண்டை போடுவார்கள். அது சாதாரன விசயம். நானும் என் தம்பியும் நிறைய சண்டை போடுவோம்.அது பற்றிதான் சொல்லப் போகிறென்.
  நானும் என் தம்பியும் சிறிது நேரம் கல கல வென்று சிரித்துக் கொண்டெ விளையாடிக் கொண்டியிருப்போம். சிறிது நேரம் கழித்து ஏதாவது என்னை அல்லது அவனை மாறி எரிச்சல் செய்தால் போதும் உடனை கலவரம் தொடங்கும். அதனால் எலியும் பூனையும் போல் சண்டை போடுவோம்.எல்லா நாளும் சண்டை போடுவோம். என் வீட்டில் இது சாதாரணம்.
  கார்த்திகா
  பாசிர் ரிஸ் கிரட்ஸ் உயர்நிலைப்பள்ளி

 6. சண்டையும் சமாதானமும்
  அண்ணனும் தம்பிகளும் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.சண்டைகள் போட்டாலும் சமாதானமாக இருக்கவேண்டும். என் பெயர் அரிஷ். எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் அர்வின். நாங்கள் இருவருமே சிலர் நேரங்களில் சண்டை போடுவோம். ஒரு நாள் நானும் என் அண்ணனும் பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருந்தோம். அப்பொழுது நான் வெளியில் வாங்கிய ஜஸ் மயிலோ வீட்டுக்கு எடுத்து வந்தேன். அதற்கு என் அண்ணன் அதை வீச சொன்னான். எனக்கு ஜஸ் மயிலோ என்றால் மிகவும் பிடிக்கும் அதுமட்டும் இல்லாமல் எனக்கு மிகவும் தாகமாகவும் இருந்தது. அதனால் அவர் என்னை மயிலோவை வீச சொன்னதும் எனக்கு கடும் சினம் ஏற்பட்டது. அதனால் அவரை மரியாதை இல்லாமல் திட்டிவிட்டேன். அவர் என்னை பதிலுக்கு அரைந்துவிட்டார். நான் மயிலோவைக் கீழே போட்டு அழ ஆரம்பித்தேன். என் பெற்றோருக்குத் தொடர்புகொண்டு என் பெற்றோரிடம் எல்லாத்தையும் போட்டுக்கொடுத்தேன். நான் அழுவதைப் பார்த்த என் அண்ணன் என்னிடம் மன்னிப்பு கேட்டு நானும் மன்னிப்புக கேட்டேன். என் பெற்றோர்கள் வந்ததும் ஒனுமை நடக்காத்தைப்போல் இருந்தோம்.
  அரிஷ்
  PASIR RIS CREST

 7. வாழ்கையில் முன்னேற்றதற்கு பல பேர் உதவி பன்னிருப்பார்கள். சிலர் அதற்கு சிலர் சில பேரிய தியாகங்கள் சேதிருப்பாகள். இப்படி ஒரு சகோதரின் கதை இது…….
  சிராகு என்ற ஊரில் இண்ரடு சண்டையிடும் சகோதர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரே கனவு ஒரே இலட்சியம். இவர்கள் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள். அவர்கள் மாரி மற்றும் காளி. இப்படியான அவர்கள் ஒரு சண்டையால் ஒருவருடய முக்கியதூவத்தை அறிந்தார்கள்….
  அன்று அவர்கள் பள்ளியில் அவர்களிடையே ஒரு பயங்கரமான சண்டை ஏற்பட்டது. ஒரு சிரு பிரட்சினையாக இருந்தாலும் ஒருவரிடம் சோன்ன வார்த்தைகள் கடும் கொடுரமாக இருந்த்து. அதை தாங்க முடியாத காலி தற்கொலை செய்ய தீர்மானித்தான்….
  தர்ஷ்ன்
  பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி

 8. சீ.சிவ ரஞ்சனா
  அன்று ஓர் இனிதான பொழுது.நான் என் ஓவியத்தை சாயம் 
  பூசிக்கொண்டிருந்தேன்.இந்த ஓவியத்தை நான் இரண்டு வாரங்களாக 
  விடாமுயற்சியுனும் சொந்த முயற்சியுடனும் செய்தேன்.இந்த ஓவியம் நான் என் வாழ்க்கையில் செய்த பல சாதனங்களில் ஒன்று என்று கூறலாம். 
  அந்த அளவிற்கு நான் இதை நேசித்தேன்.ஏன் என்றால் நிறைய 
  வருடங்களுக்குபின் என்னால் ஒரு அழகான ஓவியத்தை வரைய முடிந்தது. ஆனால், நான் செய்த்துக்கு எல்லாம் ஒரு பயனும் இல்லாமல் போய்விட்டது.நான் என் 
  ஓவியத்தில் சாயம் பூசி முடிக்கும் கனத்தில், என் தங்கை  தான் 
  குடித்துக்கொண்டிருந்த எழுமிச்ச குளிர்பானத்தை ஓவியத்தில் 
  ஊற்றிவிட்டாள்.அவள் என் பையை கால் தவறியதே அதற்கு காரணம் 
  ஆகும்.ஆனால், அவளுக்கு எந்த வித்மான ஆப்த்தும் ஏற்படவில்லை, நான் கோபத்தில் என் பற்களை ‘நறநற’ என்று கடித்தேன்.”இனிமேல் உனக்கும்
  எனக்கும் சம்மந்தமே இல்லை!” என்று கத்திவிட்டு அழத் தொடங்கினேன். நான் ஆசையாக வரைந்த ஓவியம் வீணாகிவிட்டதே என்பத எண்ணி 
  மிகவும் வருந்தினேன்.இரண்டு நாட்கள் பறந்தன. நான் இரண்டு நாட்கள்
  ஆகிய பின்னரும் என் தங்கையிடம் பேசுவதே இல்லை.என்னை சுற்றி 
  இருக்கும் உறவினர்கள் எல்லோரும் என்னை சமாதானப் படுத்த 
  முனைந்தனர். இருந்தாலும் நான் சாந்தம் அடையவில்லை. ஒரு நாள், நான்
  என் பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது, சில
  மாணவிகள் என் தங்கையை கெட்ட வார்த்தைகளைக் கொண்டு 
  திட்டிக்கொண்டிருந்தனர்.என்னால் என் தங்கை அவமானம் அடைவதைக் 
  கண்டு தாங்கிக் கொள்ளமுடியவில்லை.அதனால் நான் அவர்களிடம் 
  சென்று என் தங்கையை இவ்வாறு திட்டக்கூடாது என்று ஆணையிட்டேன்.அவர்கள் என் தங்கையிடமும் என்னிடமும் மன்னிப்பு கூறினர்.பின்னர், 
  நானும் என் தங்கையும் சேர்ந்து வீட்டுக்கு மகிழ்ச்சியாக சென்றோம்.இந்த 
  சம்பவம் நான் என் தங்கையின் மீது எவ்வளவு பாசம், அன்பு, பனிவு 
  வைத்திருக்கிறேன் என்பதை உணர்த்தியது.நான் எவ்வளவு தான் என் 
  தங்கையை வெறுத்தாலும், அவளை மற்றவர்கள் திட்டுவதோ அல்லது
  மிரட்டுவதோ என் மனம் ஒத்துக்கொள்ளாது என்பதை 
  தெரிந்துக்கொண்டேன். அதனால். எந்த ஒரு சூழ்நிலையிலும் என் 
  தங்கைக்கு விட்டுக்கொடுப்பதே மேல் என்பதை நான் இந்த சம்பவத்தின் 
  மூலம் கற்றுக்கொண்டேன்.
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 9. சண்டையும் சமாதானமும்
  நானும் என் தம்பியும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். அது “கோழிச் சண்டை” போல இருக்கும். என் பெற்றோர்கள் எவ்வளவு அறிவுரை கூறினாலும் எங்கள் சண்டை தொடர்ந்தது. எனக்கு ஒரு சண்டை மட்டும் இன்னும் ஞாபகம் உள்ளது.
  அன்று சனிக்கிழமை, நானும் என் தம்பியும் தரையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ததுக் கொண்டிருந்தோம். என் அம்மாவும், அப்பாவும் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றார்கள். நான் நகைச்சுவைக் காட்சிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தம்பி ‘டிஸ்னி’ சானல் பார்க்கவேண்டும் என்று அடம்பிடிததான். நான் சிறிது நேரம் கழித்து மாற்றுவதாகக் கூறினேன். அவன் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டே அழுதான். நான் கோபமாய் அவனை அடித்தேன். என் தம்பி உடனே என் புத்தகங்களைத் தள்ளிவிட்டான். நான் அவனைக் கோபமாகத் தள்ளிவிட்டேன். அவன் கால் முட்டியில் அடிபட்டு ரத்தம் வந்தது. அவன் சத்தமாக அழுதான்.
  அமமாவும், அப்பாவும் வீட்டுக்கு அருகில் வந்துகொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு என் பெற்றோர்கள் ஓடி வந்தார்கள். எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என் தம்பிக்கு என் அப்பா மருந்து போட்டார். நான் பயந்துகொண்டே புத்தகங்களை அடுக்கி வைத்தேன். அப்பா எங்கள் இருவரையும் திட்டினார்கள். நான் என் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டேன். இப்போது நான் பெரும்பாலும் என் தம்பியின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன். அவன் பெரியவனானவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!
  மகாதேவன் (வழக்கநிலை ஒன்று)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 10. சண்டையும் சமாதானமும்
  ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்றால், அதில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என் வீட்டில் ஒரு சண்டை நடந்துகொண்டே இருக்கும். யாருடன் என்று நினைக்கிறீர்கள்? நானும் என் தங்கையும்தான் அந்த எலியும் பூனையும் ஆவோம். எனக்கும் என் தங்கைக்கும் இடையில் சண்டை பல வருடங்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அதில் என்னால் மறக்க முடியாத ஒரு வேடிக்கையான சம்பவத்தை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
  அன்று ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 9.30. காலைப்பொழுது கதிரவன் பொன்னொளி வீசி எழுந்தான். ஞாயிற்றின் கடுமையான கோபத்திற்குள்ளானது அகிலம். அதனால் சுள்ளென்று வெயிலடிக்கத் தொடங்கியது. அன்றைய பொழுது நல்ல பொழுதாகும் என்ற நம்பிக்கையோடு கண்களை திறந்தேன். என் காலைக் கடன்களை முடித்துவிட்டு எனக்குத் தட்டில் வைத்திருந்த புரோட்டாவை எடுக்கச் சென்றபோது என் தங்கை என்னிடம் வந்து ‘புரோட்டா எனக்கு’ என்று கூறினாள். அவளுக்காகத் தோசை செய்யப்பட்டிருந்தது.
  ஆனால், புரோட்டாதான் வேண்டும் என்று குரங்குப்பிடியாக இருந்தாள். அதனால், வாய்ச்சண்டை எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டது. மெதுவாக, அது கைச்சண்டையாக மாறியது. இருவரும் புரோட்டா தட்டை வேகமாக ஒருவர் மாற்றி ஒருவர் முன்னால் இழுத்தோம். என் தங்கை மிக வேகமாகத் தட்டை இழுத்ததால். என் கைத் தவறி அனைத்தும் கீழே கொட்டியது. நாங்களிருவரும் செய்வதறியாமல் சிலைப்போல் நின்றோம்.
  சிறிதுநேரம் கழித்து கீழே கொட்டிய உணவைச் சுத்தம் செய்துவிட்டு, என் தங்கையிடம் மன்னிப்புக் கேட்டேன். அவளும் என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். அடுத்த தட்டில் இருந்த தோசையை இருவரும் பகிர்ந்து உண்டோம். எங்களின் நட்பு அடுத்த சண்டை வரை தான் என்பது எங்களுக்கே தெரியும்!
  ஹேமந்த் (விரைவுநிலை ஒன்று)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 11. அனைவருக்கும் வணக்கம். என் பெயர் விஷ்ணு. நான் இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

 12. சண்டையும் சமாதானமும்
  எல்லாரும் அவர்களுடைய சகோதரன் சகோதரிகளோடு சண்டை போடுவார்கள்.அதை போல நானும் என்னுடைய தம்பியோடு சண்டை போடுவேன்.ஆனால்,சில நேரத்துக்கு பிறகு,நாங்கள் இருவரும் சமாதானமாகிவிட்டு,சேர்ந்து இருப்போம்.இதுதான் எனக்கு நடந்த சம்பவம்.நான் வீட்டில் அமைதியாக என்னுடைய வீட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருந்தேன்.அந்த நேரத்தில் என் அம்மாவும் தம்பியும் வீட்டில் இருந்தனர்.என் தம்பி தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்தான்.அப்பொழுது,என் அம்மா மதிய உணவு உண்ணுவதற்காக,சாப்பாடு அறைக்கு அழைத்தார். நானும் என் தம்பியும் சாப்பாடு அறைக்குச் சென்றோம்.அப்பொழுது,என் தம்பி திடீரென கையில் வைத்திருந்த குப்பையைத் தரையில் தூக்கிப்போட்டான்.அதை பார்த்து நான் கோபப்பட்டேன்.நான் அவனிடம் குப்பையை எடுக்கச் சொன்னேன். ஆனால்,அவன் என்னை அந்த குப்பையை பொறுக்கச் சொன்னான்.எங்களுக்குள் நடந்த வாய்சண்டை கைச்சண்டையாக மாறியது.எங்கள் பெற்றோர் கீரியும் பாம்பும் போல சண்டை போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு எங்களைத் தடுத்திவிட்டு,அவர்கள் எங்களைக் கண்டித்தனர்.என் தம்பி திடீரென அழுக ஆரம்பித்தான்.நான் அவனைக் கண்டு பரிதாபப்பட்டேன்.சிறிதும் தாமதிக்காமல் நான் அவனிடம் மன்னிப்புக் கேட்டேன்.அவனும் என்னுடைய மன்னிப்பையை ஏற்றுக்கொண்டான்.இறுதியில்,நாங்கள் இருவரும் சமாதானமாகிவிட்டு சேர்ந்துவிட்டோம்.இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் சண்டைப் போட்டால் பிரச்சனையை தீர்க்க முடியாது.சமாதனமாகிவிட்டால்தான் பிரச்சனையை சமாளித்துத் தீர்க்க முடியும்.
  நஃபீஸ் அப்துல் காதர்/Nafees Abdul Kader
  Pasir Ris Crest Secondary School

 13. சண்டையும் சமாதானமும்
  நாம் எல்லாரும் நம்முடைய சகோதரர்களோடும் நண்பர்களோடும் எலியும் பூனையும் போல சண்டை போடுவோம். ஆனாலும் நாம் அனைவரும் சில நேரத்துக்கு பிறகு பிரச்சனைகளைத் தீர்த்து, சமாதானமாகவிடுவோம். இச்சம்பவங்கள் என் வாழ்க்கையில் தினந்தோரும் நடந்துக்கொண்டே இருக்கிறது. இதைப்போலவே என்னால் மறக்க முடியாத ஒரு வேடிக்கையான சம்பவத்தை இப்பொழுது நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
  அன்று சனிக்கிழமை மாலை 12 30 மனியின்பொழுது, சூரியன் பிரகாசமாக காட்சியளித்தான். சூரியன் எவ்வாறு கடுப்பாக இருந்ததோ, அதுப் போலவே அந்நேரமும் அபசகுனமாக இருந்தது.
  என்னுடைய படிக்கும் மேசையில் வைத்திருந்த மடிகணினியை எடுக்கச் சென்றபோது என் அண்ணன் என்னை அனுகி, கணினி தனக்குகான் என்று கட்டளையிட்டார். நான் இல்லை என்று கூறும்போது, அவர் குரங்குப்பிடியாக நடந்துக்கோள்ள ஆரம்பித்தார். இதனால், வாய்ச்சண்டை நம் இருவருக்கும் இடையில் நுழைந்தது. ‘போர்’ வலுவாக சென்று கைச்சண்டையை நுழைய அனுமதித்தது. பிறகு என் தாயார் வீட்டிற்கு வந்ததும், நம் இருவரும் செய்த காரியத்தை தட்டிக்கேட்டார். நாங்களிருவரும் அதிர்ச்சியில் சிலைப்போல் நின்றோம். பிறகு, நாம் இருவருக்கிடையிலே மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்தோம். இருதியில், நாங்கள் வெவ்வேறு நேரங்களில் மடிகணினியை பயன்படுத்தோம்.
  இதைப்போன்ற சண்டை நம்மிடையிலுள்ள அன்பும் நட்பும் வலுமைபடுத்துகிறது.
  Krittika V
  St Hilda’s Secondary school

 14.  Sadhna Saku 2G
  ST.HILDA’S SEC
  “அம்மா! ஆ அம்மா ! மிகவும் நன்றி அம்மா !!” என்று சந்தோஷமாக கூப்பிட்டாள் என் அக்கா. அக்கா தன் தேர்வுக்கு மிகவும் நன்றாக செய்தால் அம்மா அவளுக்கு ஒரு புதிய கைத்தொலைபேசியை வாங்குவார் என்ற வாக்குறுதியதால், அதன்படி நடந்தது. அக்கா அந்த (குறிப்பிடக் ) கைத்தொலைபேசியை பல மாதங்களுக்கு விருப்பம் கொள்கின்றதார்.
  அடத்த நாள் , பள்ளியிலிருந்து சோர்வான நான், என் அக்காவுக்கு பக்கத்து ஓய்வு எடுத்தேன். அக்கா கைத்தொலைபேசியிலிருந்து தன் கண்களை விடவில்லை. “அக்கா..” என்று கூறினேன். என் வார்த்தைகள் அவர் ஒரு காது உள்ளே சென்ற மற்ற காது வெளியே வந்தது. அவர் எப்போதும் தன் நண்பர்களிடம் கைத்தொலைபேசி முலம் பேசுகிறார் அல்லது கேளிக்கைக்கு.
  அல்லும் பகலும் கைத்தொலைபேசியில்தான் நேரம் செல்வினார். அது அவருக்கு தன் உலகமை ஆகியது. இதன் எல்லாம் முன்பு , என் அக்கா என் நெருங்கிய நண்பர் போல் இருத்தார்.
  எல்லோரும் சில வேளைகளில் சண்டை போடுவார்கள். அது சாதாரணமாகும். இறுதியில் சண்டையை தீர்க்க மிகவும் முக்கியமானது. எனவே , சித்திரவதையை தாங்க முடியாமல் , “எப்போதுமே கைத்தொலைபேசி பார்த்து , என்னிடம் எதுவும் பேசவில்லையை !!! ” என்று கோபத்துடன் அலறினேன். “ஏன் பார்க்கக் முடியாது?! ” என்ற அக்கா. இதனால் ஒர் சண்டை தொடங்கியது. நான் அம்மாவுடன் சொன்னேன். அவர் என் அக்காவை அழைத்தார். அவர் தன் தவறை உணர்ந்தார். இனிமேல் தன் கைத்தொலைபேசி பயன்படுத்தாலை குறைக்க வாக்குறுதினார். எதை நடந்தலாலும், அக்கா பாசமுடையவரும் நெருங்கிய நண்பர் . நான் எந்த சுழ்நிலையில் இருந்தாலும் என் அக்காவை விட்டுக்கொண்டேன்.

 15.    சண்டையும் சமாதானமும்.
  கார்த்திக், ரகு ஒரே பள்ளியில் மற்றும் ஒரே வகுப்பில் உயர்நிலை 2ல் படிக்கும் மாணவர்கள். இருவரும் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். இருவருக்கும் படிப்பில் மற்றும் இதர போட்டிகளிலும் பலமான போட்டி நடக்கும். வெற்றி, தோல்வியை இருவரும் மாறி மாறி பகிர்ந்து கொள்வர். இந்தப் போட்டியே இருவருக்குமிடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது.
  இருப்பினும் ரகு கார்த்திக்கோடு நட்பு கொள்ளவே விரும்பினான். ஆனால் பிடிவாத குணம் கொண்ட கார்த்திக் ரகுவை எதிரியாகவே நினைத்தான். இப்படியே நாட்கள் நகர்ந்தன.
  ஒருமுறை பள்ளி இடைவேளையின்போது, உணவகத்தில் ரகு சாப்பாடு வாங்கிக்கொண்டிருந்தான். சாப்பாட்டுத் தட்டை கையில் ஏந்தியவாறு அமர இடம் தேடி நடந்து கொண்டிருந்தான். ஏதேச்சையாக இதைக் கண்ட கார்த்திக் அவனை வம்புக்கிழுக்க நினைத்தான். வேண்டுமென்றே அவன் மேல் இடித்தான். ரகுவின் உணவு கீழே சிந்தி வீணாய்ப் போனது. கோபத்துடன் ரகு, கார்த்திக்கை நோக்கிப் பாய்ந்தான். இருவருக்குமிடையே சண்டை வலுத்தது. ஒழுங்குநடவடிக்கை ஆசிரியரால் தண்டிக்கப்பட்டனர். இருப்பினும் கார்த்திக்கு ரகுவின் மேல் இருந்த கடுப்பு குறையவில்லை. ஆனால் ரகு சிந்தித்தான். இப்படியே நாட்கள் சென்றால் பள்ளி வாழ்க்கை முழுவதும் நரகமாகத் தோன்றும். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தான்.
  ஒருநாள் பள்ளியில் வகுப்பாசிரியர் ஓவியப்போட்டி நடக்கவிருப்பதாகக் கூறினார். வெற்றி பெரும் போட்டியாளர் பள்ளி முதல்வரால் கவுரவிக்கப்படுவார்கள் என்று கூறினார். ரகுவும்,கார்த்திக்கும் அவரவர் வீட்டில் ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினர். அற்புத ஓவியமாக அவர்களுக்குக் கிடைத்தது.
  மறுநாள் காலையில் ரகு தன் ஓவியத்தோடு பள்ளிக்கு வந்தான். அனைவரும் அவன் ஓவியத்தைப் பார்த்து வியந்தனர். ஆனால் கார்த்திக் சோகமாக இருந்தான். அவனது நண்பர்கள் சோகத்திற்கான காரணத்தை வினவினர். தன ஓவியத்தின்மேல், தன் தங்கை தவறுதலாக பழரசத்தைக்கொட்டிவிட்டதால் ஓவியம் வீணாகிவிட்டது என்று கவலையோடு தெரிவித்தான். இதை ரகு மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.
  ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பாசிரியர் ஓவியப்போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.ஓவியத்தைத் தான் ஒப்படைக்காதபோது எவ்வாறு தான் வெற்றி பெற்றான் என்று கார்த்திக் யோசித்தான். பள்ளி முடிந்ததும்,ரகு கார்த்திக்கோடு தனியாகப் பேசினான். “என் ஓவியத்தைத்தான் உன் பெயர் எழுதி ஆசிரியரிடம் ஒப்படைத்தேன். இதெல்லாம் உன் நட்பைப் பெறுவதற்காகத்தான் செய்தேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக் கொள்வாயா?,” என்று அன்பாகப் பேசினான். கார்த்திக்கால் எதுவும் பேச முடியவில்லை. ரகுவை கட்டி அணைத்துக் கொண்டான். இதுவே அவர்கள் சமாதானமடைந்ததைக் காட்டுகிறது.
  ச.நிஷிகாந்த்
  teck whye secondary school

 16. நாங்கள் இருவரும் நகமும் சதையுமாய் இருந்தோம். ஒற்றுமையாக இருந்த நாங்கள் ஒரேடியாக ஒருவரை ஒருவர் வெறுத்து பிறியும் காலம் அன்று வந்தது.
  ராணியும் நானும் சிறு வயதிலிருந்து ஒன்றாகவே வளர்ந்து வந்தோம். ஒரே பள்ளியில் படித்து வந்தோம். கண்ணாடியை போல் இருந்த எங்களது உறவு அன்று நடந்த சம்பவத்தால் சுக்குநூறாய் உடைந்து சிதறியது. அன்றோ வழக்கம் போல் கலகலப்பாய் பேசிக்கொண்டிருக்கும் என்னுடைய வகுப்பு ஆசிரியர் வந்தவுடன் பெட்டிக்குள் அகப்பட்ட பாம்பு போல் அமைதியானது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக எப்போதும் மலர்ந்திருக்கும் எங்களுடைய ஆசிரியரின் முகம் சிவப்பு மிளகாயை போல் கோபத்தில் சிவந்திருந்தது. அவருடைய கூர்மையான கண்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்த ராணியையும் என்னையும் நோக்கியது. கனத்த குரலோடு எங்கள் இருவரையும் வகுப்பிற்கு வெளியே அழைத்தார் ஆசிரியர்.
  தன்னுடைய கண்களால் சுட்டெரித்த படியே யார் எங்கள் கூட படிக்கும் மாணவி கீதாவுடைய பணத்தை திருடினார் என்று அதட்டி கேட்டார். நாங்கள் என்ன பேசுவதறியாமல் திக்கி தடுமாறினோம். வகுப்பின் அருகே இடைவேளை நேரத்தில் எங்களை அவர் கண்டதால் எங்கள் மீது அவர் சந்தேகம் கொண்டார் என்பதையும் நாங்கள் அறிந்தோம். செய்த தவற்றை ஒப்புக்கொள்ளாவிட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்று மிரட்டினார் ஆசிரியர்.
  இதை கேட்டதும் அமைதியாக இருந்த என்னுடைய உயிர் தோழியான ராணி என் மீது குற்றசாற்றை போட்டு தப்பிக்க பார்த்தாள். நான் தான் அதை திருடினேன் என்றும் அந்த பணத்தை தன்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னேன் என்றும் பயத்தில் வாய் கூசாமல் பச்சை பச்சையாக பொய் கூறியபடியே அப்பணத்தை எடுத்து நீட்டினாள். அந்த சமயம் என்ன பேசுவது என்று தெரியாமல் நான் உரைந்து போய் நின்றேன். ராணியா இப்படி கூறினாள் என்று எனக்கு ஆச்சரியம். இது கனவா அல்ல நினைவா என்றே எனக்கு அச்சமயம் தெரியவில்லை. இது ஒரு கெட்ட கனவாக தான் இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். ஆனால் அது நிஜம் என்பதை என்னால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர் என்னை தவறு செய்தது மட்டுமல்லாமல் ராணியையும் அதில் கூட்டு சேர்த்ததற்காக திட்டிவிட்டு ஒரு எச்சரிக்கை கொடுத்த படியே எனது பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அந்த நேரத்தில் தான் நூள் போல் இருந்த எங்களுடைய நட்பு அறுந்தது.
  வீட்டிற்கு சென்றவுடன் எது கூறினாலும் நம்பாத என்னுடைய பெற்றோர்கள் என்னுடன் இரண்டு நாட்களுக்கு பேசவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு ராணியுடன் பேசுவதையே நான் நிறுத்திவிட்டேன். அழகான ரோஜா போல் இருந்த எங்களுடைய நட்பு உதிர்ந்த ரோஜா இதழ்களை போல் ஆகி விட்டது. பல முறை மன்னிப்பு கேட்டும் நான் அவளை மன்னிக்க வில்லை. இது நடந்து ஒரு ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். ஆனால் இப்பொழுது தான் அவளை மன்னிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. என்னுடைய முதல் நட்பே அவளோடு தான். அதை என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாது. நான் அவளுடன் ஒரு தோழிக்கு மேலாகவே பழகினேன். அந்த பாசம் என்னைவிட்டு போகாது என்பதை நான் இப்பொழுது தான் அறிகிறேன். அவளை மீண்டும் பார்ப்பேனா பழகுவேனா என்ற ஆசை எனது மனதில் இப்போதும் உள்ளது. அந்த நாளுக்காக தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
  Rifayah Jumana
  Tanjong Katong Girls School

 17. . சண்டையும் சமாதானமும்
  ஏ!என்ன பாக்கிரீங்க?வீடு யாருக்கு தானே?’’என்று காளி சிரித்துக்கொண்டே கேட்டார்.“வீடு மாரிக்கு தான்’’என்று காளி சொன்னார்.மாரிக்கு சந்தோஷம் பொங்கியது.தாமு வெருப்புடன் காளியை பார்த்தான்.`அப்பாவிர்க்கு உன்னத்தான் பிடிக்கும்’’என்று தாமு ஆத்திரத்துடன் மாரியிடம் கத்தினான்.“போடா!வீடு என்னக்கு தான்’’என்று மாரி திமிராக சொன்னான்.“உன்கிட்ட போய் அவ்வளவு அன்பா பழகினே பாரு.என்னத்தான் சொல்லனம்.’’என்று தாமு தலையை அடித்துக்கொண்டான்.தாமு கெட்ட வார்த்தைகளால் மாரியை அபிஷேகம் செய்தான்.மாரியும் சண்டைப் போட்டான்.“என்ன சத்தம் அங்க?’’என்று காளி கேட்டான்.“சரி சரி புது வீட்டை பாரக்கபோலாம்”தாமு வெருப்போடடு சென்றான்.வீட்டை அடைந்ததும் மாரியின் கண்கள் அகல விரிந்தன.மாரி துள்ளிக்குதித்தான்.நானும் என் மனைவியும் நல்லா அனுபவிக்க போகிரோம் என்று கூரிக்கொண்டே தன் மனதை இன்னும் உற்சாகபடுத்தினான்.வீட்டின் அழகு தாமுவின் நெஞ்த்தை கிழித்தது.தாமுவிற்கு அப்பொழுது ஒரு விபரீத யோசனை தோன்றியது.தன் உயிரை பறித்துக்கோள்ள முடிவு செய்தான்.தாமு புது வீட்டின் கழிவரைக்குச் சென்று கையில் கிடைத்த ஒரு கத்தியை தொண்டையில் வைக்கவும் மாரிவந்து தடுப்பதற்க்குச் சரியாக இருந்தது.மாரி உடனே வீடு எல்லோருக்கும் என்று கூறி சமாதானம் செய்தான்…
  “ஏய் அடிமை தாமுவே என் வீட்டைச் சுத்தம் செய்”என்று மாரி கத்தினான்.
  By:Neeraj
  School:Pasir Ris Crest Secondary school.

 18. அம்மா! ஆ அம்மா ! மிகவும் நன்றி அம்மா !!” என்று சந்தோஷமாகக் கூறினாள் அக்கா. அக்கா தன் தேர்வுக்கு மிகவும் நன்றாகச் செய்தால் அம்மா அவளுக்கு ஒரு புதிய கைத்தொலைபேசியை வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி தந்திருந்தார். அதன்படியே அக்கா தேர்வில் சிறப்பாகச் செய்தார். என் அம்மாவும் அவரது வாக்குபடியே நடந்துகொண்டார். அக்கா அந்தக் (குறிப்பிட்ட ) கைத்தொலைபேசி வேண்டும் எனப் பல மாதங்களாக விருப்பம் கொண்டிருந்தார். அவரது விருப்பம் நிறைவேறியது.
  அடுத்த நாள் , பள்ளியிலிருந்து சோர்வுடன் திரும்பிய நான், என் அக்காவுக்குப் பக்கத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்தேன். அக்கா கைத்தொலைபேசியிலிருந்து தன் கண்களை எடுக்கவில்லை. “அக்கா..” என்று அழைத்தேன். என் வார்த்தைகள் அவருடைய ஒரு காது வழியாகச் சென்று மற்ற காது வழியே வந்தது. அவர் கைத்தொலைபேசியைக் கொண்டு எப்போதும் தன் நண்பர்களிடம் பேசுகிறார் அல்லது கேளிக்கைக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
  அல்லும் பகலும் கைத்தொலைபேசியே கதி என இருக்கிறார். அதுவே அவருக்கு உலகமென்றானது. இதற்கெல்லாம் முன்பு , என் அக்கா என்னுடன் நெருங்கிய நண்பர் போலப் பழகிவந்தார். ஆனால், இப்போது அப்படியில்லை.
  என் அக்காவிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்னை வெகுவாகப் பாதித்தது. என்னால் அந்த சித்திரவதையைத் தாங்க முடியாமல் , “எப்போதுமே கைத்தொலைபேசியைப் பார்த்து , ஏன் என்னிடம் எதுவும் பேசமாட்டேன்கிறாய்!!! ” என்று கோபத்துடன் அலறினேன். “நான் ஏன் என் கைத்தொலைபேசியைப் பார்க்கக் கூடாது?! ” என்றார் அக்கா. இப்படி வாக்குவாதம் தொடங்கி சண்டையில் முடிந்தது. நான் நடந்ததை என் அம்மாவிடம் சொன்னேன். அவர் என் அக்காவை அழைத்தார். என் அக்காவுக்கு அறிவுரை கூறினார். என் அக்கா தன் தவறை உணர்ந்தார். இனிமேல் கைத்தொலைபேசி பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கூறினார். மீண்டும் என் அக்கா பாசமுடையவராகவும் நெருங்கிய தோழியாகவும் மாறினார் . நான் எந்தச் சுழ்நிலையிலும் என் அக்காவை விட்டுக்கொடுக்கமாட்டேன். 
  Sadhna Saku 2G
  ST.HILDA’S SEC ப

Your email address will not be published.


*