கொஞ்சம் பேசிடலாமா?

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, உங்கள் மனதில் அன்பு சுரக்கும், கற்பனை சிறகடிக்கும், கவிதை எழுத வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.

அதை ஓர் அழகிய கவிதையாக்குங்கள்.

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 7 அக்டோபர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

ஆகஸ்ட் மாத வெற்றியாளர்கள்

8 கருத்துரை

 1. நானும் மற்றவர்களும் இப்படிப்பட்ட சோம்பேறி நபர் என்ற முறையில் கோபப்படுகிறேன். வாய்ப்புகளை உபயோகிக்காமல் இருக்கிறார்கள். ஒரு பெரிய கணித மேதையான ரமானுஜன் இருந்தார், அவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக் கொண்டிருக்கும் கணிதக் கோட்பாட்டிற்காக நன்கு அறியப்பட்டவர், அது இன்னும் தீர்க்கப்படவில்லை. எவ்வகையான விஷயங்களை அவர் எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டார், திடீரென்று ஒரு கேம்பிரிட்ஜ் தயாரிப்பாளர் அவரது அற்புதமான கோட்பாட்டினால் குழப்பமடைந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது கோட்பாட்டை செய்யும்படி கேட்டார். உலகெங்கிலும் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராக அவர் சான்றளிக்கப்பட்டார்

  Nithilan-Unity Secondary school-1HTL

 2. அன்பு, அன்பு, அன்பு.
  அன்பு, என்பது என்ன?
  யாரால் அதை வரையறுக்க முடியும்?

  கட்டுப்படுத்த முடியாத ஒன்று,
  பல வழிகளில் வெளிப்படக்கூடிய ஒன்று.
  யார், எது என்ற விதிமுறை இல்லாத ஒன்று,
  வேறுபாடுகளால் தடையாத ஒன்று,
  அதுதான் அன்பு.

  அன்பு என்பது மிகவும் மர்மம்கூடியது.
  அன்பிருந்தால், என்ன இருக்காது?
  செயல்களால் மயக்கக்கூடிய ஒன்று.
  கடுமையானதுகூட உதவியற்ற சிக்கிக்கொள்ளும் ஓன்று.
  வெறுப்பின் சங்கிலிகளை உடைக்கும் ஒன்று,
  அதுதான் அன்பு.

  மிருங்களால்கூட காட்டகூடிய ஒன்று,
  சில மனிதர்களுக்குக்கூட காட்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
  என்ன அவமானம்!
  இனவாதம், பாகுபாடு, தீர்ப்பு, பெருமை, பொறாமை,
  இதெல்லாம் அன்பிலிருந்து வருவதா?

  அன்பு, அல்லது வெறுப்பு,
  அது நம்முடைய தேர்ந்தெடுப்பு.
  சின்ன அன்பான செயல்கள்கூட, இந்த உலகில் பெரிய மாற்றங்களை
  உருவாக்கும்.
  ‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை
  ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.’

  இதை செய்வது அசாத்தியம் என்று நினைக்காதெ!
  விருப்பமுள்ள இதயத்திற்கு ஒன்றும் அசாத்தியமல்ல.
  கடவுள் நம் இருதயத்தைக் காண்கிறார்.
  முயற்சி தான் கணக்கிடுகிறது.

  அன்பு, அல்லது வெறுப்பு,
  அது நம்முடைய தேர்ந்தெடுப்பு.

  Gloria Vadukkoot Chacko
  St.Hilda’s Secondary School

 3. வாழ்கை என்பது
  சிருகதை மாதிரி…
  நிறைய படிக்கிறோம்
  நிறைய மறக்கிறோம்
  ஆனா, அதுல ஒன்னு
  மட்டும்தான் நினைவுளில்
  அப்பவுமே பசுமையா இருக்கும்…
  அது நம்ம உயர் நண்பனோடு
  நட்பு தொடங்கிய
  அந்த முதல் நாள்
  Nagarajan bhavana
  Bendemeer secondary school

 4. Resshmaa D/O Mahendran

  Greenridge Secondary School

  நட்புக்கு வயதில்லை,
  பணம் தேவையில்லை
  ஏழை பணக்காரன் என்று
  உயர்வுதாழ்வு பார்ப்பதில்லை .
  உதடுகள் உதிர்க்கும் சிறு புன்னகை போதும் ,
  தன்னலமற்ற பாசம் போதும் ,
  அளப்பரிய நம்பிக்கை போதும்

  இடம் பொருள் ஏவல் பார்க்காது
  பாசத்தையும் நம்பிக்கையையும் மட்டும்
  வாரி வழங்கும் தோழியே!
  எனக்கு கடவுள் தந்த பரிசு நீ
  உன்னை விட்டு என் அன்பு
  எப்போதும் பிரியாது
  என்னை விட்டு நீ பிரிந்துச் சென்றாலும்
  எப்பொழுதும் நீ மனதில் ஊஞ்சலாடிக்கொண்டிருப்பாய்

  உயிரே என் உயிர்தோழியே …..

 5. உண்மை என்றால் என்ன என்பதற்கு வார்த்தைகளால் விளக்கம் கொடுக்க முடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுக்க முடியாது.

  உண்மைக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் அதன் உண்மைத்தன்மையை விளக்கமுடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுப்பதாகும். அன்பு என்பது உள்ளுணர்வு.

  அது என்ன என்பது அவரவரது அனுபவம் மட்டுமே. நாம் ஒரு இனிப்பு பண்டத்தைச் சாப்பிடும் போது அதன் உண்மையான அனுபவம் அல்லது உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதைப் போன்றதுதான் அன்பும்.

  ஆனால் இனிப்பு இனிக்கும் என்கிறோம். ‘இனிப்பு என்றால் என்ன?’ எனக் கேட்டால் இப்போது இனிப்புக்கு விளக்கம் கொடுப்பது சிரமாகிவிட்டதல்லவா? அவ்வாறு தான் அன்பு என்றால் என்ன என்பதும்.

  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக உண்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைப்பதற்கு பொய் அல்லாதது என்று கூறுவதுண்டு.

  இந்த விளக்கமும் கூட அடித்தளம் அற்றது. ஏனெனில் பொய் என்றால் என்ன என்று கேட்டால் நிலையற்றது, மறைத்தல், மாற்றிக் கூறுதல், ஏமாற்றுதல் என அடிக்கிக் கொண்டு செல்கிறோம். முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விளக்கங்கள
  அன்பு ஒரு ஒருவழிப்பாதை.

  அன்பைக் கொடுக்க மட்டும்தான் முடியும். அன்பைப் பெறமுடியாது. அன்பைப் பெறுவதாக நாம் உணரும்போதும் அது கொடுப்பதாக மட்டுமே அமையும். அன்பு என்பது எமது உள்ளுணர்வாக இருப்பதால் அதற்கு எதிரானதும் ஒரு உணர்வுதான். எது அன்பைக் கொடுப்பதற்கு தடையாக இருக்குமோ அது அன்புக்கு எதிரானது.

  நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் என்பவற்றையும் நாம் அன்பின் வடிவங்களாக அறியப்படுத்தப் பட்டிருக்கிறோம். நாம் என்ன வடிவத்தைக் கொடுத்தாலும் அன்பு ஒன்றுதான். அது ஒரு முழுமை.

  அன்புக்கு வடிவம் கொடுப்பதனாலேயே நாம் அன்புக்கு எதிரானது என்றவுடன் வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என பலவற்றைக் கருதிக்கொள்கிறோம். அதாவது இவ்வாறன உணர்வுகள் அன்புக்குத் தடையாக அமையும் எனக் கருதுகிறோம். இப்போது ஒரு விடையத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

  அதாவது, வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என நாம் குறிப்பிடுபவையும் ஒரு முழுமைக்கு நாம் கொடுக்கும் வடிவங்கள் தான் என்பதே. இந்த முழுமை அன்புக்கு எதிரானதாக செயற்படும் முழுமை. அந்த முழுமைதான் ‘பயம்’. அதாவது அன்பு எனும் முழுமை ஒன்று, பயம் எனும் முழுமை இன்னொன்று.

  இங்கே முழுமை என்பதன் பொருள் ஒரே நேரத்தில் இரண்டில் ஒன்று தான் இயங்கும் என்பதே. அன்பு இயங்கினால் பயம் இயங்காது, பயம் இயங்கினால் அன்பு இயங்காது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை.

  இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான விடயம் என்னவெனில், எமது ஒவ்வொரு நகர்வும் அன்பினால் நகர்த்தப்படுகின்றதா அல்லது பயத்தினால் நகர்த்தப்படுகின்றதா என்பதை மிக இலகுவாக நாம் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதுதான்.

  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL

 6. அன்பு
  அனைவரிடமும் இருக்க வேண்டிய பண்பு

  மனிதனோ மிருகமோ
  இருவருக்கும் உண்டு

  ஆனால் இன்றோ
  வியக்கிறோம் அதைக் கண்டு

  அவ்வளவு அரிதாகிவிட்டது
  மனிதனின் நிலை பரிதாபமாகிவிட்டது

  அன்னை தெரேசா பிறந்த பூமி
  அன்பில்லா சுடுகாடாகிவிட்டது சாமி

  இந்நிலை மாற வேண்டும்
  அனைவரிடம் கோபம் ஆற வேண்டும்

  வம்பேதுமில்லாமல்
  அன்புடன் அனைவருடன் பழக வேண்டும்

  அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்
  என்று சும்மாவா கூறினார்கள்

  சு. கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி
  S.Karthikeyan
  Bendemeer Secondary School

 7. அன்பு
  அனைத்து உறவிலும் இருப்பது நம்மை
  அறியாமலும் வருவது
  ஐந்தறிவு மிருகத்திலும் கருணையைக்
  கொண்டு வருவது
  நமக்கு துணையாக இருப்பதும் நம்மை
  பிடித்தவரையும் தூரத்தில்
  கோபத்தால் நிறுத்துவதும் அன்பே
  உன்னை புரிந்ததாதல் தான் மனிதம்
  மரிக்காமல் இருக்கிறது
  உன்னால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறேன்
  இல்லையெனில் அரக்கனாய் மரித்திருப்பேன்

  Srinithi
  Punggol Secondary school

 8. மாதா பிதா குறு தேய்வம் என்பது அன்று ,மாதா பிதா குகல் தெய்வம் என்பது இன்று.குகல் என்பது ஒரு இணைய தளம்,அதில் படிப்பதிற்கு மட்டுமா பயன்படுத்துகறார்கள்?இந்த குகல் விடுமுறைப்போது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருககிறது.இப்படிப்பட்ட திறனான மற்றும் ஆச்சிரயமானதளத்ஐ தவறான வழியில் பயன்படுத்தலாமா?கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.சிறு துளி பெரு வெள்ளம்.முயற்சி உடையார் இகழ்ச்சி இடையார்,முயற்சி திருனை ஆக்கும்”என்ற பொன்மொழிகளுக்கு ஏற்ப நாம் முயற்சி செய்ய வேண்டும்

  Nithilan
  Unity Secondary School

Your email address will not be published.


*