கொஞ்சம் கற்பனை, கையில் காணொளி!

காணொளி தயாரிக்க என்ன வேண்டும்?

1. கைத்தொலைபேசி 2. சொல்ல ஏதாவது ஒரு கருத்து/செய்தி. அவ்வளவுதான். கைத் தொலைபேசியை உங்கள் தோழர்/தோழியிடம் கொடுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலைச் சொல்லி, அப்பாடல் ஏன் பிடிக்கிறது என்பதையும் சொல்லி முடியுங்கள். அதை அப்படியே இப்போட்டிக்கு அனுப்புங்கள். உங்களில் சிலர் குறும்படம் எடுக்கும் திறனையும் பெற்றிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள், உங்கள் குறும்படங்களையும் அனுப்பலாம். இக்காணொளிப் போட்டிக்கு, இதுதான் என்றில்லாமல், தமிழில் எடுக்கப்படும் தரமான காணொளிகள் எதை வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பலாம்.

இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது youtubeல் வலையேற்றம் செய்து அதன் சுட்டியையை (link) இங்கு பின்னூட்டமாகவோ அனுப்புங்கள்.

நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும். உங்கள் காணொளிகளை ( Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 28 ஜூன் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

ஏப்ரல் மாதக் கணொளிப் போட்டியின் வெற்றியாளர்கள்:

6 கருத்துரை

  1. விக்னேஸ் ஆனந்த்
    கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப்பள்ளி

  2. ரேஷ்மா மஹேந்திரன்
    கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*