குழுவென்றால், கொண்டாட்டம்!

குழுவாகச் சேர்ந்து செயல்படும்போது, வெற்றியை எளிதாக எட்டிவிடலாம். அதனால்தான் பள்ளியில் குழு நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அப்படி நீங்கள் ஈடுபட்ட, மறக்க முடியாத குழு நடவடிக்கையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அது, நீங்கள் கலந்து கொண்ட ஒரு போட்டி, ஒரு விளையாட்டு, ஒரு சமூக நடவடிக்கை, ஒரு பயணம் என எதுவாகவும் இருக்கலாம்.

கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 4 ஆகஸ்ட் 2018.. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

மே மாதக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்:

 

Rena Merlin Punggol Secondary School
Yashwini Selvaraj Nanyang Junior College
Hadriya Janas Punggol Secondary School

 

6 கருத்துரை

 1. அரை ஆண்டு தேர்வு நெருங்கிக்கொண்டிருந்த நேரம் அது. தமிழ் மொழி வகுப்பின் போது, எல்லோரும் குழுக்களாக பிரிந்து தமிழ் ஒப்படைப்பு ஒன்றைச் சேர்ந்துச் செய்யுமாறு ஆசிரியர் பணித்தார். நான்,ரவி,ரகு,ராமு ஆகிய நால்வரும் ஒரு குழுவாய் இணைந்தோம். கணினியைப் பயன்படுத்தி ஒரு காணொளியைச் செய்வதே எங்களின் நோக்கமாகும்.

  இக்கானணொளியை ஒப்படைக்க எங்களுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. நாங்கள் உடனடியாக செயலில் இறங்கினோம். ஒரு குழுவாக செயல்பட்டதால், எல்லோருடைய யோசனைகளையும் பயன்படுத்தி காணொளியைச் சிறாப்பாகச் செய்து முடித்தோம்.

  இன்னும் சில நாட்கள் ஒப்படைப்புக்கு இருந்தால் இதைப்பிறகு ஒப்படைக்கலாம் என்று நினைத்து தேர்வுக்குத் தயார் செய்வதில் மும்முரமானோம். நாட்கள் விரைவாக உருண்டோடின. ஒப்படைக்கும் நாளும் வந்தது. அன்று மதியம் மூன்று மணிக்கு ஒப்படைக்குமாறு ஆசிரியர் தெரிவித்தார். நான் என் மடிக்கணினியைப் பள்ளி நூலகத்திற்குச் சுமார் ஒரு மணிக்கு எடுத்து வந்தேன். சில நிமிடங்களில் ராமுவும் ரவியும் என்னுடன் இணைந்தார்கள். தான் வர சற்று தாமதமாகும் என்று ரகு கைத்தொலைபேசியில் தகவல் அனுப்பினான். நாங்கள் கணினியை இயக்க முயன்றபோது அது இயங்க மறுத்தது அதிர்ச்சியில் சிலைபோல் உறைந்தோம்.

  ரவியும் ராமுவும் தங்களுக்குத் தெரிந்த அணைத்து யுக்திகளையும் கையாண்டும் எந்த பலனும் இல்லை. செய்வதறியாது “திரு திரு” என்று விழித்தபடி காட்சியளித்தோம். அப்போது, ரகு எங்களை நோக்கி வந்தான். “நண்பர்க்ளே! ஏன் கப்பல் கவிழ்ந்தாற்போல் காட்சி அளிக்கிறீர்கள்? என்ன நடந்தது?” என்று வினவினான். தடுமாறியபடி நாங்கள் நடந்ததை விவரித்தோம். நாங்கள் கூறியதைச் செவிசாய்த்த ரகு “நண்பர்களே! கவலையே வேண்டாம். அன்று காணொளியைச் செய்த பிறகு எதற்கும் இருக்கட்டும் என்று அதை என் கையியக்கியில் சேமித்து வைத்தேன். வாருங்கள்! நூலகக் கணினியைப் பயன்படுத்தி ஆசிரியரிடம் ஒப்படைப்போம்.” என்றான். ரகுவின் கூற்று எங்கள் காதுகளில் தேனாகப் பொழிந்தது. காணொளியைச் சரியான நேரத்தில் ஒப்படைத்தோம். முதல் பரிசையும் வென்றோம்.

  “கூடி வாழ்ந்ததால் கோடி நன்மை” என்ற முன்னோர் வாக்கிலுள்ள உண்மையை அனுபவத்தில் அன்று உணர்ந்தோம்.

  விக்னேஷ் ஆனந்த்
  Greenridge Secondary School

 2. அன்று புதன்கிழமை. நான் வழக்கம் போலவே என் தமிழ் வகுப்புக்குச் சிட்டாய் பறந்து சென்றேன். ஆசிரியர், “நீயும் உனது மாணவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு குழுமப் பள்ளிகளுக்கிடையே நடக்கும் பேச்சுப்போட்டிக்குச் செல்லப்போகிறீர்கள். அங்கு மற்ற பள்ளி மாணவர்களுடன் குழுவாகச் சேர்ந்து உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பிறகு நீங்கள் ஒவ்வொருக் குழுவும் மேடையில் பேச வேண்டும்” என்றார். நான் தலையாட்டிப் பொம்மை போல் தலையாட்டினேன். ஆனால் என் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றியது. இருந்தாலும், ஆசிரியர் வார்த்தைக்கு நான் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் நின்றேன். பிறகு நானும் எனது நண்பர்களும் அந்தப் போட்டிக்காகப் பயிற்சி பெறுவதற்கு ஒரு பள்ளிக்குச் சென்றோம். அங்குள்ள ஆசிரியர் எங்களை ஒரு வகுப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு மற்ற பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். நாங்கள் அந்தப் பள்ளி மாணவர்களை ஏறஇறங்கப் பார்த்தோம். அவர்களுடன் சேர்ந்துதான் நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அந்த ஆசிரியர் கூறினார். ஆனால், எங்கள் நண்பன் ஒருவனுக்கு அந்த மாணவர்களுடன் குழுவாக சேர்ந்து வேலை செய்வதில் விரும்பம் இல்லை. நான் குழுவுடன் ஒற்றுமையாக இல்லையென்றால் நாம் வெற்றிபெற முடியாது என்று எவ்வளவோ எடுத்து கூறியும் அவன் எங்கள் வார்த்தைக்குச் செவிசாய்க்கவில்லை. மற்ற பள்ளி மாணவன் ஒருவனிடம் ஏட்டிக்குப்போட்டியாக பேசிக்கொண்டே இருந்தான். அதனால் எங்களாலும் கவனம் செலுத்த முடியாமல் போனது. போட்டி நாளும் விரைந்து வந்தது. ஆனால், நாங்கள் சரியாகத் தயார் செய்துகொள்ளவில்லை. போட்டியில் மற்ற குழுக்கள் ஒற்றுமையாக செயல்பட்டதால் அவர்கள் குழு வெற்றி பெற்றதன. ஆனால் எங்கள் குழு தோல்வி அடைந்தது. இதிலிருந்து நான் கற்றுக் கொண்டது. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதே ஆகும்.

  இசபெல் பிரீத்தி
  Fajar Secondary School

 3. சொற்களம் 2018, எனதும் எனது நண்பர்களின் கணவுப் போட்டி என்று கூட சொல்லலாம். நானும் என் நண்பர்களும் இப்போட்டிக்காக தான் இரண்டு வருடங்கள் காத்திருந்தோம். இறுதியில் ஜனவரி மாதம் எங்கள் ஆசிரியர் எங்களிடம் சொற்களத்திற்கான தகவல்களை கூறினார். அச்செய்தி எங்கள் காதுகளுக்கு தேன் வந்து பாய்ந்தாற் போல் இருந்தது. நானும் என் நண்பர்களும் இவ்வருடம் அப்போட்டியை வெல்ல வேண்டும் என்ற வெறியில் இருந்தோம். அப்போது எங்கள் ஆசிரியர் அதற்கு நாங்கள் கடினமாக உழைக்க வேண்டும், பல தியாகங்களை புரிய வேண்டும்; எங்களது படிப்பும் பாதிக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

  அவருடைய அறிவுரையை கேட்டுக்கொண்டு நாங்கள் தினமும் அயாரது உழைத்தோம். தினமும் வீட்டிற்கு செல்ல கிட்டதட்ட ஏழறை மணியாகிவிடும். எங்கள் ஒவ்வொருவருக்கும் பல கடமைகளும் பொறுப்புகளும் வேலைகளும் இருந்தன. ஆகவே நாங்கள் ஒருவருக்கொருவர் முடிந்தளவிற்கு உதவிக்கொண்டு உழைத்தோம். எங்கள் ஆசிரியர்களும் அவர்களால் முடிந்தளிவிற்கு உதவினர். தினமும் வேலைப் பலுவினால் மன உளைச்சலுக்கு ஆனாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் சிரிக்க வைத்து, மன உளைச்சலைப் போக்கி வேலை செய்தோம்.

  எங்கள் விடாமுயற்சியின் முதல் வெற்றி கனி எங்களது முதல் சுற்றின் வெற்றியாகும். இது எங்களுக்கு மேலும் உழைத்து, பயிற்சித்து, முன்னேற வேண்டும் என்ற உந்து சக்தியை கொடுத்தது. இனிமேல் வரும் சுற்றுகள் கடினமாகவே இருக்கும் என்று எங்களுக்கு தெரியும் . ஆனால் ஒற்றுமையாக உழைத்து வெல்வோம் என்று ஒருவருக்கொருவர் ஞாபகம் செய்துகொண்டு தொடர்ந்து பயிற்சித்தோம்.

  இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற்று நாங்கள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினோம். இம்முறை நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்; பயிற்சிக்க வேண்டும் என்று அறிந்தோம். ஆனால் கலைப்படையாமல் ஒருவருக்கொருவர் தமது பேச்சை எழுத உதவிக்கொண்டு; ஒருவருக்கொருவரை ஊக்கமளித்துக்கொண்டு பயிற்சித்தோம். ஆனால் நாங்கள் இம்முறை தோல்வியடைந்தோம். தோல்வியினால் நாங்கள் சற்று மனம் சோர்வடைந்தாலும், ஒன்றாக இவ்வளவு தூரம், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வந்ததை எண்ணி பெருமை அடைந்தோம்; மகிழ்ச்சியடைந்தோம். இப்போட்டியில் நான் இறுதிச்சுற்று வரை சென்று வெல்லும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும், நண்பர்களுடன் செலவழித்த இந்த சில வாரங்கள் எனக்கு நட்பின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமையாக வேலை செய்யும் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுத்தது. நாங்கள் சொற்களம் போட்டிக்கு பிறகு மற்ற போட்டிகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வெற்றிப்பெற்றோம். இப்போட்டி என் நினைவுகளில் ஒரு நிரந்தர இடத்தை கட்டையமாகவே பிடித்துள்ளது.

  சு. கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி

 4. தமிழ்மொழி மாதத்தில் நானும் என் நண்பர்களும் கலந்து கொண்ட ஒரு அற்புதமான நிகழ்வைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன். சொங் பாங் சமூக மன்றத்தில் அந்த வட்டாரத்திலுள்ள மாணவர்களுக்கான பலதிறன்கள் கொண்டு இறுதிச்சுற்றுப் போட்டிகள் கோலகலாமாக நடைபெற்றன. என் தமிழாசிரியரின் உந்துதலாலும் ஊக்கத்தாலும் நாங்கள் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளனிகளாக மாறினோம். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமை காலையில்தான் எங்களால் பயிற்சி செய்ய முடிந்தது. இருந்தாலும் எனக்கும் என் 2 தோழிகளுக்கும் இதுதான் முதல் தொகுப்பாளர் அனுபவம் என்பதால் சற்று விழி பிதுங்கியதை என்னால் மறக்க முடியாது. சவால்களை வென்றால்தான் வாழ்க்கையில் முன்னேறி போக முடியும் என்று எங்கள் ஆசிரியரின் கூற்று நினைவுக்கு வந்தது. சொங் பாங் மன்றத்தின் விடியலுக்கு நாங்கள்தான் பொழுதை கூவினோம். அவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டோம். ஆசிரியர் எங்களுக்குக் காலை உணவைக் கொடுத்துப் பயிற்சி அளித்தார். முகப்பாவனைகளையும் முக ஒப்பனைகளையும் சரிசெய்து கொண்டோம்.
  தொடக்கநிலை மாணவர்கள் போட்டிகளுக்கு வர ஆரம்பித்தனர். நீதிபதிகளும் பெற்றோர்களும் வண்ண வண்ண ஆடைகளில் ஜோலித்தனர். கூட்டத்தைப் பார்த்த எங்களுக்கு நடுக்கம் வராமல் இருக்க மேடையின் பின்பகுதியில் எங்கள் ஆசிரியர் இருந்தார். நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொகுப்பாளனி வேலை அவ்வளவு சுலபம் இல்லை . சிரித்துக் கொண்டே பேச வேண்டும். உச்சரிப்புப் பிழைகள் செய்ய கூடாது. நன்யாங் தொடக்க கல்லூரி பெயரைக் காப்பாற்ற வேண்டும். மேலும் எங்களின் ஆசிரியர்களின் கண்களிலுள்ள நம்பிக்கை ஒளியை மங்கிவிட மனமில்லை.

  போட்டிகளுக்கும் நானும், மற்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் மற்ற என் தோழிகளும் செவ்வென அறிவிப்புக்களைச் செய்தோம். இறுதிக்கட்டத்தில் அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பரிசுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கினார். எங்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனே என்பதை மறவாது என் தோழிகளோடும் ஆசிரியரோடும் புகைப்பட எடுத்துக்கொண்டேன். இந்த அனுபவத்தை வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

  Raiza Fathima
  நன்யாங் தொடக்க கல்லூரி

 5. ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலக அளவு’ என்ற பழமொழிக்கு ஏற்ப நம் கற்றுக்கொண்ட தகவல்கள் மிகவும் குறைவு ஆனால், தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அதுவும் நாம் குழுவாக இணைந்து படித்தால் இன்னும் அதிகமான அறிவைப் பெற்றுக்கொள்ளலாம். அதனால்தான் பள்ளிகளில் வெறும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களை குழுவேலைகளில் ஈடுபடவைக்கிறார்கள். இப்படி குழுவாக சேர்ந்து வேலை செய்யும்போது பல மறக்கமுடியாத அனுபவங்கள் ஏற்படும். அப்படிதான் அன்று குழுவேலையில் ஈடுபடும்போது எனக்கு கிடைத்த அனுபவங்களும்.

  குழு வேலைகள் என்றாலே எனக்கும் என் தமிழ் வகுப்பு மாணவர்களுக்கும் மிகவும் பிடிக்கும் அதனால் என் ஆசிரியர் என்னையும் என் இரு தோழிகளையும் ஒரு போட்டியில் கலந்துகொள்ள சொன்னார். நான், ஹானா மற்றும் யுவஸ்ரீ அந்த போட்டியில் கலந்துகொண்டோம்.

  அந்த போட்டி தகவல் தொழில்நுட்பம் சம்மந்தப்பட ஒரு பகிர்வுக்கான போட்டி அந்த போட்டிக்கு நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு படவில்லை செய்யவேண்டும் அதனால் என் இரு நண்பர்களும் என் வீட்டிற்கு வந்தார்கள் ஏன்என்றால் அவர்களால் கண்ணினியில் பேசி ரெகார்ட்[record] செய்யமுடியவில்லை.
  பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேளையை செய்தோம். எங்களுடைய வேலையை இன்னும் நன்றாக செய்ய என் ஆசிரியரும் என் வீட்டிற்கு வந்தார் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம் அது எங்களின் பின்னைப்பை வளர்த்தது. பின் இந்த போட்டிக்கு நாங்கள் அல்லும் பகலும் உழைத்து வேலை செய்தோம். இதை பகிர நாங்கள் பார்ட்லேய் [BARTLEY] உயர்நிலை பள்ளிக்குச் சென்றோம். அது எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக மட்டும் இல்லாமல் ஒரு கற்றல் பயணமாகவும் இருந்தது

  இந்த போட்டி எங்களுக்குள் இலைமறை காய் போல் மறைந்திருந்த திறமைகளை வெளியே கொண்டு வந்தது மேலும் எங்களின் தமிழியையும் வளர்த்தது. எப்படி தமிழில் தட்டச்சி செய்வது தமிழில் இன்னும் சரளமாக பேசுவது என்பதையும் கற்றுக்கொண்டோம்.

  ரேஷ்மா
  கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப்பள்ளி

 6. குழு என்றால் கொண்டாட்டம்.

  குழுவாக சேர்ந்தால் கொண்டாட்டம் தான். அதுவே குழுவாக சேர்ந்து வெற்றி பொற்றால், மகிழ்ச்சியோடு கொண்டாட்டம் தான். நான் ஒன்றும் எல்லோருடம் கலகலப்பாக பேசும் பெண் அல்ல. ஆனாலும் என்னையும் என் எண்ணத்தையும் மாற்றிய நிகழ்வு, என் வாழ்கையே மாற்றியது எனலாம். சிறு வயதில் இருந்து கைப்பந்து விளையாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். உயர்நிலை பள்ளியில் இணைப்பாட நடவடிக்கையில் கைப்பந்து விளையாட்டை எடுத்தேன். எனக்கு அடிப்படை திறன்களை மட்டும் தான் தெரியும். ஆனால் எனது பள்ளி குழுவில் நிறைய திறமைசாலிகள் இருந்தனர். என்னால் அவர்களுடன் விளையாட முடியுமா? என்ற தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. அப்போடு என் ஆசிரியர் என்னிடம் பேசினார். குழுவாக விளையாட வேண்டியது எப்படி? அதனால் என்ன நன்மைகள் விளையும் என்று கூறினார்.
  ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றம் இருந்தது என்னிடம், என் குழுவினர் என்னை உற்சாகப்படுத்தினார்கள். நீ ஒருத்தி தோற்றாலும் முழுகுழுவும் தோற்றமாதிரிதான். ஆகவே அனைவரும் வெற்றி பெற விளையாடு என்றார்கள். இந்த வார்த்தைகள் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. முதல் இரண்டு சுற்றுக்கள் கடுமையாக இருந்தாலும் வெற்றி பெற்றோம். மூன்றாவது சுற்று சவாலாக இருந்தது. ஆசிரியர் கற்றுக்கொடுத்த உத்தியும் குழுவினரின் ஆதரவும் கடைசி நேரத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தது. இந்த அனுபவம் மறக்க முடியாதது. ‘ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு’ என்ற ஓளவையார் கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. பிறகு என்ன கொண்டாட்டம்தான்.

  ஸ்ரீநிதி
  பொங்கோங் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*