குறும்படம், எனக்குப் பிடித்தது, ஆவணப்படம்

பின் வரும் காணொளிகளை நீங்கள் போட்டிக்கு அனுப்பலாம்
1. நீங்கள் எடுத்த குறும்படம்
2. ‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதை ஒரு காணொளியாக (Video) உங்கள் கைத்தொலைபேசியில் எடுத்து அனுப்பலாம்
3. ஒரு பூங்கா, உணவங்காடி, புத்தகம், நூலகம் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் ஒரு சிறிய ஆவணப்படம் தயாரித்து அனுப்பலாம்
இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது youtubeல் வலையேற்றம் செய்து அதன் சுட்டியையை (link) இங்கு பின்னூட்டமாகவோ அனுப்புங்கள்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும். உங்கள் காணொளிகளை ( Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 10 ஏப்ரல் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
பிப்ரவரி மாத வெற்றியாளர்களின் பட்டியல்

S.Karthikeyan Bendemeer Secondary School
Yuvaraj Beaty Secondary School – uptlc
Hari Narayanan Suresh Umaru Pulavar Tamil Language Centre

 

6 கருத்துரை

Your email address will not be published.


*