குறிக்கோள் இருந்தால் வெற்றி!

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி.
குறிக்கோள் இருந்தால் வெற்றி பெற முடியும், லட்சியம் இல்லாதவர்கள் வெற்றி பெறுவதில்லை. ‘லட்சியம்’ அல்லது ‘குறிக்கோள்’ என்ற கருப்பொருளில் அமைந்த கதை ஒன்றை  எழுதி இங்கே பகிருங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 ஜூலை 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

3 கருத்துரை

 1. சிறிய வயதிலிருந்தே ராமு ஒரு விண்வெவெளி வீரனாக ஆசைப்பட்டான். 
  ஆனால், அவன் எவ்வளவு முயன்றும் அவன் தேர்ந்தெந்தெடுக்கப்படவில்லை. பிறகு , அவனுக்கு வயது முதிர்ந்ததால் அவன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
  பலர் ராமுவின் ஊக்கத்தைக் கெடுத்தனர்.அவனுடைய கனவு பளிக்காது 
  என்று கூறினர். அவர் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து படித்தார்.
  இப்படியே படித்துப் படுத்து முதியவரானான்.அப்போது, யாரோ சிலர் ஆராய்ச்சி செய்வதை இவன் கேள்விப்பட்டாடான். அந்த ஆராய்ச்சிக்கு ஒரு முதியவர் தேவைப்பட்டிருந்ததால் ராமு அங்குச் சென்றார். கொடுக்கப்பட்டப் பயிற்சியால் , குச்சியுடன் நடந்துக்கொண்டிருந்த ராமு ஒரு விண்வெளி வீரனாக மாறினான். அவனுடைய புகைப்படங்கள் உலகெங்கும் பரவி அவன் பாராட்டத்தக்கவனாக மாறினான். இவனிடமிருந்து நாம் , குறிக்கோள் ஒன்றில் உறுதியாக இருந்து கடும் முயற்சி செய்தால் நம் குறிக்கோளை நிச்சயமாக அடையலாம்.
  ஜோஷிதா
  தஞ்சோங் காடொங் கிரல்ஸ் ஸ்கூல்

 2. குறிக்கோள் இருந்தால் வெற்றி!
  “பூவிழி, கவனமாக ஆடு!” என்று எனது பக்கத்து வீட்டு ரம்யா அத்தை என்னை செல்லமாகக் கண்டித்தார். தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன. இந்தத் தீபாவளி மிகவும் சிறப்பான தீபாவளியாக இருக்கப் போகிறது என்று என் மனம் குதூகலித்தது.
  ஏனென்றால், முதன்முறையாக நான் தீபாவளி நிகழ்ச்சியில் மேடையி்ல் ஆடப்போகிறேன். நான் மட்டுமில்லை! மொத்தம் ஆறு குழுக்கள்! ஒவ்வோரு குழுவிலும் வயதுக்கேற்ப மூன்று அல்லது நான்கு பேர். ஒவ்வொரு குழுவின் நடனப் பயிற்சிக்கான பொறுப்பு வெவ்வேறு அம்மாக்களிடம் கொடுக்கப் பட்டிருந்தது.
  தீபாவளியும் வந்தது. நாங்கள் மட்டுமில்லாமல் அம்மாக்கள் தனியாக விளக்கு நடனத்தை மேடையேற்றினார்கள். தீபாவளி முடிவதற்குள் பிள்ளைகளிடமும், பெற்றவர்களிடமும் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
  தீபாவளி முடிந்து பத்து நாட்கள் முடிந்த வேளையில், ரம்யா அத்தை அனைவரையும் தொலைபேசியில் அழைத்தார்.
  இந்த நட்பை இதோடு நாம் விட்டு விட்டுவிடக்கூடாது, தொடரவேண்டும் என்று கூறினார். மேலும் அவர், ஒவ்வோரு குழுவையும் ஏதாவது ஒரு அறிவியல் சோதனையைப் பயிற்சி செய்து, அனைவரின் முன்னிலையிலும் செய்து காட்டவேண்டும் என்று கூறினார்.
  ஆறு குழுவும் ஒவ்வொரு அறிவியல் கருத்தை மையமாக வைத்து அதை செய்து காட்டி விவரித்தனர். இப்பொழுது அனைவருக்கும் ஆறு விதமான அறிவியல் கருத்துகள் தெரியும். ஆனால் அவர்கள் பயிற்சி செய்ததோ ஒன்று தான். எவ்வளவு ஆக்கப்பூர்வமான சிந்தனை!
  எங்கள் பிளாக்குக்குப் பக்கத்தில் இரண்டு பூப்பந்து மைதானங்கள் புதிதாகக் கட்டினார்கள். ரம்யா அத்தை இதற்காக ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்தார். யாருக்கு விளையாட நேரம் இருக்கிறதோ அவர்கள் செய்தி அனுப்புவார்கள். பிறகு குழுவாக இணைந்து விளையாட ஆரம்பிப்பார்கள். இதில் தந்தையரும் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் நாங்கள் அதில் விளையாட ஆரம்பித்தோம். பிறகு ஒருநாள் போட்டிக்கு ஏற்பாடு செய்து, வெற்றி பெற்ற குழுவுக்கு கோப்பை அளித்தது, சேர்ந்து விருந்து உண்டது தனிக்கதை!
  நானும் அவரைப் போல அனைவரிடமும் அன்பாய், உதவியாய் இருக்க இலட்சியம் மேற்கொண்டேன்! அன்பால் இந்த உலகை வெல்ல உறுதி கொண்டேன்!! அன்பே கடவுள்!!!
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 3. சிறுமி ஒருத்தி வானத்தையே அசையாமல் பார்ப்பாள். வானத்தில் பறக்கும் விமானங்களைக் கண்கொட்டாமல் பார்த்தவண்ணம் மெய்மறந்து நிற்பாள். அவளுடைய தோழிகள்,”ஏன் எப்போது பார்த்தாலும் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்பார்கள். அதற்கு அவள் ,” என்னவோ தெரியவில்லை.வானத்தை பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் மேலோங்கி சென்று கொண்டே இருக்கிறது,”என்பாள். அந்தச் சிறுமியின் குறிக்கோள் ஒரு விண்வெளிப் பொறியியலாளராக வேண்டும் என்பதாகும்.இக்குறிக்கோள் அவளிடம் சாதனை புரியவேண்டும் என்னும் வேட்கையாகவும் மலர்ந்த்து. அவளுக்குள் தன் குறிக்கோள் அடைய வேண்டும் என்ற துடிதுடிப்பு அணையாவிளக்காக ஒளிர்ந்த்து.அவரே கலபனா சாவ்லா ஆவார். அவர் தன் கவனத்தை சிதறவிடாமல் கடின உழைப்புடன், விடாமுயற்சியுடன், தளராத மனத்துடன் இந்தியாவில் பொறியியல் பட்டப்படிப்பை சிறப்பாகப் படித்து அமெரிக்காவுக்கு சென்று முனைவர் பட்டமும் பெற்றார். நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையத்தில் சேர்ந்து, பல கடுமையான பயிற்சிகளை விடாமுயற்சியுடன் முடித்த பிறகு, அவர் விண்வெளி வீராங்கனை என்னும் தகுதியைப் பெற்றார். அவரால் தன் குறிக்கோளை
  தன்னுடைய உயர்ந்த பண்புகளால் மட்டுமே அடைய முடிந்தது.
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*