காட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டால் …

ஒரு நாள் காலை கண்விழித்துப் பார்க்கும்போது, நீங்கள் ஒரு மரங்களடர்ந்த காட்டில் இருக்கிறீர்கள். அதிர்ந்துவிடும் நீங்கள், அக்காட்டில், மனித நடமாட்டம் இருக்கிறதா என்று தேடுகிறீர்கள். அக்காட்டில் மனிதர்களே தென்படவில்லை. மிருகங்களின் அச்சமூட்டும் குரல்கள். வயிறு வேறு பசிக்கிறது. அப்போதுதான் அந்தக் குடிசை உங்கள் கண்களில் தட்டுப்படுகிறது. உள்ளே நுழைந்து பார்க்கிறீர்கள். அங்கும் – மனிதர் யாரும் இல்லை. ஆனால், ஒரு தட்டில், பல வகையான பழங்களும், பக்கத்தில் ஒரு கைத்தொலைபேசியும் இருக்கிறது. உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ள, அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள், என்னென்ன ஆர்வமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதை விவரித்து ஒரு கதையாக எழுதுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 மே 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

8 கருத்துரை

 1. கைத்தொலைப்பேசியைக் கண்டதும் நான் பெருமூச்சுவிட்டுவிட்டு, ஒரு வினாடியையும் வீணடிக்காமல் அதைக் கைப்பற்றினேன். ஆனால் அதில் இரண்டே இரண்டு பொத்தான்கள் மட்டுமே கண்களுக்குத் தென்பட்டன. பசி கண்களை மறைத்துக் கொண்டிருந்ததால் கண்மூடித்தனமாக ஒன்றை அழுத்தினேன். திடீரென, அறையின் அப்பக்கத்திலிருந்த ஒரு கதவு மெதுவாகத் திறந்துக் கொண்டிருந்தது. சற்று தயக்கத்துடன் கதவிற்கு அருகே சென்றுப் பார்த்தேன்.
  வகை வகையான மரங்களும் தாவரச் செடிக்கொடிகளும் செம்மையாக வளர்ந்து காட்சியளித்தன. அப்போது தான் அக்காட்டிற்கு வந்த காரணம் புரிந்தது. நாடு முழுக்க கொள்ளை நோய் பரவியிருந்ததால் அந்நோயைக் குணப்படுத்தக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்த தாவரத்தைக் காட்டிலிருந்து எடுத்துவர என்னை அனுப்பியிருந்தனர், வரும் வழியில் தெரியாமல் ‘ஞாபக மறதி மரத்தின்’ அடிவாரத்தில் தூங்கிவிட்டேன்! ஆனால், என்னை அனுப்பியதற்கான காரணம்….
  ‘யார் நீ?!’ குரலின் வேகத்தில் திடுக்கிட்டுத் திரும்பினேன். அங்கு வயது நிறைந்த மூதாட்டி ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அப்போதுதான், சூனியக்காரியின் மாயத் தோட்டத்தில் அத்தாவரம் விளைவதாகவும், சாமர்த்தியமாக் கேள்விக்குப் பதில் கூறியே தப்பிக்க முடியும் என்பதாகவும் கூறியிருந்தது என் ஞாபகத்திற்கு வந்தது. கிலி என் வயிற்றைப் பசியோடு கிள்ளியது. அனாலும், என் நாட்டைக் காப்பாற்றுவதற்காக என்னை நானே சமாளித்துக் கொண்டு, ‘வணக்கம். நான் நோய் தீர்க்கும் செடியைப் பறிக்க வந்துள்ளேன்!’ என செப்பினேன். உடனே அவர் கலகலவென சிரித்தவாறு, ‘யாரும் இதுவரை சரியான பதில் கூறாத இக்கேள்விக்குப் பதில் கூறினால் இத்தோட்டமே உன்னுடையதுதான்; தமிழ் என்பது என்ன?’ வினவினார்.
  நான் சற்றும் யோசிக்காமல், ‘தமிழ் என் தாய்மொழி!’ என்றேன்.
  உடனே அவரின் உருவம் சிறிதானது; சூனியக்காரி தேவதையாக மாறினார்! ‘இவ்வளவு வருடங்களாக யாரும் இக்கேள்விக்கு பதில் கூறவில்லை..தமிழ் ஒரு மொழி என்றே கூறினர். நிறைய வருடங்களுக்கு முன்பு தமிழை நான் மதிக்காமல் நடந்துக் கொண்டதால் இன்னொரு தேவதைக் கொடுத்த சாபத்தை அழித்துவிட்டாய்! இத்தோட்டமே உமக்குதான்!’ இதைக் கேட்டதும், நான் திடுக்கிட்டுப்போய் நின்றேன்!
  க.கபாஷினி
  மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி

 2. கைதொலைபேசியைக் கண்ட மறுகணமே நான் எனது தந்தையுடன் தொடர்புக்கொண்டேன்.அனால் சீற்றத்தில் கொந்தலித்துக்கொண்டிருந்த அவர் எரிமலையாய் வெடித்து கைத்தொலைப்பேசியை வைத்துவிட்டார்.அந்தச் சமயம் எனது எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன. “கைத்தொலைப்பேசியிலேயே கவனத்தைச் செலுத்தாதே படிப்புக்கு முக்கியத்துவம் கொடு !” என்ற என் பெற்றோர்களின் பொன்னான வார்த்தைகள் என் மனதைச் சுட்டன.அன்று நான் அவர்களது வார்த்தைகளை அலட்சியப்படுத்தியதால்தான் இன்று இந்த நிலைமையில் இருக்கின்றேன்.வெறும் விலங்குகளுடன் நடுக்காட்டில் உள்ள ஒரு சிறிய குடிசை.என்ன நிலைமை இது! எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை .

  என்ன செய்வது என்று தெரியாமல் நான் தவித்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஏதோ மிருகம் பிளிறும் ஒலி என் செவிகளை எட்டியது.திடுக்கிட்ட நான் உடனே வெளியே சென்றுப் பார்தேன்.அழகான குட்டி யானையொன்று காதுகளை அடித்துக்கொண்டிருந்தவாறு என்னை நோக்கிப் பிளறிக்கொண்டு நின்றது.என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தது.இனிய இந்தக் காட்டில் தான் என் வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்று நான் முடிவு செய்தேன்.அந்த யானையை அணுகிய சில நிமிடங்களில் அது என்னுடன் பழகத் தொடங்கியது.அன்றிலிருந்து நகமும் சதையும் போல் ஒரு நெருக்கமான உறவு எனக்கும் குட்டியனைக்கும் உருவானது.அனைத்து நடவடிக்கைகளிலும் நான் அதனுடனே ஈடுப்பட்டேன். ஆரோக்கியமான பழங்களையும் காய்கறிகளையும் உண்பதிலிருந்து அனைத்து செயல்களும் இயற்கை முறையில் நடத்தப்பட்டன.நாளுக்கு நாள் என் நண்பனுடன் பழக நான் காட்டுடன் ஒன்றாகிவிட்டேன்.இவ்வாறு பல வருடங்கள் கழிந்தன.
  நமது உலகம் எவ்வாறு அதிக அளவு தொழில்நுட்பதால் பாதிக்கப்பட்டு அழிந்துக்கொண்டே வருகின்றது என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன். இதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே நான் குடிசையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது என்னாலேயே எனது கண்களை நம்ப முடியவில்லை. எதிர்பாராத வகையில் ஆள் நடமாட்டமே இல்லாத அந்தக் காட்டிற்கு எனது குடும்பமே வந்திருந்தது.அனைவரின் கண்களிலும் கண்ணீர் மல்க எனது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்தது.

  ரகுராமன் சௌபர்ணிகா
  மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி

 3. ஒரு நாள் காலையில் நான் கண்விழித்துப் பார்க்கும்போது, மரங்களடர்ந்த ஒரு காட்டில் இருந்தேன். அதிர்ச்சிக்குளான நான், அக்காட்டில் மனித நடமாட்டம் இருக்கிறதா என்று தேட முற்பட்டேன். ஆனால், அக்காட்டில் மனிதர்களே தென்படவில்லை. மிருகங்களின் அச்சமூட்டும் குரல்கள் மட்டுமே என் காதுகளில் விழுந்தன. வயிறு வேறு நன்றாகப் பசித்தது. சுற்றும் முற்றும் யாரும் தென்படவில்லை. அப்போது, என் இதயம் ‘படக், படக்’ என்று துடிக்க ஆரம்பித்தது. வெகுதூரத்தில், ஒரு சிறிய குடிசை என் கண்ணில் தென்பட்டது. நேரத்தை வீணாக்காமல், நான் உடனே அதனுள் நுழைந்தேன். என்ன ஆச்சரியம்! உள்ளே, ஒரு தங்கத் தட்டில் பலவகையான பழங்களும், ஒரு கைத்தொலைப்பேசியும் இருந்தன. அதைக் கண்டதும், நான் ஆனந்த வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தேன். பசி என் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருந்ததால், நான் அங்கிருந்த பழங்களை விரைவாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பழங்கள் மிகவும் ருசியாக இருந்தன. பழங்களைச் சாப்பிட்ட பிறகு, அங்கிருந்த கைத்தொலைபேசியைக் கையில் எடுத்தேன். திடீரென்று, யாரோ இந்த கைத்தொலைபேசியில் அழைத்தார். ’’நீ இப்போது அனுபவித்துக்கொண்டிருப்பது ஒரு சவால். இன்னும் மூன்று மணி நேரத்தில் நீ ஒரு சிவப்புக் கொடியைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீ அந்தக் காட்டில் வாழ்க்கை முழுவதும் இருப்பாய்!’’ என்று கூறினார். அதைக் கேட்டதும் நான் சிலையாய் நின்றேன். அந்தப் பதற்றத்தில், நான் என் அறையில் உள்ள கட்டிலிலிருந்து கிழே விழுந்தேன். அப்போதுதான் அது கனவு என்று எனக்கு தெரிய வந்தது.

  கதிஜா
  4E1
  புக்கிட் மேரா உயர்நிலைப்பள்ளி

 4. அப்போதுதான் அந்தக் குடிசை என் கண்களில் தட்டுப்பட்டது. உள்ளே நுழைந்தேன். அங்கும் மனிதர்கள் யாரும் இல்லை. ஆனால், ஒரு தட்டில் மட்டும் பல வகையான பழங்களும், பக்கத்தில் ஒரு கைத்தொலைபேசியும் இருந்தன. மிகவும் பசியாக இருப்பதால், தட்டில் இருக்கும் அனைத்தும் பழங்களையும், மனதிருப்தி அடையும் வரை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பின் அருகில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். அந்தக் கைத்தொலைபேசியின் மூலம் என் பெற்றொர்களிடம் அல்லது என் உறவினர்களிடம் உதவி கேட்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அந்த கைத்தொலைபேசியிலிருந்து மற்றவர்களிடம் பேச முடியவில்லை. அதன் பிறகு என்ன செய்யலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
  ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது, அந்தக் குடிசையினுள் ஓர் அறை இருக்கிறது என்பதைக் கவனித்தேன். அந்த அறைக்குள் என்ன இருக்கும் என்று ஆர்வத்தோடு ஆராய முயன்றேன். அந்த அறையின் கதவைத் திறந்து பார்க்கும்போது, பயத்தால் என் உடல் நடுங்கியது. ஆமாம் , மனிதர்களின் எலும்பு கூடுகள் கிடந்தன. அந்தக் காட்சியைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ச்சியால் நிலைகுத்தி நின்றேன். உடனே சுதாரித்துக்கொண்டு அந்தக் குடிசையைவிட்டு வெளியேறினேன்.
  திடீரென்று, எங்கிருந்தோ ஒரு சத்தம் கேட்டது. அது என்னவாக இருக்கும் என்று பார்க்க விரும்பாத நான் அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓடினேன். சில மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு கடற்கரையை அடைந்தேன். அங்குப் படகு ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். அப்படகில் ஏறி, அவ்விடத்தைவிட்டு கிளம்பினேன். பல மணி நேரத்திற்குப் கடலிலேயே பயணம் செய்த நான் ஒரு வேறொரு கரையை அடைந்தேன். அது என் சிங்கைக் கடற்கரைப்போல் தெரிந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்த நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

  அர்ஜூன்
  4E1
  புக்கிட் மேரா உயர்நிலைப்பள்ளி

 5. நான் பயந்து பயந்து அந்த வீட்டினுள் நுழைந்தேன், அந்த வீட்டில் ஒரு தாத்தா இருந்தார். அந்தத் தாத்தா ‘ யாரடா நீ?’ என்று கேட்டார். நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் காட்டில் தொலைந்துவிட்டேன் என்று கூறினேன். என் வீட்டில் தங்கு நாளை நான்உனக்கு வழி காட்டுகிறேன், ஏனென்றால் சூரியன் மறைய போகிறது, இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும்’ என்று தாத்தா கூறினார்.

  எனக்கு மிகவும் பசியாக இருந்தது. ஆனால் நான் தாத்தாவிடம் ஒன்றும் கூறவில்லை. என் இருண்ட கண்களைக் கண்ட தாத்தாவே தட்டில் இருந்த பழங்களைச் சாப்பிடு என்று கூறினார். சாப்பிட்ட பிறகு தாத்தா அவருடைய வீட்டை என்னிடம் சுற்றிக்காட்டினார். நான் சுற்றிப் பார்த்த போது சன்னலின் வழியே ஒர் அபூர்வமான காட்சியைப் பார்த்தேன். அந்தக் காட்சியில் ஒரு புலியும் மானும் விளையாடிக் கொண்டிருந்தன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் வழக்கமாக புலி மானைத் துரத்தி கடித்து தின்னும் ஆனால் இரண்டும் ஒன்றாக சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.

  பிறகு தூங்குவதற்கான இடத்தைக் காட்டிவிட்டு தாத்தா சென்றுவிட்டார். அப்போது வேலையாள் போல் இருந்த ஒருவன் வந்தான். அப்போது தான் அவனைப் பார்த்தேன். அவன் ‘ தம்பி இவரை நம்பாதே இவர் மனிதர்களை எல்லாம் விலங்குகளாக மாற்றிவிடுவார். இங்குள்ள விலங்குகள் எல்லாம் மனிதர்களாக இருந்தவர்கள் தான், அதனால் எப்படியாவது தப்பிவிடு!’ கூறிவிட்டு ஒடிவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அன்பு காட்டி உணவளித்து தங்க வைத்தவரை நம்புவதா? இல்லை யார் என்று தெரியாதவர் சொல்லியதை நம்புவதா? என்ற குழப்பத்துடன் விடியலுக்குக் காத்திருந்தேன்.

  தருண்
  பொங்கோல் உயர்நிலைப் பள்ளி

 6. அடர்ந்த காட்டில் பசியில் இருந்த நான் தட்டில் பழங்களை பார்த்ததும் , நாவில் எச்சில் ஊற, அவசரமாக சாப்பிட ஆரம்பித்தேன் . சாப்பிட்டதும், என் உடம்பில் ஒருவித மாற்றத்தை உணர்ந்தேன். என் மனம் அமைதி கலந்த சந்தோச நிலையை அடைந்தது . என் மனத்தில் இன்றைய இளைய சமூகத்தினரும் நமது மூத்த குடிமக்கள் போல சிங்கப்பூரை இன்னும் நல்ல வழியில் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

  அப்போது என் கண் முன்னே திடீரென ஒரு முதியவர் தோன்றினார்.எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.பயம் கலந்த விழிகளுடன்,அவரை உற்று நோக்கினேன்.அதற்குள் அவரே “தம்பி, பயப்படவேண்டாம்.நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்,எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று வினவினார்.எனக்கு உதவியதும் இந்த கைத்தொலைபேசியை நீ உனக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

  நானும் அப்போதுதான் கைத்தொலைபேசியை பார்த்தேன்.அப்போது என் மனதிற்குள் நாம் வீடு திரும்ப வேண்டுமானால் கைத்தொலைபேசி வேண்டும்.எனவே உதவி செய்வோம் என்று எண்ணியவாறு சம்மதம் என்று தலையசைத்தேன்.

  என்னை அவர் சற்று தூரம் தள்ளி ஒரு மரத்திற்கு கீழே கொண்டு போய் நிறுத்தினார்.”என்ன ஆச்சர்யம்!”.மரத்திலும் கிளைகளிலும் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. மரத்தின் பெயர் “சிங்கப்பூர்” என்றும் கிளைகளில் இந்தியர்கள்,மலாய்,சீனர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

  “ஐயா,நான் என்ன செய்யவேண்டும்?” என்று வினவ அதற்கு அவர் நான் இந்த மரத்தின் கனிகளை எல்லாம் பறித்து தருகிறேன்.உன் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடு என்று கூறினார்.அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.ஆனால் இது என்ன கனி என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பதாகவும் கூறினேன்.

  முதியவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டு,”தம்பி,இந்த கனியை தான் சற்றுமுன் சாப்பிட்டாய்.இதை உண்டதும் நம்நாட்டு மக்களும் உன்னை போல அமைதியும்,சந்தோஷமும் அடைவார்கள்.முக்கியமாக பல இன மக்கள் இருக்கும் நம் நாட்டில் இன்று போல் வருங்காலத்தில் ஒற்றுமையுடன் இருந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்கள்” என்று கூறினார்.

  அதை கேட்டவுடன்என் மனம் சந்தோஷகடலில் மூழ்கியது.ஏனெனில் என்னுடைய ஆசையும் , லட்சியமும் அதுதானே. ஒரு நொடியும் வீணாக்காமல் , முதியவரியின் உதவியோடு அனைத்து கனிகளையும் பறித்துக்கொண்டு திரும்பவும் குடிசைக்கு திரும்பினோம். உடனே தொலைபேசியை முதியவரிடம் வாங்கி என் பெற்றோருடன் தொடர்புக்கொண்டேன்.

  அப்போது என் அம்மா என்னை உலுக்கினார்”என்ன செய்கிறாய் தம்பி, காலையில் படிக்க எழுப்பினால் திரும்பவும் தூங்கிவிட்டாயே?”என்று என்னை செல்லமாக கண்டித்துவிட்டு தேனீர் கோப்பையை என்னிடம் கொடுத்தார் . அப்போதுதான் காலையில் படித்துக்கொண்டு இருக்கும்போது திரும்ப அசதியில் கண் அசந்ததும் நினைவில் வந்தது்”நான் இதுவரை கண்டது கனவா ?” என்று எனக்கு நானே கூறிக்கொண்டே பள்ளிக்கு செல்ல தயாரானேன் . ஆனால் இந்த நிகழ்வு கனவாக இருந்தாலும் இது நிஜமாகவே நடந்தது போல உணர்வு தட்ட உடம்பு மெய்சிலிர்த்தது

  விஷ்ணு
  2B
  Punggol secondary school

 7. அழகிய வனத்தை ரசித்த படி இருந்த நான் என் வழியில் தொலைந்து போனதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்த படி நின்றேன்.

  “எல்லாம் கடந்து செல்லும்”

  என என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. தனம்பிக்கையுடன் கண் முன்னே தெரிந்த சிறிய குடிசைக்கு சென்றேன். மனித நடமாட்டம் இல்லாத அந்த குடிசையில் ஒரு மேசையில் கைத்தொலைபேசியில் ஒரு தட்டில் பழங்களும் இருந்தன. வேகமாக நான் கைத்தொலைபேசியை எடுத்தேன். அட ராமா! வனத்தில் தொடர்பு கிடைக்காததால் என்னால் என் அம்மாவுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது. என்ன செய்வது? எல்லாம் விதியின் படி தானே நடக்கும், அல்லவா? ஆனாலும், என்னுள் இருந்த சிறு துளி நம்பிக்கையைக் கொண்டு நான் என் பசியை போக்கினேன். வயிறார உண பிறகு வனத்தை விட்டு தன்னம்பிக்கையுடன் வெளியேற மீண்டும் ஒரு முயற்சியில் ஈடுப்பட்டேன்.

  எல்லாம் கடந்து செல்லும்.

  இம்முறை, சற்று துலைவில் ஒரு உலங்கூர்த்தியைக் கண்டேன். அதில் என் அம்மா இருந்ததைக் கண்டேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் நான் என் கைகளை அசைத்து அவர்களிடம் கூச்சலித்தேன். நான் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டேன்! என் அம்மா கூறியதும் இறுதியில் உண்மை ஆயிற்று!

  எல்லாம் கடந்து செல்லும்.

  Venkatesh Viveka
  வெங்கடேஷ் விவேகா
  Commonwealth Secondary School

 8. அழகிய வனத்தை ரசித்த படி இருந்த நான் என் வழியில் தொலைந்து போனதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்த படி நின்றேன்.

  “எல்லாம் கடந்து செல்லும்”

  என என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. தனம்பிக்கையுடன் கண் முன்னே தெரிந்த சிறிய குடிசைக்கு சென்றேன். மனித நடமாட்டம் இல்லாத அந்த குடிசையில் ஒரு மேசையில் கைத்தொலைபேசியில் ஒரு தட்டில் பழங்களும் இருந்தன. வேகமாக நான் கைத்தொலைபேசியை எடுத்தேன். அட ராமா! வனத்தில் தொடர்பு கிடைக்காததால் என்னால் என் அம்மாவுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது. என்ன செய்வது? எல்லாம் விதியின் படி தானே நடக்கும், அல்லவா? ஆனாலும், என்னுள் இருந்த சிறு துளி நம்பிக்கையைக் கொண்டு நான் என் பசியை போக்கினேன். வயிறார உண பிறகு வனத்தை விட்டு தன்னம்பிக்கையுடன் வெளியேற மீண்டும் ஒரு முயற்சியில் ஈடுப்பட்டேன்.

  எல்லாம் கடந்து செல்லும்.

  இம்முறை, சற்று துலைவில் ஒரு உலங்கூர்த்தியைக் கண்டேன். அதில் என் அம்மா இருந்ததைக் கண்டேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் நான் என் கைகளை அசைத்து அவர்களிடம் கூச்சலித்தேன். நான் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டேன்! என் அம்மா கூறியதும் இறுதியில் உண்மை ஆயிற்று!

  எல்லாம் கடந்து செல்லும்.

  Venkatesh Viveka
  வெங்கடேஷ் விவேகா
  Commonwealth Secondary School

Your email address will not be published.


*