கற்பனை சிறகடித்த நாடு

உங்களுக்கு ஒரு வெளிநாடு மிகவும் பிடிக்கும். பள்ளி விடுமுறையில் அந்த நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்பது உங்கள் விருப்பம். ஆனால், பல காரணங்களால் உங்களால் அங்கு செல்ல இயலவில்லை. இதையே சிந்தித்தபடி படுக்கும் நீங்கள் கண்விழிக்கும்போது – நீங்கள் செல்ல ஆசைப்பட்ட அந்த நாட்டில் இருக்கிறீர்கள். அந்த நாட்டில் எங்கு சென்றீர்கள், என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒரு கற்பனைக்கதையாக எழுதுங்கள். சிறந்த கற்பனைக் கதைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 22 நவம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
செப்டம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

4 கருத்துரை

 1. கற்பனை சிறகடித்த நாடு
  எனக்கு மிகவும் பிடித்த நாடு பிரான்ஸ். பிரஞ்ச் கலாச்சாரம் மிகவும் பழமையான கலாச்சாரங்களில் ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. மேலும் பிரஞ்சு மக்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருப்பார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். மேலும் அங்குள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரும், மிகப் பிரபலமடைந்த டாவின்சியின் ஓவியமான மோனாலிசா ஓவியமும் எனக்குள் அந்த நாட்டிற்கு செல்லும் ஆவலைத் தூண்டியது. அதனால் நான் பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்டேன். என் பெற்றோர் இவ்வாண்டு டிசம்பர் விடுமுறையில் பிரான்ஸுக்குச் செல்லலாம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடுத்த வருடம் அங்கு செல்லலாம் என்று கூறிவிட்டனர்.
  அதைக் கேட்டவுடன் எதையோ இழந்துவிட்டது போன்ற வருத்தம் எனக்குள் என்னை அறியாமல் ஏற்பட்டது. அதனால் என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அதைக் கண்ட என் அம்மா அருகில் வந்து என்னை அணைத்துக்கொண்டு ‘இதற்கெல்லாம் அழலாமா? இந்த வருடம் போகமுடியவில்லை என்றால் என்ன? அடுத்த ஜூன் விடுமுறையில் கட்டாயம் போவோம்’ என்று உறுதியாகக் கூறினார். அதைக் கேட்ட என் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. நம்பிக்கையோடு படுக்கைக்குச் சென்றேன்.
  காலையில் கண்கள் திறக்கும் போது என்ன ஆச்சரியம்! நான் பிரான்சில் இருந்தேன். அதுவும் ஈஃபில் கோபுர வாசலில் நின்றுகொண்டிருந்தேன். எப்படி அங்கு சென்றேன் என்று தெரியவில்லை மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன்..….………! .இங்கும் அங்கும் ஓடினேன்! என் மனம் பட்டாம்பூச்சியைப் போல் பறந்தது.எனக்கு பிடித்த ஈஃபில் டவரை நேரில் பார்த்தேன். அது மிகவும் உயரமாக இருந்தது. ஏழு அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரை ஜீன்ஸ் படத்தின் பாடல் காட்சியில் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் அதை நேரில் பார்க்கிறேன் என்று நினைக்கும்போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஈஃபில் டவரைச் சுற்றி பார்த்தேன் அப்பொழுது ஆங்காங்கே சில இயந்திர மனிதர்கள் மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். அக்கோபுரத்தைச் சுற்றிப் பார்க்க முடிந்ததே தவிர என்னால் அதனுடயை உச்சியை எவ்வளவு அண்ணார்ந்து பார்த்தாலும் பார்க்க முடியவில்லையே என்று கவலையுடன் நின்றுகுண்டிருந்த எனக்கு அப்போது ஒரு யோசனை தோன்றியது. உடனே ஒரு இயந்திர மனிதனுக்கு அருகில் சென்று என்னை இந்த கோபுர உச்சிக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டேன். உடனே அவன் என்னைக் கோபுர உச்சிக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து நகரத்தைப் பார்த்தபோது பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அதுபோல் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை பூமியில் பார்ப்பது போல் இருந்தது.
  பிறகு எனக்கு பசியாக இருப்பதை அவரிடம் சொன்னேன். இயந்திர மனிதன் உடனே சற்றே அருகில் இருந்த உணவு விடுதிக்கு என்னை அழைத்து சென்றார்.பிரான்சின் பாரம்பரிய உணவைச் சாப்பிடுகிறாயா என்று கேட்ட அவர் என்னிடம் ‘நீ சாப்பாடு வாங்கும்போது உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவு சாப்பாட்டை மட்டுமே வாங்கு. அவ்வாறின்றி வாங்கிவிட்டு சாப்பிட முடியாமல் குப்பைத்தொட்டியில் கொட்டினால் இந்நாட்டில் அது பெரிய தவறாகக் கருதப்படும். நீ தண்டனைப் பணம் செலுத்தவேண்டி இருக்கும். கவனத்தில் கொள்’ என்றார். அதைக் கேட்டவுடன் பள்ளி உணவகத்தில் மாணவர்கள் வீணாக்கும் உணவுகளை எண்ணிப் பார்த்தேன். பள்ளிகளில் இது போன்ற விதிமுறைகளைக் கொண்டு வந்தால் உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணருவர் என்று அப்போது என் மனம் எண்ணியது. பிறகு அவரிடம் ஆலோசனை கேட்டு எனக்குப் பிடித்த சுவைக்கேற்ற சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தேன். நான் சாப்பிட ஆரம்பித்ததும் ‘எனக்கு நேரமாகிறது. நான் வருகிறேன். உனக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் கூச்சப்படாமல் இங்குள்ள யாரிடமும் நீ கேட்கலாம். எல்லோரும் இங்கே உதவி செய்வார்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவரது அன்பான உதவிகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்த நான் அவரைப் போலவே அந்நாட்டு மக்களும் அன்புடையவர்கள் என்பதை அறிந்து ஆனந்தம் அடைந்தேன். அதில் நூறு விழுக்காடு உண்மை உள்ளது என்பதை அந்த உணவு விடுதியின் பணி புரிவோர் சிரித்த முகத்துடன் ஆற்றிய சேவையிலிருந்து உணர்ந்தேன்.
  உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தேன் உர்ர் உர்ர் என்று சத்தம் மேலிருந்து கேட்டது. எனவே மேலே பார்த்தேன் பறக்கும் கார் சற்றிக் கொண்டிருந்தது.உடனே பக்கத்திலிருந்த மனிதரிடம் ‘பறக்கும் காரில் இந்த நகரம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும். என்ன செய்வது என்று கேட்டேன். உடனே அவர் பறக்கும் கார் ஒன்றை வரவழைக்க உதவினார். காரில் ஏறிச் சுற்றியபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நான் மிதந்துகொண்டிருந்தபோது தருண்! தருண்! என்ற என் அம்மாவின் குரல் கேட்டது. நான் திரு திருவென்று விழித்தேன். ‘தருண்! பள்ளிக்கு நேரமாகிறது. சீக்கிரம் எழும்பு’ என்று அம்மா என்னை எழுப்பும் குரல் மறுபடியும் கேட்டது. பிறகுதான் நான் கன்டதெல்லாம் கனவு என்று தெரிந்தது. ‘என்னம்மா நல்ல கனவிலிருந்து என்னை எழுப்பி விட்டீர்களே’ என்று சிணுங்கிக்கொண்டே எழுந்தேன். அதற்கு என் அம்மா ‘அப்படி என்ன கனவு கண்டாய்? பிரான்ஸ் நாட்டைச் சுற்றிப் பார்த்தாயா என்றார் உடனே ஆச்சரியத்தோடு ‘எப்படி நான் கண்ட கனவை நேரில் பார்த்தது போல் கூறுகிறீர்களே’ என்றேன். ‘எனக்குத் தெரியாதா? உனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்ட ஆசை அது. அதுதானே கனவாக வரும் . இதிலென்ன ஆச்சரியம்’ என்று என் அம்மா கூறியபோதுதான் ஆசைகள்தாம் முதலில் கனவாக வரும். பிறகு அதுவே நனவாகும் என்பதை உணர்ந்தேன். அவ்வுணர்வே இனிமையாக இருந்தது. மெல்ல சிரித்த படி நிச்சயம் ஒரு நாள் பிரான்ஸ் செல்வேன் என்ற நம்பிக்கையுடன் நான் எனது இணைப்பாட நடவடிக்கைக்குச் செல்ல தயாரானேன்.
  தருண்
  உயர்நிலை முதலாம் ஆண்டு
  பொங்கல் உயர்நிலைப்பள்ளி

 2. கற்பனை சிறகடித்த நாடு
  சிறு வயதில் இருந்தே லண்டனை சுற்றிப்பார்க்க எனக்கு விருப்பம். நான் என் தந்தையிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால், பணப்பற்றாக்குறை காரணமாக அவர் என்னை போக விடவில்லை. நான் லண்டனைப் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றேன்….
  என்ன ஆச்சரியம்…என் குடும்பம் லண்டன் அய் அருகே நின்றகொண்டிருந்தோம். லண்டன்அய் ஒரு பிரபல மாபெரும் சக்கரம். அதில் பல கூண்டுகள் இருந்தன. ஒவ்வொரு கூண்டிலும் இருபத்திஐந்து பேர் அமரலாம். அது மிக மெதுவாக சுற்றியது. எங்கள் கூண்டு உயரத்திற்க்கு என்றது. ஆஹா! லண்டன் நகரம் வண்ணமயமாக காட்சி அளித்தது. பிறகு நாங்கள் லண்டன் வெள்ளை கோபுரத்திற்க்கு சென்று இங்லாந்து அரசர்களின் ஆடைஅணிகலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் பார்த்தோம். பிறகு ஆல்பர்ட் நினைவு ஆலயத்திற்க்கு சென்றோம் .இதை விக்டோரியா ராணி தம் கணவர் ஆல்பர்ட்டுக்காக கட்டினார். பிறகு நாங்கள் பக்கிங்காம் அரண்மனையை அடைந்தோம். அங்கே படை வீர்ர்கள் பணிமாற்றம் நிகழ்ச்சியை பார்த்தோம். மிகவும் பிரமிப்பாக இருந்த்து. பிறகு நாங்கள் நாடளுமன்றத்தை காணச்சென்றோம். கடைசியாக கோபுர பாலத்தை அடைந்தோம். என்ன ஆச்சரியம் இரண்டு கோபுரங்களுக்கு இடையில் பாலம் கட்டப்பட்டிருந்த்து .நான் மிகவும் உற்சாகமாக அடிமேல் அடிவைத்து கோபுர பாலத்தில் நடந்துக்கொண்டிருந்தபோது…
  பலத்த சத்தம் கேட்டு திடீரென்று கண்விழித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரவில் குடித்த பால் குவளை காற்றில் கீழே விழுந்து உருண்டோடியது. நான் கண்டது கனவு என்று தெரிந்த்து. இருந்தாலும் லண்டன் ஆசை கனவிலாவது நிறைவேறியதை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

  ஆத்திப்
  புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 3. உல்லாசம் பொங்கும் ஊட்டி
  எனக்குப் பிடித்த நாடு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு. இங்கு மலைகளின் ராணி என்று சொல்லப்படுகின்ற ஊட்டி இருக்கின்றது. இது சுற்றுப் பயணம் செல்வதற்கு ஏற்ற ஒரு அருமையான சுற்றுலாத்தளம். நான் நூறு வருடத்திற்கும் மேற்பட்ட வயதுடைய ஊட்டி ரயிலில் பயணம் செய்தேன். அது மலைகள், நீர்வீழ்ச்சிகள், புல்வெளிகள் மற்றும் அடர்த்தியான காடுகள் ஆகியவற்றில் பயணம் செய்தது.
  அந்த வேகமான இயந்திரத்தில் அந்த அற்புதமான சவாரிக்குப் பிறகு, நான் பொடானிக்கல் தோட்டங்களில் பயணித்தேன். இது 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது மலைப் பிரதேசங்களை விடவும் உயர்ந்த ‘தொட்டபெட்டா’ மலை உச்சியில் உள்ளது. அடுத்தபடியாக, சிம்ஸ் பூங்காவிற்குச் செல்வதற்குப் புறப்பட்டேன். அங்கு இன்றும் 150 க்கும் மேற்பட்ட வயதுடைய மிக அரிதான வன விலங்குகளும் பூவினங்களும் உள்ளன என்று நான் கேள்விப்பட்ட செய்தி என் நினைவில் வந்தது. அன்று காற்று வலுவாக இருந்தது, அந்தப் பூங்காவில் ஒரு அழகிய பூவைத் தொட்டபோது என் அம்மா என் கனவிலிருந்து என்னை எழுப்பினார். அப்போதுதான் நான் இதுவரை கண்டது கனவு என்றும் அக்கனவில் எனக்குப் பிடித்த ஊட்டியில் இருந்தேன் என்றும் தெரிய வந்தது.
  ஸ்ரீமன் ஸ்ரீதர்
  உயர்நிலை இரண்டு உயர்தமிழ்
  செங்காங் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 4. ‘ஆஸ்திரேலியா’ என்ற நாட்டிற்கு நான் செல்ல விருப்பப்பட்டேன். ஆனால், என் பெற்றோர்கள் இருவரும் அதை மறுத்துவிட்டார்கள். இதை நினைத்துக்கொண்டே நான் என் அறைக்குள் சென்று உறங்கினேன்.
  கடிகாரத்தின் ஓலி காதில் ரீங்காரமிட்டது, கதிரவனின் ஒளி கண்களில் பிரகாசித்தத, கண்களை மெல்லத்திறந்தேன். என்னுடைய அறை புதுமையாக காட்சியளித்தது ‘நான் எங்க இருக்கிறேன் என்னை யாராவது இங்கே கடத்திட்டு வந்துவிட்டார்களா’ என்று நான் எனக்கே கேட்டுக்கொண்டேன். திடிரென்று என் அம்மா என்னை காலை கடன்களை முடித்துவிட்டு வரச்சொன்னார் அவர் என் அம்மாவா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. இருபினும் நான் எங்கே இறுக்கிரோம் என கேட்டேன். இதுஉனக்கு பிடித்த ‘ஆஸ்திரேலியா’. உனக்கு புரியும்படி கூறவேணுமென்றால் இதுதான் உலகிலுள்ள சொர்க்கம். நான் வாயை பிளந்தபடி நின்றேன். என்னக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. என் காலை கங்களை முடித்தவுடன் வெளியே சென்றோம். அந்த இடம் பெயர் சிட்னி. அங்கு உணவுகளின் வாசனையே மூக்கை பறித்ததால் நான் என் பெற்றோருடன் சாப்பிட சென்றேன். பிறகு நாங்கள் ‘கான்பரா’ என்ற இடத்திற்கு சென்று பலோனில் பறந்தோம் . அது தீயின் உதவியால் பறந்தது. நன் தனி பலோனிலும் என் பெற்றோர்கள் தனி பலோனிலும் பறந்தோம். திடிரென்று என் பெற்றோருடைய பல்லோனில் தீ பற்றியது. என் அம்மா வலிதாங்க முடியாமல்’துரை துரை’என்று கத்தினார் . நானும்’அம்மா அப்பா’என்று கத்திவிட்டு நின்றேன்.அதிர்ச்சியில் என் கண்கள் மிக விரைவாக திறந்தன.என்ன அம்மா’துரை எழுந்திரு’என்று கத்தினார்.நன் பதறியடித்து என் அம்மாவிடம் சென்று அவரை தொட்டு பார்த்தேன்.என்னடா திரும்பியும் கனவா என்று சொல்லி என்னை கேலி செய்தார்.
  Duraikumaran
  Bendemeer secondary school

Your email address will not be published.


*