கருணையும் அன்பும்

மற்ற உயிர்களிடம் கருணையும் அன்பும் நிறைந்த பருவம், இளமைப் பருவம். அதை அழகாக வெளிப்படுத்தும் இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 12 ஆகஸ்ட் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஜூன் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Subathra Sundarbabu – Jurong west secondary school
Mohan Saravanan – Chua Chu Kang secondary school
Krishmita Shivram – Riverside secondary school

11 கருத்துரை

 1. கருணையும் அன்பும்
  அன்பு யார்மீதும் காட்டலாம்
  அதற்கு உதாரணம் நீ என் மீது காட்டும் அன்பு.
  உன் மீது நிறைந்து கிடைக்கும்
  என் பிரியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்த
  எனக்கு தெரிந்த ஒரே வழி என் தடவல் தான்.
  கொண்டு செல்ல ஒன்றும் இல்லை
  இந்த உலகில் கொடுத்து செல்வோம்
  உண்மையான அன்பையும், நட்பையும்.
  நாம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நட்பு ஆழமானது
  உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன்
  தவறுகள் செய்தால் தண்டித்து விடு
  ஆனால் என்னை விட்டு மட்டும் சென்றுவிடாதே!
  உன்னால் பேச முடியவில்லை என்றாலும்
  உன் முகம் பார்த்து புரிந்து கொள்ள
  என்னால் மட்டுமே முடியும்!
  என் உள்ள குமுறளை கொட்டுவதற்கு
  உன்னை விட்டால் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை.
  என் அருகில் நீ இருந்தால் இவ்வுலகமே
  எனக்கு அழகாக தோன்றும்.
  இன்பத்திலும் துன்பத்திலும் உன்னோடு
  மனம் விட்டு பேசும் போது தான் தெரியும்
  உண்மையான அன்பின் பெருமை!
  எப்போதும் உன்னுடன் இருக்கவே விரும்புகிறேன்
  அடுத்த ஜென்மத்திலும் என் உறவாக
  நீ இருக்க விரும்புகிறேன்!
  நம்முடைய அன்பை புரிந்து கொள்ள
  இங்கு யாராலும் முடியாது!
  சுபத்ரா
  ஜுரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி

 2. ”’கருணையும் அன்பும்”’
  காந்தம் காந்த விசையின் மூலம் பொருட்களை ஈர்க்கிறது என்றால்,
  மனிதன் மற்றொரு உயிரினங்களோடு ஈர்க்கப்படுவதற்க்கு அன்பு ஒன்றே காரணம்
  அன்புக்கு எல்லையே இல்லை,
  ஏனென்றால் தூரத்தை கணக்கிட அதற்கு கண்கள் இல்லை
  பார்வை இல்லாமல் பிறக்கும் இந்த அன்பே சிறந்தது!
  குறிப்பார்த்து அம்பு விட்டாலும்,
  அக்குறி சில நேரங்களில் தவறலாம்
  குறிப்பார்க்காமல் அன்பு வைத்தால்,
  அதுவே ஒரு நாள் நம்மை காப்பாற்றும்
  பணத்திற்காக அன்பை விற்கவும் முடியாது,
  பணத்தைக்கொண்டு அன்பை வாங்கவும் முடியாது
  ஏனென்றால் அன்புக்கு விலையே இல்லை!
  இவ்உலகிலிருந்து கையோடு எதையும் கொண்டு செல்ல போவதில்லை
  கொடுக்க கொடுக்க குறையாததில் ஒன்று அன்பு,
  விலையில்லா இந்த அன்பை ஏன் கொடுத்துவிட்டு செல்லக்கூடாது?
  இன்பத்தை மட்டுமன்றி,
  துன்பத்தையும் பகிர்ந்துக்கொள்வதே உன்மையான அன்பு!
  இருக்கும் வரை ஒரு பொருளுடைய அருமை தெரியாது,
  போனப்பின்புதான் அதனுடைய அருமை தெரியும்
  போகும் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?
  இன்றே எல்லோரையும்,
  எல்லாவற்றையம் நேசிப்போம்!
  Mohan Saravanan
  Chua Chu Kang Secondary School

 3. கருணையும் அன்பும்
  *

  ஒவ்வொருக்குள்ளும் மறைந்திருக்கும்
  கருணையும் காருண்யமும்
  எல்லோராலும் எப்போதும்
  வெளிக்காட்ட முடியும் என்பதால்
  ஒவ்வொருக்குள்ளும் ஒளிந்திருக்கும்
  அருளும் ஆசிர்வாதமும்
  எல்லோரிடமும் எப்போதும்
  துணிச்சலுடன் வளரும் என்பதால்
  ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும்
  பரிவும் பாசமும்
  எங்கேயும் எப்போதும்
  பொங்கி வழியும் என்பதால்
  ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும்
  அக்கினியும் ஆவேசமும்
  எங்கேயும் எப்போதும்
  நட்பால் அடக்கப்படும் என்பதால்
  வாழும் இவ்வுலக வாழ்க்கையில்
  தூய மனிதனாக வாழ்ந்து
  உங்கள் கடமைகளைச் செய்து
  சிறப்புற வாழுங்கள் !
  வரதராஜன்ஸ்ரீநிவாசன் ஹர்மிதா
  Riverside Secondary school

 4. அன்பு……. கருணை………..
  ஒருவர் மட்டுமே!
  பத்துத் திங்கள் கருவில் தாங்கி
  தாலாட்டுப் பாலூட்டியவர்!
  அன்பு அக்கறையின்
  மொத்த உருவம்!
  தோல்வியில் துவளும்போது
  தேற்றும் கடவுள்!
  அவரே என் அம்மா!
  மெனுஜா
  Riverside Secondary School

 5. ”’கருணையும் அன்பும்”’
  போகும் பாதை தூரமில்லை
  வாழும் வாழ்க்கை பாரமில்லை
  குனிந்து தோள் கொடு
  இறைவன் உந்தன் காலடியில்
  இருள் விலகும் அகொளியில்
  அன்னம் பகிர்ந்திடு
  வலிதாங்கும் சுமைதாங்கி
  மண்ணில பாரமில்லை
  ஒவ்வொரு அலையின்பின்
  இன்னொரு அலையுண்டு
  வழங்கும் கை ஆசியிலும்
  இருகை ஓசையிலும்
  புவி எங்கும்
  புன்னகை பூக்கட்டுமே!
  யாஷிகா ராதாகிருஷ்ணன்
  Riverside Secondary School

 6. நீ நேசிக்கும் இதயத்தை விட
  உன்னை நேசிக்கும் இதயத்தில்
  சில நாழிகள் வாழ்ந்து பார்!
  பத்தித் தநிங்கள் சுமந்த தாயை
  மறப்பது நியாயமில்லை!
  நேற்று போல் இன்று இல்லை
  இன்று போல் நாளை இல்லை
  அன்பின் எல்லை என்றும் மாறுவதில்லை !
  KRISHMITA SHIV RAM
  Riverside Secondary School

 7. அன்பின் ஆழம்
  அன்பின் ஆழத்தை வர்ணிக்க
  ஏழு கடலின் நீரைக் கொண்டு
  எழுதிடுவாயாே நீ?
  வரண்ட புவிமீது
  பொழிந்த மழை நீர்
  மேகத்தின் கருணையாே?
  மடியில் உறங்க அன்னை
  இல்லாத ஒருவனை தாேழன்
  தன் தோளில் சுமப்பது அரிதாே?
  வாயில்லா ஜீவனின் மரணம்
  கிழவரின் கல்லறையின் மேல்,
  அளவில்லா ஏக்கமாே?
  மழையில் நனைந்த முகத்தில்
  அகத்தின் காயத்தால் கசிந்த
  கண்ணீர் அறியாத அன்னை உண்டாே?
  பகலில் மின்னாத நட்சத்திரங்கள்
  வானிலிருந்து மறைவதில்லை
  பரிவு மட்டும் நெஞ்சிலிருந்து அழிந்திடுமாே?
  வெயிலின் நிழலாக மாறி
  புன்னகையை பகிர வருபவரை
  நிராகரித்துவிடுவாயாே?
  யாவரையும் நேசித்தால்
  இவ்வுலகம் மலர்ந்த
  பூங்காவனமாக மாறாதாே?
  சாஜஹானை பாேல
  உன் மனதில் வசிப்பாேரின்
  அருமையை அறியவில்லையாே நீ?

 8. ஞாயிறின் ஒளியினின்று ஞமலியைக் காக்கும் கருணை
  மனதின் அச்சத்தையெல்லாம் நொடியினில் போக்கும் கருணை
  இருண்ட வாழ்வுதனிலே நம்பிக்கை எனும் ஒளிவீசும் கருணை
  தரணியின் உயிர்கள் மீது இறையவன் பொழியும் கருணை
  அழுகின்ற குழந்தை மீது பாய்வது தாயின் கருணை
  கருணையும் அன்பும் தானே உலகினைக் காக்கும் அரண்கள்
  காட்டு விலங்கினைக்கூட அடிபணிய வைக்கம் ஆயுதம் அன்பு
  பல இன மக்களையும் இணைக்கும் பாலமாய் இருப்பது அன்பு
  அன்பிருக்கும் இடத்தில் எல்லாம் அமைதியே பூத்துக்குலுங்கும்
  தூய்மையான அன்புதானே துயர்தீர்க்கும் வழியாய் விளங்கும்
  உன்னதச்செல்வங்களான கருணையையும் அன்பினையும்
  போற்றியே சிறந்து வாழ்வோம்!
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 9. அன்பு,அக்கறை
  அரவணைப்பு, பாசம்
  நேசம்,தியாகம் என எல்லா
  உணர்வுகளையும் ஒரே
  இடத்தில் பெற முடிந்தால்
  அதுதான் உண்மையான
  வாழும் கடவுல்
  “அம்மா”

  Shanmuganathan Sridurga
  Yuan Ching Secondary School

 10. பாரி கொடுத்த
  தங்கத் தேரைப்போல
  நீ உன் கொடைவள்ளலை
  உன் குடையைக் கொடுத்து
  நிருபித்தாய்!
  இ.ஜனனி
  Bendemeer Secondary School

 11. கள்ளம் கபடம் அறியா
  கருணை உள்ளம் பொருந்திய
  பிறவி நீயே
  மண்னை நனைத்த
  விண்னின் கோபமோ
  மானிடத்தின் கண்னை மறைத்தது
  நன்றியுள்ள ஜீவனாம்
  வழியின்றி திரியும்
  வாயில்லா ஜீவனாம்
  மழையில் நனைந்து
  குளிரின் நடுங்கி
  சொல்லொணா துயரை
  சொல்லாது உணரந்த உன்
  கருணை உரைத்திட
  கண்டிலேன் உரிய வார்த்தை
  பாலமுருகன் விஸ்வா
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*