கண்ணீர் கதை

நாம் அனைவரும் ஏதாவது ஒரு நேரம் எதற்காவது அழுதிருப்போம். நீங்கள் எதற்காக அழுதீர்கள்? பெற்றோர் கண்டிதற்காகவா? எதையாவது தொலைத்தற்காகவா? யாரையாவது இழந்ததற்காகவா? நண்பர்கள் கோபித்தற்காகவா? தேர்வில் தோற்றதற்காகவா? இப்படி நீங்கள் கண்ணீர்விட நேர்ந்த சம்பவம் ஒன்றை எழுதி இங்கே பகிருங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 19 ஆகஸ்ட் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

8 கருத்துரை

 1. முட்டாள் வேலைக்காரன்!!!
  ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான்.
  வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான்.
  அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
  “என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!’ என்று நினைத்தான்.
  “என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்’ என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.
  கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், “ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!’ என்று நினைத்தனர்.
  சிறிது நேரத்தில் அந்த மரம், “சடசட’வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
  “என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது’ என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.
  சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.
  “தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!’ என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, “”கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!” என்றான்.
  வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.
  இப்போது அவன் உள்ளத்தில், “இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!’ என்ற சிந்தனை எழுந்தது.
  “சரி, அவரையே கேட்டு விடுவோம்’ என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.
  “ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, “மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!’ என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.”
  மஹபு நஸ் ரீன்
  கான் எங் செங் பள்ளி

 2. கண்ணீர் கதை
  நாஙகள் முதலில் வெஸ்ட்கோஸ்ட்டில் இருந்தோம். பிறகு ஜுராங்கிற்குக் குடிபெயர்ந்தோம்.
  புதிய இடம், புதிய சூழ்நிலை, புதிய பள்ளி என்பதால் எனக்கு சிறிது பயம் இருந்தது. இயல்பாகவே நான் மென்மையானவள்.
  ஒரு நாள் நான் பள்ளிப் பேருந்தில் ஏறிக் கொண்டிருந்த போது ரக்சனாவைப் பார்த்தேன். சிவந்த நிறம், கம்பீரமான உயரம், கூரிய கண்கள், எடுப்பான நாசி, பட்டுப் போன்ற கூந்தல், கண்களில் தைரியம், பேச்சில் தெளிவு என்று பாரதியின் புதுமைப் பெண்ணாக இருந்தாள்.
  பள்ளிப் பாடம் முடிந்த பின் மாலை நேரங்களில் நாங்கள் சேர்ந்து விளையாடுவோம். எங்கள் நட்பு இனிதே வளர்ந்தது.
  எனக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவளது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்கிறது என்பதை அறிந்தேன்.
  அதைக் கேள்விப்பட்ட எனது இதயம் துடித்தது. கண்கள் குளமாயின. நான் ஒரு நினைவுப் பரிசைக் கொடுத்தேன். அவள் என்னிடமிருந்து பிரியா விடை பெற்றாள்.
  நான் தேம்பித் தேம்பி அழுதேன். எனது அன்னை எனக்கு ஆறுதல் கூறினார்கள்.
  வாழ்வில் மாறுதல் என்பது நிரந்தரமானது என்பதை நான் உணர்ந்தேன்.
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 3. நல்ல நட்பை இழந்த கதை:
  வழக்கம் போல் அன்றும் பரபரப்புடன் பள்ளிக்கு கிளம்பினேன்.என் நெருங்கிய தோழி ராணி என்னை அழைக்க வராததை எண்ணி குழம்பினேன்.நேரம் ஆகிவிட்டதால் நான் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பினேன்.பள்ளியில் எனக்கு முன்பாகவே ராணி வந்திருந்ததை கண்டேன்.அவளை பார்த்ததும் எனக்கு கோபம் தான் வந்தது.அவளருகில் சென்று அமர்ந்தேன்.ராணி தள்ளிப்போனாள்.என்னிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.எனக்கு மிகவும் வருத்தமாக இருந்து.என்னையறியாமல் என் கண்களிலிருந்து தண்ணீர்வடிந்தது.அழுதுக்கொண்டே அவளிடம் விவரத்தை கேட்டேன்.அடுத்த நொடியே,அவளும் அழுதுக் கொண்டே,”நான் என் பெற்றொருக்கு வளர்ப்பு பிள்ளை என்ற உண்மையை,நெருங்கிய தோழி என்பதற்க்காக தானே உன்னிடம் கூறினேன்,ஆனால் நீயோ இந்த ரகசியத்தை மற்றவர்களிடம் கூறியதால்,என்னை எல்லோரும் அலட்சியமாக பார்க்கிறார்கள்.மேலும்,என்னிடம் இதைப் பற்றி கேட்டு,என் மனதை கொன்று விட்டார்கள்.நீ எனக்கு உண்மையான தோழி கிடையாது.”என்று கூறி தேம்பி தேம்பி அழுதாள்.அவள் கூறியதை கேட்டபிறகு தான் , என் தவறு எனக்கு புரிந்தது.என் தோழிக்கு எவ்வளவு நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டோம் என்று எண்ணி, அவளிடம் கண்ணீரோடு மன்னிப்புக் கேட்டேன்.”என் தவறை மன்னித்து, என்னை உன் தோழியாக ஏற்றுக்கொள்வாயா!”என்று மண்டியிட்டு கேட்டேன்.கடைசி வரை அவள் என்னை மனதார அவளது தோழியாக ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்கும்.
  நிவேதிதா
  ஜூரோங் உயர்நிலை பள்ளி

 4. கண்ணீர் கதை
  இவ்வுலகத்தில் ஒவ்வொரு ஜீவனும் தன்னுடைய வாழ்க்கையில் வெவ்வேறு விதத்தில் வலியை அனுபவித்திருக்கும். ஆனால், பிரிவினால் ஏற்படும் வலி இருக்கின்றதே…அது ஒருவருடைய மனதை சுக்குநூறாக உடைத்துவிடம்.
  நான் மழலை மொழியை பேசிக்கொண்டு இருந்த நாளிலிருந்து நேற்று வரை நேசித்த நபரை…இன்று நான் உலகத்தில் எந்த ஒரு மூலை முடுக்குகளிற்கு போனாலும், காண இயலாது என்றால் நான் என்ன செய்வேன்? இவ்வுளவு காலமாக நேசித்து வந்த என் இதயத்திடம், இனிமேல் அவரை நேசிக்க இயலாது என்று எவ்வாறு கூற முடியும்? அவரின் புன்னகை தவழ்ந்த முகம் என் இருதயத்தில் இந்த நொடியும் அச்சியிட்டபடி பதிந்திருக்கிறது. இனி அவரை என்றுமே காண முடியாது என்று ஒரு கணம் நினைக்கும்போது என் இரு கண்களும் தாரை தாரையாக கண்ணீர் விடுகிறது; என் காதுகள் அவரின் குரலை கேட்க முடியாமல் ஏங்குகிறது. என் மனமோ, என் தாத்தாவை இழந்ததால் தாங்கொண்ணா துயரத்தில் மூழ்கியது. என் கால்களோ அவரிடம் செல்ல துடித்தது.

  அமானுல்லா ஹாஜிரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 5. “கண்ணீர் என்றாலே கவலை மற்றும் துக்கம் போன்ற உணர்வுகள்தான் பலருக்கு ஞாபகம் வருகிறது. ஆனால், அழுகை, துன்பத்தின் வெள்பாடாகமட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை:
  மண்டபத்திலிருந்த அனைவரும் தடீரென்று எழுந்து நின்றார்கள். பிரதமர் அவர்கள் அதனுள் சிங்கநடை போட்டுவர, அனைவரும் கரகோஷத்துடன் கைத்தட்டி அவரை வரவேற்றார்கள். உடனே, எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
  “விக்னேஷ், நீ எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறிவிட்டாய்,” என்று ஆசிரியர் என்னிடம் என்னுடைய தேர்வுத்தாட்களைத் தந்தார். அவற்றின் மதிப்பெண்கள் என்னை தூக்கிவாறிப் போட்டன. எந்த ஒரு பாடத்திலும் நான் நாற்பது மதிப்பெண்களைத் தாண்டவில்லை! நான் வெட்கித்தலை குனிந்தேன். வீட்டுக்குச் சென்றால் அம்மா என்ன சொல்வார்களோ என்று என் மனம் பட படவெனத் துடித்தது. எனவே வீட்டுக்குச் சென்றவுடன் என்னுடைய தைரியத்தை எழுப்பி அம்மாவிடம் என்னுடையத் தேர்வுத்தாட்களைத் தயக்கத்துடன் நீட்டினேன்.
  அவர் அவற்றைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் தான் செய்துகொண்டிருந்த வீட்டுவேலைகளை மீண்டும் துவங்கினார். ஆனால், அவருடைய முகம் அவருடைய மனந்நிலையை அடுத்தது காட்டும் பளிங்குபோல எனக்குத் தெளிவாக வெளிப்படுத்தியது. அவர் அம்மதிப்பெண்களால் சங்கடத்திற்குளானார் என்பதை என்னால் கிரகிக்க முடிந்தது. அன்றிலிருந்து என்னுடன் கதைக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
  இதனால் நான் சோகக் கடலில் மூழ்கினேன். என்மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் அலட்சியப்படுத்திவிட்டேனே என்று நினைத்தெனக்குத் தூக்கமும் சரியாக வரவில்லை. படிப்பின்மீது எனக்கிருந்த அசட்டையும் விளையாட்டுத்தனமுமே எனது வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஆகவே, அன்றிலிருந்து நான் இரவு பகல் பார்க்காது கடுமையாக உழைத்தேன். எப்படியாவது கல்வியில் ஜெயம் பெற்று என் அம்மாவிடமிருந்து மதிப்பைப்பெருவேன் என்று உறுதிபுரிந்தேன்.
  “அடுத்ததாகச் சிறந்த தேற்சிப்பெற்ற மாணவருக்கான விருதைப் பெறுபவர் விக்னேஷ்,” என்று மண்டபத்தில் ஒலித்தக் கூற்று என்னை மீண்டும் தற்காலத்துக்குக் கொண்டுவந்தது. அப்போது, அதற்கான என்னுடைய அளவுகடந்த கடினவுழைப்பை எண்ணி என் கண்களில் நீர் தேம்பியது. நான் அவற்றைக் கட்டுப்படுத்திக்கொண்டு பிரதமரிடமிருந்து எனது பரிசை மேடையில் பெற்றுக்கொண்டேன். அப்போது, என் அம்மா மண்டபத்தில் ஒரு மூளையிலிருந்து எனக்கு பலமாகக் கைதட்டிக்கொண்டிருந்தார். நான் என் அம்மாவின் கண்முன்னே சாதித்துவிட்டேன் என்பதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டேன்…
  குமரவேல் விக்னேஷ்
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப்பள்ளி

 6. மாலாவும் நானும் நகமும் சதையும் போல நெருங்கிய நண்பர்கள். பாலர் பள்ளியில் தொடர்ந்த எங்கள் நட்பு தொடக்கநிலை ஐந்து வரை நீடித்தது. ஆஹா! என்ன ஓர் அழகான நட்பு அது. என்னால், இன்றும் அவளுடன் பழகிய நினைவுகள் என் மனத்தில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது. ஆனால், தொடக்கநிலை ஐந்து வரை நீடித்த நட்பு, பிறகு…
  எங்கள் வகுப்பிற்கு, கலா என்ற மாணவி சேர்ந்தாள். எங்களின் வகுப்பு ஆசிரியர், கலாவை என் நெருங்கிய தோழியான மாலாவின் அருகில் அமரச் செய்தார். கலாவிடம், பள்ளியைப் பற்றி அறிமுகம் செய்யும் வேலையை மாலாவிடம் ஒப்படைத்தார். நானும் மாலாவோடுச் சேர்ந்து, இருவரும் கலாவிற்குப் பள்ளியைச் சுற்றிக் காட்டினோம். கலாவிற்கு ஐயங்கள் எதாவது ஏற்பட்டாள் மாலா அவளுக்கு உதவிச் செய்தாள். கலா, நாங்கள் இருவரும் இருக்கும் இணைப்பாட நடவடிக்கையையே தேர்ந்தெடுத்தாள்.
  காலச்சக்கரம் சுழன்றது. நாளடைவில், மாலா கலாவுடன் அதிக நேரம் செலவழித்தாள். நான் மாலாவுடன் எங்குச் சென்றாலும் என்னை ஒதுக்கினாள். என்னைக் கை கழுவி விட்டாள். மாலா கலாவுடனே எங்கும் சுற்றினாள். இடைவேளை நேரத்தின்போது நான் தனியாக என் உணவை உண்டேன். உலகமே தலைகீழ் மாறியதுப் போல் தோன்றியது. படிப்பில் என்னால் கவனம் செலுத்த இயலவில்லை. ஆதலால், மாலாவிடம் என் மனத்தில் இருக்கும் எண்ணங்களை கொட்டித் தீர்க்க முடிவெடுத்தேன்.
  மறுநாள் அவளைச் சந்தித்தேன். நான் என் கவலையைப் பற்றி அவளிடம் பகிர்ந்தேன்.
  அதற்கு, ” உன்னை
  விட கலா எவ்வளவோ மேல். உன்னோடு பழகினால் எனக்குச் சலிப்புத்தான் ஏற்படுகிறது. ஆனால், கலாவுடன் இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. போய்விடு! உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை! ” என்று என்னைக் கண்டபடி திட்டினாள்.
  நான் சோகக் கடலில் மூழ்கினேன். என் உலகமே இருள் அடைந்தது. ஒவ்வொரு நாளும், வீட்டிற்குச் சென்று, மாலாவுடன் சேர்ந்து இருந்த நினைவுகளை எண்ணி கண்ணீர் வடித்தேன். என் மனம் தாங்கும் பாரம் மிகவும் கனமானது.
  எங்கள் இருவருக்கும் பின் பேச்சு வார்த்தையே இல்லை. எங்கள் நட்புத் தொலைந்துப் போனது. பிறகு, நான் ஒரு குறிக்கோள் வைத்தேன். எவ்வளவு கசப்பான சூழ்நிலைகள் வந்தாலும் அவையைக் கடந்து, அந்த அனுபவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் குறிக்கோளாகும்.
  Balaji Priyanka2E1
  Yuan Ching Secondary School

 7. இது என் அண்ணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமானச் சம்பவம். மூன்று வருடங்களுக்கு முன்பு, என் அண்ணன் லண்டனில் ஒரு மருத்துவப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். என் அண்ணன், மிகவும் குண்டாக இருந்ததால், மற்றவர்கள் அவனை கேலிச் செய்வது வழக்கம். இது என் அண்ணனுக்கு மிகவும் வெட்ககமான விஷயமாக இருந்தது. இதனால், அவர் யாரிடமும் பேச மாட்டார்.
  ஓரு நாள், டாம் என்னும் ஒரு புதிய மாணவன் அப்பள்ளியில் சேர்ந்தான். டாமும் என் அண்ணனும் ஒரே அறையில் தங்கிருந்ததால், இருவரும் நண்பர்களானார்கள்.
  ஒரு முறை, இருவரும் வழக்கமாக நூலகத்திருக்கு சென்ற போது என் அண்ணன் டாமிடம், தன் உடல் எடையைப் பார்த்து மற்றவர்கள் கெலிச் செய்கிறார்கள் என்று புலம்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது, டாம் என் அண்ணனிடம் ஒரு அறிவுரைக் கூறினான், “நீ உன் உடல் எடையைக் குறைக்க முயற்ச்சி செய்” என்று கூறினான்.
  அதற்க்கு என் அண்ணன், சற்று தயங்கினான். என் அண்ணனின் தயக்கத்தைக் கண்ட டாம், “தன்னம்பிக்கையிருந்ததால், எதையும் சாதிக்கலாம். தன்னம்பிக்கை என்பது நமக்கு உள்ளே இருக்கும் சக்தி. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் நமக்கு வழி கொடுக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது. முயற்ச்சி செய் அருண்”, என்றுக் கூறினார்.
  டாமின் ஊக்கத்தினாலும், தான் செய்த கடும் பயிற்ச்சியினாலும், என் அண்ணனின் உடல் எடைக் குறைந்தது. இவ்வாறு, ஒருவொருக்கொருவர் உதவி செய்துக்கொண்டே நெருங்கிய நண்பர்களானார்கள்.
  என் அண்ணனுக்கு கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. ஆகையால், பள்ளி கூடைப்பந்து குழுவில் சேர்ந்தார். அங்கே அவர் ஒரு சிறந்த விளையாட்டாளராக விளங்கினார். டாம் என் அண்ணனைக் கட்டாயப் படுத்தியதால், அவர் கூடைப்பந்து போட்டிகளில் சேர்ந்தார். மேலும், டாமின் ஊக்கத்தினால், அவர் நிறைய பொட்டிகளில் வென்றார்.
  ஒரு முறை என் அண்ணனுக்கு, ஒரு முக்கியமான கூடைப்பந்து முகாமுக்குச் செல்லவேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், அவர் கடுங்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆகையால், என் அண்ணன் டாமிடம், “டாம், என்னால் அந்த முகாமுக்குச் செல்ல இயலாது. நீ எனக்காக அந்த முகாமுக்குச் செல்ல முடியுமா? “என்று வினவினார். டாமு ம், அந்த கூடைப்பந்து முகாமுக்குச் செல்ல ஒப்புக்கொண்டான்.
  அடுத்த நாள், டாம் அந்த கூடைப்பந்து முகாமுக்குச் செல்லத் தயாரானான். ஆனால், வழியில் அவன் சென்ற பேருந்து ஒரு விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் டாமின் உயிர் பிரிந்தது.
  அத்துயரச் செய்தியைக் கேட்ட என் அண்ணனின் மனது ஆய்ந்த வருத்தத்துக்குள்ளானது. அந்த துக்கத்திலிருந்து மீளமுடியாமல் இரவு பகலாக உறக்கமில்லாமல் அவனின் மனது தவித்தது. என் அண்ணன் பங்கேற்றியிருந்தால், அவனுக்கு இத்துயரம் நடந்திருக்கும். எனவே என் அண்ணன், “தன் உயிரை கொடுத்து அவனை காப்பாற்றிய ” நண்பனின் நல்ல உள்ளத்தை எண்ணி எண்ணி வருந்தினான். டாமுடைய ஆன்மாசாந்தி அடைவதற்காக கடவுளை வேண்டிக்கொண்டான்.
  இப்பொழுதும் என் அண்ணன் டாமுடைய உற்சாகம் தரும் வார்த்தைகளை நினைத்துக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு டாமுடைய இறப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

  நிகேத்னா, உயர்நிலை இரண்டு
  யுவான் சிங் உயர்நிலை பள்ளி

 8. கண்ணீர் கதை
  ஒரு முறை என் அம்மா என் பெயரை தமிழ்மாத மாறுவேடப் போட்டிக்கு பதிவு செய்திருந்தார்.நான் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரம் கழித்து என்னிடம் போட்டி பற்றி கூறினார். எனக்கு விருப்பமே இல்லை என்றேன். பின் அம்மா என்னிடம் என் செல்லத்தால் முடியும் என்பதால் தானே பெயர் தந்தேன் என்றும்,உனக்கு போட்டிக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்தாயிற்று நீ எதுவும் மெனக்கெடத் தேவையில்லை என்றார். நீ செய்ய வேண்டியதெல்லாம் பேச வேண்டியதை மனனம் செய்வது மட்டும்தான்.வேறுவழியின்றி வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டேன். மறுநாள்மாலை அம்மா பயிற்சி செய்ய அழைத்தார்.அப்போது தயார் செய்திருந்த உடைகளை காட்டினார்..ஆம் அதை பார்த்ததுமே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது
  பா.மித்ரா 1E1
  யூனிட்டி உயர்நிலை பள்ளி.

Your email address will not be published.


*