கடவுளிடம் பேசிய கதை

நாம் ஒவ்வொருவரும் பலவிதமான கனவுகளைக் காண்கிறோம். சில கனவுகள் நினைவில் இருக்கும்; பல மறந்துவிடும். ஒரு நாள் உங்களுடைய கனவில் கடவுள் வருகிறார். உங்களிடம் ஒரு நண்பரைப்போல் உட்கார்ந்து உரையாடுகிறார். உலகத்தைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்கள் பள்ளியைப் பற்றி, இன்னும் பலவற்றைப் பற்றியும் அவர் உங்களுடன் பேசுகிறார். கடைசியில், உங்களிடம் ‘நீ வேண்டிய வரம் ஒன்றைக் கேள்’ என்றும் சொல்கிறார். நீங்களும் உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கிறீர்கள். இந்தக் கனவை ஒரு கதையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 12 ஆகஸ்ட் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஜூன் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Suriya Nilavan – Unity Secondary school
M.S. Nithyasri – Riverside secondary school
Mithra Balamurugan – Unity Secondary school

10 கருத்துரை

 1. கடவுளிடம் பேசிய கதை
  திடீரென்று வெப்பம் என்னை சூழ்ந்தது. சுற்றுமுற்றும் பார்த்தபோது நான் ஒரு வெள்ளை அறையில் இருப்பதை உணர்ந்தேன். அந்த அறையில் சந்தேகப்படும்படியாக என் வயதை ஒத்த மற்றொரு சிறுவனைக் கண்டேன். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லாததால் நான் அவனிடமே நான் எங்கிருக்கிறேன் என்று கேட்டேன். அவனோ, “ எனக்கும் தெரியாது நண்பா!” என்று பதிலளித்தான். நாம் இருவரும் ஆனந்தமாகப் பேசி நேரத்தைக் கழிக்கலாமா? என்று கேட்டான். எனக்கும் வேறு வழியின்றி சம்மதித்து நாங்கள் இருவரும் பல விசயங்களைப் பேசி ஆனந்தமாகப் பொழுதைக் கழித்தோம். அவன் பேசிய விதம் மிகவும் வித்தியாசமாகவும், உன்னதமாககவும் இருந்தது. திடீரென்று அவன் என்னிடம் “உனக்கு ஒரு வரம் இருந்தால் அது என்னவாக இருக்கும்?” எனக் கேட்டான். எனக்கு இக்கட்டான சூழல். நான் சிறிதும் தயங்காமல் “இவ்வுலகில் வாழும் எல்லோரும் கவலையின்றி வாழ வேண்டும்” என்றேன். நல்லவரம் என்று அவன் என்னைப் புகழ்ந்தான். “ நான் இப்பொழுதே கிளம்ப வேண்டும் கணேஷா”என்று கூறிக் கிளம்பினான். நான் என் மனதில் உறுத்துக் கொண்டிருந்த “ நீ யார் “என்ற கேள்வியை அவனிடத்தில் கேட்டேன். அவன் நானே கடவுள் என்று கூறி மறைந்தான்.நான் என் அம்மா என்னை அழைக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன். என்ன கனவு இது?
  கணேஷ்
  Riverside Secondary School

 2. கடவுளிடம் பேசிய கதை
  கடவுள்! அவர் எப்படி இருப்பார்? அவர் கறுப்பா? சிவப்பா? உயரமா? குள்ளமா? அவரை ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பல நாட்கள் தூங்கி இருக்கிறேன். அன்று மதிய வேளை , மிகவும் களைப்பாக இருந்ததால் சிறிது நேரம் குட்டித் தூக்கம் போட்டு விட்டு பாடங்களைச் செய்யலாம் என்று என் கண்களை மூடினேன். உறக்கம் என்னைத் தாலாட்டியது. தூங்கி பத்து நிமிடத்தில என் முன்னால் ஓர் ஒளி தோன்றியது. யார் இவர்? இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே? ஆ…. நான் கோவிலில் பார்த்த கடவுளல்லவா இவர்! என்று நினைக்கும்போதே அவர் என்னிடம் “குழந்தாய்!நலமா? அனைவரும் நலமா? எனக் கேட்டார். வார்த்தைகள் என் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்டன. நான் திக்கித் திக்கி ஆ… நான் நலம் என்றேன். நீ எப்படிப் படிக்கிறாய் என்று கேட்டார் அவ்வளவுதான்! என் கண்களில் தாரை தாரையாக கொட்டயது. ஏன் அழுகிறாய் குழந்தாய் என்று என் தலையை அன்புடன் வருடிக் கொடுத்தார். நான் தேர்வுகளில் எப்போதுமே குறைவான மதிப்பெண்களே எடுக்கிறேன் என்று கூறி அழுதேன். நான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்திறமை கொடுத்திருக்கிறேன். அது என்ன என்று கண்டுபிடித்து அதில் சிறப்பாகச் செய் எதற்கும் கவலைப்படாதே, உன்னிடமிருக்கும் திறமையைக் கண்டறியும் வரம் உனக்குத் தருகிறேன் என்று கூறி மறைந்தார். அப்போது ரிங் ரிங் என்று அலார மணி ஒலித்தது. என்னிடமுள்ள திறமையைக் கண்டறியும் முயற்சியில் மும்முரமாக இறங்கினேன்.
  நித்யஸ்ரீ
  Riverside Secondary School

 3. அறிமுகமில்லாத நபர் எனக்கெதிரே அமர்ந்திருந்தது போல் இருந்தது. என்னை ஏற்கனவே பழக்கப்பட்டவர் போல் சர்வசாதாரணமாக பேச ஆரம்பித்தார். ஒரு கணம் பிரமிப்புற்றேன். சிறிது நேரம் கழித்து, நானும் அவரை என் நன்பராக எண்ணிக்கொண்டு சிறிது எச்சரிக்கையுடனேயே பேச ஆரம்பித்தேன். அவர் தன்னுடைய கஷ்டங்களையும் உலகம் மாசு அடைந்துவரும் விஷயத்தையும் நேரில் நின்று பார்த்ததைப்போல் கூறினார். உலகத்தின் அத்தனை இடங்களைப் பற்றியும் , அங்கு நடப்பவைப் பற்றியும் விவரித்துக் கூறினார். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியூட்டியது. உலக உருண்டையை மேலிருந்து கண்டதுபோல் கூறினார். அப்போதே எனக்கு அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலுமே அதை பொருட்படுத்தாமல் என்னுடைய அனுபவங்களைப் பற்றி அவரிடம் பகிர்ந்துகொண்டேன். பிறகு , அவர் கடவுள் உனக்கு ஒரு வரம் கொடுத்தால் நீ என்ன வரம் கேட்பாய் என்று கேட்டார் . உடனே நான் என்னுடைய சொந்தமான அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் இருந்துகொண்டு என் கொல்லு பேரனுக்குத் தங்கக்கிண்ணத்தில் நான் உணவு ஊட்ட வேண்டும். இதையே நான் வரமாக கேட்பேன். அப்போது , திடீரென்று அவர் எல்லாம் உன் விருப்பப்படியே நடக்கும் என்று கூறிவிட்டு சட்டென்று மறைந்தார். நானும் திடுக்கிட்டடு விழித்தேன். அப்போதுதான் அங்கு நடந்தவை அணைத்தும் நிஜமல்ல, கணவே என்பதை உணர்ந்தேன்…
  Joshita Krishna
  Tanjong Katong Girls’ School

 4. கடவுளிடம் பேசிய கதை
  இறைவனிடம் இறந்தவர்கள் மட்டுமே பேசமுடியும் என்று மக்கள் நினைப்பது உண்மை இல்லை!! யாராக இருந்தாலும் சரி, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கடவுளிடம் பேசமுடியும். சிலர் கடவுளிடம் பேசுவதற்கு வாய்பில்லை, ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு ஒரு முறைக் கிடைத்தது. ஆனால் கடவுளிடம் பேசுவதற்கு முன்பாக நானாக நான் இல்லை தாயே.. நல்வாக்கு சொல்வாயே நீயே… என்ற நிலையில் என் மனம் எண்ணமில்லாமல் நெருப்பிலிட்ட உப்பு போல உள்ளம் வெடித்தும், வெல்லம் போல உருகியும் வேதனையில் வாடிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் நான் கடவுளை நேரில் கண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் இதயமும் மனமும் தெளிந்த பிறகு என் மனதின் உள்ளுணர்வு இழந்து உளறிக்கொண்டிருந்தேன். அப்போது இறைவன் நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் என்னை அன்புடன் கவனித்துக் கொள்ளும் பாட்டியையும் தாத்தாவையும் படுத்தும் பாட்டை விவரித்தார்.. என் வீட்டில் பொருட்களை ஒளித்து வைத்து பாட்டியைத் அழவைத்தக் காட்சி.. பள்ளியில் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டியது போன்றவைகள் எல்லாம் நினைவிற்கு வந்து என்னை மிகவும் நல்லவனாக இருக்க அறிவுரை கூறியபோது.. நான் இனித் தவறுகள் செய்ய மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டு போது என் கண்ணீர் துளிகள் என் நெஞ்சில் பட்டதும்…. திடீரென்று கண் விழித்தேன் … அப்போது என் பாட்டி பள்ளிக்கு நேரமாச்சு!!! என்று என் மீது தண்ணீர் தெளித்து விட்டார்… கிளவியை …. பார்…. உ……
  சமிரா பேகம்
  உயர்நிலை 3 (தொழில்நுட்பம்)
  யுவான்சிங் உயர்நிலைப் பள்ளி

 5. வரம் பெற்றேன்…..
  நிலவின் ஒளி என் சன்னலிலிருந்து மின்னியது. அந்த ஒளி என் முகத்தில் பட்டதால் நான் திடீரென்று ஆழமான தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டேன். மீண்டும் உறங்க முயன்ற எனக்கு தூக்கம் வரவேயில்லை. இதனால் நான் என் அறையிலிருந்த தொலைக்காட்சியைத் திறந்து சில படங்களை பார்த்தேன். அப்போது, என் தொலைக்காட்சி மின்னியது.
  திடீரென ஒரு ஆடவர் என் தொலைக்காட்சிநிலிருந்து வெளியேறினார். பயந்த நான் இது கனவு என்று நினைத்து என் கண்களை விழித்தேன். ஆனால் அந்த ஆடவர் அங்கேயே இருந்தார். “நீங்கள் யார்? “என்று கேட்டேன். அவர் “ நான் கடவுள் “ என்று கூறினார். அந்த ஆடவர் பொய் கூறினார் என்று நினைத்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டு பேசிக்கொண்டிருந்தார். பிறகு உனக்கு ஒரு வரம் தருகிறேன் நீ எதை வேண்டுமானாலும் கேள் அதை உண்மை ஆக்கிவிடுகிறேன்’’ என்று கூறினார். நான் சில நிமிடங்கள் யோசித்தேன். நான் கேட்கும் வரம் என் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடியதாக இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பிறகு கேட்க முயன்றேன்….
  என் பெற்றோர் இருவரும் வாரம் முழுவதும் வேலைக்குச் சென்று விடியர் காலையில் தான் வருவார்கள். அவர்கள் என்னுடன் நேரத்தை செலவழிக்க முடியாததால் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அது எனக்கு மகிழ்ச்சிக் கொடுக்காது. ஆகவே என் பெற்றோர் என்னுடன் நீண்ட நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதையே என் வரமாக கேட்கிறேன். என்றேன் இதுவா உன் வரம் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். எல்லாம் ஒரு கனவு என்று நினைத்து தொலைக்காட்சியை அடைத்துவிட்டு படுக்கச் சென்றேன்.
  மறுநாள் காலையில் என் அப்பா என்னிடம் வந்து” வா நான் உன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன். என்று கூறினார். அப்போது தான் இரவில் நடந்தது கனவல்ல உண்மை என்று புரிந்தது.
  சூரியப்பிரசாந்
  Suriya prashan uthayasuriyan
  Jurong Secondary School.

 6. எனக்கு வாழ்க்கை என்பதன் அர்த்தம் என்னவென்று புரியாமல் போகிவிட்டது. எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கலாம்? என்னால் இதையெல்லாம் தாங்க இயலாது. நான் என் பிரச்சனையாளை மறந்து தூங்கலாம் என்று நினைத்து என் அறையிலுள்ள பாயில் படுத்தேன். அப்போது நான் ஒரு அழகான பூங்காவில் இருப்பதை உணர்ந்தேன். என்னை சுற்றி வண்ணமயமான பூக்கள் குவிந்து கிடந்தன. அதே பூங்காவில் இன்னோரு ஆடவர் என்னை மகிழியுடல் வரவேற்று கொண்டிருந்தார். இதை கண்டு எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. என்ன இதை போல ஆனந்தத்துடன் என்னை எதிர்பார்த்து இருந்தவர்களே இல்லை. நான் அவரிடம் ஓடி சென்று, ”எனக்கு உங்களை தெரியுமா?” என்று ஆவலுடன் கேட்டேன். அவரை எனக்கு தெரியும் ஆனால் அவரை நான் கண்டதில்லை என்றார். அவர் மேலும்” நீ நிறைய பிரச்சனைகளை எதிர்நோக்குவது எனக்கு நன்றாகவே தெரியும். நீ உன் பெற்றோரை இழந்தவர். உன் மாமாவால் கடுமையாக நடத்த படுபவர். பள்ளியில் கூட நண்பர்களால் கேலி செய்ய படுகிறாய்.”எப்படி இவர் நான் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒன்றுவிடாமல் கூறுகிறார்? என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லை. நான்,” எப்படி….” என்று கூறியபோது அவர் தொடர்ந்து,” இவ்வுலகமே இப்படித்தான். யாருக்கும் பிரச்னைகளற்ற வாழ்க்கை என்பதில்லை. பிரச்னைகள்தான் வாழ்க்கையை வாழ்க்கையாக ஆக்குகிறது. நீ இப்போது நிறைய பிரச்சனைகளை எதிர்நோக்குவதால் அதற்கான தீர்வுகளை கண்டு பிடிப்பதே சரி” என்று கூறி முடித்தார். அவர் எனக்கு தேவையான அருவிரைய சரியான நேரத்தில் அளிதததற்க்கு அவரிடம் மிகுந்த நன்றியை கூறினேன். அவர் என்னிடம் ஒரு வரத்தை வழங்க இயலும் என்று கூறியபோது அவரால் அப்படி நிறைவேற்ற முடியும் என்று எண்ணினேன். ஆனால் அவரை நம்ப முடியும் என்று ஏதோ என் மனசு கூறியதால் நான்,” எனக்கு என் பெற்றோர்கள் வந்தாலே பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்” என்றேன். ”அப்படியே ஆகட்டும்” என்று அந்த ஆடவர் கூறி மறைந்து விட்டார். பிறகு நான் கண் விழித்தபோது நான் கண்டது கனவுதான் என்று நினைத்த போது, ”மாறன்! நீ சாப்பிடவருகிறாயா இல்லையா?” என்று என் பெற்றோரின் குரல் கேட்டது…..
  தீக்‌ஷிதா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 7. நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. ஒரு நாள் நான்…
  மறுபடியும் ஒரு கோலை தவறவிட்ட சோகத்திலும் களைப்பிலும் பூங்காவிலிருக்கும் நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்தபோது, ஒரு மாதிரியான வதங்கிய மலரோடு புளித்த பால் கலந்த வாசம் நாசியை அறுத்தது. வாசம் வந்த திசை நோக்கி கண் திறந்த போது எனக்கு மிக அருகிலேயே ஒருவர் அமர்ந்திருந்தார்.
  “யார் நீங்கள்?” என்று நான் அவரிடம் கேட்டேன். புன்னகைத்துக்கொண்டே அவர், “நான் தான் கடவுள்,” என்றார். நகை பட்டு கடை விளம்பரத்தில் வருகிற அத்தை மாதிரியில்ல எல்லா கடவுளும் இருப்பாங்க ?! நீங்க என்ன டான்னா கழுத்துல உத்திராட்ச கொட்டையும் அழுக்கு வேட்டியுமா இருக்கீங்க” அப்டின்னு கேட்டேன் அதுக்கு அவரு என்ன சொன்னாருன்னு தெரியுமா ” சில சில பிரசனைகளால் இப்போ நான் தலைமறைவா இருக்கேன்” – அட கவுளே!
  என்னால் நம்பவே முடியவில்லை. வழக்கம் எல்லா அதிசயங்களையும்.
  நீங்க கடவுளா?! “என்ன நக்கலா?” என்று கேட்டேன்.
  “முடிஞ்சா சோதிச்சுப் பாரு…” என்றார். “கேள்விகளை நீ கேக்கிறியா, இல்லை நான் கேட்கவா?” என்றதும் நான்
  “இல்ல, இல்ல. நானே கேக்குறேன் ஏன்னா எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்,” என்று கூறினேன். பின் நான் கேள்வி கணைகளை தொடுத்தேன்…
  “பிரிக்க முடியாதது என்னவோ?”
  “தமிழும் சுவையும்.”
  “பிரிக்கக்கூடாதது?”
  “எதுகையும் மோனையும்.”
  “சேர்ந்தே இருப்பது?”
  “வறுமையும் புலமையும்.”
  நான் கேட்ட மற்ற எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்தார் .
  “ஐயா! நீர் கடவுள்! நீர் கடவுள்!” என்று கூறினேன்.
  “இவ்வளவு பெரிய ஆள் நீங்க. என் தொலைபேசி எண்ணைக் கண்டுபுடிச்சு ‘வாட்ஸ்ஆப்’ல ஒரு செய்தி அனுப்பியிருக்கலாமே ?”
  “எங்க இடத்துல ‘வாட்ஸ்ஆப்’ தடை செஞ்சுட்டாங்க,” என்றார் அவர். மிகவும் இயல்பாக அவர் பேசத் தொடங்கினர்.
  (ஐயோ பவாமுன்னு நெனைச்சிகிட்டேன்)
  “உன்னைப் பத்தி சொல்லு. நீ யாரு, எங்க படிக்கிற,” என்று என்னிடம் கேட்டார்.
  “என் தாத்தா விவசாயியாக வாழ்ந்தவர். ஆனா, என் அப்பா ஒரு பன்னாட்டு நிறுவனத்துல வேலை பாக்குறார். அம்மா ஒரு இல்லத்தரசி, சுட்டியாய் ஒரு தம்பி. நான் யூனிட்டி உயர்நிலைப் பள்ளியில படிக்கிறேன். நமக்கு படிப்புல எல்லாம் ஒன்னும் பெரிய ஆர்வமில்லே. ஆனா, இசை, இலக்கியமுன்னு நமக்கு இன்னுமொரு வழியிருக்கு. ஆனாலும் எங்க பள்ளிக்கூடத்துல அதுக்கான இடம் ஓரளவுக்கு இருக்குன்னே சொல்லலாம்.”
  “இவ்வளவு பேசுறீங்களே, உங்கள பத்தி சொல்லுங்க.” என்றேன்.
  “என்ன பத்தி சொல்லறத்துக்கு ஒன்னுமேயில்லை, ஆனா எல்லாமே நான்தான்னு வைச்சுக்கோயேன்.” (“நம்மளவிட மோசமானவரா இருப்பாரோ,” ன்னு நெனைச்சுகிட்டேன்)
  “வந்து நேரமாச்சு, அப்ப நான் கிளம்புறேன் வேலையிருக்கு. சரி, அடுத்து நம்ம எப்ப சந்திக்கலாம்?” என்றார்.
  “ஐயோ மறுபடியுமா?!” என்றேன்.
  “சரி, சரி…நான் கெளம்புறதுக்கு முன்னாடி உனக்கு ஏதாவது வரம் வேணுமுன்னா கேள். தந்துட்டு கிளம்புறேன்,” என்றார் (நான் எனக்குளேயே சிரித்துக்கொண்டேன் அவரே தலை மறைவா இருக்காறாம் இதுலே நமக்கு வரம் கொடுக்கோப்போறாராம்).
  நான், “ஓ, அப்படியா!. உங்களால் முடிந்தால், இந்த உலகத்துல விவசாயத்தையும், விவசாயிகளையும் பிரச்சனைகள் இல்லாமல் காப்பாத்த முடியுமா?”
  கடவுள் பதிலேதும் சொல்லாது என் கண்பார்வையிலிருந்து மறைத்தார்…
  (‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்று புதுமைப்பித்தன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.)
  சூரியநிலவன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 8. நான் மிகவும் சோர்வாக இருந்ததால், என்னை அறியாமலேயே அன்று இரவு உறங்கி விட்டேன். நான்ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். அப்பொழுது, நடுத் தலையில் யாரோ ஓங்கி கொட்டியதுப் போல, மேலிருந்து ஏதோ என் தலையில் விழுந்ததுப் போல் நான் உணர்ந்தேன். ‘ஆ!’ என்று அலறியப் படி நான் எழுந்து மேலே பார்த்தப் போது அங்கு ஒரு பிரகாசமான ஒளி படலம் பரவியிருந்தது. நான் வியந்துப் போனதுடன், என் கண்கள் பயத்தில் திரு திருவென அலைப்பாய்தன. என்னால் என் கண்களையே நம்ப இயலவில்லை. அங்கு ஒருவர் மேலே மிதந்துக்கொண்டிருந்தார். அவர் இறங்கி வந்து, என் முன் அமர்ந்தார். என் முகத்தில் படர்ந்திருந்த பயத்தைக் கண்ட அவர், ” பயப்படாதே! நான் கடவுள் தான்” என்றார். ஒரு பக்கம், தான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மறு முனையில், மனத்துக்குள் விதையாக விழுந்து மரமாக உருவெடுத்து இருந்த, கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற எனது ஆசை இன்றாவது நிறைவேறியது என்பதை நினைத்து நான் ஆனந்தக் கடலில் மூழ்கினேன். கடவுள், என்னிடம் ஒரு நெருங்கிய நண்பரைப் போல் பேசினார். நான் அவரிடம் என் கஷ்டத்தை எல்லாம் கூறினேன். அவர் எனக்கு பல அறிவுரைகளைக் கூறினார். அதுமட்டுமில்லாமல், இவ்வளவு நாளாக என் மனதுக்குள் பூட்டி வைத்திருந்த பிரச்சனைகள் அனைத்தையும் கொட்டி தீட்டியதன் பின் தான், நான் நிம்மதியாக இருந்தேன். இறுதியில் அவர், தான் போக வேண்டுமென்றும் ஏதேனும் ஒரு வரம் கேள் என்றும் அவர் என்னிடம் கூறினார். நானும், தான் அரை இறுதித் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற வரத்தைக் கேட்டேன். அப்பொழுது, என் கையடக்கத்தொலைப்பேசியின் மணி ஒலித்தது. தூக்கம் களைந்து, கண் விழித்துப் பார்த்த போது தான், நான் கண்டது எல்லாம் கணவு என எனக்குத் தெரிய வந்தது. நான் கடவுளைக் கண்டது, அவரிடம் பேசியது, வரம் கேட்டது, அனைத்தும் கணவு என நினைத்தால், எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
  வைஷ்ணவி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 9. அன்று இரவு நான் சந்தோஷமாக தூங்கச் சென்றேன். நான் ஆன்று எனது பள்ளியில் நடந்த பூபந்தாட்ட விளையாட்டு போட்டியில் வென்றேன். இந்த மகிழ்ச்சியல் தான் நான் தூங்கச் சென்றேன். இப் போட்டியில் நான் வெல்வேனென்று எதிர்பார்கவில்லை. ஆனால் எனக்கு துனையாக கடவுள் இருந்ததால் நான் வேன்றேன் என்று நம்பினேன். நான் அப்படியே களைப்பில் அசந்து தூங்கிட்டேன். அப்போது திடிரேன ஒரு சத்தம் கேட்டது. முழித்து பார்க்கும்போது எனது கட்டிலின் அருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ‘நீங்கள் யாரென்று’ கேட்டேன். நான் கடவுள் என்றார். நான் அவரை நம்பவில்லை. அவர் திடீரென ஆறு தலைகளை காட்டினார். அப்போது தான் அவரை நான் நம்பினேன். அவர் எனது குடம்பத்தை பற்றி கேட்டார். நானும் அதெற்கேற்ப பதி லலித்தேன். அவர் மேலும் என்னைப் பற்றி பல தகவல்களைப் பற்றி கேட்டார். நானும் அவருக்கு பதில் கூறினேன். நாங்கள் சிறிது நேரம் பேசிய பிறகு கடவுள் என்னைப் பார்த்து ஒன்று கேட்டார். ‘ உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார். நான் ஒரு முறை என் புத்தகங்களை பார்த்தேன். ‘ எனக்கு வேண்டிய வரம், உலகத்திலுள்ள எல்லா புத்தகங்களும் எனக்கு வேண்டும்’. கடவுள் என்னை பார்த்து ஆச்சரியப்பட்டார். அவருக்கு புரியவில்லை நான் ஏன் இந்த முடிவை எடுத்தேனென்று. நான் கடவுளிடம் கூறினேன், ‘ எனக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு வசதியில்லாததால் என்னால் எனக்கு பிடித்த புத்தகங்களை படிக்க முடியவில்லை. அதனால் தான் நான் இப்படி கேட்டேன்’ என்று கூறினேன். அவர் எனது ஆசையை பார்த்து அதிரிச்சியடைந்தார். எனது புத்தகங்களின் மீதுள்ள ஆர்வத்தை பார்த்து எனக்கு அந்த வரத்தை வழங்கினார். திடீரென எழுந்துப் பார்த்தால் கடவுள் இல்லை. அப்போது தான் அது கனவு என்று புரிந்துகொண்டேன். நான் எனது தலையை தட்டிவிட்டு திரும்பி தூங்கச் சென்றேன்.
  கீர்த்திவாசன்
  பெண்டிமியர் உயர்நிலைப்பள்ளி

 10. நான் சமீபத்தில் செய்த ஆரையாண்டு தேர்வில் சிறப்பாக செய்யவில்லை. நான் தினமும் கோயிலுக்கு சென்றும் எனக்கு கடவுள் உதவவில்லை. ஆதனால் எனக்கு கடவுளின் மீதுவுள்ள நம்பிக்கை குறைந்தது. நான் அதைப் பற்றி நினைத்துக்கொண்டே உறங்க ஆரம்பித்தேன். திடீரென ஒரு ஒளி எனது ஜன்னலிலிருந்து வந்தது. அது எனது தூக்கத்தை கெடுத்தது. நான் எழுந்த நின்றபோது என் முன் ஒரு உருவம் நின்றது. நான் யார் என்று அவரைப் பார்த்து கேட்டேன். ‘ நான் கடவுள்’ என்று கூறினார். என்னால் நம்பமுடியவில்லை. அவர் திடிரேன ஆறு கரங்களை நீட்டினார். அப்போது நான் அவரை நம்பினேன். நான் அவர் வந்ததற்கான காரணத்தை கேட்டறிந்தேன். அவர் என்னைச் சந்திக்க தான் வந்தார் என்று கூறினார். அவர் என்னைப் பற்றியும் எனது வாழ்க்கையைப் பற்றியும் கேட்டார். நான் அவருக்கு பதிலலித்தேன். அவர் எனது முகத்தில் உள்ள சோகத்தை கண்டு ‘நான் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன், நீர் என்ன வேண்டுமேனாலும் கேள், நான் தருகிறேன்’ என்று கூறினார். நான் ஆச்சிரியத்தில் வாய் பிளந்தேன். நான் என்ன வரம் கேட்க வேனும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எனது மனம் குழப்பத்தில் திளைத்துக்கோண்டிருந்தது. அப்போது எனது மனதில் ஒரு எண்ணம் வந்தது. நான் என் வரத்தை கேட்டேன். அவர் ஆச்சரியத்தில் நின்றார். பிறகு புன்முறுவல் பூத்தார். நான் அப்படி என்ன வரம் கேட்டேன் என்று எண்ணுகிறீர்களா? நான் கேட்ட வரம் ‘ விவசாயிகள் அனைவருக்கும் அவர்களது பிரச்சனை தீர்ந்து அவர்களது நிலங்களும் திருப்பி கிடைத்து, அவர்கள் கடவுளுக்கு ஈடாக மதிக்கப்பட வேண்டும்’. இந்த வரத்தை ஏன் கேட்டேன் என்று கடவுள் கேட்டார். நான் விவசாயகளின் துயரத்தை தினமும் செய்திகளில் காணுகிறேன். என் தாத்தாவும் ஒரு விவசாயி தான். அவர் கஷ்டப்படுவதை நான் காணும்போது என் மனம் கொந்தளிக்கின்றது. நமக்கு சோறு போடுபவர்களை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். அதனால் தான் நான் இந்த வரத்தை கேட்டேன். கடவுளும் ஒப்புக்கொண்டார். திடீரென நான் மணி சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன். அப்போது தான் அது ஒரு கனவு என்று எனக்கு புரிந்தது. பகல் கணவு பளிக்கும் என்று கூறுவார்கள். அது நிறைவேற வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டு காலைக் கடன்களை முடிக்க ஆரம்பித்தேன்.
  S.Karthikeyan
  Bendemeer Secondary School

Your email address will not be published.


*