கடலே, கடல் அலையே!

ஆர்ப்பரிக்கும் கடல், அசையாமல் நிற்கும் பாறை, அமைதியாகப் பார்க்கும் வானம், கரையாமல் நிற்கும் கரை… இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 செப்டம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஜூலை மாத, வெற்றியாளர்களின் பட்டியல்

Yahika Radhakrishnan Riverside secondary school
Sivaranjana Chua Chu Kang Secondary school
Balamurugan Viswa Commonwealth Secondary School

16 கருத்துரை

 1. கடலில் எழுவது அலை
  அதுவே கடலின் கலை அலை
  கடலுக்கு ஒரு தலை பொங்கி
  எழுந்தால் அது ஒரு மலை
  வரையாது வழங்கும் கடல்
  அது பல உயிரினங்களின் திடல்
  கடலுக்கு அதில் வாழும்
  உயிரினங்களே உடல்.
  லுபிஃனா ஜோஹார் ரபீக் முகமது
  செயின்ட் ஹில்டா உயர்நிலை பள்ளி

 2. கடலே, என் உயிரே…
  உன் அலையே, உலகின் அழகே…
  உன் நீரில், என் முகமே…
  உன்தன் மணலில், என்தன் நிழலே…
  கதிரவனின் ஒளியே, நிலவின் ஈரமே…
  காற்றின் தூய்மையே, மீன்களின் உறவே…
  காதலர்களின் துணையே, வானத்தின் நிறமே…
  நீ இன்றி, நான் இல்லை…
  நீயே உலகின் எல்லை…
  வாழ்வின் எல்லை…
  கங்கா கண்ணன்,
  St Anthony’s Canossian Secondary School

 3. கடலே,என் உயிரே…
  உன் அலையே,உலகின் அழகே…
  உன் நீரில்,என் முகமே…
  உன்தன் மணலில்,என்தன் நிழலே…
  கதிரவனின் ஒளியே,நிலவின் ஈரமே…
  காற்றின் தூய்மையே,மீன்களின் உறவே…
  காதலர்களின் துணையே,வானத்தின் நிறமே…
  நீ இன்றி,நான் இல்லை…
  நீயே உலகின் எல்லை…
  வாழ்வின் எல்லை…
  கங்கா கண்ணன்,
  St Anthony’s Canossian Secondary School

 4. *கடல் அலை*
  காலில் சலங்கையை கட்டிகொண்டு
  ஓய்வு இல்லாமல் எங்கு நடந்து கொண்டிருக்கிறாய்
  எதை தேடி பயணித்து கொண்டு இருக்கிறாய்
  உன்னிடும் இருந்துதான்
  இசை கலைஞன் இசை கற்றானா
  உன்னை பார்த்த பின்புதான்
  கவிஞனுக்கு கவிதை வந்ததா
  விலையேற பெற்ற பொக்கிஷங்களை
  கரை சேர்த்து
  உன் வருகையை பதிவு செய்து விட்டு செல்கிறாய்
  என்னை தேடி கரை வந்து
  என் பாதத்தை தழுவி விட்டு செல்கிறாய்
  உன் குளிர் காற்றால் வெப்பம் தனிகிறேன்
  உன் தீண்டலால் குளிர்ந்து போகிறேன்
  யாரிடம் கோபம் கொண்டாய் இப்படி
  மோதி அடித்து கொண்டு வருகிறாய்
  கரை தேடி வந்து தீண்டிய நீ
  இப்போது கரை தேடி வந்து
  இழுத்துக்கொண்டு செல்கிறாய்
  பிணம் தின்னும் பழக்கத்தை எங்கே கற்றாய்
  உன் எல்லையை மீறுவதற்கு
  யார் அனுமதி கொடுத்தது
  எல்லை மீறும் பழக்கத்தை விட்டுவிட்டு
  உன் எல்லைக்குள்ளே உன் நடையை போடு
  ந.ராகவி
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

 5. கடலே, கடல் அலையே
  விண்ணையும் மண்ணையும் இணைக்கும் நீலப்போர்வை
  குருநாதரே இல்லாமல் ஆடும் அலைகள்
  எவ்வனவு பெரிய பேரிடரையும் தாங்கும் பேரலைகள்
  தன் அழகை வெளிக்காட்டாமல் கடலுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பிகள்
  ஒரு குழந்தையின் ஆனந்தத்திற்காக குழந்தையின் ஸ்பரிசத்தில் கடல்
  சில சமயங்களில் சாந்தமாய் உறங்கும் நீல தேவதை
  சில சமயங்களில் ஆக்ரோஷமாய் கிளம்பும் பயங்கர பூதம்
  மழையின் நெருங்கிய நண்பன் நீயேபல உயிரினங்களுக்கு உயிர் கொடுக்கும் தாயும் நீயே!
  SANKARAMANI KEERTHANA
  Riverside secondary school

 6. கடலே, கடல் அலையே!
  கடல் தாயே! கடல் அலையே!
  அனைவருக்கும் உப்பும் உணவும்
  கொடுக்கும் அட்சய பாத்திரம் நீ!
  ஓயாமல் நீ கரையை தொட்டாலும்
  உன் அழகு கரைக்கு என்றுமே தெரிவதில்லை
  உன் அழகை காண கண்ணிரண்டு போதாது.
  அலை நிறைந்த உன்னோடு யுத்தம்
  செய்யும் நீருழவனுக்கு தான் தெரியும்
  அழகும் ஆபத்து என்று!
  உலகின் முதல் அதிசயம் நீ!
  சில நேரங்களில் நீ விடும் எச்சரிக்கை!
  நீ எப்போதாவது அடிக்கும் ஒரு சிக்சர்
  அதற்கு பெயர் சுனாமி
  குழந்தை முதல் பெரியவர் வரை
  சலிக்காமல் விளையாடும் ஒரே இடம் நீ தான்!
  நீ ஆடும் அழகை கண்டு ரசிக்க
  உனக்கு ரசிகர் கூட்டம் ஏராளம்.
  உன் வட்டத்துக்குள் நீ இருந்தால் அது பேரழகு
  அதை மீறினால் அது பேரழிவு
  இத்தகைய சிறப்புப் பெற்ற உன் அழகை
  இரு கரம் கூப்பி வணங்குகின்றோம்!
  சுபத்ரா
  Jurong West secondary school

 7. அலைகள் எவ்வளவு வந்தாலும்
  தலை நிமிர்ந்து நிற்கும் பாறைகளே!
  விளையாட்டாக தொட்டுச் செல்லும் அலைகளே!
  மகிழ்ச்சியில் கடல் வெளியிடும் வண்ணங்கள் அழகு!
  கடலின் அலைகள் எண்ணற்றவை!
  அதன் அதிசயங்களும் அவ்வாறே!
  வாழ்க்கையே ஒரு கடலை போலத்தான்
  அது அமைதியாக இருக்கலாம்
  அது முரட்டாகவும் இருக்கலாம்
  ஆனால் இறுதியில் அது அழகாகவே இருக்கும்
  நமக்கு கிடைத்த வாழ்க்கையைப் போல
  தலை நிமிர்ந்து நிற்கும் பாறைகள் நாமே!
  அனைத்தையுமே எதிர்நோக்குபவர்கள் நாமே!
  சில பாறைகள் அலைகளால் ஒரேடியாக முடங்கிவிடுவார்கள்
  சில பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவர்
  ஆனால் கடைசி வரை இருக்கும் பாறைகளே!
  அவை தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாவோர்!

  தீட்ஷிதா

 8. கடலே, கடல் அலையே
  ஓயாமல் கடல் அலை கரையை வந்து தொட்டாலும்
  அக்கரை கரைவதில்லை
  அக்கடல் அலைகளின் சத்தம் ஏற்படுத்தும்
  என் மனதில் ஓரு யுத்தம்
  வையகமே இடிந்து விழுந்தாலும் அக்கடல்
  பாறைகளையும் கரைகளையும் முத்தமிடுவதை நிறுத்தாது
  ஏழுகடல்களிலும் உள்ள ஒற்றுமை ஒன்றுதான்
  அதன் அழகே தனி மகத்துவம்
  கடல் அலை அன்பு போன்றது
  கடல் அலை நட்பு போன்றது
  இவை இரண்டிற்கும் உணர்வுகள் அதிகம்
  கைகளில் ஒட்டிய மண்துகள்களை தட்டுவதற்குக் கூட
  எனக்கு மனமில்லை
  இக்கடற்கரை எதுவரை முடியும் என்பது
  யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர்
  கிறிஸ்மிதா
  Riverside Secondary School

 9. முக்கடலின் கரையில்
  நின்று
  வியந்துகொண்டிருந்தபோது
  உள்ளங்கையில்
  அள்ளி
  ப்பூவென ஊதினேன்
  சிறு துளிகளாக சிதறியது கடல்
  கடலின் கரையில்
  பிரம்மாண்டமாக
  எழும்பி நின்றது ஒரு மலை
  கடல் சிரித்தது
  ஒரு புயல் போதும்
  மலையை மறைக்கவென சிரித்தது கடல்
  மலை மலையென
  கடல் கடல் கடலென
  மலை உச்சியைத் தொட
  கடல் எழும்பி அலை எழும்பி
  கடல் கீழிருந்து பார்த்தது
  மலை அமைதியாக இருந்தது
  கடல் ஆர்ப்பரிக்கிறது
  YASHIKHA RADHAKRISHNAN
  Riverside Secondary School

 10. கடல் அது அழகின் சிரிப்பு
  கடல் ஒரு பெண்ணாள்
  சித்தம் அழகுற முத்துக்கள் அளிப்பவள்
  நித்தம் மீனவர்களின் பசி தீர்ப்பவள்
  அது முத்தான பூமியின் மூத்த மகள்
  அன்பாய் இருப்போருக்கு ஆறுதலாய் இருக்கும்..
  இயற்கைக்கு ஊறுவிளைவிக்க தன் மறுமுகம் கொண்டு சுனாமியை காட்டும்
  ஏதோ சேதி சொல்லவே அலைகளை அனுப்புகிறது கரைக்கு..
  அது வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வதைப்போல்
  துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்,
  வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டு
  பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் வியப்பைச் செய்யும்.
  அந்த அலைகளைப் போல மனபலம் நாம் பெற்றிட்டால்
  பாறைபோன்ற துன்பத்தை நம்மால் தகர்த்திட முடியும்
  ஓரிடம் வெதும்பி நிற்பது வாழ்க்கையா
  பலஇடம் சென்று சாதித்தல் நன்று..
  நவீன்
  உயர்நிலை ஒன்று
  ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி

 11. உப்பு மழை அலையே
  குப்பை குளம் அலையே
  எண்ணை கசிந்த அலையே
  என்னை கவர்ந்த அலையே
  சின்ன சிறு அலையே
  சிறி பாயும் அலையே
  உயிர் கொடுக்கும் அலையே
  உயிர் எடுக்கும் அலையே
  என்னை கடலுக்கு அழைக்கும் அலையே
  நீ பல அண்டு நீர் வீச வேண்டும் கடல்கரையின் இசையே!
  Saran
  Bendemeer secondary school

 12. கடலைப் பற்றி ஒரு கவிதை
  கடலே கடலே நீ ஒரு அழகே!
  உன்மேலே மிதப்பது படகே!
  உன் அலையின் சத்தம் ஒரு ஒலியே!
  அதைக் கேட்பது ஒரு இனிமையே!
  கடலில் இருப்பது மீன்களே!
  அதைக் கொன்று சாப்பிடுகிறார்கள் மனிதர்களே!
  ஏய் கடலே நீ ஒரு இயற்கையின் படைப்பு!
  உன்னை காணும் போதெல்லாம் எனக்குள் வியப்பு!
  நீ மட்டும் எப்படி விண்ணை தொடுகிறாய்!
  எனக்கு கற்றுக் கொடு நானும் தொடுகிறேன்.!
  நீ எப்போதும் சோர்ந்து போகலாம் புதிதாய் பூத்த பூ போல!
  கடலே நானும் தினமும் பூக்க வேண்டும் உன்னைப் போல!
  உன்னைப் பார்க்கும் போதொல்லாம் எனக்குள் வருகின்றது தன்னம்பிக்கை!
  நீ விழுந்தாலும் திரும்ப எழும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை!
  நீ இயற்கையின் வித்து, நீ எங்கள் சொத்து!
  உனை நலமுடன் பேணி பாதுகாப்பதே எங்கள் கெத்து!
  ராஜேந்திரன் கீதப்பிரியா,
  சாங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி,

 13. நெடுந்தொலைவில் என்னை நோக்கி வருவாய்,
  கரையில் இருக்கும் என்னை கரைய வைப்பாய்
  உன் அழகே கடலிற்கு பெருமை,
  உன்னை பார்த்தால் எல்லோருடைய மனதில் பொறுமை
  உந்தன் அழகால் எல்லோரையும் வசீகர வைப்பாய்,
  உந்தன் சினத்தால் எல்லோரையும் தவிக்க வைப்பாய்!
  Aneeqa Reema
  greenridge sec

 14. கடலே கடலே கடலே!!!
  உலகில் மூன்று பங்கு கடலே!!
  வாழ்க்கை சுழற்சியில்
  உன் பங்கு உன்னதம்!!
  அமைதியான கடல்!
  ஆர்ப்பரிக்கும் கடல்!
  மனித மனமும் அப்படியே!
  மனிதரில் வண்(கு)ணங்கள்!!
  கடலும் அப்படித்தானோ!!!
  அதிகாலை நேரத்தில் அற்புத வண்ணம்! செங்கதிரோனை கண்டால் செவ்வண்ணம்!
  நீல வானம் நோக்கம் ஒருவண்ணம்!
  கார்முகிலை கண்டால் கருமை வண்ணம்!
  முழுநிலவை கண்டால் முழுமை வண்ணம்!
  கடலின் அழகைக் காண
  ஆர்ப்பரிக்கும் உள்ளத்தில் அமைதி!
  கடல் அன்னையே
  உன் உன்னதம் உணர்ந்தேன்!
  உன்னை தலை வணங்குகிறேன்!
  நீயே நான் என்று விளங்கினேன்!
  என்(னை) கடல் அன்னையயை
  காக்க ஆவண செய்வேன்
  என சூளுரைக்கிறேன்!!!
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உஉயர்நிலை பள்ளி

 15. கடலில் மூழ்கியவன் முத்தெடுப்பான்.
  தோழனுக்கு தோள் கொடுப்பவன் தோழனாவான்
  ஆனால் தோழனுக்கே துரோகம் செய்பவன் எதிரியாவான்.
  அப்பாவத்தைச் செய்பவன் பாவி ஆவான்…
  பக்தியில் மூழ்கியவன் பக்தன் ஆவான்.
  பகவானின் அரவனைப்பை பெற்றவன் வரம் பெறுவான்.
  ஆனால் பெற்றவர்களின் அக்கறையை பெறத் தவருபவன்,
  வாழ்க்கை என்ற கடலின் அலைகளை கடந்து அக்கரையைச் செர தவருவான்…
  அதனால் வாழ்க்கையின் முத்தைப் பெற தவருகிறான்….
  மஹாஸ்வேத்தா
  Greenridge Secondary School

 16. நெடுந்தொலைவில் என்னை நோக்கி வருவாய்,
  கரையில் இருக்கும் என்னை கரைய வைப்பாய்
  உன் அழகே கடலிற்கு பெருமை,
  உன்னை பார்த்தால் மனதிற்கு பொறுமை
  உன் அழகால் எல்லோரையும் வசீகர செய்வாய்,
  உனது சினத்தால் எல்லோரையும் தவிக்க வைப்பாய்.

  அனீக்கா ரீமா
  Greenridge secondary school

Your email address will not be published.


*