கடலும் கடற்கரையும்

கடற்கரை, கடல் அலை, கடல் மணல், கடற்கரைக் காற்று என கடலை ரசிக்க நிறையக் காரணங்கள் உண்டு. அதிலும் இளம் வயதில் கடற்கரை மணலில், நாம் விரும்பிய விளையாட்டுகளை நண்பர்கள், தோழியரோடு விளையாடும்போது, நேரம் போவதே தெரியாது. இந்த ஓவியம் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, ஓர் அழகிய கவிதையாக எழுதுங்கள்.

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 4 ஆகஸ்ட் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

புகைப்படம்: இளையபாரதி

மே மாதக் கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்:

Dakshaini Yuhua Secondary School
Vishnu Punggol Secondary School
Nandhakumar Ragavi Commonwealth Secondary School

9 கருத்துரை

 1. கடற்கரை காற்றும்
  கடலலை ஓசையும்
  இணைந்து தந்த சத்தம் என் காதில் சங்கீதமாய்…

  நீள்வானும் நீலக்கடலும் முட்டிக்கொள்கின்றன
  படகுகள் அவை நோக்கி நகர
  என் விடை தேடும் வினாடிகள் யுகங்களாய்…

  ஒரு கோடி பாதத்தடங்கள் சுமந்து
  கடலின் வாசல் கோலமாய்
  கடவுள் படைத்ததில் அழகியாய்..

  அசையும் கடலில் ஆட்டம் போடும் சிறுவர்கள்
  என்னுடைய நண்பர்களுடன் விளையாடியதால் நேரம் சிட்டாய்
  பறந்து என் கவலைகள் தன்னாலே கலைந்ததவனாய்..

  தெவிட்டாத காட்சிகள் கண்டு விடைபெற முடியாமல்
  பொழுதுகள் இருள நண்பர்களுடன் கிளம்பினேன்
  மீண்டும் நாளையென்றவனாய்…

  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL

 2. கடலும்! கடற்கரையும்!

  பூமியின் மூன்று பங்கு கடல்!
  கடல்! கடல்! கடல்!
  கடல் என்றால் கடற்கரையும் அங்கே!
  கடல்நீர் ஆவியாகி முகிலை உரச
  முத்தாக பிறந்தது மழை!
  மழையின் முத்தத்தால் கதிர்கள் நாண!
  உழவன் கதிர் நாணி தலைகவிழ்ந்ததை கண்டு உள்ளம் மகிழ!
  உதிரம் வியர்வையாக சிந்தி உழைத்து கதிர் அறுக்க!
  அறுத்த கதிர் அரிசியாக உலையில் கொதிக்க!
  வடித்த சோறோடு வெல்லம் சேர்த்து –
  கடற்கரை மணலில் கடலுக்கு நன்றி கூற,
  படையல் போட்டான் வாழை இலையில் உழவன்
  வாழ்க! வாழ்க! வாழ்க! கடல் அன்னையே! என்று கடலுக்கு நன்றி கூற-
  உழவன் கடற்கரை மணலில் வாழி பாடினான்!

  mithra balamurugan
  unity secondary school

 3. கடற்கரை அழகான கடற்கரை.
  நாம் சந்திக்கும்போது உலகம்
  என்னிடம் வந்தது
  போல் ஓரு உணர்வு
  கடல் ,மணல், சூரியன் மூவரும்
  எனக்கு வாழ்த்து சொன்னது
  போல் ஒரு உணர்வு
  கடற்கரை அழகான கடற்கரை

 4. அந்த கோபுரம்
  அவ்வளவு
  எளிமையானதல்ல..

  விழி வழியே
  அளந்து விட
  விண்ணை
  உரசும்
  அதன் உயரம்
  அனுமதித்ததில்லை..

  மேனி முழுக்க
  சிற்ப எழில்
  பூசி நிற்கும்
  திமிர்
  பல உளிகளின்
  வலி தாங்கி
  உருவான வசீகரம்.

  நிலாவை உடலில்
  போர்த்தி
  சுடர்விட்ட ஒரு
  இரவில் தான்..
  அந்த கோபுரத்தை
  கண்டவர்கள்..
  அது வெறும்
  கற்களால் ஆனது
  அல்ல..
  கண்கள் முழுக்க
  சுமந்த கனவின்
  கனல் என
  கண்டார்கள்..

  வானெங்கும்
  சிறகு விரித்து
  இறகு கவிதை
  எழுதும் பறவை
  கவிஞர்களுக்கு
  அந்த கோபுரம் தான்
  இராஜ மாளிகை..

  கால வீதியில்
  கணக்கில் ஒன்றாய்
  சட்டென
  கடந்துப் போக
  அந்த கோபுரம்
  ஒற்றையடிப்பாதை
  அல்ல..
  பூரித்து நிற்கும் கடல் மண்..

  குப்பைகள்
  காற்றில் மிதந்து
  கலசத்தை உரசிய
  போதும்..
  ஆழ்ந்திருக்கும்
  அதன் மெளனம்
  சொற்கள் அற்று அல்ல..
  உரசுபவை வெறும்
  குப்பைகள் எனக் கற்று..

  வார்த்தைகளை வார்த்து..
  வாக்கியங்களை கோர்த்து..
  இழி சொற்சங்கிலிகளால்..
  அந்த கோபுரத்தை
  சரித்து விடலாம் என
  நினைப்பவர்களுக்கு..

  தங்கப் பக்கங்களில்
  எழுதப்படும் ஒரு
  யுகத்தின் வரலாறு
  கம்பீரமாக அறிவித்துக்
  கொண்டே இருக்கிறது…

  Prathiba D/O Palanivelu
  Bendemeer Secondary School (2R1)

 5. கடலும் கடற்கரை

  அலைகளே கடலின் இதயத்துடிப்பு.
  சிற்பியில்லா கடலை
  கண்டால் ஏனோ ஒரு
  துடிப்பு.
  முத்தும் பவளமும் உரசும்
  ஓதை.
  சங்கின் ஓசை என
  நம்மில் உருவாக்கும்
  இசை.
  தந்தையை என்னுடன்
  பயணிக்க செய்தது
  கடல்!
  என் கையில் சூரியனை
  தந்தது கடல்!
  என் எதிர்காலத்தை
  செதுக்க உதவியது
  கடல்!
  இறுதியில் என்னையே
  பெற்றுக்கொள்ளும்
  ராட்சன் கடல்!

 6. கடலும் கடற்கரை

  அலைகளே கடலின் இதயத்துடிப்பு
  சிற்பியில்லா கடலை கண்டால் ஏனோ ஒரு துடிப்பு
  முத்தும் பவளமும் உரசும் ஓசை சங்கின் ஓசை என
  எனக்குள் எல்லாம் இசையே
  தந்தையை என்னுடன் பயணிக்க செய்தது கடல்
  என் கையில் சூரியனைத் தந்து
  என் எதிர்காலத்தை செதுக்க உதவியது கடல்
  என்னுள் அனைத்தும் அடக்கம் என்று சொல்லாமல் சொல்லியது.

  ஸ்ரீநிதி
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 7. ஒரு கணம்,
  கடற்கரையின் ஓரம்,
  நீயும் நானும் மட்டும்,
  கைகள் இரண்டும் கோற்க,
  இமைகள் நான்கும் பரிமாற,
  இதழ்கள் இரண்டும் சேரும்போது,
  அலைகள் வந்து சீண்டன.
  மழையோ வெயிலோ,
  உன்னை நனைப்பதில்லை
  காற்று உன்தன்
  கூந்தலை கலைப்பதில்லை,
  உன் அழகில் மயங்கிய நான்
  கடலில் விழுந்தேனே…
  கரை சேர்ந்தபோது,
  நீ காணவில்லையே…
  கடல் கன்னியே…
  எங்கே நீ…

  Ganga Kannan
  St Anthony’s Canossian Secondary Schoo
  l

 8. கடலும் கடற்கரையும்

  அக்காள் அண்ணன் அனைவருக்கும்
  ஆசையைத் தூண்டும் கடல் அலைகள்
  இன்பம் அளிக்கும் மணல் வீடாம்
  ஈர்க்கும் மனதைக் கடல் நுரையாம்
  உப்பைத் தருவாள் கடல் அன்னை
  ஊரும் நாடும் சுவை பெறவே
  எல்லா வளங்களும் அளித்திடுவாள்
  ஏங்கும் நாக்கு சுவையுறவே
  ஐயம் தோன்ற இடமில்லை
  ஓடம் மேவும் கடல் மீதில்
  ஓங்கும் அலைகளும் மிக உண்டாம்
  ஔஷதங்களும் பல உண்டு
  எஃக்கின் கப்பலும் சென்றிடுமே.!

  சின்மயி
  1HTL
  மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி தமிழ் மொழி நிலையம்

 9. சிங்கப்பூர் ஓர் இளம் நாடு
  ஒவ்வொரு இனத்திலிருந்தும்
  குடிமக்கள் இருக்கிறார்கள்
  மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், யுரேசியர்கள்
  அனைவரும் சிங்கப்பூரில் உள்ளார்கள்

  நாம் படிப்பது, வேலை செய்வது, ஒற்றுமையாக விளையாடுவது
  ஒரு பெரிய ஒற்றுமையான குடும்ப்பத்தைப் போலவே இருக்கிறது.
  எல்லாவற்றிலும் நாம் நமது சிறந்த முயற்சியை செய்கிறோம்,
  மீதமிருக்கும் வகையில்!

  சில நேரங்களில் தவறான புரிதல் இருந்தாலும்
  நல்லிணக்கத்தைத் தக்க வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

  ஒன்றாக நாம் வாழ்வில்
  அனைத்து தடைகளையும் கடக்க வேண்டும்
  நாம் செழிப்புடன் வாழ்வோம்,
  அனைத்தும் இன நல்லிணக்கம் என்ற பெரியரிலேயே!

  கதீஜா பீவி
  பெண்டிமியர் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*