ஒரு மரம், கிளைகள், மலர்கள் – உங்கள் கவிதை!

ஒரு மரம், அதில் நீளும் கிளைகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், அம்மரத்தில் குதுகலமாக விளையாடும் சிறுவர்கள், பின்னணியில் கிடக்கும் இயற்கை அழகு … இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 25 அக்டோபர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஆகஸ்ட் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்

8 கருத்துரை

 1. இலைகள் இருந்தால்தான் அது ஒரு கிளை
  கிளைகள் இருந்தால்தான் அது ஒரு மரம்
  இலைகள்  ஒளிச்சேர்க்கை செய்யாவிட்டால்
  அந்த கிளை இறந்துவிடும்
  கிளை இறத்துவிட்டால்
  அந்த மரமே இறந்துவிடும்
  அதேபோல் 
  மரம் என்பது ஒர் உலகம்போல்
  கிளை என்பது ஒரு நாடுபோல்
  இலை என்பது ஒரு  மனிதன்போல்
  ஒரு மனிதன் தன் வேலையை
  ஒழுங்காக செய்யாவிட்டால்
  அது அந்நாட்டைப் பாதிக்கும்
  அது இந்த உலகத்தையே பாதிக்கும்
  மரம் கிளை இலை
  நம் வாழ்க்கைக்கே
  எடுத்துக்காட்டு

  Harik
  Yuhua Secondary School

 2. ஒரு மனிதனை பார்த்தால் அவன் குணத்தை தெரியும்,
  அவன் குணத்தை தெரிந்தால் அவன் எப்படி பழகுவான் என்று தெரியும்.
  அதேபோ, ஒரு மலரை பார்த்தால் அதன் அழகையும் கிளைகளையும் தெரியும்,
  அக்கிளைகளை பார்த்தால் அது இருக்கும் மரத்தின் தண்டின் வலிமையை தெரியும்.
  subramanian geethalaya srijai
  yuhua secondary school

 3. மரங்கள்,
  இயற்கையின் முக்கிய அங்கம்.
  காலத்திற்கு ஏற்றவாறு
  அவை நடக்கின்றன.
  கோடைக்காலம்
  குளிர்காலம்,
  வசந்த காலம்,
  இலையுதிர் காலம் போன்ற
  காலங்களுக்கு ஏற்ப
  மரங்கள் நடக்கின்றன்
  அது போலவே
  மனிதனும் தன்னுடைய
  சுற்றுசூழுக்கு ஏற்ப
  தன்னுடைய குணங்களை
  மாற்றிக்கொள்கின்றான்.
  ஆர்த்தி
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 4. மரம் மனிதனின் சுவாசம்
  மரம் பறவைகளின் சரணாலயம்
  மரம் வழிப்போக்கரின் கூடாரம்
  மரம் பழங்கள் தரும்
  பலன்கள் தரும்
  நிழல் மழை தரும்
  மனிதன் காடுவரை செல்ல
  கூடவே வரும்
  மரமே நீ வெயிலுக்கு நிழல்
  எறும்புக்கு பாதை
  பறவைக்கு நிழற்குடை
  சிலந்திக்கு வலை
  மண்ணுக்கு உரம்
  கொடிக்கு பந்தல்
  கால்நடைக்கு உணவு
  நோயுக்கு மருந்து
  ஆயுதங்களுக்கு கைப்பிடி
  வீட்டிற்கு காவலன்
  வானுக்கு மழை
  குடிசைக்கு கூரை
  தாகத்திற்கு நீர்
  உயிர்களுக்கெல்லாம் உயிர்
  பஞ்சபூதங்களின் பணியாளன்
  வண்ணப்பறவைகளின் வசந்தகால ஊஞ்சல்
  கற்கால மனிதனின் மாட மாளிகை
  தற்கால மனிதனின் தன்னலமற்ற சேவகன்
  பாருக்கே பசுமை ஆடை போற்றிய பேகன்
  இயற்க்கையின் உயிர்நாடி

  YASHIKHA RADHAKRISHNAN
  RIVERSIDE SECONDARY SCHOOL

 5. ஒரு மரம், கிளைகள், மலர்கள்
  மரமே நீ வெயிலுக்கு நிழல்
  பறவைக்கு வீடு, கால்நடைக்கு உணவு
  சிறுவர்களுக்கு தோழன்
  நோய்க்கு மருந்து, வீட்டுக்கு காவலன்
  வானுக்கு மழை, உயிர்களுக்கெல்லாம் உயிர்
  இப்படி உணவு, உறைவிடம் தந்து
  நம்மை வாழ வைக்கும் மரத்தை
  அழித்து, நாம் வாழ நினைப்பது முறையா?
  நாம் அழிப்பது மரத்தை அல்ல,
  நம்மில் பாதியை…
  வெட்ட வெட்ட முளைத்தாலும்
  அதன் பயனை அறியாமல்
  வீழ்த்தவே பார்க்கிறோம்,
  பின்விளைவுகள் அறிந்தும்.
  உப்பு நீரை, உண்ணும் நீராக்க
  ஓயாது உழைக்கும் விஞ்ஞானிகள் மரங்கள்
  மரங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்,
  பொறுமை என்றால் என்னவென்று!
  பூக்களை முத்தமிடம் குத்தகைகாரன் தென்றல்!
  தான் தான் அழகு என்று கர்வம் கொண்டு
  மலர்ந்திருக்கும் மலர்கள்
  சில மணி நேரம் வாழும் பூக்கள்!
  கவிதை போல சிரித்துக் கொண்டே பூக்கின்றது
  வசந்த காலத்திற்கு வண்ணம் பூசும்
  வாசமிகு தேவதைகள் பூக்கள்!
  பூக்களுக்கும் மென்மையான இதயம் உண்டு
  தென்றலின் தீண்டல்
  தன்னை அழித்தவனையும் சுமக்கும்
  நாற்காலியாகவும் வாழ்கிறது மரம்
  பூக்காத பூக்களுக்காக மன்னிப்புக்
  கேட்பதில்லை மரங்கள்!
  உயிரை உற்பத்தி செய்யும் தொழில்சாலை மரம்
  எத்தனை யுகம் கடந்தாலும்
  அழியா வரம் பெற்ற
  இறைவனின் அற்புத படைப்பு மரம்
  மனிதர்களே! இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
  மரத்தை காப்போம்! மழையை பெறுவோம்!
  சுபத்ரா
  Jurong West Secondary School

 6. ஒரு மலர் செடிக்கு அழகு
  ஒரு கிலை இலைகளுக்கு வலிமை
  ஒரு மரம் நாட்டின் பசுமைக்கு அழகு
  அதேபோல,
  ஒருவரின் நடவடிக்கை அவரின் எண்ணத்தை வெளிபடுத்தும்
  ஒருவரின் எண்ணம் அவரின் குணத்தை காட்டுகிறது
  ஒருவரின் குணம் அவரின் மனப்பானமையை காட்டுகிறது
  krithi roshan
  Secondary 3
  UNITY SECONDARY SCHOOL

 7. இலை தழை,அழகானப் பூக்கள், மற்றும் நீட்ட கிளைகள் தான் அடிப்படையாக ஒரு பசுமையான மற்றும் இயற்கையான மரத்தை உருவாக்குகின்றன.
  மற்ற பாகங்களும் அழகாக தான் இருக்கும்.ஆனால்,கிளைகள்,பூக்கள்,மற்றும் இலைகள் போன்று அழகே இல்லை. இலைகளின் நிறமும்,வடிவமும்,பூக்களின் வாசமும்,அழகும்,மற்றும் கிளைகளின் கூர்மையும்,வளமும் என்னை ஈர்க்கும்.
  அழகை மட்டுமா பார்க்கிறோம்? இவைகளின் முக்கியத்துவத்தையும் பார்க்கவேண்டும்.இலைகள் நமக்கு சுவாசிக்கும் காற்றை தருகின்றன.பூக்கள் நமக்கு கனிகளை தருகின்றன.அதே போல,கிளைகள் பறவைகளுக்கு வீடாக அமைகின்றன.
  மரங்கள் முக்கியம்!அதை வெட்டி சாய்க்காதீர்கள்!உயிர் வாழ விடுங்கள், உயிரோடு இருங்கள்!
  அனீக்கா ரீமா
  1/5
  Greenridge Secondary School

 8. மரம் நம்மோடு பேசினால்…..
  உனை சுற்றியே இருக்கிறேன்
  உனை பேணி பாதுகாக்கவே
  உயிர் கொள்கிறேன் என்
  உடல் அனைத்தும் உனக்கே
  உரித்தாக்குகிறேன் பின் ஏனடா என்
  உயிர் பறிக்க துடிக்கிறாய்
  பாதக மனிதா …
  அழகாய் இருக்கிறேன் சுற்றுசூழலின்
  அரசனாய் உள்ளேன்
  அளவிலா உணவளிக்கிறேன்
  அன்பாய் உனை அழைத்து
  அடி மடியில் அனைத்து கொள்கிறேன்
  அன்னையாய் பின் ஏனடா இந்த
  அன்னையை அழிக்க அலைகிறாய்
  என் அன்பு பிள்ளையே …….
  நீ விடும் விஷச காற்றை
  நான் உறிஞ்சி என்
  உயிர் காற்றை
  உன் உயிரில் கலந்து
  உனை நொடி நொடி
  உயிர்ப்பிக்கிறேன் பின் ஏனடா என்
  உயிர் பறிக்க நினைக்கிறாய் மனிதா …….
  உனை காக்க எப்பொழுதும்
  நின்று கொண்டிருக்கும் எனை சாய்த்து
  நிலம் தேடி அலையும் மனிதா
  நிலத்துக்குள் புதைந்து போவாய்
  நிஜமாகவே நான் இல்லை
  என்றால் உணர்வாய் உண்மை இதை
  மனிதா நீ ……..
  உடைந்தாலும் உனக்கு
  உதவியாக உடைகிறேன்
  விழுந்தாலும் விதையாய்
  விழுந்து விருச்சமாய் வளர்ந்து
  விடுவேன் உன் நலனுக்காக
  நான் மனிதா ……..
  எனை அழிப்பதாக
  எண்ணி உனை நீயே
  அழித்துக்கொள்ளாதே அறிவிலியே இந்த
  அறிவியல் காலத்திலும் என் அருகே நீ
  இருந்தால் தான் உன் அருகில்
  நோய் இருக்காது மனிதா ……

  ந.ராகவி
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*