ஏன் பிடிக்கிறது?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஓய்வு நேரத்தில் பார்ப்பது நம் வழக்கம். நமது வசந்தம் தொலைக்காட்சி மட்டுமில்லாமல், தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள், உங்களுக்குப் பிடித்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் அதன் நிறை, குறைகளைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10 ஏப்ரல் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
பிப்ரவரி மாத வெற்றியாளர்களின் பட்டியல்

SriRam Clementi Town Secondary School
Rabic Mohamed Lufina Zohar St.Hildas Secondary School
Deenadayalan Amirthaa Jurong Secondary School

 

13 கருத்துரை

 1. நான்  விரும்பி  பார்க்கும்  நிகழ்ச்சி  ‘உதயம் ‘. இந்த  நிகழ்ச்சியின்  தொகுப்பாளர்  உதவி  தேவைப்படும் வீடுகளுக்கு சென்று அந்த  வீட்டை புதுப்பிக்க  உதவி  செய்கிறார்.
  அவர்  ஒரு  வீட்டுக்குச் சென்று முதலில் அந்த  வீட்டை  சுற்றி  பார்ப்பார் , அந்த வீட்டில் என்ன என்ன குறைபாடுகள் உள்ளன என்பதை கண்டறிவர். பின் , அவர் குழுவினருடன் சேர்ந்து அதற்குத்  தேவையான பொருட்களை வாங்கி வந்து வீட்டை  புதுப்பிப்பார் . அவ்விட்டின் உரிமையாளர்கள் வேறு  இடத்தில் தங்கவைப்பார்கள். வேலை  முடித்த  பிறகு   வீட்டின்  உரிமையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி  கொடுப்பார்கள். இதை  பார்க்கும்போத ‘ஏழை கணீரில் இன்பம் தெரியின் என்பதுபோல வசதியற்றவர்களுக்கு உதவி  செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
  HARIK
  YUHUA SECONDARY SCHOOL

 2. எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘அழகிய தீவே’தான்.
  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ‘வர்மன்’.அவர் அந்த நிகழ்ச்சியில், நிறைய தீவுகளுக்குச் சென்று அங்கு உள்ள இடங்களையும் சாப்பாடையும் பற்றி கூறுவார்.மற்றும் அவர் மிகவும் கலகலப்பாக பேசுவார்.அதனால் அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போதல்லாம் எனக்கு உற்சாகமாக இருக்கும் மற்றும் என் மனநிலை சந்தோசமாக இருக்கும்.
  இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் வெளியூருக்கு செல்லும் பொது அங்கு எவ்வாறு நடந்துகொள்ளவேன்டும் என்பதை அறிந்து கொண்டேன்.பல நாட்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் தெரிந்துகொண்டென் இதன் மூலம் நானும் வெளிநாட்டுக்கு செல்ல வெண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதை அடைய நான் விடாமுயற்சியுடன் படித்து முன்னேற வேண்டும் என்னும் தூண்டுதல் எனக்குள் தோன்றியுள்ளது.
  Harish
  Yuhua Secondary School

 3. எனக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சசி என்ன என்றால் குரு பார்வை என்ற நாடகம். அது வசந்தம் தொலைக்ககாட்சியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. நான் என் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு அந்நாடகத்தைப் பார்ப்பேன். அதன் வழி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்நாடகத்தில் ஒரு சில மாணவர்கள் செய்யும் தீய செயல்களைக் காட்டுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பார்க்கும் போது தவறு செய்யக் கூடாது என்ற எண்ணம் ஏற்படும். பள்ளியில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் வெளியில் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தெள்ள தெளிவாக இந்நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டுகிறார்கள். அதனால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. சொல்வதைக் காட்டிலும் பார்த்தால் தான் மாணவர்கள் மனதில் பதியும் எனவே இந்நாடகம் சிறந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் என்னை கவர்ந்த நிகழ்ச்சி ஆகும்.
  Dakshaini
  Yuhua Secondary School

 4. எனக்கு வார இறுதி என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் சனிக்கிழமை இரவு ஏழு மணி எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருப்பேன். ஏன்யென்றால் அப்போது தான், ரவி.ஜி தொகுப்பாளராக, ‘திரை டாக்கீஸ் ‘ வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரம்.இந்நிகழ்ச்சியில் சினிமா செய்திகளுக்கு பஞ்சமே இல்லை! நாம் கடினப்பட்டு சமூக வலைதளங்களில் சினிமா செய்திகளை தெரிந்து கொள்வதன் அவசியமே இல்லை. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த ‘திரை டாக்கீஸ்’ஐ பார்த்தால் போதும், தமிழ் மட்டுமில்லை, இந்திய சினிமாவை பற்றியே சுருக்கி சொல்வார், தொகுப்பாளர் ரவி.ஜி! நிகழ்ச்சி ஒரு மணி நேரமாக இருந்தாலும் , சலிப்பு ஏற்படாது. நான் இரு சினிமா ரசிகன் என்பதால் எனக்கு இது மிகவும் பிடிக்கும். ரவி.ஜியின் இயல்பான பேச்சு நான் கவரப்படுவேன்.
  யுவராஜ் மோகன்
  3E2/3HT1
  உமறுபுலவர் தமிழ்மொழி நிலையம்

 5. தமிழகத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தது ஞாயிறு தோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “சன் சிங்கர்” என்னும் நிகழ்ச்சியே.
  எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்க காரணம் பாகுபாடு இன்றி எல்லா குழந்தைகளின் பாடும் திறனை வெளிகொண்டு வருவதே ஆகும்.
  நிறைகள்:-
  சில குழந்தைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தும் சரியான வாய்ப்பு இல்லாததால் அவர்கள் வெளி உலகத்திற்கு தெரிவதில்லை.இந்த நிகழ்ச்சி இதற்கு வழிவகுத்து கொடுக்கிறது.இதன் நடுவர்கள் இசை துறையில் இருப்பதால் அவர்களில் சிலருக்கு பாட வாய்ப்பு கிடைக்கிறது.இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
  குறைகள்:-
  இதில் பங்குபெறும் அனைத்து குழந்தைகளுமே திறமைசாலிகள்.ஆனால் அனைவரும் வெற்றி பெறுவதில்லை.இறுதியில் வெற்றிக்கோப்பை ஒரு குழந்தைக்கே கிடைக்கிறது.
  “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
  மெய்வருத்தக் கூலி தரும்”
  என்னும் குறளுக்கு ஏற்ப முயற்சி செய்தால் அனைத்து குழந்தைகளும் வெற்றியாளர்களே
  விஷ்ணு 2B
  பொங்கோல் உயர்நிலை பள்ளி/Punggol Secondary School

 6. வசந்தம் தொலைக்காட்சியில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிறது. இவற்றில் வெற்றி, யார், ரகசியம், யாதுமாகி, என்று பல நாடகங்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இவற்றில் எனக்குப் பிடிந்த நிகழ்ச்சி ‘ வேட்டை’ நாடகம். இந்த நாடகம் காவலர்கள் பற்றியது.. இந்த நிகழ்ச்சியில் நிறைய சுவாரஸ்யமான பிரச்சனைகள், இவற்றை எப்படி தீர்க்கிறார்கள் என்பதைப் எனக்குப் பார்க்க பிடிக்கும்.
  இந்த நிகழ்ச்சி வாரம் நான்கு முறை ஓளிப்பரப்பாகிறது. திங்கள் முதல் வியாழன் வரை இரவு பத்து மணிக்கு ஓளிப்பரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி நிறைய துப்பறியும் விவரங்கள், புதிய புதிய குற்றங்கள் என இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் காவர்கள் பெரிய தப்புகள் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சொந்த கதைகளை வைத்திருக்கிறார்கள். அவர்களின் சொந்த வாழ்கை அவர்களின் வேலையைப் பாதிக்கிறது. இது இயல்பாக இல்லை. கடத்தல், கொலை, போதை மருந்து கடத்தல் மற்றும் பழிவாங்கும் வழக்குகள் என பல விதமான கதைகள் நாடகத்தில் இருக்கிறது. காவலர் குழுவில் ஒருவன் குற்றவாளி என திருப்பமும் இருக்கிறது. அடுத்து நான் ரசித்த கதை ஒருவன் முதலாளியை இருபது ஆண்டுகள் கழித்து பலிவாங்க முயன்றான். ஆனால் கதை எதுவாக இருந்தாலும் பார்ப்பதற்கு இருக்கிறது. அனைவரும் ஓன்றாக வேலை செய்வதும், ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயல்வதும் என ஒற்றுமையுடன் செயல்படுவது எப்படி என தெரிந்துக்கொள்ளலாம். சில பள்ளி நாட்களில் பார்க்கமுடியாமல் போனால் நான் தொலைபேசியின் வழியே நாடகத்தைப் பார்த்துவிடுவேன்.
  சாபியா
  பெங்கோல் உயர்நிலைப்பள்ளி

 7. ‘ரிங்’ என்ற எட்டு மணி ஒலித்ததும், அதைக்கேட்ட உடனே நான் தொலைக்காட்சியை நோக்கி ஓடினேன். அன்று வெள்ளிக்கிழமை எட்டு மணிக்கு எனக்கு பிடித்த நாடகம் ‘மை டியர் குடும்பம்’ தவறாமல் பார்ப்பேன். இந்த நிகழ்ச்சி ‘ காமிக்‌ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு.
  இந்த நாடகத்தில் ஒரு குடும்பம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கற்றுத்தருகிறது. மேலும் அவர்கள் எப்படி ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தங்களுடைய பிரச்சனைகளைச் சமாளிக்கிறார்கள் என்பதை கற்றுக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை நானும் என் தம்பியும் விரும்பு பார்ப்போம். என்னை மிகவும் கவர்ந்த காட்சி எல்லா குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு சச்சரவு இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவுவார்கள். இதை நான் பார்த்து ரசித்தேன். சிங்கப்பூரில் இந்த நாடகத்தை நிறைய பேர் விரும்பி பார்க்க காரணம் இந்த நாடகத்தின் கதையும் நகைச்சுவையும். மேலும் இந்த நாடகத்தில் இருந்து நாம் நிறைய நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ளலாம்.
  இந்த நாடகம் போன்று மற்ற இயக்குநர்களும் எடுத்தால் நிறைய பேர் இதைப் பார்த்து ரசிப்பார்கள். மேலும் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருப்பார்கள்.
  திவ்யாம்பிகை
  பெங்கோல் உயர்நிலை பள்ளி

 8. வசந்தம் தொலைக்காட்சியில் எனக்கு பிடித்த நிகழ்ச்சி எதிரொலியே ஆகும். எதிரொலி வாரத்தில் ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. அந்த நிகழ்ச்சி எனக்குப் பிடித்ததற்கு காரணம் ஒரு நாள் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கல்வியின் அவசியத்தைப் பற்றி அறிந்துகொண்டேன். அதிலிருந்து தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.
  கல்வி இருந்தால் தான் ஒருவர் முன்னேற முடியும். உயர்ந்த படிப்பு படித்தால்தான் நல்ல வேலையில் சேரமுடியும். ஆகையால் பாடத்தில் சிறந்து விளக்க முடியும், மேலும் பகுதி நேர வேலைச் செய்யும் போது பல துறையைச் சார்ந்த அறிவைப் பெறமுடியும் என்ற கருத்துக்களை அறிந்துகொண்டேன்.
  அடுத்த பாகத்தில் பாதுகாவலர்களைப் பற்றி கூறினார்கள். பாதுகாவலர்கள் இரவும் பகலும் வேலை செய்கிறார்கள். சிங்கப்பூரில் நிறைய மக்கள் பாதுகாவலர்களாக வேலை செய்வதற்கு விரும்புவதில்லை. இதனால் வெளியூர் மக்கள் வந்து பாதுகாவலராக பணிபுரிகிறார்கள் என்ற செய்தியும், அவர்கள் ஒரு நாளில் 12 மணி நேரமும் வாரத்தில் ஆறு நாள்களை வேலை செய்கிறார்கள் என்ற செய்தியும் அறிந்துக்கொண்டேன்.
  சிங்கப்பூரில் காவலர்கள் மிகவும் அவசியம். காவலர்கள் நம் நாட்டை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேலை செய்கிறார்கள். காவலர்கள் வேலை மிகவும் கடினமானது தான். அவர்கள் கணினியை 24 மணி நேரமும் பார்க்க வேண்டும். காவலர்கள் வெளியே நின்று கொண்டு இருக்கவேண்டும். ஒருவர் சாப்பிட போனால் மற்றவர் வந்து அவருடைய இடத்தைப் பார்த்துகொள்ளவேண்டும். இது போன்ற எனக்குத் தெரியாத விவரங்களை நான் தெரிந்துக்கொண்டேன். அதனால் இந்நிகழ்ச்சி எனக்கு பிடிக்கும். இதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பவற்றையும், நமது சமூகத்தையும் அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் எனது தமிழையும், பேச்சு திறனையும் நான் வளர்த்துக்கொண்டேன்.
  நித்தின் சாம்சன்
  பெங்கோல் உயர்நிலைப்பள்ளி

 9. நான் என் ஓய்வு நேரங்களில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். சில வேளைகளில் நான் வசந்தம் ஒளியலைவரிசையில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி “தாளம்” ஆகும்.
  இந்நிகழ்ச்சியில், இந்தியச் சமூகத்தில் நடைபெற்ற நடவடிக்கைகளைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைக்கப்படும். இந்நிகழ்ச்சி வாரத்தில் ஒரு முறை ஒளிபரப்பப்படும். இதன் மூலம் ஒருவர் பல தகவல்களை அறிய முடியும்.
  இதில் நன்மைகள் பல உண்டு. “தாளம்” நிகழ்ச்சியில் இரண்டு தொகுப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் ஆங்கிலத்திலும், மற்றொருவர் தமிழிலும் படைப்பார்கள். மேலும், இக்காலத்தில் நிறைய மாணவர்கள் தமிழைப் பேசத் தயங்குகிறார்கள். ஆங்கிலத்தில்தான் அதிக நேரம் பேசுகிறார்கள். அதனால், இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதன்மூலம் தமிழின் பயன்பாட்டை அறிவார்கள். மேலும், மாணவர்களிடம் தமிழ்ப்புழக்கம் அதிகரிக்ககும். அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்ச்சியில் தமிழ்மொழி மாதத்தில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களும் அளிக்கப்படும். இதன்மூலம், அந்நிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் ஆர்வம் ஏற்படும்.
  “தாளம்” நிகழ்ச்சி அரை மணி நேரமே ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்ச்சியில் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அதிக பயனுள்ள தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால், அத்தகவல்களை வேகமாகச் சொல்லிவிட்டு முடித்துவிடுகிறார்கள். அது மிகவும் கவலை அளிக்கிறது. இந்நிகழ்ச்சியின் நேரத்தை அதிகப்படுத்தி தகவல்களை விளக்கிக் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  சஹானா (Sahana)
  உயர்நிலை 4 விரைவுநிலை
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 10. நான் பெரும்பாலும் சண்டே கலாட்டா என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை ைவத்து அதில் நகைச்சுவையாக திரு மதுரை முத்து மற்றும் அவர் குழுவினர் நடிப்பார்கள். என் பள்ளிக் கட்டுரைகளில் அந்த நிகழ்ச்சியில் வரும் கதைகளைச் சில நேரம் இணைத்து எழுதியுள்ளேன். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி எனக்குப் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் சில குறைகளும் உள்ளன. அதாவது மிகவும் சுவாரசியமான கதைகள் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒளிப்பரப்பாகும். மற்ற கதைகள் வார நாட்களில் 10 மணிக்கு ஒளிபரப்பாகும். அதனால் என்னால் அவற்றை முழுமையாகப் பார்க்க முடியாது. அந்த நிகழ்ச்சியை 4 மணிக்கு மேல் ஒலிபரப்பு செய்தால் என்னைப் போன்றவர்கள் பார்த்துப் பயனடைய முடியும்.
  இராமு சந்தோஷ்
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 11. நான் விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இது ஒரு உண்மை (ரியாலிட்டி)நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் 100 நாட்களுக்கு ஒரு வீட்டில் இருப்பார்கள். அங்கு இருக்கும்போது அவர்கள் இணைய இணைப்போ, எந்த வித சமூக வலைதளங்களுக்கோ செல்ல முடியாது. அவர்களுக்கு அந்த வீட்டைத் தவிர வெளியில் என்ன நடக்கின்றது என்றே தெரிந்து கொள்ள முடியாது.
  அந்த வீட்டில் இருப்பவர்களுக்கிடையே நிறைய சண்டைகள் ஏற்படும். அந்தச் சண்டையில் அங்கு இருக்கும் நடிகர்களின் உண்மையான குணத்தை அறிந்து கொள்ள முடியும்.
  இதனால் நடிகர்களுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டது. அந்த வீட்டில் சுமார் 15 நடிகர்கள் இருந்தார்கள். யார் 100 நாட்களுக்கு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்றார்களோ அவர்களே அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்.
  அங்கு அவர்களுக்கு நிறைய கடினமான பணிகள் கொடுக்கப்படும். அந்தப் பணிகளை அவர்கள் முடிக்கவில்லையென்றால் அவர்கள் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இந்த நிகழ்ச்சி நிறைய மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தரக்கூடியதாக இருந்தது.
  சுபஸ்ரீ
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 12. தொலைக்காட்சியில் நான் விநாயகர் என்னும் புராண நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த நிகழ்ச்சி விநாயகரின் கதையை விளக்கமாகக் கூறும். அதில் வரும் தந்திரக் காட்சிகள் பார்ப்பதற்கு உண்மையாக நிகழ்வது போன்ற தோற்றத்தைத் தரும். காதாபாத்திரங்கள் பேசும் தமிழைக் கேட்டு என் தமிழ் மொழித் திறனை வளர்த்துக் கொண்டேன்.
  ஆனால் அந்த நிகழ்ச்சியில் வரும் இடைவேளை மிக அதிக நேரம் நீடிக்கின்றது. விளம்பரங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் நிகழ்ச்சி மிகக் குறுகிய நேரமே ஒளிபரப்பப்படுகின்றது. சாதாரணமாக ஆறு மாதத்தில் முடிய வேண்டிய நிகழ்ச்சி அதிகமான விளம்பர இடைவேளையால் ஒரு ஆண்டுக்கு மேல் இழுக்கின்றது. இதனாலேயே பார்க்கும் ஆர்வர் குறைகின்றது. இதுவே இந்த நிகழ்ச்சியில் உள்ள முக்கிய குறைபாடாகும்.
  குமரகுரு
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 13. எனக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் ஒவ்வொரு நாளும், தவறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். சில நேரங்களில் நான்பள்ளி முடிந்து தாமதமாக வருவேன். அதனால் நான் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்துவிடும். இருந்தாலும் நான் என் தொலைப்பேசி மூலம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலைபார்ப்பேன். தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு எட்டு மணிக்கு வரும் செய்தியைப் பார்க்க மிகவும் பிடிக்கும். வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, செய்தியை மட்டும் மறக்காமல் பார்த்துவிடுவேன். என் பெற்றோர்கள் மற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் சரியாக எட்டு மணிக்கு மாற்றிவிடுவேன். செய்திகளைப் பார்ப்பது மிகுவம் அவசியம் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் நாம் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். செய்தி வாசிப்பவர்களின் உச்சரிப்பின் வழியாக நாம் நம் வாய்மொழித்தேர்வுக்கான பயிற்சியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  ஹரிஸ்ரீ
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*