எல்லைகள் கடந்த அன்பு

அன்புதான் இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அற்புதம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் வரிகளைக் கவிதையாக எழுதுங்கள். அந்தக் கவிதைகளை இங்கே பகிருங்கள்!
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 19 ஆகஸ்ட்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

24 கருத்துரை

 1. அன்பிற்கு ஜாதியும் இல்லை,பேதமும் இல்லை.
  நாம் இருவரும் அன்போடு இருப்போம்.
  இவ்வுலகில் நம்மை தடுப்பவர் யாரும் இல்லை.
  உன்னை கொஞ்சம் போது தான் தெரிகிறது,
  சொர்க்கத்திற்கு இப்படியும் ஒரு வழி உண்டு என்று.
  மனிதர்களை நம்பாத இவ்வுலகில்
  உன்னை தான் நம்பி என் அன்பை கொட்டுகிறேன்.
  அன்பு காட்ட மொழிகள் எதற்கு?
  பார்வை ஒன்றே போதும்.
  ஜீவன் உள்ளவரை அன்பு வாழும்.

  நிவேதிதா
  ஜூரோங் உயர்நிலை பள்ளி

 2. எல்லைகள் கடந்த அன்பு
  அன்பு என்பது ஒரு நற்பண்பு!
  நற்பண்பு என்பது ஒரு நல்ல குணம்!
  நல்ல குணம் இருந்தால் நாம் அடைய மாட்டோம் சினம்!
  சினம் இருந்தால் நாம் அடைய மாட்டோம் வெற்றி!
  அதனால் அன்போடு இருங்கள்!
  அடைய முடியாததை அடையுங்கள்!
  அன்பால் இந்த உலகத்தையே வில்லாக வளைக்கலாம்!
  அன்பே கடவுள்! அன்புடைய மனமே இறைவன் இருக்கும் இடம்!
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 3. மழலை வயதிலும் மலரும் அன்பு….
  கூரை இல்லா வீட்டிலும் வளரும் அன்பு…
  பேச முடியாத பிராணியும் பேசும் மொழி அன்பு…
  காசு பணம் கேட்காத அன்பு…
  கனிவான பார்வை மட்டும் போதும் அன்பு…
  அன்பே உலகு… உலகே அன்பு…
  நீரின்றி அமையாது உலகு- வள்ளுவம்
  அன்பின்றியும் இயங்காது உலகு!
  susmitha 2E2
  yuan ching secondary school

 4. என் முதல் அழுகை கேட்ட அன்று
  என் தாயாரின் மூச்சு நின்றது
  உனக்கும் பிறந்தது கன்று
  இருவரும் வளர்ந்தோம் சேர்ந்து
  வாலை ஆட்டிக்கொண்டு
  காலை எழுந்து
  எனக்கும் பாலை கொடுத்தாயே
  என்னை பெறாத தாயே
  ரத்தமோ, நமக்கு ஒன்றல்ல, ஆனால் நீ
  சத்தமோ போட்டு கூப்பிட்டால், நான்
  முத்தமோ கொடுத்து பொழிவேன், ஏன் என்றால், நம்
  பந்தமோ மிக வலுவானது
  ஆனால்,
  நம்மிடையே இருந்த உறவு
  உடைந்து போனது அன்றிரவு
  திடீரென்று சாய்ந்து விழுந்தாயே
  கடைசி மூச்சை இழுத்தாயே
  மீண்டும் உலகத்தை விட்டு மறைந்தாயே
  என் இன்னொரு தாயே
  அஜ்மினா பானு
  சிராங்கூன் தொடக்கக கல்லூரி

 5. எல்லைகள் கடந்த அன்பு
  உயிரும் மெய்யும் தந்த
  என் அம்மாவின் அன்பு
  என் ஆயுதம்!!!!!!
  என் அன்பு எனும் ஆயுதம் ஏந்தி
  எதிர்காலம் நோக்கி பயணிக்க
  ஊக்கம் தரும் அன்பு
  என் ஆசை அப்பாவின் அன்பு!!!!!
  அறிவை போதிக்கும் ஆசிரியரின் அன்பு
  தன்னம்பிக்கை ஊட்டி தளர்வை நீக்கும்
  பரிசுத்தமான அன்பு!!!!!
  என் உடன்பிறந்தோரின் அன்பு
  என்னை துவளாமல் தூக்கி நிறுத்தி
  தோள் கொடுக்கும் அன்பு!!!!!
  எனதுயிர் அன்பு நண்பர்களின் அன்பு
  நம்பிக்கை வளர்க்கும் எதிர்பார்ப்பற்ற
  ஏணியாக ஏற்றம் தரும் அன்பு!!!!!
  என் செல்லப்பிராணியின் அன்பு
  நன்றிக்கு உதாரணமான அன்பு!!!!!
  அன்பில் பலவகை அனைத்தின்
  பொருளும் ஒன்றே!!!!!! ஆதலால்
  அன்பு செய்வீர் அதன் வழி
  இன்பம் காண்பீர்!!!!!!
  அன்பு! அன்பு! அன்பு!
  பா.மித்ரா 1E1
  யூனிட்டி  உயர்நிலை பள்ளி.

 6. நாம் இருவரும்
  ஒரே இனமில்லை
  நாம் இருவரும்
  ஒரே நிறமில்லை
  ஆனால்
  அன்பு நம்மை
  ஒன்றாய் சேர்த்துவிட்டது
  மொஹமட் ஹஃபீஸ்
  கான் எங் செங் பள்ளி

 7. காலையில் காளையை
  முட்டுகிறான் சிறுவன்
  அன்பிருந்தால்…
  ஆகாததும் ஆகும்!

  தேவராஜ்
  கான் எங் செங் பள்ளி

 8. நீயும் நானும்
  வேறு உருவம்
  நீயும் நானும்
  வேறு வயது
  நீயும் நானும்
  வேறு உயிரினம்
  எனினும்
  நீயும் நானும்
  சேர்ந்தே வாழ்வோம்
  அஸ்வின் கமல்
  கான் எங் செங் பள்ளி

 9. அன்பு காட்டலாம்
  ஆனால் வாங்க முடியாது
  எதிரியிடம் அன்பு
  காட்டுங்கள்
  அவன்
  நண்பனாக மாறி விடுவான்
  அன்பு காட்டினால்
  எதையும் சாதிக்கலாம்
  செளமியா
  கான் எங் செங் பள்ளி

 10. அன்பை பணத்தால்
  வாங்க முடியாது
  துன்பத்தை
  வேண்டாமென்றாலும்
  தடுக்க முடியாது
  அன்புடன்
  கோபப்படுவதும்
  அன்புதான்.
  கண்ணீரைத் துடைப்பதும்
  அன்புதான்.
  நஸ் ரீன்
  கான் எங் செங் பள்ளி

 11. குழந்தை நீ யாரோ?
  பாசத்தின் பாலைப் பொழிந்தாயோ?
  என் கொம்பின் பலத்தை அடக்கினாயோ?
  உன் பச்சை மனத்தில் நான் மயங்கி நின்றேனோ?
  துர்காஷினி
  கான் எங் செங் பள்ளி

 12. அன்பு காட்டும் சிறுவனே
  மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் போனார்களே..
  என்னைப் பார்த்து பயந்தார்களே
  என்னை ஒதுங்கிச் சென்றார்களே
  சின்னக் கைகளால் கட்டிப் பிடித்தாயே
  என் மனதைத் தொட்டாயே
  ஒன்னும் செய்ய முடியாமலே
  என் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருக்கிறாயே
  அன்பு காட்டும் சிறுவனே
  நானும் உன்னிடம் அன்பு காட்டுகிறேனே
  ஷாலினி
  கான் எங் செங் பள்ளி

 13. மாட்டுக்குப் பாசத்தைப் பொழிவது
  வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருகிறது
  நம் மனத்தில் அளவில்லா
  மகிழ்ச்சி தோன்றுகிறது
  அன்பிருந்தால்
  வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும்
  ஆஷா
  கான் எங் செங் பள்ளி

 14. குழந்தையின் அன்புக்கு காளையும் அடிமை
  பணத்தைக் கொடுத்து காளையை வாங்கலாம்
  ஆனால் அன்பால்தான் அதை அரவணைக்க முடியும்
  அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்
  சீதா
  கான் எங் செங் பள்ளி

 15. முட்டி மோதி
  ஆத்திரமாக இருந்த மாட்டை
  அச்சிறுவன்
  பாசத்தால் அரவணைத்தான்
  விஷ்ணு
  கான் எங் செங் பள்ளி

 16. அன்பை பாசத்தால் வாங்க முடியாது
  மிருகங்களைப் பாசமாகப் பார்க்க வேண்டும்
  மிருகங்களைப் பொறுமையாகப்
  பார்க்க வேண்டும்
  மிருகங்களைக் கொடுமைப்படுத்தாமல்
  இருக்க வேண்டும்
  கெளசர்
  கான் எங் செங் பள்ளி

 17. கொம்புகள் வைத்திருக்கும்
  பால் கொடுக்கும்
  தாயைவிட அளவிடமுடியா அன்பு
  காந்தியைவிடப் பொறுமை
  இதைக் கண்டால் வரும்
  ஆனந்தக் கண்ணீர்
  வீவிட்டா
  கான் எங் செங் பள்ளி

 18. எல்லையில்லாத அன்பு
  தாயின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு
  அளவில்லாத அன்பு
  நமக்கு பாலைக் கொடுக்கும் பசுவின் அன்பு
  யூஸ்ஃப்பானா ஆயிஷா
  கான் எங் செங் பள்ளி

 19. தர்மம் தலை காக்கும்
  தக்க சமயத்தில் உயிர் காக்கும்
  அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
  நிதானம் கோபத்தைக் காக்கும்
  அத்தருணத்தில் பாசமும் காக்கும்
  கோபம் கொண்டால்
  நிம்மதி ஒழிந்துபோய்விடும்
  நுஸ்ரத் சுல்தானா
  கான் எங் செங் பள்ளி

 20. குழந்தையின் அன்பு சிறப்பு
  அதோடு வரும் புன்னகை அழகு
  முரடனையும் தணிக்கும் அன்பு
  மொழியின்றி வளர்க்கும் உறவிது
  பார்த்தாலே மகிழ்ச்சி ஏற்படுத்தும் உணர்வு
  அதுவே ஒரு குழந்தையின் கருணை
  ஷனாஸ் ஃபர்வீன்
  கான் எங் செங் பள்ளி

 21. நான் யாரு? நீ யாரு?
  நாம் இருவரும் சேர்ந்தால் யாரு?
  நண்பர்கள் இல்லை என்று
  சொல்வதற்கு அவர்கள் யாரு?
  நம்முடைய நட்பு சரியில்லை என்பவர் யாரு?
  அல்மீரா
  கான் எங் செங் பள்ளி

 22. நான் அக் காளையைப் பார்த்தேன்
  மனதில் உள்ள பாரத்தை
  இறக்க நினைத்தேன்
  தலையை அதன் மீது சாய்த்தேன்
  அது என்னை அணைத்தது
  எங்கும் அமைதி நிலவியது
  பிரியா
  கான் எங் செங் பள்ளி

 23. காலையில் காளையின் தலையை
  முட்டுகிறான் சிறுவன்
  சுவரில் உட்கார்ந்து
  பார்பது குரங்கு
  கொம்புகளை வைத்துப்
  பாசத்திற்கு ஏங்குவது மாடு
  பக்கத்தில் இருக்கும் இடம் காடு!
  கஜோல்
  கான் எங் செங் பள்ளி

 24. எல்லைகள் கடந்த அன்பு
  அன்பிற்கு ஜாதிகள் இல்லை, மதங்கள் இல்லை, மொழிகள் இல்லை !
  முகம் பார்த்து பழகுவது தான் சாதாரண நட்பு !
  அகம் பார்த்து பழகுவது உண்மையான நட்பு !
  முகம், அகம் இரண்டையும் பார்க்காமல் பழகுவதுதான் அன்பு !
  ஆம், இன்று வரைக்கும் முகத்தைக் கூட பார்க்காமல் பிஞ்சு விரல்களைத் தொடாமல் அன்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறேன்,
  வெளிநாட்டில் இருக்கும் என் அக்கா மகளிடம் !
  ஒரே இன விலங்குகளிடம் கூட இருக்கிறது அன்பு
  ஓர் இன விலங்கும் மற்ற இன விலங்குகளிடம் காட்டுகிறது அன்பு !
  மனித இனமாகிய நாம் அனைவரிடமும் எல்லைகடந்த அன்பு காட்டுவோம்
  எல்லையில்லா மகிழ்ச்சி அடைவோம்!
  முருகன் சிநேகா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*