எம்.ஆர்.டி பயணத்தில் நடந்த கதை

நீங்கள் எம்.ஆர்,டி ரயிலில் பயணம் செய்கிறீர்கள். உங்கள் எதிரே இரு நபர்கள் சந்தேகப்படும் வகையில் பதட்டதோடு அமர்ந்திருக்கிறார்கள். ஒருவர் நாகரிக ஆடையணிந்து நவநாகரிகத் தோற்றமுடையவர். இன்னொருவர் ஒரு வெளிநாட்டு ஊழியர்போல் தோற்றமளிக்கிறார். இருவர் காலின் கீழும் கறுப்பு நிறத்தில் ஒரே மாதிரி தோற்றமளிக்கக்கூடிய பெட்டிகள் இருக்கின்றன. அதற்குப்பின் என்ன நடக்கிறது என்பதை உங்கள் கற்பனைத்திறனைப் பயன்படுத்திக் கதையாக எழுதுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 25 அக்டோபர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஆகஸ்ட் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்

5 கருத்துரை

 1. அவர்களை பார்க்க பார்க்க எனக்கு சந்தேகம் கூடிக் கொண்டே இருந்தது அச்சமயத்தில், திடீரென்று “படார்!” என்ற சத்தம் கேட்டது. நானும் திரும்பி பார்த்தேன், அப்போது ஓர் ஆடவர் அவரின் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே கிடந்தார். அதை பார்த்த எல்லாரும் வாயடைந்து நின்றார்கள். யாவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் கவனித்து கொண்டிருந்த அந்த இரண்டு ஆடவர்கள் ஓடி வந்தார்கள். அதை பார்த்த நான் அவர்கள் எதாவது தவறு செய்ய போகிறார்கள் என்று நினைத்து அவர்களை நான் பலமாக கீழே தள்ளினேன். அவர்கள் உடனடியாக எழுந்து அங்கு மயங்கி கிடக்கும் ஆடாவரிடம் சென்றார்கள். நானும் அவர் பின் சென்றேன். நான் அவர்களை சந்தேகத்துடன் பார்பதே கண்ட அவர்கள், அவர்களின் மருத்துவ ஆதார அட்டையே என்னிடம் காட்டினார்கள். அப்போதுத்தான் அவர்கள் மருத்துவர்கள் என்று எனக்கு தெரிய வந்தது, எனக்கு மிகவும் அவமானம் ஆனது. உடனே அவர்களின் கருப்பு பெட்டியிலிருந்து மருத்துவ பொருட்களை எடுத்து அந்த ஆடவரை காப்பாற்றினார்கள். எனக்கு மிகவும் அவமானம் ஆனது. நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்.

  Raisha Thahsin
  Greenridge Secondary School

 2. இரயில் வண்டியில் ஏற்பட்ட வாய்ச் சண்டை
  நான் பள்ளியிலிருந்து பெருவிரைவு இரயில் வண்டியில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். இரயில் சிராங்கூன் இரயில் நிலையத்தில் நின்றது. அப்பொழுது ஒரு சிறு வயது பையன் முதியோர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு கருப்புப் பெட்டியுடன் அமர்ந்துகொண்டு இருந்தான். அவனோடு அவன் வயதையொத்த நண்பனும் ஒரு பெட்டியுடன் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரும் மரியாதை தெரிந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போல் காணப்பட்டனர். ஆனால், அவர்களின் நடத்தைதான் மிகவும் கேவலமாக இருந்தது. அதாவது, அந்தச் சிறுவர்கள் இருவரும் கேலியாகப் பேசிக்கொண்டும் கைத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டும் இருப்பதைக் கண்டேன். அந்தப் பையனுக்கு அருகில் ஒரு மூதாட்டி மிகவும் சோர்வுடன் களைத்துப்போய் நின்றுகொண்டிருந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் அந்த மூதாட்டிக்கு இடம் கொடுக்காமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் களைப்புடன் இருப்பதையும் பொருட்படுத்தவில்லை. அப்போது ஒரு நடுத்தர வயது பருவத்தில் இருக்கும் ஓர் ஆண் அந்தப் பையன்களிடம் மிகவும் அக்கறையுடன் அந்த மூதாட்டிக்கு அவர்களுடைய இடத்தை விட்டுக்கொடுக்க சொன்னார். ஆனால், அந்தப் பையன்களில் ஒருவன் தரமுடியாது என்று கூறினான். அதனால், அங்கு ஒரு வாய்ச் சண்டை தொடங்கியது. நான் இரு சிறுவர்களையும் நடுத்தர வயதினரையும் சமாதானப்படுத்தினேன். மேலும், அந்தச் சிறுவர்களிடம் நீங்கள் செய்வது தவறு என்பதைச் சுட்டிக் காட்டினேன். அவர்கள் இருவரும் தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டனர். மேலும், தங்கள் இடத்தை அந்த மூதாட்டிக்கு விட்டுக்கொடுத்தனர்.
  அருண் திரு ஆறுமுகம்
  உயர்தமிழ் இரண்டு
  செயிண்ட் ஹேஃபிரியல் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 3. இரயில் பெட்டியில் பூனைக்குட்டி
  ஒருநாள் நான் எப்போதும்போல் இரயிலில் ஏறி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது எனக்குக் களைப்பு ஏற்பட்டதால், இரயிலில் சோர்வாக அமர்ந்திருந்தேன். எனக்கு முன் நேராக இருந்த இருக்கையில் கருப்பு உடை அணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் இருக்கைக்குக் கீழ் ஒரு கருப்புப் பெட்டி ஒன்று இருந்து. அவர் என்னையும் மற்றவர்களையும் திரும்பத் திரும்ப பார்த்தார். அவருடைய பார்வை எல்லோரையும் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. நானும் அந்தக் களைப்பிலும் அவ்வப்போது அந்த ஆடவரையும் அவர் இருக்கைக்குக் கீழே உள்ள கருப்புப் பெட்டியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில நிறுத்தங்களுக்குப் பிறகு அவர் எழுந்து இரயிலைவிட்டு இறங்கப் போனார். ஆனால், அவர் அந்தக் கருப்புப் பெட்டியை எடுக்கவில்லை. நான் உடனே அந்தப் பெட்டியை எடுத்து அவர் வெளியேறுவதற்கு முன்பு அவரிடம் நீட்டினேன். ஆனால், என்ன ஆச்சரியம் அவர் ‘இந்தப் பெட்டி என்னுடையது இல்லை’ என்று கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறினார். குழப்பமாக இருந்த நான் அந்தப் பெட்டியைத் திறக்க முயன்றேன். அப்போது அந்தப் பெட்டியிலிருந்து சத்தம் வந்தது. நான் அதிர்ச்சியில் சிலையாய் நின்றேன். என் மனம் ‘படக் படக்’ என்று தாளம் போட்டது. என்னுடன் இருந்த மற்ற பயணிகளோ திறக்காதே இரயில் ஊழியர்களிடம் சொல்லிவிடலாம் என்று தடுத்தார்கள். இருப்பினும், கைகள் நடுங்க நான் அந்தப் பெட்டியைத் திறந்தேன். அந்தப் பெட்டியில் நான்கு பூனைக் குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டு வெளியேற முயற்சித்தன.
  மஸ்வின் சுமையா
  உயர்தமிழ் இரண்டு
  சி ஹெச் ஐ ஜே காத்தோங் கான்வெண்ட் (UPTLC)

 4. தொலைபேசித் திருடன்
  அன்று திங்கட்கிழமை. நான் மிகவும் சோர்வாக நடந்தேன். வாரத்தின் முதல்நாள் காலை நேரம் என்பதால், எல்லாப் பேருந்துகளிலும் மிகவும் கூட்டமாக இருந்தது. நான் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள விரைவு போக்குவரத்து நிலையத்திற்குச் சென்று இரயில் வண்டியில் முண்டியடித்து ஏறினேன். அங்கு உட்காருவதற்கு இடமில்லை. என்னைப் போலப் பள்ளிக்குச் செல்லும் நிறைய மாணவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இன்று காலையிலேயே இப்படி ஒரு தண்டனையா? எனப் பெருமூச்சு விட்டுவிட்டு நான் இரயில் வண்டியின் கதவு எப்போது திறக்கும் என்று வைத்த கண் வைத்தபடிப் பார்த்தேன். அங்கு நகைப்பூட்டும் முகமூடி போல் ஒன்றை அணிந்துகொண்டு ஒருவர் ஏறினார். அவர் பின்னாலேயே மற்றொரு ஆடவரும் ஏறினார். இரண்டு பேர் கைகளிலும் ஒவ்வொரு பெட்டி இருந்தது. நான் அவர்களை ஏதோ குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் ‘மேஸிக் ஷோ’ மனிதர்கள் என்று எண்ணினேன். ஆனால், அவர்களுள் ஒருவர் அங்கிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து ஒரு தொலைபேசியை எடுத்துக்கொண்டு அப்பாவி போல நின்றுகொண்டிருந்தார். நான் இதனைக் கவனித்துக்கொன்டிருந்தேன். உடனே, நான் என் தொலைபேசியின் வழி காவலைரைத் தொடர்பு கொண்டு பேசினேன். சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள நிலையத்தில் இரயில் வண்டி நின்றது. அப்போது கவலர்கள் இரயில் வண்டிக்குள் விரைந்து வந்து அந்தத் திருடர்களைக் கைது செய்தார்கள். நான் துணிச்சலான செயல் செய்தாலும் அன்று பயந்துகொண்டே பள்ளிக்குச் சென்றேன்.
  ஜன்னத்துல்
  உயர்தமிழ் இரண்டு
  சி ஹெச் ஐ ஜே காத்தோங் கான்வெண்ட் (UPTLC)

 5. ‘உருவத்தை வைத்துப் பலி சொல்லாதே’
  ‘யார் நீ, இந்தப் பையில் என்ன வைத்திருக்கிறாய்’ என்று பாலா இரயிலில் இருந்த ஓர் ஆடவரைக் கேட்டான். அதற்கு அந்த ஆடவர் ‘திரு திரு’ என்று விழித்துக்கொண்டு அங்கும் இங்கும் பார்த்தார். இதனால், இரயிலில் இருந்த எல்லாரும் அவரைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள். அவர் கையில் வைத்திருந்த கருப்புப் பெட்டியும் வித்தியாசமாக இருந்தது. அப்பெட்டியைப் பார்த்ததும் அதற்கு உள்ளே வெடிகுண்டோ வேறு ஏதவது சமூக விரோத பொருள்களோ இருப்பது போல் பாலாவுக்குத் தோன்றியது. கண் சிமிட்டும் நேரத்தில் அவன் இரயிலை நிறுத்துமாறு கத்தினான். இரயிலில் இருந்த எல்லாரும் பதறினார்கள். பாலா உடனே தன் தொலைபேசியின் மூலம் காவலர்களை அழைத்தான். காவலர்கள் வந்ததும் பாலா நடந்ததைக் கூறினான். உடனே காவலர்கள் அந்த ஆடவரிடம் இருந்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தார்கள். ஆனால், இவர்கள் சந்தேகப்பட்டது போல் அந்தப் பெட்டியில் ஒன்றுமில்லை. இதனால் மனமுடைந்த அந்த ஆடவர் சட்டென இரயிலில் இருந்து குதித்து இறந்து போனான். அங்கிருந்த அனைவருக்கும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவர்களுக்குள் சிறிது நேரம் என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், என் மனம் மட்டும் என்னால் தான் இந்தச் சம்பவம் நடந்தது என்று என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்தச் சம்பவத்தின் மூலம் யாரையும் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டேன்.
  ஸ்ரீதர் ஸ்ரீமன்
  உயர்தமிழ் இரண்டு
  செங்காங் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

Your email address will not be published.


*