என் வீட்டுப் பக்கத்தில் …

நம் வீட்டைச் சுற்றி பல இடங்கள் இருந்தாலும் நமக்கு ஏதாவது ஓர் இடம் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணங்களும் இருக்கும். அந்த இடத்தின் அழகையும் அந்த இடம் ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கி ஒரு கட்டுரை எழுதுங்கள். புளோக்கின் தாழ்வாரம், உணவகங்கள், கடைகள், விளையாடுமிடம், வழிபாட்டுத் தளங்கள், பேருந்து நிலையம் என, அது எந்த இடமாகவும் இருக்கலாம்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 22 நவம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
செப்டம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

3 கருத்துரை

 1. என் வீட்டிற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானம் எனர மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. நான் எனது சிறு வயதில் விளையாட்டு மைதானத்திற்கு ஒவ்வோரு வாரமும் தவறவிடாமல் சென்றுவிடுவேன். நானும் என் நண்பர்களும் அந்த விளையாட்டு மைதானத்தில் சந்தித்து முழு மகிழ்ச்சியுடன் விளையாடுவேன். அந்த இனிய நிகழ்வுகளை மறக்கத்தான் முடியுமா? சில முறை நான், , என் நன்பர்கள், நமது அன்னைகள் எல்லோரும் ஒன்று சேர்த்து நமது பொழுதை மகிழ்ச்சியாக கழிப்போம். நமது தாயார்களும் வீட்டில் சமைத்த உணவுகளை அங்கே கொண்டுவருவார்கள். எல்லோரும் உட்கார்ந்து உணவை ருசிப்போம். அந்த நாளே குதூகலமாக திகழும். நாம் அனைவரும் சேர்ந்து “செந்தோசா”, “ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா” போன்ற இடங்களுக்கும் சென்று மகிழ்வோம்.
  இப்போதெல்லாம் எனக்கு அதே நாளில் துணைப்பாட வகுப்பு இருப்பதால் என்னால் அங்கே செல்ல முடிவதில்லை. ஆனால் அந்த விளையாட்டு மைதானத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் எனது இதயத்தில் பசுமரத்தாணியைப் போல இன்னும் பதிந்திருக்கிறது. நான் அதை எவ்வேளையிலும் மறக்கவேமாட்டேன். நேரத்தை பின்னோக்கி அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்…
  யாஷிகா ராதாகிருஷ்ணன்
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 2. எனக்கு பிடித்த இடம் புக்கிட் பாத்தோக் பூங்கா ஆகும் .நான் சிறு வயதில் இருந்தே அங்கே சென்று விளையாடுவேன். சிறுவர்கள் வளையாட ஏற்றஇறக்கம், சறுக்கு விளைளையாட்டு போன்றவை உள்ளன. அதற்கு அருகில் பூப்பந்து திடல் இருக்கிறது. எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் உற்சாகத்துடன் விளையாடுவோம்.தினமும்.காலையில் நானும் என் அப்பாவும திடலைச் சுற்றி மெதுவோட்டம் ஓடுவோம். உடற்பயிற்சி செய்வதற்கு புதிதாக நிறைய சாதனங்கள் அமைத்துள்ளார்கள். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வேன். மிதிவண்டி ஓட்டுவதற்கு பாதை அமைத்துள்ளார்கள். என் நண்பர்களுடன் நான் மிதிவண்டி ஓட்டுவேன். பள்ளி விடுமுறை நாட்களில் நானும் என் நண்பர்களும் பூங்காவிற்குச் சென்று பல விளையாட்டுகள் விளையாடுவோம். முதியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்க்கு அவர்களுக்கு ஏற்ற சாதனங்களும் திடலில் அமைத்துள்ளார்கள்..சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் புக்கிட் பாத்தோக் பூங்கா மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
  ஆத்திப்
  புக்கித் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 3. செங்காங் மிதக்கும் நிலப்பகுதி
  எனக்குப் பிடித்த இடம் எதுவென்றால் என் குடியிருப்புப் பேட்டைக்கு அருகில் உள்ள செங்காங் மிதக்கும் நிலப்பகுதி. அங்கு அழகான மற்றும் சுத்தமான நீர் திறந்தவெளி உள்ளது. அதில் நீர் மட்டுமே இயல்பான தன்மை கொண்டது.
  பொங்கோல் மற்றும் செங்காங் பகுதியில் வசிக்கும் மக்கள் சிங்கப்பூரில் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட மிதமான நிலப்பரப்பை அனுபவிக்க முடியும். மக்கள் பயன்பாட்டு குழு இச்செயலை, அழகாக நீர் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது, செங்காங் நீர்த்தேக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நிலப்பகுதி கிட்டத்தட்ட அரை கால்பந்து மைதானத்தின் அளவு ஆகும், இது தற்போது பிரதம மந்திரி திரு லீ ஹெசியன் லோங் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.இந்நிகழ்வு தேசிய நீர்ப்பாசன நிறுவனமான மக்கள் பயன்பாட்டு குழு மற்றும் செங்காங் மேற்கு அடித்தளங்கள் ஏற்பாடு செய்திருந்தது.
  செங்காங் மிதக்கும் நிலப்பகுதியில் வெறும் அழகியல் விட அதிகமாக உள்ளது, நிலப்பரப்புகளை அழகுபடுத்துதல் மற்றும் ஓய்வு நேரங்களுக்கு புதிய இடைவெளிகளை உருவாக்கும் போது. நீர்த்தேக்கத்தின் முக்கிய செயல்பாடு நீர்த்தேக்கத்தில் நீரை சுத்தப்படுத்துவதாகும். இது உயிர் வேதியியல் மிகவும் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒரு வெற்றிகரமான சமூகத்தை ஆதரிக்கிறது.வரவிருக்கும் காலப்பகுதியில் செங்காங் மிதக்கும் நிலப்பரப்பில் உள்ள பறவைகள் மற்றும் பிற வனப்பகுதிகளை இனம் காணமுடியாது.
  ஸ்ரீமன் ஸ்ரீதர்
  உயர்நிலை இரண்டு உயர்தமிழ்
  செங்காங் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

Your email address will not be published.


*