என்ன செய்தோம்? என்ன கற்றோம்?

ஒரு நீண்ட விடுறையில் நாம் பல்வேறு பயனுள்ள செயல்களில் ஈடுபட்டிருப்போம். சிலர் வீட்டை சுத்தம் செய்வதில் உதவி இருப்பீர்கள், சிலர் இசைக்கருவி வாசித்தல் போன்ற புதிய திறன்களைக் கற்கத் தொடங்கி இருப்பீர்கள், இன்னும் சிலர் புதிய இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள் – இப்படி, சென்ற விடுமுறை காலத்தில் நீங்கள் செய்த பயனுள்ள செயல்களைப் பற்றிய கட்டுரையை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மார்ச் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

4 கருத்துரை

 1. சென்ற ஆண்டு டிசம்பர் விடுமுறையில் பெற்றோர் இந்தியாவிற்கு அவசர பயணம் சென்றபோது பள்ளி நடவடிக்கை காரணமாக என்னால் செல்ல இயலவில்லை.அப்போது எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் தங்க சேர்ந்தது.அப்போது தான் என்னால் என் தாயின் பரிவை,என் தந்தையின் அன்பை மற்றும் என் தம்பின் பாசத்தை உணர முடிந்தது.என் உறவினர்கள்,அன்பாக என்னை கவனித்து கொண்டாலும் என் விடைதான் எனக்கு சொர்க்கத்தைவட உயர்வானது என்று உணர்ந்தேன்.இருக்கும் இடமே சொர்க்கம் என்பதையும் நமக்கு கிடைத்து இருப்பதன் பொருளையும் நன்கு உணர எனக்கு கிடைத்ததோர் வாய்ப்பாக அதை ஏற்று தெளிந்தேன்.

  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 2. என் விடுமுறையை எப்படி கழித்தேன்?
  என் பள்ளி விடுமுறையில் என் குடும்பத்துடன் நிறைய இடங்களுக்குச் சென்றேன். முதலில் நான் செந்தோசாவில் இருக்கும் சிலோசா கடற்கரைக்குச் சென்றேன். அன்று வானிலை இதமாக இருந்தது. என் மனதில் ஆனந்தம் தாண்டவமாடியது. நானும் என் தங்கையும் அழகான மணல் வீடு கட்டினோம். நாங்கள் கடல்நீரில் விளையாடினோம்.
  அங்கு நானும் என் குடும்பத்தினரும் நிறைய புகைப்படங்களை எடுத்தோம். அடுத்த நாள், நாங்கள் குடும்பத்துடன் கடைத்தொகுதிக்குச் சென்று துணிமணிகளும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கச் சென்றோம். கடைத்தொகுதிகளில் துணிமணிகள் எல்லாம் தள்ளுபடி என்று கேட்டதும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன். எனக்கு தூணிமணிகள் என்றால் கொள்ளை ஆசை. எனக்கும் என் தங்கைக்கும் என் அம்மா, துணிகள் வாங்கிக் கொடுத்தார். பின்னர், சந்தைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கினோம். பைகள் மிகவும் கனமாக இருந்தது. நாங்கள் மூவரும் பைகளைச் சமமாகப் பிரித்து கொண்டோம். வீட்டிற்குச் சென்று என் தாய்க்குச் சில உதவிகள் செய்தேன்.
  எனக்கு நிறைய வீட்டுப்பாடங்கள் இருந்ததால், அதைச் செய்ய தொடங்கினேன். மேலும் என் மற்ற நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டு நன்றாகப் படித்தேன்., தேர்வுக்கும் தயாரானேன். என் பள்ளி விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனாகவும் செலவழித்ததே எனக்கு பெருமையாக இருந்தது. தேர்விலும் நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன்.
  Deepika Raviprasad
  Bukit Merah Secondary School

 3. சிலர் தனது விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்திருப்பார்கள். மற்று சிலருக்கோ, விடுமுறயைப் பயனுள்ள வகையில் கழிக்காததற்கான குற்றுணர்சி, அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். ஆனால், எனக்கு அக்குற்றுணர்சியே இல்லை. என்னைப் பொறுத்தவரை, நான் என் பள்ளி விடுமுறையை மிகப் பயனுள்ள வகையில் கழித்தேன்.
  உதாரணத்திற்கு, நான் ‘டான் டாக் செங்’ மருத்துவமனைக்கு, என் இணைப்பாட வகுப்புத் தொடர்பாகச் சென்றிருந்தேன்.அன்று அங்கு வந்திருந்த முதியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் நான் வழிகாட்டியாக அமைந்தேன். அவர்களுக்கு உதவி செய்ததில், எனக்கு மிக்க மகிழ்ச்சி. ‘அறம் செய விரும்பு’ என்ற ஆத்திசூடிக்கு ஏற்ப, நம்மால் முடிந்த உதவிகளை நாம் பிறருக்குச் செய்ய வேண்டும்.அதை மனதில் கொண்டு தான், சிறு உதவியாக இருந்தாலும், அவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்தேன். ஒருவருக்கு உதவி செய்வதில் நமக்கு மணநிம்மதிக் கிடைக்கும்.
  என் விடுமுறையில் நான் இன்னொறு பயனுள்ள செயலில் ஈடுபட்டேன். நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கே சென்று நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்ததால், என் மொழி மற்றும் சொல் வளம் அதிகரித்தது. இவ்வாறே நான் என் விடுமுறையைக் கழித்தேன்
  வைஷ்ணவி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 4. என்ன செய்தோம் என்ன கற்றோம்
  சென்ற ஆண்டு விடுமுறையில் எப்பொழும் போல நாங்கள் இந்தியாவிற்கு எங்கள் தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றோம். வயதான அவர்களைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளவில்லையே என்ற குற்ற உணர்வு என் அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் எப்போதுமே இருக்கும். அதனால் நாங்கள் இந்தியாவிற்கு சென்றால் சுற்றுலா எங்கும் செல்லமாட்டோம்.
  இந்த முறை எனது பெற்றோர் ஒரு வாரம் அதிகமாக அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருந்தார்கள். அதனால் நாங்களும், எனது மூன்று அத்தை குடும்பத்தினரும் நான்கு நாட்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தோம். எனக்கு இந்தியாவில் பல இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற கனவு எப்போதுமே உண்டு. எனது கனவு நனவாகப் போகிறது என்பதை நினைத்து என் மனம் வானில் சிறகடித்துப் பறந்தது.
  மொத்தம் பதினொன்று பேர் இரயில் வண்டியில் பயணத்தைத் தொடங்கினோம். நீண்ட தூரம் இரயிலில் பயணம் செய்வது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சில்லென்ற காற்று, கரிய மேகம், கூடவே வரும் நிலவு எனப் பயணம் இனிதாக இருந்தது. அதிகாலையில் நாங்கள் மைசூரை அடைந்தோம். குளித்து ஆயத்தமாகி , பிறகு நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வாகனத்தில் ஏறி காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரியை அடைந்தோம்.
  ஒரு நாட்டின் உண்மையான ஆதாரம் நீர்வளம் என்பதும், அதன் முக்கியத்துவத்தையும் நான் காவிரிக்காகக் கட்டியிருந்த கோயிலைக் கண்டவுடன் உணர்ந்தேன்.
  பிறகு பக்கத்திலிருந்த விலங்கியல் பூங்கா, யானை சவாரி மற்றும் குதிரை சவாரி ஆகியவைகளை நானும் எனது தம்பியும் கண்டு களித்தோம்.
  அடுத்த நாள் அதிகாலையில் ஒரு மலையுச்சிக்கு பயணம் செய்து , பொன்னிறமான சூரிய உதயத்தைக் கண்டு களிப்புற்றோம். மறுபுறம் அதல பாதாளம், அதை வெண்ணிற மேகங்கள் மூடியிருந்தன. பார்ப்பதற்கு சொர்க்கலோகம் போல மனதைக் கொள்ளை கொண்டது.
  ஆபத்தான வளைவுகளைக் கடந்து கீழே வந்தடைந்தோம். அடுத்த நாள் மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்தோம். இறுதியாக ஊர் வந்து சேர்ந்தோம்.
  இந்த பயணத்திலிருந்து இயற்கையின் உண்மையான எழிலையும், அதன் முக்கியத்துவத்தையும், உறவினர்களோடு இருக்கும்போது ஏற்படும் பிணைப்பையும் நான் கற்றுக் கொண்டேன்.
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*