எனக்கு இந்த இடம் ஏன் பிடிக்கிறது?

நமக்கு சில இடங்களை மிகவும் பிடிக்கும். பூக்கள் மாலையாகித் தொங்கும் லிட்டில் இந்தியா, படகுகள் இரவில் மிதக்கும் போட் கீ, வண்ண வண்ணப் பறவைகள் நிறைந்த பறவைகள் பூங்கா, ஏதாவதி ஒரு மெக்டொனல்ஸ் அல்லது கே.எஃப்.சியின் குறிப்பிட்ட மேசை, நம் வீட்டின் வரவேற்பறை என நமக்கு எத்தனையோ இடங்களைச் சொல்லலாம். அப்படி உங்களுக்குப் பிடித்த இடம் எது? ஏன் பிடிக்கிறது? அந்த இடத்தைப் பற்றிய மறக்க முடியாத நினைவுகள் என்ன? என்பவற்றைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.

கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 7 அக்டோபர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

ஆகஸ்ட் மாத வெற்றியாளர்கள்

5 கருத்துரை

 1. இந்து ரமேஷ்
  1 PR
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி (1 HT )

  “பள்ளி ஆரம்பித்து ஒரு மாதம் தான் ஆகியுள்ளது! அதற்குள், எனக்கு எட்டுப் பாடங்கள், துணைப்பாட வகுப்புகள் என்று பல மன உளைச்சல்கள் குவிந்துவிட்டன! ” என்று புலம்பியவாறு பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன்! என்னைப் பின்தொடர்ந்த என் வகுப்புத் தோழி நான் மன உளைச்சலோடு இருந்ததைக் கண்டறிருந்து என்னை நலம் விசாரித்தாள். “என்ன மாலா? ஏன் இவ்வளவு கவலையோடும் மன உளைச்சலோடும் இருக்கிறாய்?” என்று வினவ நான் வீட்டுப்பாடங்களும் துணைப்பாடங்களும் எனக்கு அதிகமான மன உளைச்சலைத் தருவதாகப் பகர்ந்தேன்.

  “இதற்காகவா இவ்வளவு பயம்?” என்று மாலா கேட்க நான் அதிர்ந்தேன். எனது பிரச்சினைக்கு அவளிடம் தீர்வு இருப்பதை உணர்ந்து தீர்வு என்ன என்று வினவினேன். அப்பொழுது கலாவோ ஒரு சிகரெட் பாக்கெட்டை நீட்டினாள். எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. எனது இதயம் ‘படக் படக்’ என்று தாளம் போட்டது. எனினும், நண்பர்கள் கூறுவதை அலசி ஆராயாமல் அப்படியே நம்பும் கெட்ட பழக்கம் என்னிடம் இருந்ததால் அப்பாக்கெட்டைப் பெற்றுக்கொண்டேன். ‘என்ன செய்வது? கலா கூறினால் அவ்விஷயம் சரியாக தான் இருக்க வேண்டும்! எனினும், பல விளம்பரங்களில் புகை பிடிப்பது புற்று நோயைத் தரும் என்று நான் கேட்டதுண்டு. ஆனால், விளம்பரங்களை விட என் தோழியே நம்பகத்திற்கு உரியவள் என்று நினைக்கிறேன்! புகை பிடிப்பது எனது மன உளைச்சலைக் குறைக்கும் என்றால், ஏன் யோசிக்க வேண்டும்?’ என்று என் மனதில் எண்ணினேன். “சங்கோஜம் வேண்டாம்! புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது பொய்! புகை பிடித்தால் மன உளைச்சலைக் குறைக்கலாம்!” என்று கலா என்னைப் புகை பிடிக்க ஊக்குவித்தாள்.

  அப்பொழுது நான் எடுத்த தவறான முடிவு என் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கியது.

  ‘குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்கக் கொளல்’

  என்ற திருக்குறளை மறந்து கலாவைத் தோழியாக நினைத்ததோடு

  ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’

  என்று என் தமிழாசிரியர் கற்பித்த முதுமொழியையும் மறந்து யோசிக்காமல் அச்செயலைச் செய்தேன். சற்றுத் தடுமாறியவாறு, ஒரு சிகரெட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்து மெல்ல என் வாயுக்கு அருகில் நகர்த்தி புகை பிடிக்க தொடங்கினேன். என்னை அறியாமலேயே அன்று ஒரு தீய பழக்கத்திற்கு அடிமையானேன். சிறிது நேரத்திற்கு, என் மன உளைசசல் எல்லாம் காற்றோடு பறந்து போனது. ஆனால், என் அம்மா திட்டுவாரா என்று சற்று பயமாக இருந்தது. சில சிகரெட்டுகளைப் புகை பிடித்து முடித்தவுடன் நாளை சந்திப்பதாக மாலாவிடம் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றேன்.

  ‘அம்மாவிடம் என்ன சொல்வது? புகை பிடிப்பதாகச் சொன்னால் அம்மா திட்டுவாரா? இல்லை, இல்லை இந்த வம்பே வேண்டாம்! பொய் சொல்லித் தப்பித்து விடலாம்! பள்ளியில், நண்பர்களுடன் படித்ததாக சொல்லலாம்,” என்று எண்ணியவாறே
  வீட்டை அடைந்தேன். அப்பொழுது, எங்கோ படித்த ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது.

  ‘உண்மையைக் கூறுவது கடினம்
  பொய் சொல்வது எளிது
  உண்மையை மறைக்க பொய் சொல்வது எளிது.
  பொய்யை மறைக்க மற்றொரு பொய் கூறுவது கடினம்.
  கசப்பான உண்மையைக் கூற, இனிப்பான விளைவுகள்.
  இனிப்பான பொய்யைக் கூற , கசப்பான தண்டனைகள்.’

  எனினும், பயம் என் கண்களை மறைக்க தாயாரிடம் பொய் ஒன்றைச் சொன்னேன். ஆனால், அக்கவிதையின் பொருள் எனக்கு உடனணடியாகத் தெரியவில்லை! ஏன், ஆண்டுத் தேர்விற்காக நான் மனப்பாடம் செய்த செய்யுள் கூட எனக்கு நினைவில்ல் இருந்தது. ஆனால், என்ன பயன்? அதை நான் தான் என் வாழ்க்கைக்கு உபயோகிக்கவில்லையே!

  ‘ஔவியம் பேசேல்’

  அடுத்த நாள், மீண்டும் பள்ளி முடிந்து வீட்டிற்குக் கீழே இருந்த ஒரு ஓரத்தில் நானும் கலாவும் இணைந்து புகை பிடித்தோம். மீண்டும், என் அம்மாவிடம் வேறு ஒரு பொய்யைச் சொல்லி சமாளித்தேன். நாட்கள் செல்ல செல்ல, நான் புகை பிடிப்பதற்கு முழுமையாக அடிமையானேன். புகை பிடிக்கமால் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை. எனது வீட்டுப்பாடங்களைச் செய்யாமல் பாடத்தில் கவனம் செலுத்தாமல், ஆசிரியரிடம் தினமும் திட்டு வாங்கினேன்.

  ஒரு நாள், என் ஆசிரியர் என்னைத் தனியாக அழைத்து என் பிரச்சினையைப் பற்றி விசாரித்தார். நானோ ஒன்றுமில்லை என்று தயக்கமின்றி வாய் கூசாமல் பொய் சொன்னேன். அரை ஆண்டு தேர்வுகளும் நெருங்க, நான் எவ்வித மன உளைச்சலுமின்றி தினமும் புகை பிடித்தேன். அன்று, நான் மாலாவோடு பள்ளி சீருடையில் புகை பிடித்து கொண்டிருந்ததை எதார்த்தமாக அங்கு வந்த என் மூத்த சகோதரி பார்த்து விட்டார். “மாலா! ” என்று சத்தமான குரல் ஒன்று என் பெயரை அழைக்க நான் திரும்பினேன். அங்கு என் அக்கா நின்றுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் சிலையாய் நின்றேன்.

  எனக்குப் பேச நா வரவில்லை! ” அக்கா, தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீர்கள்! ” என்று மன்றாட என் அக்கா என் பேச்சைக் கேட்பதாக இல்லை கோபத்தோடு என்னை வீட்டீற்கு அழைத்துக்கொண்டு அம்மாவின் முன் நிறுத்தினார்! எனது கைகள் வெடவெடத்தன . ‘ஏன் தான், தவறு செய்தேன்’ என்று எனக்குத் தோன்றியது! ஆனால் அப்போது நேரம் கடந்துவிட்டது!

  “என்ன மாலா! உன் அக்கா கூறுவதெல்லாம் உண்மையா? உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடமே பொய் சொல்லி புகை பிடித்திருப்பாய்?” என்று என் அம்மா ஆத்திரத்தில் கர்ஜித்தார். ‘பளார்’ என்று என் இரு கன்னங்களிலும் அறைந்தார். அப்பொழுது தான் நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன் என்பது எனக்கே புரிந்தது. சிறு வயதிலிருந்து, நற்பண்புகளைக் கற்பித்து என்னை வளர்த்த என் அம்மாவிமே பொய் சொல்லி விட்டதை நினைத்து நான் வருந்தாத நாள் இல்லை!

  அடுத்த நாள், கலாவிடம் சென்றேன். “நீயெல்லாம் ஒரு தோழி! நீயும் தீய செயல்களில் இறங்கி என்னையும் புகை பிடிக்க வைத்துவிட்டாய்! இனிமேல், தோழி என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வராதே! ” என்று கத்தியவாறு சென்றேன். அன்று நான் கலாவின் நட்பை முறித்துக்கொண்டேன். தேர்வு நெருங்கி கொண்டிருந்ததால், ஆசிரியர்களிடம் உதவி நாடி இரவும் பகலுமாக கண் விழித்து படித்தேன். நான் செய்த முயற்சி என்னைக் கைவிடவில்லை. எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது.

  அப்பொழுது, நான் என் தாயாரின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி எனக்குப் பேரானந்தத்தைத் தந்தது. அச்சம்பவம், நண்பர்களைக் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்ற பாடத்தை எனக்குக் கற்பித்தது!

  ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்
  மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’

  என்ற திருக்குறளின் உண்மை எனக்கு அப்போது தான் புரிந்தது.

 2. ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்று கணியன் பூங்குன்றனார் ஆன்றே கூறியுள்ளார். இவ்வுலகளில் நமக்கென்று ஒரு நிரந்தர இடம் கிடையாது. நாம் நமது சூழ்நிலைக்கு ஏற்பவும் விருப்பத்திற்கு ஏற்பவும் வாழ்கிறோம். அவரவர் வாழ்க்கையில் கட்டாயமாக அவரவருக்கென்று பிடித்த இடங்கள் சில இருக்கும். சிலருக்கு அவர்களுடைய வீடு என்றால் மிகவும் பிடிக்கும். சிலருக்கு அவர்கள் அடிக்கடி செல்லும் பூங்கா என்றால் பிடிக்கும். சிலருக்கு மன நிம்மதியளிக்கும் கோயில் என்றால் பிடிக்கும். எனக்கு பிடித்த இடம் என்னுடைய பள்ளிக்கூடம். எல்லோருக்கும் அவர்களுக்கு ஏன் அந்த இடம் பிடிக்கும் என்று காரணங்கள் இருக்கும். அது போல எனக்கும் ஏன் எனது பள்ளிக்கூடம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று காரணங்கள் உள்ளன.எனக்கு என் பள்ளிக்கூடம் எனது இரண்டாவது வீடு என்று கூட சொல்லலாம். நான் பள்ளிக்கூடத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது செலவிடுகிறேன். பல பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் செல்வது என்றால் எரிச்சல், வெறுப்பு, கோபம் போன்ற பல எண்ணங்கள் வரும். ஆனால் எனக்கோ, ‘ எப்படா பள்ளிக்கூடம் போகலாம்’ என்று இருக்கும். ‘ என்னடா இது, இவ்வளுவு பைத்தியமா ஒருவனுக்கு தன்னுடைய பள்ளிக்கூடத்து மேல’ என்று நீங்கள் கேட்கலாம்.
  பள்ளிக்கூடத்தில் நான் என் நண்பர்களுடன் அதீத நேரம் செலவிடுவேன். எனக்கு பள்ளிக்கூடத்தில் பல தோழர்கள் உள்ளன. தமிழ் இனம் சார்ந்த நண்பர்கள் மட்டுமில்லாமல், பல இனங்களை சார்ந்த நண்பர்களும் எனக்கு இருக்கின்றனர். ‘ தோள் கொடுப்பான் தோழன்’ என்று ஒரு பழமொழி உண்டு. அது போல தான் என் நண்பர்களும் எனக்கு ஒரு பிரச்சனையென்றால் எனக்கு உடனிடியாக வந்து, தயக்கமில்லாமல் உதவுவர். எனது நண்பர்களில் பலர் என் வீட்டருகில் தங்காததால் நான் அவர்களைப் பள்ளிக்கூடத்தில் தான் பார்க்க முடியம். பள்ளி முடிந்த பிறகு நானும் என் தோழர்களும் ஒன்றாக வீட்டுப்பாடத்தை முடித்து, படித்துக்கொண்டிருப்போம். அப்போது நாங்கள் சில நேரங்களில் ஒன்றாக சேர்ந்து கேளிக்கை காணொளி பார்ப்பது, நகைச்சுவையான செய்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது போன்ற பலவற்றை செய்துள்ளோம். இவ்வளவு இனிப்பான அனுபவங்களை என் நண்பர்களுடன் நான் கண்டுகளித்து என் பள்ளிக்கூடத்தை நான் என்றுமே மறக்கமாட்டேன்.
  அடுத்ததாக எனக்கு ஏன் எனது பள்ளிக்கூடம் மிகவும் பிடிக்குமென்றால், அது என் வாழ்க்கையின் வழிகாட்டிகளான ஆசிரியர்களால் தான். மாதாவிற்கும் பிதாவிற்கும் பிறகு தான் குரு என்றார்கள் நமது சான்றோர்கள். ஆனால், மாதாவையும் பிதாவையும் ஒரே காட்சியில் காண வேண்டுமென்றால், அவரே தான் குரு; ஆசிரியர்; ஆசான் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு என் ஆசிரியர்கள் பாடம் சார்ந்த தகவல்களை மற்றும் கற்றுத் தராமல், வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது, நல்ல குடிமகனாக எப்படி நடந்துகொள்வது, மன உளைச்சலை எப்படி கையாளுவது என்று பல விஷயங்களைப் பற்றி எனது ஆசிரியர்கள் என்னிடம் கூறியுள்ளனர். எவ்வளவு தான் வேலைகள் குவிந்திருந்தாலும், நான் உதவியென்று போய் கேட்டால், ஒரு நோடி கூட தாமதிக்காமல் எனக்கு வந்து உதவும் ஆசிரியர்களை நான் மறந்தால், நான் செய்யும் மகா பாவம். ஒரு முறை நான் எனது தமிழ்த் தேர்வில் மிக குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தேன். இதனால் மனமொடைந்து போன நான், சோர்ந்து வகுப்பில் அமர்ந்திருந்தேன். இதைப் பார்த்த எனது தமிழ் ஆசிரியர், என்னை சாந்தப்படுத்தி, என்னை ஊக்குவித்து என்னிடம் தந்நம்பிக்கையை வளர்த்தார். அன்றிலிருந்து நான் தோல்வியை கண்டு துவண்டு போகாமல் ஒரு வீரனைப்போல அதை எதிர்கொண்டு வென்றுள்ளேன். இது போன்ற பல வழிகளில் எமது ஆசிரியர்கள் எனக்கு உதவியுள்ளனர். நான் பள்ளிக்கூடம் செல்லாமலிருந்தால், நான் பொக்கிஷம் போல கருதும் ஆசிரியர்களை நான் கண்டிருக்கமாட்டேன். பள்ளிக்கூடத்தை விட்டாலும் நான் ஆசிரியர்களை அதிகம் வெளியே பார்க்க முடியாது. எனவே எனக்கு பள்ளிக்கூடம் ஒரு பிடித்த இடம்.
  பள்ளிக்கூடம் பிடித்ததற்கு மற்றொரு காரணம், புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில் போல எனக்கு கல்வியறிவு வந்தது பள்ளிக்கூடத்தில் தான். புத்தரைப் போல நான் ஞானி இல்லாவிட்டாலும், என் வயிதிற்கு எனக்கு தேவைப்பட்ட கல்வியை வழங்கியது, எனது பள்ளிக்கூடம் தான். எனக்கு படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ‘ இது மிகவும் விந்தையாக’ இருக்கின்றதே என்று நீங்கள் நினைக்கலாம். காரணம், என் வயது இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு படிப்பது என்றாலே இஷ்டமில்லை. ஆனால் எனக்கு புதியனவற்றை அறிந்துகொள்வதில்ல பேரின்பம். தினமும் பள்ளிக்கூடம் வரும் முன் ‘ இன்று நான் என்னது புதிதாக கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று எண்ணிக்கொண்டே தான் வருவேன். நினைத்தது போலவே, தினமும் ஒரு புதிய தகவலை கற்றுக்கொண்டு தான் செல்லுவேன். பள்ளிக்கூடத்தில் ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது, வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன். பள்ளி விளையாட்டுத் திடலில் விளையாடும்போது ஒற்றுமையாக நண்பர்களோடு விளையாடுவது, பள்ளி முகாமின் பொழுது எப்படி விடாமுயற்சியுடன் ஒவ்வொரு நடவடிக்கையையும் முடிப்பது மற்றும் பள்ளியில் நடத்தப்படும் இணைப்பாட வகுப்புகளின்போது எப்படி பொருப்புள்ள மாணவனாக இருப்பது என்று போல பல பாடங்களை நான் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டுள்ளேன்.
  பள்ளிக்கூடம் எனக்கு ஒரு அரண்மனையைப் போல. பல பொக்கிஷம் நிறைந்த அரண்மனை. அதில் வைரங்கள் எனக்கு கிடைத்த நண்பர்கள். வைடூரியங்கள் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள். மரகதக் கற்கள் நான் சேமித்துள்ள இனிய நினைவுகள். நான் கண்டுள்ள வெற்றிகள் மற்றும் பாராட்டுகள் எனக்கு இருக்கும் பொற்காசுகள். ஆங்காங்கே தூசு போன்ற சில கசப்பான சம்பவங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அதற்காக வாழ்ந்திருந்த அரண்மனையை மறந்திட முடியுமா. அப்படி மறக்க முடியாத அரண்மனை தான் என்னுடைய பள்ளிக்கூடம்.
  Thanushri Prabhakaran
  Bendemeer Secondary School

 3. ‘பூங்கா நகரம்’ என்ற பெருமைக்குரிய சிங்கப்பூரில் பல அற்புதமான கண்களைக் கொல்லைக்கொள்ளும் சுற்றுலாத்தளங்கள் உள்ளன. ஒவ்வொரு இடமும் பல வரலாற்று சான்றுகளையும் உலக அளவில் பிரசித்திப்பெற்ற பெருமைகளையும் கூறும். அவ்வாறு பிரசித்திப் பெற்ற இடங்களில் ஒன்றுதான் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம். 158 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தாவரவியல் தோட்டம் சிங்கப்பூரின் மையப்பகுதியான ஆர்ச்சட் சாலையில் அமைந்துள்ளது.

  உலகப் பாரம்பரியக் களமான யுனேஸ்கோவால் (UNESCO) அங்கிகரிக்கப்பட்ட வெப்பமண்டல தோட்டமான இந்ந இடத்திற்கு ஒரு முறையாவது போகவேண்டும் என்று பல நாள் நான் கங்கனம் கட்டிக்கொண்டிருந்தேன். என் கணவை நனவாக்கும் வண்ணம் செப்டம்பர் மாத விடுமுறைக்கு என் வகுப்பு ஆசிரியர் என் வகுப்பு மாணவர்களை இந்தத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. என் வகுப்பு மாணவர்களோடு பல நாள் கனவு கண்டுக்கொண்டிருந்த இந்த இடத்திற்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
  பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இச்சுற்றுலாவிற்குச் செல்ல சம்மதம் தெரிவித்ததால் நாங்கள் செப்டம்பர் விடுமுறைக்கு இத்தோட்டத்திற்குச் சென்றோம். ஆசிரியரின் கட்டளைக்கு இணங்க நாங்கள் பள்ளிக்கு காலை பத்து மணிக்கு வந்தோம். பிறகு சுமார் ஒரு 1030 மணியளவில் பள்ளியிலிருந்து பேருந்தில் அந்தத் தோட்டத்திற்குச் சென்றோம்.

  பேருந்து தாவரவியல் தோட்டத்தை அடைந்ததும் நாங்கள் அனைவரும் வரிசையாக நுழைவாயில் அருகே நின்றிருந்தோம். பிறகு ஆசிரியர் எங்கள் அனைவருக்கும் அங்குள்ள மேப்பை (map) கொடுத்தார். அதன் உதவியோடு அங்குள்ள இடங்களைச் சுற்றிப்பார்த்து அங்குள்ள சிறப்பு அம்சங்களைக் குறிப்பெடுத்துக்கொள்ள சொன்னார். மிகவும் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட அந்தத் தோட்டம் எனக்குப் பிரமாண்டமாகத் தோன்றியது. சிறிய குளம், நிறைய சாப்பாட்டுக்கடைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கென்றே தனியான விளையாட்டு பூங்கா என பல இடங்களோடு அழகாகக் காட்சியளித்தது.

  சிறுவர்களுக்கென்று இருந்த அந்த விளையாட்டு பூங்காவிற்கு நாங்கள் அனைவரும் சென்றோம். அங்கிருந்த நாற்காலியில் ஆசிரியர் அமர்ந்துகொண்டு எங்களைக் கண்காணித்தார். நாங்கள் அனைவரும் அங்கு விளையாட ஆரம்பித்தோம். திடீரென்று என் நண்பன் குமார் ‘‘டே லோகேஷ்! இந்த இடத்தில் வேறொரு விளையாடும் பகுதி இருக்கிறது. வா நாம் அங்குச் சென்று விளையாடலாம்’’, என்றான். நானும் சற்றும் யோசிக்காமல் சரியென்று அவனோடு நடந்து சென்றேன். நாங்கள் அந்த விளையாட்டு மைதானத்திலிருந்து பிரிந்து சென்றதை ஆசிரியர் கவனிக்கவில்லை. அது எங்களுக்கு சுலபமாக இருந்தது.
  ‘‘டேய் குமார்!, நாம் அரை மணி நேரம் நடக்கிறோம். இன்னும் நீ சொன்ன இடம் வரவில்லையே! எங்கடா இருக்கு?’’, என்று மிகுந்த கலைப்புடன் கேட்டேன். அவன் ‘‘தெரியவில்லை’’, என்று கேலியாக பதிலளித்தான். எனக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரத்துடன் அவனை ஏசினேன். பிறகு நாங்கள் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி செல்ல முடிவு எடுத்தோம். ஆனால், மீண்டும் எப்படி வந்த இடத்திற்குச் செல்வது என்று தெரியாமல் தடுமாறினோம். பயத்தில் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
  மணி ஆறு ஆனது. என் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக நாங்கள் தொலைந்து போனதை உணர்ந்து பதற்றம் அடைந்திருப்பார்கள் என்று வருத்தமும் ஏற்பட்டது. என்ன செய்வது என்று சிந்தித்தபோது ஒரு யோசனைத் தோன்றியது. அங்கு இருந்த ஓர் ஆடவரிடம் ஓடிச்சென்று அவருடைய கைத்தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டேன். அவரும் எங்களின் நிலமையைப் புரிந்துகொண்டு அவருடையத் தொலைபேசியைப் பயன்படுத்த கொடுத்தார். ஆசிரியரைத் தொடர்புகொண்டேன். ‘‘ஆசிரியர் நானும் குமாரும் வழிதவறி இங்கே வந்துவிட்டோம். எப்படி வருவது என்று தெரியவில்லை ஆசிரியர்’’, என்று அழுதுகொண்டே கூறினேன்.
  பிறகு எங்கள் ஆசிரியர் நாங்கள் இருக்கும் இடத்தின் அடையாளங்களைக் கேட்டு எங்களை கண்டுபிடித்தார். எங்களைக் கண்டுபிடித்தவுடன் நாங்கள் அவருக்குத் தெரியாமல் வந்ததற்காக எங்களைத் திட்டினார். இந்தத் தவறுக்காக நாங்கள் இருவரும் விடுமுறை முடிந்து வந்தவுடன் 6 மணி நேரம் கூடுதல் நேரம் (detention serve) தங்கி கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனைக் கொடுத்தார். மிகுந்த சோகத்துடன் நான் என் வீட்டிற்குச் சென்றேன். அன்றிலிருந்து எங்குச் சென்றாலும் பெரியவர்களிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு மறக்கமுடியாத சம்பவமாகும்.

  LOGESHWARAN
  Greenridge Secondary School

 4. உலக வரைப்படத்தில் மிகச் சிறிய புள்ளியாகத் தோற்றமளிக்கும் சிங்கப்பூரில் கண்களைப் பரிக்கும் அழகான பச்சை பசேலென்று இருக்கும் இடங்கள் உள்ளன. உதாரணத்திற்கு விலங்கியல் தோட்டம், சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம், செந்தோசா தீவு என பல இடங்கள் இருக்கின்றன. இதுபோன்ற இடங்களில் கண்டிப்பாக ஓர் இடம் அவரவர் மனத்திற்குப் பிடித்த இடமாக இருக்கும். அதுபோல்தான் எனக்கும் மனத்திற்குப் பிடித்த ஓர் இடம் இருக்கின்றது. அதுதான் பல வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளையும் கவர்ந்த செந்தோசா தீவு ஆகும்.

  ஒரு காலத்தில் பிரிட்டிஸ்காரர்களின் இராணுவ மைதானமாகவும் ஜப்பானியர்களின் சிறைச்சாலையாகவும் இருந்த இந்த செந்தோசா தீவு இன்று பல நூறு ஆயிரம் சுற்றுப்பயணிகளைக் கவர்ந்து இருப்பது சற்று வியப்பு அடையக்கூடிய தகவலே. இங்கு பல தங்கும் விடுதிகள், கோல்ப் மைதானம், கடற்கரைகள், சிலோசா கோட்டை, சிங்கப்பூரின் பெருமைக்குரிய மெர்லயன் போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன. இப்படி பல இடங்களைக்கொண்ட இந்தச் செந்தோசா தீவில் என்னைக் கவர்ந்த இடம் செந்தோசா கடற்கரை.

  எனக்கு மனம் குழப்பமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சினையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலும் நான் இங்குதான் செல்வேன். என் மனத்தில் பல சங்கடங்கள் கவலைகளைச் சுமந்துகொண்டு இங்குச் சென்றவுடன் என் மனம் இலகுவாகிவிடும். இங்கு அமர்ந்து கடலின் அலைகளை இரசித்தவாரே அந்த இயற்கை காற்றை சுவாசிக்கும்போது என் மனத்தில் இருக்கும் பாரத்தை அது குறைத்துவிடும். கடல் அலைகள் மணலில் பதியும் நம் கால் சுவடுகளை அழித்துச் செல்வதுபோல் என் மனத்தில் இருக்கும் பாரங்களையும் கரைத்துவிடும்.

  நித்தமும் ஒய்வு ஒழிச்சலின்றி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் கடல் அலைகள், மாலையில் மறையும் சூரியனும் மற்றும் இரவில் பிரகாசிக்கும் சந்திரனும் பாரக்க மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும். அன்பாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டிருக்கும் பெரியவர்களும் சிறுவர்களும், மற்றும் மண்ணில் வீடு கட்டி விளையாடும் அழகும் என்னைச் சுற்றி இருக்கும் சிக்கல்களை சூரியனைக்கண்ட பணிபோல் விளக்கிவிடும்.

  எனக்கு 10 வயது இருக்கும்போது, என்னுடைய பிறந்த நாளை நான் இங்கு கொண்டாடினேன். என்னுடைய பிறந்தநாள் இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. என் உற்றார் உறவினர் அனைவரும் அன்று என் பிறந்த நாளுக்கு வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் எனக்கு பரிசுப் பொட்டளங்களை கொடுத்து சீரும் சிறப்புமாக வாழ்க என்றும் வாழ்த்திச் சென்றனர். அதுமட்டுமில்லாமல், அவர்கள் எனக்கு இன்ப அதிர்ச்சி தரும் வண்ணம் எனக்குப் பிடித்த டேடி பேர் (Teddy Bear) உருவம் கொண்ட கேக்கை கொண்டு வந்து என் முன் வைத்தனர். ஆனந்தத்தில் என் கண்களிலிருந்து கண்ணீர் அறிவுபோல் கொட்டியது. பிறகு அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாடினார்கள். அப்பொழுது எனக்கிருந்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. முதல் முறையாக இத்தனை பேர் எனக்காக வாழ்த்து பாடி பிறந்தநாள் கொண்டாடியது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். அன்றிலிருந்து இந்த செந்தோசா கடற்கரை என் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

  YUVASHRI
  Greenridge Secondary School

 5. பிறப்பு முதல் இறப்பு வரை பல சம்பவங்கள் நிறைந்ததே மனித வாழ்க்கை. அதில் சில சம்பவங்கள் மனத்தில் பசுமையான நினைவுகளை விட்டுச் செல்லும்; சில இதயத்தை இரணமாக்கிச் செல்லும். இவ்வாறு சுவடுகளை விட்டுச் செல்லும் சம்வங்கள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவத்தைக் நமக்குப் புகட்டிவிட்டுச் செல்லும். அப்படிதான் அன்று நடந்த அந்தச் சம்பவம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சுவடுகளை பசுமரத்தாணி போல விட்டுச் சென்றது.

  சிங்கப்பூரில் பல பிரசித்திப்பெற்ற விளையாட்டுத்தளங்கள் இருக்கின்றன. சிங்கப்பூர் மக்களிடம் விளையாட்டு உணர்வை அதிகரிப்பதற்காகவே பல விளையாட்டு மைதானங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் கால்லாங்கில் இருக்கும் நீர் விளையாட்டு மையம் பள்ளி மாணவர்களிடையே பிகவும் பிரபலமானது என்றால் அது பொய்யில்லை. பல பள்ளிகளிருந்து இணைப்பாட நடவடிக்கைக்காக இங்கு வந்து இங்குள்ள நீர் விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கு பெறுவார்கள். அதுபோல் ஒரு ஏற்பாட்டைதான் என் பள்ளியும் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி ஆண்டு தேர்வு முடித்துவிட்டதால் என் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் தொடர்பான பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். என் இணைப்பாட உறுப்பினர்களை நீர் விளையாட்டு மையத்திற்கு படகு ஓட்ட அழைத்துச் செல்வதாக கூறினார்கள்.

  முதலில் அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. முதலில் அதற்கு போக வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் வேறு வழி இல்லாமல் நான் சென்று தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. என் பள்ளியிலிருந்து காலாங்கிற்கு (kallang) அழைத்து செல்லும்போது என் முகத்தில் எந்தவொரு மலர்ச்சியும் இல்லை. ஆனால், அங்கு சென்று அடைந்த்தும் அங்கேயுள்ள சுற்றுப்புறம் எனக்கு மிகவும் பிடித்தது.

  அந்த இடத்தை அடைந்தவுடன் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அந்தக் காற்றின் இசைக்கு ஆடுவதுபோல் அலைகள் கடல் அலையை போலல்லாமல் சிறியளவிளான அலைகளை உண்டாக்கியது. அதனைப் பார்க்க பார்க்க என் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கியது. அந்த அழகான (dragon boat) படகு என்னை கவர்ந்தது. மேலும் காலாங் நீர்தேக்கத்தைப் (kallang reservoir) பார்க்கும் போது இளையர்கள் மிகவும் ஆர்வத்தோடும் விருவிருப்புடனும் (dragon boat) படகில் விளையாடினார்கள். மேலும் அங்குள்ள அமைதியும் அங்குள்ள அழகான நீல வானங்களும் என் கண்களை ஈர்த்தன.

  மேலும் (dragon boat) என்ற நீர் விளையாட்டு எப்படி விளையாடுவது என்று சொல்லித்தறுவர்களின் வேடிக்கையான சுபாவம் எனக்கு பிடித்திருந்து. மேலும் விளையாடவும் ஆர்வமாக இருந்தேன். இந்தாலும் ஒரு பக்கத்தில் பயமாகவும் இருந்தது. ஏனென்றால், எனக்கு நீந்தவும் தெரியாது. அன்றுவரை நான் ஒருபோதும் என் நீர் விளையாட்டு விளையாட்டிலும் ஈடுப்பட்டதில்லை. ஆனால். ஒருவழியாக படகில் ஏறி அமர்ந்துகொண்டேன். படகை எப்படி இயக்குவது போன்ற தகவல்களை எங்களுக்கு அங்கிருந்து பயிற்றுவிப்பாளர்கள் கற்றுக்கொடுத்தனர்.

  பிறகு எங்களை ஏழு பேர் கொண்ட குழுக்களாக பிரித்தார்கள் முதலில் அந்த படகில் அமர்ந்த போது படகு குலுங்கியது அப்போது எல்லாரும் கதற ஆரம்பித்தோம். அனைத்தும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படகை யார் முதலில் செலுத்துவது என்ற போட்டி நடைப்பெற்றது. அதில் நான ஓட்டிய படகுதான் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல அனுபவங்களை எனக்கு இந்த நீர் விளையாட்டு மைதானம் கற்றுக்கொடுத்தது.

  HANNA BINTE MOHAMMED RETTAH
  Greenridge Secondary School

Your email address will not be published.


*