எனக்குப் பூக்கள் பிடிக்குமே!

பூக்களைப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? பூக்களை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா? உங்களுக்கும் பூக்கள் பிடிக்கும். பூக்களைப் பற்றி நினைத்தாலே நம் மனத்தில் கவிதை பிறக்கும். பூக்களைப் பற்றி உங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக எழுதுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 30 செப்டம்பர்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

5 கருத்துரை

 1. பூ
  நிதம் நிதம் உனக்கு பிறப்பு!
  நித்தம் நித்தம் புதுச் சிரிப்பு!
  இயற்கை உனக்கு தந்த பரிசு!
  அதுவே எங்களுக்கு அன்பளிப்பு!
  இயற்கையின் ராணி நீ!
  எண்ணில்லா வண்ணத்தில் நீ
  வண்ணத்துப் பூச்சியை கவரும் நீ,
  என்றுமே இயற்கையின் ராணி நீ!
  பூ ஒன்றை பார்த்தாலே,
  போர்களமாக உள்ள மனமோ பூக்களமாகாதோ?
  பூ ஒன்றை பார்த்தாலே,
  மனவலிகளை ‘ப்பூ’ என்று ஊதி தள்ளாதோ!!
  மித்ரா.பா
  யூனிட்டி உயர்நிலை பள்ளி.

 2. கிருத்தி ரோஷன், 2E3
  UNITY SECONDARY SCHOOL
  எனக்குப் பூக்கள் பிடிக்குமே!
  எத்தனை எத்தனை வண்ண மலர்களோ
  அத்தனையும் வாசம் கொண்ட மலர்களே!
  இத்தனை மலர்கள் மலர்ந்தன உலகத்திலே!
  அத்தனை மலர்களும் பிடிக்கும் என்னிதயத்திலே!
  ரோஜா மலர்ந்தது மலர்த் தோட்டத்திலே!
  ராஜா போல நான் நடக்கையிலே!
  மல்லிகை மலர்ந்தது எனது வீட்டினிலே!
  மனசும் லயித்தது எனது படிப்பினிலே!
  சாமந்திப் பூத்தது வீட்டுக் கொல்லையிலே!
  சாந்தம் தவழ நான் பேசயிலே!
  குறிஞ்சிப் பூத்தது குறிஞ்சி மலையிலே!
  குடும்பம் பிணைப்பில் வளர்வது அன்பினிலே!
  எனக்குப் பிடித்த வண்ணப் பூக்களையே
  எண்ணக் கவியாய் படைத்தேன் மகிழ்ச்சியிலே!

 3. அல்லிப்பூ…. அரளிப்பூ….
  முல்லைப்பூ…. மல்லிப்பூ …. எனப்பல வகையான
  வண்ண வண்ண பூக்களே !
  வாசமிகு மலர்களே !
  புன்னைகைக்கும் பூக்களே !
  வண்டுகளின் தோழியே !
  பட்டுப் போல் மேனி உடையவளே !
  கள்ளமில்லா மழலையின் சிரிப்பை ஒத்தவளே !
  இயற்கை அன்னையின் மடியில் பூத்தவளே !
  மக்களின் துன்பம் போக்கும் சஞ்சீவி மருந்தே !
  மனதை மயக்கும் மத்தாப்பூவே !
  நாளை உதிர்வதை எண்ணி கலங்காமல்
  மகிழ்ந்து மணம் வீசுபவளே !
  உன் போல் மண்ணின் மாந்தர் குணம் கொண்டால்
  இல்லை என்றும் சோகமே !
  susmitha yuan ching secondary school 2E2

 4. சிலு சிலுவென வீசும் சங்கீதத்தில் நீ தலை அசைத்து ஆட
  அவ் ஓசையில் என் கால்கள் தக்கதிமி தாளம் போட
  நிசப்தம் நிலவிய தோட்டத்தில் நான் உன்னை மெய்மறந்து காண
  என் உதடுகளிலும் நீ பூக்க
  உன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் ரகசியம் என்னவோ?
  ரவி வர்மாவின் ஓவியத்திற்கு நீ போட்டியிடுகிறாயா என்ன?
  உன் மென்மையான இதழ்கள் என் இதயத்தை வருடும் பொழுதில்
  அம்மம்மா…எங்கிருந்து திருடுவேன் வார்த்தைகளை உன்னை வர்ணிக்க
  கண்ணதாசனால் முடியுமோ எனது மனநிலையை அறிந்து கவி எழுத
  பூவே உன்னை என் இருவிழிகளுக்குள் பூட்டி சற்று கண் அசந்தேன்
  தவறு செய்துவிட்டேன்! ஐயோ!
  கண் திறக்கும் வேலையில் நீ இல்லையே!
  யார் கூந்தலில் நீ மணக்க சென்றாய்?
  லாவண்யா.பி
  யூசோப் இஷாக் உயர்நிலை பள்ளி

 5. சிலு சிலுவென வீசும் சங்கீதத்தில் நீ தலை அசைத்து ஆட
  அவ் ஓசையில் என் கால்கள் தக்கதிமி தாளம் போட
  நிசப்தம் நிலவிய தோட்டத்தில் நான் உன்னை மெய்மறந்து காண
  என் உதடுகளிலும் நீ பூக்க
  உன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் ரகசியம் என்னவோ?
  ரவி வர்மாவின் ஓவியத்திற்கு சமமாய் நீ போட்டியிடுகிறாயா என்ன?
  உன் மென்மையான இதழ்கள் என் இதயத்தை வருடும் பொழுதில்
  அம்மம்மா…எங்கிருந்து திருடுவேன் வார்த்தைகளை உன்னை வர்ணிக்க
  கண்ணதாசனால் முடியுமோ எனது மனநிலையை அறிந்து கவி எழுத
  பூவே உன்னை என் இருவிழிகளுக்குள் பூட்டி சற்று கண் அசந்தேன்
  தவறு செய்துவிட்டேன்! ஐயோ!
  கண் திறக்கும் வேளையில் நீ இல்லையே!
  யார் கூந்தலில் நீ மணக்க சென்றாய்?
  லாவண்யா.பி
  யூசோப் இஷாக் உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*