எனக்குப் பிடித்த விளையாட்டு

கால்பந்து, பாட்மிட்டன், கிரிக்கெட், செஸ், ஓட்டப்பந்தயம் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டு பிடிக்கும். அந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களையும் பிடிக்கும். அப்படி உங்களுக்குப் பிடித்த விளையாட்டு பற்றியோ அல்லது ஒரு விளையாட்டு வீரரைப் பற்றியோ நீங்கள் கட்டுரை எழுத வேண்டும்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  31 அக்டோபர்  2015.
இது தேர்வு மற்றும் விடுமுறை காலமாக இருப்பதால், பலரும் பங்கேற்க வசதியாக இறுதிநாள் 31 அக்டோபர் வரை நீட்டிக்கப்படுகிறது.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. எனக்குப் பிடித்த விளையாட்டு
  தினந்தோரும், பள்ளி முடித்து காலந்தவராக வீடு திரும்புவேன். வந்தவுடன், என் ஆடையை மாற்றி மருபடியும் வெளியே செல்வேன். அடடா! இவ்வளவு சுலபமாக கூறிவிட்டேன் என்று நினைக்கிறீர்களோ!
  நான் அருகிலிருக்கும் பூங்காவுக்குச் சென்று எனது தோழர்களுடன் கார்பந்து விளையாடுவேன். ஒரு பெண்ணாகிய நான், கார்பந்து விளையாடுவதை மிகவும் அதிர்ச்சியானது. உலகத்திலிருக்கும் பல நாடுகளில், இவ்விளையாட்டு பெரும்பான்மை ஆண்களால்தான் விளையாடப்படுகிறது. ஆனாலும், சிரு வயதிலேயே, நான் என் நண்பர்களுடன் பள்ளித்திடலில் அல்லது பூங்காவில் விளையாடுவேன். என்னால் விளையாட முடியாத நேரங்க்களில், தொளைக்காட்சியில் கண்டு ரசிப்பேன்.
  விளையாட்டு என்று கூறினால், என்னால் நிறைய தெரியும் மற்றும் அவை விளையாட எனக்கு கொள்ளைப் பிரியம். எனக்கு பிடித்த விளையாட்டுகளில் கார்பந்து முதல் இடம் பெரும். அதனுடைய அருமையான காட்சியே இதற்குக் காரணமாகும். இறுதியில், நான் இவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவற்றில் முக்கியமானது போட்டியினுள்ள நேர்மையான மனப்பான்மை (sportsmanship) ஆகும். இதுவே நான் கற்றுக்கொண்ட பாடம் ஆகும் மற்றும் எனக்குப் பிடித்தமான விளையாட்டு ஆகும்.
  Krittika (sec 2 exp)
  St. Hilda’s secondary school

 2. ‘அப்பா!ராம் அண்ணா! மணி ஆறு முப்பது ஆகுது சீக்கிரமாக உங்களுடய உடைகளை மாத்திக்கொண்டு வாங்க’ என்று ஒரு குரல் என் செவிகளுக்கு எட்டியது. பதிலுக்கு, ‘தோ வந்துட்டமா! நந்திதா நீ போய் உன் தோழி சுவாதியை அழைச்சிட்டுவா! என இன்னொரு இரண்டு குரல்கள் கேட்டது. உங்களுக்கு ஒன்றுமே புரிந்திருக்காதே! சரி இப்போது நான் என்னைப் பற்றி உங்களிடம் அறிமுகம் படுத்திக்கொள்கிறேன். என் பெயர்தான் சுவாதி. நான்தான் நந்திதாவின் நெருங்கிய தோழி. நீங்கள் சற்றுநேரத்துக்கு முன் படித்த உரையாடல் வேறுயாருமில்லை நந்திதா, அவள் அப்பா மற்றும் அண்னண் ரவி பேசிக்கொண்டதுதான். நந்திதாவும் நானும் அண்டை வீட்டுக்காரர்கள் என்றதால்தான் அவர்கள் பேசியது எனக்கு கேட்டது.எனக்கு சகோதர்கள் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதர்க்குள், அம்மா மதிய உணவு சமைத்ததில் களைந்துப்போய் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். அதனால், நான் அவருக்கு மற்ற வேலைகளில் உதவிப் புரிவேன். என் அப்பாவை சந்திப்பது மிக கஷ்டம். அவர் வெளியூரில் வேலைப் புரிவதால், மாத்திற்கு ஒரு முறைதான் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொறு சனிக்கிழமை மாலையில் நான், நந்திதா, அவள் அப்பா மற்றும் அண்ணா ஆகிய நாள்வரும் கீழே இருக்கும் பூப்பந்து நீதிமன்றத்துக்குச் சென்று பூப்பந்து விளையாடுவோம். எனக்கும் நந்திதாவுக்கும் பூப்பந்தாட்டம் என்றால் உயிர். நாங்கள் இருவரும் எங்கள் பள்ளி மூலமாக நிறைய போட்டிகளில் கலந்துக்கொண்டு, நிறைய அருமையான பரிசுகளை வென்றதில்லாமல், எங்கள் பள்ளிக்கு பெருமைச் சேர்த்து, எங்கள் பள்ளியிலேயே சிறந்த விளையாட்டார்கள் என பட்டம் வாங்கினோம். நீங்கள் இப்போது என்ன நினைகிறீர்கள் எனச் சொல்லவா? இக்காலத்தில் பூப்பந்தாட்டம் என்றால் ஆண்கள் விளையாட்டாக கருதப்படுகிரதே மற்றும் எப்படி பெண்ணாகலால் இந்தமாதியான விளையாடுகளில் வெற்றிப்பெற்று சிறந்து விளங்க முடிகிறது என்றதுதானே! அன்றும் இன்றும் மக்கள்களில் நிறையோர் இப்படிதான் தப்பு கணக்கு போட்டுவருகின்றனர். ஆனால், அது உண்மையே அல்ல. பெண்கள் தங்கள் மேலே நம்பிக்கை வைத்து தங்களால் முடியும் என மண உறுதியுடன் இருந்தால் ஆண்களுக்கு சமமாக தேர்ச்சி பெறலாம்- ஏன்! ஆண்களுக்கு மேலைக் கூட உயரலாம். நான் சிறுவயதிலிருந்து இன்றுவரை இன்னும் என்னால் முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறதால்தான் நான் என் படிப்பிலும் பூப்பந்தாட்டத்திலும் தேர்ச்சிப் பெற முடிகிறது.
  சுவாத்தி 1E1
  புக்கிட் வியு உயர்நிலை பள்ளி

 3. எனக்குப் பிடித்த விளையாட்டு
  எனக்குப் பிடித்த விளையாட்டு கூடைப்பந்து. இவ்விளையாட்டு கனடாவில் பிறந்து அமெரிக்காவில் மாச்சூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் 1891 ஆம் ஆண்டு கூடைபந்து விளையாட்டை கண்டுபிடித்தார்.
  கூடைப்பந்தாட்டதில் ஒரு அணிக்கு ஐந்து பேர் விதம் களத்தில் இருப்பார்கள். அணிக்கு 10 முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து பதிலாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம்.
  இவ்விளையாட்டில் பந்தை கையால் எறிந்து எதிரிணியனரின் கூடையில் விழவைப்பதே இதன் நோக்கம். இதில் வெற்றி தோல்வி என்பது கடைசி வினாடியில் தான் முடிவாகும்.
  நான் சிறுவயதில் இருந்தே லெப்ரான் ஜேம்ஸ் என்பவரின் கூடைப்பந்தாட விளையாட்டை தொலைக்காட்சியில் பார்த்து பரவசம் அடைந்தேன். அன்று முதல் நானும் இவரை போல கூடைப்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டு விளையாட ஆரம்பித்தேன்.
  இவ்விளையாட்டு உடலின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தும் வண்ணமும் நல்ல கூட்டணி மனப்பான்மையும் வளர்கும் வண்ணமும் நல்ல விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வண்ணமும் இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கூடைப்பந்தாகும்.
  க. வேதா விக்னேஷ்வரி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 4. சீ. சிவா ரஞ்சனா
  எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் மைக்கல் ஜொர்டன் ஆவார்.அவர் பிப்ரவரி மாதம், பதினேழாம் தேதி ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூனறாம் ஆண்டில் நியு யார்க் நகரில் பிறந்தார் நியு யார்க் நகரில். அவர் 
  அமேரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்.அவர் தேசிய 
  கூடைப்பந்து கூட்டமைப்பில் பதினைந்து பருவக்காலங்க்களுக்கு (seasons) விளையாடினார்.அவருக்கு அந்த கூட்டமைப்பில் இருந்த முதல் பருவக்காலத்திலே நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.அவர் அதில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்றிலிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று வரை று வருடம் தவறாமல் வெற்றிப் பெற்றார்.
  அவருடைய சிறப்பாக குதிக்கும் (leaping) திறமையால் எல்லோரும் 
  அவருக்கு ‘காற்று ஜொர்டன்’ (AirJordan) என்று பெயர் சூட்டினர்.அவர் 
  எப்பொழுதும் ஒரு சிறப்பான கூடைப்பந்து விளையாட்டாளர் என்ற 
  பட்டத்தை பெற்றுள்ளார்.ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டில், அவர் ஒரு மகாச் சிறந்த கூடைப்பந்து விளையாட்டு 
  வீரர் என்று பெயிரிடப்பட்டார்.அவருடைய கடின உழைபபையும் அவருக்கு கிடைக்கும் புகழையும் நான் மிகவும் போற்றுகிறேன்.
  சீ. சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி 

 5. எனக்குப் பிடித்த விளையாட்டு!
  சிறு துரும்பும் பல் குத்த உதவும்! என்பது நிச்சயமான உண்மை.
  சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு பாட்மிட்டன். நான் தொடக்கப் பள்ளியில் இணைப் பாடவகுப்பாக பாட்மிட்டன் எடுத்தேன். அப்போது நான் அறியவில்லை , அந்த முடிவு எனது வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது என்று!
  ஏனென்றால், தொடக்கப் பள்ளியில் நான் ஓரு சராசரி மாணவி! ஆறாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி , உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.
  ஒரு நாள் விளையாட்டு ஆசிரியர் எங்களை பாட்மிட்டன் விளையாட சொன்னார். இணைப் பாடவகுப்பில் கற்ற வழிமுறைகளை வைத்து நான் சிறப்பாக விளையாடினேன்.
  விளையாட்டு வகுப்பு வகுப்பு முடியும் தருணத்தில் ஆசிரியர் எங்களை அழைத்தார் , நான் மிகவும் சிறப்பாக விளையாடியதாகக் கூறி அனைவரையும் கைகளைத் தட்ட சொன்னார்.
  எனது முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலர்ந்து பிரகாசித்தது. ஏனென்றால் இது தான் முதன் முறையாக எனக்காக மற்றவர்கள் கைதட்டுவது. மனதில் நம்பிக்கை மேலிட்டது.
  என்னாலும் முடியும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த நம்பிக்கையை படிப்பிலும் செலுத்த ஆரம்பித்தேன்.
  மேலும் வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து பாட்மிட்டன் விளையாடி எனது திறனையும் வளர்த்துக் கொண்டேன்.
  வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா!
  தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா!!
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 6. “என்ன தாஹிரா போலாமா?” என்று என் அண்டைவீட்டார் தோழி, ராதா வினவினாள் . “நிச்சயமாக!” என்று உற்சாகமாக பதிலளித்தேன். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு பூங்காவிற்கு சென்றோம். எப்போதும் போல் வலைபந்து விளையாட ஆரம்பித்தோம்.
  எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வலைபந்தாகும். நான் சிறுவயதிலிருந்து வலைபந்து விளையாடுகிறேன். இவ்விளையாட்டில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என் அன்பின் சிகரமான தாத்தா ஆவார். தினந்தோறும், பள்ளி முடிந்து, நான் என் தாத்தாவுடன் தவறாமல் வலைபந்து விளையாட சென்றுவிடுவேன். என் தொடக்கப்பள்ளியில் நான் வலைபந்தை என் தொடக்கப்பள்ளியில் இணைபாட நடவடிக்கையாக தேர்ந்தெடுத்தேன். என் தாத்தா இவ்விளையாட்டில் வீரப் புலியாக இருந்ததால் எனக்கு பயிற்சிகள் கொடுத்து ஊக்கம் அளித்தார். என் பள்ளியை பிரதிநிதித்து பல தங்க மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தேன். என் தாத்தா காலமானபோது, அவரின் ஆசை, ” வலைபந்தின் வீராங்கணை” என்று நான் திகழ வேண்டும், என்பதை என் வாழ்வின் மிகப்பெரிய இலட்சியமாக ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை என் கனவை நோக்கி அயராமல் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.
   தாஹிரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*