எனக்குத் தெரிந்த 'லிட்டில் இந்தியா'

லிட்டில் இந்தியா நம் வாழ்க்கையோடு இணந்துவிட்ட முக்கியமான இடம். அங்கு நம் மனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. நல்ல உணவகங்கள், துணிக்கடைகள், இந்திய மரபுடமை நிலையம், முஸ்தபா செண்டர் என பலவற்றையும் சொல்லலாம். லிட்டில் இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்தவை என்ன, எவையெல்லாம் உங்களைக் கவர்ந்தவை, ஏன் என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 ஜனவரி 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. லிட்டில் இந்தியாவில் இந்தியர்களை ஈர்க்கும் பல கடைகள் உள்ளன. தேக்கா சந்தை 2003ஆம் ஆண்டில் திறந்தது. இங்கு தமிழ் தொடர்பான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சில நேரங்களில் கலாச்சார கண்காட்சிகளும் நடத்தப்படும்.
  என்னை கவர்ந்தது, அங்கிருக்கும் துணிக்கடைகளே ஆகும்.அங்கு பல வித்தியாசமான உடைகள் உள்ளன. மேலும், அங்கு புத்தகக்கடைகளும் உள்ளன. பற்பல விசித்திரமான நடவடிக்ககைகளும் அவ்வப்போது நடைபெறும். அந்த நிகழ்ச்சிகளில் நம் கலாச்சாரத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.
  மொத்தமாக லிட்டில் இந்தியா தமிழர்களுக்காக அமைந்துள்ள சிறந்த இடமாகும்.
  ஜோஷிதா கிருஷ்ணா
  தஞ்சோங் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 2. எனக்குத் தெரிந்த லிட்டில் இந்தியா!
  பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அங்கு இந்தியா வில் உள்ள கலை, பண்பாடு, மொழி மற்றும் பழக்க வழக்கங்களை அறிய வும் மற்றவர்களுடன் ஒற்றுமையாக மகிழ்ச்சி யு டன் வாழ வும் உலகிற்க்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக இந்திய மரபுடைமை சங்கம், லிட்டில் இந்தியா ஆர்கேட், இந்துக்களின் கோயில்களான ஸ்ரீசீனிவாசபெருமாள் கோயில், ஸ்ரீவடபத்ரகாளியம்மன் கோயில், ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில், இஸ்லாமியர்களுக்கான அப்துல் கபுர் மசூதி, அங்குலியா மசூதி மற்றும் கிருஷ்த்துவர்களின் ஆலயமான பூ சோவ் மெத்தடிஸ்ட், சர்ச் ஆப் த ட்ரு லைட், கம்போங் கபோர் மெத்தடிஸ்ட் டும் ஒருங்கே அமைந்து உள்ளது. லிட்டில் இந்தியா விலுள்ள பெரும்பாலான கடைகளில் இந்திய ர்களுக்கு பிடித்தமான பொருட்கள் விற்க்கப்படுவதால் இந்திய வெளிநாட்டு ஊழியர்களும், இந்திய சிங்கபூரர்களும் “பூவை நோக்கி தேனீக்கள் நாடுவதை போல” லிட்டில் இந்தியா வையே எல்லோரும் நாடுகின்றனர். வார இறுதியிலும் எல்லா விழா காலங்களிலும் கூட்டம் மிகவும் நெரிசலாக இருக்கும். லிட்டில் இந்தியா வில் விற்க்கப்படும் முக்கிய பொருட்களில் பூ, வாழை, வாழை இலை, மண்பான்டம், கரும்பு, வெற்றிலை, பாக்கு, பூஜை பொருட்கள், பாரம்பரிய துணி வகைகள், அழகு ஆபரணங்கள் மற்றும் பல எண்ணில் அடங்கா.
  நிகேத்னா, விரைவுநிலை மூன்று
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 3. லிட்டில் இந்தியா, சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இது, சிங்கப்பூர், சைனாடவுனுக்கு எதிரே ஆற்றுக்கு அடுத்த பக்கத்திலும், கம்ப்பொங் கிலாமுக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. உள்ளூர் தமிழ் மக்கள் இதனைத் தேக்கா என்று அழைப்பதுண்டு.
  லிட்டில் இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த இடம் பாரம்பரியத்தை விளக்கும் கோவில்கள்.சான்றாக,வீரமாகாளியம்மன் மற்றும் பெருமாள் கோவில்களை கூறலாம்.அங்கு செல்லும் போது எனக்கு மன அமைதி கிடைக்கும்.வண்ண வன்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வச்சிலைகளைப் பார்க்கும்போது என் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
  எனக்கு அங்கு கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்க மிகவும் பிடிக்கும்.மேலும்,அங்கு அமைந்துள்ள முஸ்தபா பேரங்காடியில் என் குடும்பத்தினரோடு பொருள்களை வாங்குவதும் நான் விரும்பி செய்யும் ஒன்று.
  பின்,அங்கு அமைந்துள்ள இந்திய மரபுடைமை நிலையத்தில்,சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட முன்னோடித் தலைமுறையினரைப் பற்றி அறிவதற்கும் அவர்களுக்கு நாம் என்றும் நன்றி கூறவும்,மேலும் சுற்றுல்லா பயணிகளுக்கு சிங்கப்பூரிலுள்ள தமிழர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளவும் இது ஒரு நல்ல சுற்றுல்லாதளமாக அமைந்துள்ளது.
  இத்தகைய காரணங்களால், சிங்கையில் லிட்டில் இந்தியா எனக்கு மிகவும் பிடித்த ஓர் இடம் என்பதில் வியப்பில்லை!!
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலை பள்ளி

 4. எனக்கு தெரிந்த ‘லிட்டில் இந்தியா’
  ‘லிட்டில் இந்தியா’ இந்த வார்த்தைகளை கேட்டவுடனே மனசுக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி . ஆமாம் ஒவ்வொரு முறை லிட்டில் இந்தியா சென்று திரும்பும்போதும் இந்தியாவுக்கே சென்று வந்தது போன்ற மகிழ்ச்சி .
  இங்கு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட அனைத்து வகையான பூஜைப் பொருட்கள் , பழங்கள் , காய்கறிகள் , மளிகை பொருட்கள் , வித விதமான தங்க ஆபரணங்கள் மற்றும் வண்ண வண்ண துணிமணிகள் கடைகளில் விற்கப்படுகின்றன. சிங்கப்பூரின் அனைத்து பகுதியிலும் வேலை செய்யும் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சந்திக்கும் முக்கியமான இடமாகவும் விளங்குகிறது .
  பொங்கல் , தீபாவளி , தைப்பூசம் போன்ற பண்டிகைகளின் போது லிட்டில் இந்தியா முழுவதும் வண்ண வண்ண விளக்குகள் ஒளியூட்டப் பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் . அதை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது . அவ்வளவு அழகு. அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்.
  இங்கு அனைத்து வகையான இந்திய உணவுகளையும் பாரம்பரிய மணத்துடன் சுவைத்து மகிழலாம்.
  இங்கு தான் நம் இந்திய மரபுடைமை நிலையம் உள்ளது. இதில் நம் இந்திய சமுதாயம் ஒவ்வெரு காலகட்டத்திலும் எவ்வாறு வளர்ச்சிக் கண்டது மாற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்.
  எனவே தான் ஒவ்வெரு முறையும், லிட்டில் இந்தியா சென்று வீடு திரும்பும்போதும் ஊருக்கு சென்று வந்த மகிழ்ச்சியும் நிறைவும் எனக்கு கிடைக்கும் என்பதில் சிறிதும் மிகையில்லை. நன்றி.
  பாஸ்கரன் நித்யஸ்ரீ,
  யுவான் சிங்க் உயர்நிலைப் பள்ளி,
  சிங்கப்பூர் .

 5. லிட்டில் இந்தியா விற்கு செல்கிறோம் என்று சொன்னலே என் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். காரணம் நம் நாட்டில் வாழும் எல்லா இந்தியர்களும் தங்களுக்கு தேவையான ஆடைகள்,நகைகள், பாரம்பரிய பொருள்கள் வாங்க விரும்பி செல்லும் ஒரே இடம் லிட்டில் இந்தியா என்றழைக்கப்படும் தேக்கா. இது சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளது.நானும் என் குடும்பத்தினரோடு மாதம் ஒரு முறையாவது செல்வது வழக்கம்.
  இங்குள்ள தெருக்களில் உள்ள பழைய கட்டிடங்கள்,கம்போங் சிங்கப்பூர் காலத்தை சேர்ந்தவை.பாரம்பரியத்தை கட்டிக் காக்க நம் சிங்கப்பூர் அரசாங்கம் இக் கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாத்து வருகிறது.பல சிறப்புகள் வாய்ந்த கோயில்களும் பாரம்பரிய இந்திய உணவுகளை வழங்கும் சைவ மற்றும் அசைவ உணவகங்களும் இங்கு வரிசைக் கட்டி நிற்கும்.வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும்.தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் இங்குள் தெருக்கள்அனைத்தும் வண்ண வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு லிட்டில் இந்தியா இடமே ஒளிவெள்ளத்தில் மிதக்கும்.
  இருபத்தி மணி நேர சேவை புரியும் முஸ்தபா எனபடும் பல்பொருள் அங்காடிக் கடையில் அ முதல் ஃ வரையிலா அனைத்து பொருட்களும் ஒரே கடையில் கிடைக்கும். வெளிநாட்டு ஊழியர்களும், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கட்டாயமாக இங்கு பொருள்கள் வாங்க வருவார்கள்.
  என் தந்தை இங்கு விற்கப்படும் தமிழ் வார மற்றும் மாத சஞ்சிகைகளை வாங்குவார். இங்கு ‘சிஜிஎஸ்’ என்ற தமிழ்ப் பதிப்பகத்தார் நடத்தும் புத்தகக் கடையும் உண்டு. எனக்குத் தேவையான அனைத்துப் பயிற்சி நூல்களையும் நான் இங்கு வாங்குவேன்.சுருங்கக்கூறின் லிட்டில் இந்தியா நம் அனைவரது வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்துவிட்டது.
  சுஸ்மிதா
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி
  3K3

 6. லிட்டில் இந்தியாவில் நம் மனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன.அங்கே நல்ல உணவகங்கள், துணிக்கடைகள் போன்றவை இருக்கின்றன. மேலும், இந்திய மரபுடமை நிலையத்தில் பல கலைகளை சொல்லிக்கொடுக்கிறது..
  உணவகங்கள் பல வகையான உணவுகளை கொடுக்கிறன. அப்பளம் , ஊத்தப்பம் , , தோசை, , உப்புமா உணவகங்ள் கொடுக்கிறன.என்ன ருசி! ‘லிட்டில் இந்தியா’ பல இன மக்கள் வாழும் ஊர். அது ஒரு சிறந்த இடமாகும்.அங்கிருந்த இந்திய மரபுடமை நிலையம் என்னை மிகவும் கவர்ந்த்தத்தற்ககு காரணம் பல கலைகளை சொல்லிக்கொடுப்பதே ஆகும்.

  LAVANYA GANESAN KIRUTHEKESH
  ST HILDAS SECONDARY SCHOOL

Your email address will not be published.


*