எங்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்?

சிங்கப்பூரில் வருடம் முழுவதும் பல தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அவற்றில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன? உங்களுக்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிடிக்கும்? மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? இவற்றைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை ஒரு கட்டுரையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 5 ஜூன் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஏப்ரல் மாத, கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்
Seva Manikkam – Gan Eng Seng Secondary School
Vaishnavi Harihara Venkatesan – GIIS (East Coast)
Subathra – Jurong West Secondary School
****

2 கருத்துரை

 1. மாணவர்களை ஈர்க்க என்ன செய்யவேண்டும்….
  அறிவியல் முன்னேற்றத்தில் தொலைந்த பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறந்த மனங்கள் தாம் இக்காலத்தில் அதிகம் இருக்கின்றன. திருக்குறள் போன்ற நீதி நூல்கள் இருந்தாலும் கலாச்சாரத்திற்கும் பண்பாடுகளுக்கும் கொடுக்கப்படும் முக்கிநத்துவமும் மரியாதையும் குறைந்து வருகிறது. ஆனால், மாணவர்களைக் கவரும் நடவடிக்கைகள் இதை மாற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்.
  நான் முதலில் பகிர்ந்து கொள்ள விரும்பும் நடவடிக்கை, முன்னோர்கள் இலக்கிய வடிவத்தில் பகிர்ந்து கொண்ட செய்தியின் உள் அர்த்தங்களை நடவடிக்கையின் வாயிலாகப் பகிர்ந்துகொள்வதே ஆகும். இது போன்ற நடவடிக்கை மொழியையும் அறிவியலையும் ஒன்று சேர்ப்பதால் நிறைய இளைஞர்களை ஈர்க்கும் என்பது என் நம்பிக்கை.
  அடுத்த நடவடிக்கை
  தமிழ் கற்றுக்கொள்வதை மகிழ்ச்சியான அனுபவமாக்கும் நாடகப் பாடங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் ஈர்க்கும். இதனால் மாணவர்களின் மொழித்திறனும் கூடும். அவர்களுக்கு மறுபடியும் இது போன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேம்படும்.
  பார்க்கவி
  ஜூரோங் உயர்நிலைப்பள்ளி

 2. தமிழின்பால் எங்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்
  தமிழ்மொழி விழா நம் சிங்கப்பூரில் தமிழ் மொழியை வளர்க்கவே கொண்டாடப்படுகிறது. இது மூலம், சிங்கப்பூரில் வருடம் முழுவதும் பல தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அவற்றில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன?தமிழ் இலக்கியங்களை தொழில்நுட்பம் மூலம் சொல்லிக் கொடுக்கலாம்.இன்றைய இளையர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையே வாழ்ந்து வருகின்றனர்.அதனால்,மகாபாரதம்,ராமாயணம் போன்ற அற்புத நூல்களை புத்தகம் மூலம் அல்லாமல் கணினிகளில்,கைத்தொலைப்பேசிகளில் கற்றுக்கொடுக்கலாம்.இது அவர்களின் தமிழின் மீது உள்ள ஆர்வத்தை தூண்டும்.அது மட்டுமல்லமால் நடைப்பெறும் தமிழ் நிகழ்ச்சிகளை மாணவர்களின் கருத்துகளை கொண்டு அவர்களுக்கு பிடித்த்துபோல மேம்படுத்தலாம்.புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தலாம்,பேசும் உரைகளில் உற்சாகத்தை கொண்டுவரலாம்.இது போல நிறைய வழிகளில் மாணவர்களின் ஈர்க்களாம்.
  தமிழை மாணவர்களிடையே வளர்க்க நிறையவே வழிகள் உண்டு. அவை இப்போது அடைபட்டு நிற்கின்றன. ஒரு இரவில், ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்து விடாதுதான். நாம் சிறிய அளவில் முயற்சியெடுத்தால் போதும். ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகும். இங்கே நிறைய பழமைவாதிகள் உண்டுதான். அவர்களை மீறிக்கொண்டுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். பள்ளிகள் தமிழைப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் பழக்கும் இடமாக இருப்பின் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கிறவர்கள் துளியும் தமிழ் தெரியாமல் வெளிவருகிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இப்போதைக்கு போதுமானது.’தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்பதை மாணவர்கள் அறிய வேணடும்.
  ஹேமந்த்
  உயர்நிலை மூன்று விரைவுநிலை
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*