உனக்குப் பிடித்த உணவு, எனக்கும் பிடிக்குமே!


பிட்ஸா, பர்கர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இட்லி, தோசை, இடியாப்பம், பனியாரம் போன்ற பாரம்பரிய உணவுகளைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா? உங்களுக்குப் பிடித்த பாரம்பரிய உணவு என்ன? அது ஏன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் பற்றிய கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள்– 2 ஆகஸ்ட் 2015.வாழ்த்துகள்!

10 கருத்துரை

 1. எனக்குப் பிடித்த உணவு உனக்கும் பிடிக்குமே
  எனக்குப் பிடித்த பாரம்பரிய உணவு செட்டிநாட்டுக் காரப் பனியாரம். அந்த உணவு மிகவும் ருசியாக இருக்கும். என் குடும்பத்தினரும் நானும் வார வாரம் பக்கத்தில் இருக்கும் உணவகத்திருக்குச் சென்று மகிழ்ந்து சாப்பிடுவோம். அந்தக் கடையில் வகை வகையான உணவுகள் இருக்கும். செட்டிநாட்டுச் சமையலில் நிறைய உணவுகள் இருக்கின்றன. சோறு, காய்கறிகள், இறைச்சி, போன்ற உணவுப்பொருட்கள் இருக்கும். அதை நாம் அளவோடு சாப்பிடவேண்டும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடனும் காரத்தோடும் இருக்கும். சில உணவுகளை வாயில் வைக்கவே முடியாது. ஏன் என்றால், அது மிகக் காரமாக இருக்கும். ஒரு நாள் என் உறவினர்களும் நானும் அந்த உணவகத்திற்குச் சென்றொம். அந்தக் காரப் பனியாரத்தை வாங்கினோம். அந்த உணவின் நிறத்தைப் பார்த்து வேண்டாம் என்று சொன்னார்கள் பிறகு, நான் அவர்களிடம் நிறத்தைப் பார்த்து தீர்மானம் செய்யக்கூடாது என்று விளக்கினேன். அந்த விளக்கத்திற்குப் பிறகு, அவர்கள் சாப்பிட்டார்கள். ஒரு வாய் வைத்ததும், அவர்களின் கண்கள் அகல விரிந்தன. ‘பிரமாதம்’ இது மாதிரி பாரம்பரிய உணவு சாப்பிடவில்லை என்று கூறினார்கள். இனிமேல் வார வாரமும் இந்த நல்ல உணவைத்தான் சாப்பிடுவேன் என்று சொல்லி வீட்டிற்குச் சென்றார்கள்.
  அஜய் (விரைவுநிலை ஒன்று)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 2. கடலலைகள் கரையில் வந்து மோதும்போது ஒளித்த இசை காதுகளுக்கு இனிமையாக இருந்தது. என் கண்முன் இருந்தவை எம்மாதிரியான சுவையைக் கொண்டிருக்கும் என்று அறியாவண்ணம் நான் அவற்றை உற்று நோக்கினேன். வாயில் வைத்துப் பார்த்தால்தான் தெரியும் என்று, குளிர்ந்த கடற்காற்று என் மீது வீச நான் அவற்றில் ஒன்றை எடுத்து ஒரு கடி கடித்தேன்…
  ஆஹா… என்ன சுவை; என்ன சுவை!… பீட்சாவைவும் பர்கரையுமே சாப்பிட்டுப் பழகிய என் செத்த நாக்கிற்கு அந்த வெங்காய பஜ்ஜி புத்துணர்வளித்தது. ஆமாம், மெரினா கடற்கரையில் உதித்த, சுவையில் நிகரற்ற, அப்பட்சணம் அந்த கணமே என் மனதில் நீங்கா ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது.
  என்னவோ தெரியவில்லை, அன்றிலிருந்து ஒவ்வொரு முறையும் வெங்காய பஜ்ஜியைக் காணும்போதும் என் வாயில் எச்சில் ஊரிவிடுகிறது… மிகவும் எளிய உணவாக இருந்தும் எப்படி இந்த பஜ்ஜிகளில் இப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான சுவை அடங்கியிருக்கிறது என்று நான் அடிக்கடி எண்ணியதுண்டு. இன்னும் சொல்லப் போனால், வெங்காய பஜ்ஜிகள் எனக்குப் பிடிக்கக் காரணமே இதுதான்.
  மேலும், கொஞ்சம் அன்புடன் சேர்ந்து பரிமாரும்போது பஜ்ஜிகளின் சுவை பல மடங்கு அதிகரிக்கிறது. எனவே, எப்போதும் எச்சந்தர்ப்பத்திற்கும் ஏற்றதாக பஜ்ஜிகள் திகழ்வதால் எனக்கு இப்பாரம்பரியச் சிற்றுண்டியின்மீது ஒரு சிறிய காதல்.
  குமரவேல் விக்னேஷ்
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி

 3. எனக்கு மிகவும் பிடித்த உணவு என் பாட்டிச் செய்யும் குழிப் பணியாரம் அவர் செய்யும் குழிப் பணியாரத்தை சாப்பிட்டால், சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். குழி பணியாரத்தில் வெல்லம் சேர்த்துச் செய்வார். குழி பணியாரத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் உண்ணலாம். இட்லி அல்லது தோசை மாவில் தான் குழி பணியாரம் செய்வார்கள். குழி பணியாரம் இனிப்பாகவும் செய்யலாம், காரமாகவும் செய்யலாம். எனக்கு இனிப்பாகப் பிடிக்கும். என் பாட்டி இந்தியாவில் வசிக்கிறார். அதனால் அவரை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தியாவில் சந்திப்பேன். அதனால் அவர் செய்யும் குழிப் பணியாரம் எனக்கு உயிர். என் அம்மா எனக்கு அடிக்கடி குழிப் பணியாரம் செய்துக் கொடுப்பார். அதை நான் விரும்பி உண்பேன். குழிப் பணியாரம் உண்ணும் போதெல்லாம் என் பாட்டி நினைவு எனக்கு வரும். அவர் செய்து தரும் குழிப் பணியாரத்தை உண்ண நான் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
  தாரணி செல்வகுமார்
  Chua Chu Kang Secondary School

 4. எனக்குப் பிடித்த உணவு உனக்கும் பிடிக்குமே
  எனக்குப் பிடித்த பாரம்பரிய உணவு தோசை.
  தோசையில் பல வகைகள் உள்ளன.
  அதில் எனக்குப் பிடித்தது ரவா தோசை ஆகும்.
  ரவா தோசையில் இருக்கும் வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும்
   கொத்தமல்லி  அதற்கு ஒரு அருமையான மணம் சேர்க்கும்.
  ரவா தோசையை சாப்பிடும்போது பச்சை மிளகாய்யை கடித்தால் ஒரு தனி சுவை.
  ரவா தோசையோடு சட்னியும் சாம்பாரும் சேர்த்து சாப்பித்தால் ஒரு தனி 
  சுவை.
  அதன் மேல் வைக்கும் நெய் உருகும்போது நாக்கில் எச்சில் ஊரும்.
  அது போன்ற பாரம்பரிய உணவை இன்றைய இளையர்கள் சாப்பிட ஆரம்பித்தால் பிட்ஸா, பர்கரை பற்றி மறந்துவிடுவார்கள்.
  ஹர்ஷினி பாலா 
  பாயா லேபார் மெதோதீஷ்த் பெண்கள் உயர்நிலை பள்ளி

 5. உனக்குப் பிடித்த உணவு, எனக்கும் பிடிக்குமே!
  உணவு என்றாலே நாவிற்கும், மனதிற்கும் ஒருவித இனிமையான சந்தோசத்தைக் கொடுக்கிறது. சுவையான உணவு வகைகளுக்கு அடிமையாகாத பிள்ளைகள் மிகக் குறைவே.பொறித்த கோழித்துண்டங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஜிலேபி, பால்கோவா, டப்பாவில் அடைத்த குளிர்பாணங்கள் இவையல்லாம் பிள்ளைகளின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக வகித்து வருகிறது. அதனால் உடல்பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவற்றிற்கு இளைய வயதிலேயே அடிமையாகிறார்கள். காய்கறிகள், பழங்கள் இவற்றின் சுவையையே அறிய இன்றைய பிள்ளைகள் மறந்துவிட்டனர்.
  எவ்வளவு உணவு வகைகள் இருந்தாலும் அம்மா சமைக்கின்ற உணவில் அன்பு, ஆரோக்கியம் அளவுக்கு அதிகமாகவே கலந்திருக்கும். நம் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு கவனத்துடனும் அக்கரையுடனும் சமைத்துக் கொடுக்கும் உணவு, சுவையான மருந்தாகவே நம் உடல் ஏற்றுக்கொள்கிறது.
  காலை முதல் இரவு வரை பள்ளியிலும், துணைப்பாட வகுப்புகளிலும் நாள் முழுவதும் செலவிடும் பிள்ளைகளுக்கு புரதச்சத்து, நார்சத்து, தாதுச்சத்து இவற்றை முறையே பிரித்து நம் உணவுகளில் காய்கறிகள், பழங்கள் மூலமாகக் கொடுக்கும் உணவே சிறந்த உணவாகும். இவ்வாறு சமைத்துக் கொடுக்கும் என் அம்மாவிற்குப் பிடித்த உணவே, எனக்கும் பிடிக்கும்.
  நிஷிகாந்த்
  Tech Whye Secondary School

 6. எனக்கு பிடித்த பாரம்ப்பரிய உணவு இட்லி.
  இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு.
  அது நல்ல உணவு மட்டுமின்றி ஆறோக்கியமான உணவாகும்.
  இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவாகும்.
  இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு.
  அது செட்டிநாடு இட்லி, ரவா இட்லி, சாம்பார் இட்லி ஆகும்.
  இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும்.
  எனக்கு பிடித்தமான இட்லி வகை சாம்பார் இட்லி ஆகும்.
  Thayallen
  Bukit View Secondary School.

 7. எனக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும். அதில் என்னுடைய பிடித்தமான உணவு இட்லி. அது சுவையாக இருக்கும். இட்லியில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. இட்லியில் சேரும் உளுந்தானது உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதுடன் ஜீரண சக்தியையும் கொடுக்க வல்லது. அதில் வைட்டமின் சி இருக்கிறது. இட்லி சீக்கிரம் செரிமானம் ஆகும் மற்றும் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். மேலும், இட்லியைப் பல விதமான குழம்பு வகைகளுடன் சாப்பிடலாம். அது மிகவும் ருசியாக இருக்கும். ஆகையால், என்னுடைய பிடித்தமான உணவு இட்லி.
  வர்ஷா (Varsha)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 8. எனக்கு பிடித்த பாரம்பரிய உணவு இட்லி. இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.இது தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாகும். இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. இது தும்பைப்பூ போன்று வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணலாம். இது எளிதில் செரிக்க கூடியது. இதில் கார்போஹறேட் அதிகமாக உள்ளது. அது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. உடல் சரியில்லாதவர்கள் கூட உண்ணலாம்.
  செட்டிநாட்டு இட்லியில் பலவகை உண்டு அதில் ரவா இட்லி சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி சாம்பார் இட்லி ஆகியவன ஆகும். எனக்கு சாம்பார் இட்லி மிகவும் பிடிக்கும். வாரம் இருமுறையாவது நான் அதை உண்பேன்.
  செவிக்குண வில்லாத போழுது சிறிது வயிற்றுக்கு மீயப்படும் என்று பொய்யாம்மொழி புலவர் வள்ளுவர் கூறியுள்ளார். இட்லி போல ஒரு உணவிருந்தால் செவிக்குணவை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம்.
  அரவிந்தன்
  Unity secondary school

 9. எனக்கு விருப்பமான பாரம்பரிய உணவுகள் பல உள்ளன. ஆனால் தமிழர்களின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் இட்லிதான் எனக்கு மிகவும் பிடித்த உணவு வகையாகும். இட்லியின் சிறப்பை விவரிக்கும் முன் எனக்கு ஏன் இட்லி பிடிக்கும் என்று சொல்கிறேன். மேகத்தை தின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இட்லி. இட்லியை உண்ணும்போது வட்ட நிலாவைத் தட்டில் வைத்து சட்னி தொட்டுச் சாப்பிடும் உணர்வு ஏற்படும். நீர் எப்படி சூட்டினால் ஆவியாகி மேகங்களாகுமோ அதே போல் ஆவியால் வேகவைத்து செய்யப்படுவதுதான் இட்லி. அரிசி, உளுந்து இரண்டையும் ஊற வைத்து மாவாக அரைத்து புளிக்க வைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. இட்லியில் கிட்டத்தட்ட 40 கலோரிகள் சக்தி உள்ளது. மேலும் இட்லியில் உள்ள புரதச்சத்து தசைகளுக்கு வலு சேர்க்கிறது. அதில் உள்ள மாவுச்சத்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. அது மட்டுமன்றி சுத்தமான இரத்த ஓட்டத்தையும் அளிக்கிறது. இட்லியின் மகத்துவம் அது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. குட்டி திருக்குறளில் எப்படி ஆழமான கருத்துக்கள் உள்ளனவோ அதே போல குட்டி இட்லியில் அனைத்து சத்துகளும் இருக்கின்றன. இட்லியைச் சாம்பாரில் தொட்டுச் சாப்பிட்டால் எனக்கு உலகமே மறந்துவிடும். எனக்குப் பிடித்த குட்டி இட்லி உங்களுக்கும் பிடிக்கும் நம்புகிறேன்.
  Vignesh
  Sec 2
  Anglo Chinese School (Independent)

 10. எனக்குப் பிடித்த பாரம்பரிய உணவு!
  உணவே மருந்து! மருந்தே உணவு!! என உணவைப் போற்றியவர்கள் நமது முனனோர்கள்.
  அதாவது நாம் உண்ணும் உணவு நமது நாவுக்கு மட்டும் ருசியாக இல்லாமல் , நமது உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கவேண்டும்.
  எனது அம்மா கேழ்வரகுக் கஞ்சியை அடிக்கடி காலை உணவாகக் கொடுப்பார்கள். அது ஒரு தானியம். அதை தண்ணீர் ஊற்றி இரவே வேகவைத்து விடுவார்கள். காலையில் அதில் மோர் மற்றும் உப்பு கலந்து கஞ்சியாகக் குடிக்க கொடுப்பார்கள். அதன் சுவை தேவாமிர்தம் போல இருக்கும்.
  முதலில் எனது அம்மா கட்டாயப் படுத்தியதால் தான் நான் ஆர்வம் இல்லாமல் குடிக்கத் தொடங்கினேன். ஒரு நாள் அதன் நன்மையைப் பின்வருமாறு விளக்கினார்கள்.
  கேழ்வரகை ஆரியம் என்றும் ராகி என்றும் கேப்பை என்றும் பல பெயர்களில் அழைப்பார்கள். நான்காயிரம் வருடங்களாக இதை இந்தியாவில் பயிர் செய்கிறார்கள்.
  மற்ற தானியங்களைப் போல் அல்லாமல் , இந்த தானியம் எளிதில் பூச்சி பிடிக்காத சக்தி வாய்ந்தது. எனவே இதை நீண்ட நாள் சேமித்து வைக்க முடியும். இதை சாப்பிட்டால் நமக்கும் அதன் சக்தி கிடைக்கும்.
  இதில் நாம் களி, கஞ்சி, தோசை, பக்கோடா மற்றும் லட்டு செய்யலாம்.
  இந்த தானியத்தை அரைவையில் நீர் ஊற்றி அரைத்தால் பால் வரும். இந்த பாலை தனியாக வடிகட்டி , கஞ்சியாகக் காய்ச்சி, நான் குழந்தையாக இருக்கும்போது எனக்குக் கொடுத்ததால் தான், நான் இன்று உடல் எதிர்ப்பு சக்தியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன்.
  நமது நாட்டின் வளமான எதிர்காலம், நம் வலுவான கரங்களில் உள்ளதை நினைவில் கொள்ளுங்கள்!
  தேஜல்
  சுவா சுகாங் உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*