உதவிய அனுபவம்

உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கும் அனுபவம். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, யாரென்றே தெரியாத புதியவர்களுக்கு, முதியவர்களுக்கு என்று பலருக்கும் உதவும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். அந்த சம்பவங்களை, கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 அக்டோபர்  2015.
இது தேர்வு மற்றும் விடுமுறை காலமாக இருப்பதால், பலரும் பங்கேற்க வசதியாக இறுதிநாள் 31 அக்டோபர் வரை நீட்டிக்கப்படுகிறது.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

8 கருத்துரை

 1. உதவிய அனுபவம்
  அவ்வினியக் காலைப் பொழுதை நான் பூங்காவிற்கு சென்று இயற்கை வளத்துடன் கழித்தேன். தென்றல் ‘சிலு சிலு’ வென வீசி என் கண்ணத்தில் முத்தமிட்டுச் சென்றது. குயில்கள் மரத்தில் உட்கார்ந்து சங்கீதம் பாட அதற்கு ஏற்றவாறு செடி கொடிகள் பரதநாட்டியம் ஆடின. அந்த எழில் மிக்கக் காட்சியை ரசித்தவாறே என்னை மறந்து இளைப்பாறினேன். அப்போது திடீரென்று ‘ஆ!’ என்று ஓர் அலறல் சத்தம் பூங்கா முழுவதும் பீறிட்டது. திடுக்கிட்டு எழுந்த நான், சுற்றும் முற்றும் பார்வையிட்டேன். குளத்தை நோக்கியபோதுnஒரு சிறுவன் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றதும் அவனுக்கு நீச்சல் தெரியாது என்பதையும் நீரில் மூழ்கப் போகிறான் என்பதையும் உணர்ந்தேன். அந்தக் கணப்பொழுதில்தான் நான் ஏன் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை என்றெண்ணி துக்கமடைந்தேன். அச்சிறுவன் வலையில் சிக்கிய மீனைப் போல் துடித்துக்கொண்டிருந்ததைப் பொருத்துக்கொள்ள இயலாமல் உடனே ஆழ்ந்து சிந்தித்தேன். அருகிலிருந்த நீளமானக் குச்சியைக் கையில் ஏந்திக்கொண்டு சிறுவனை இறுக்கி பற்றிக்கொள்ளுமாறு உரைத்தேன். என் உடலில் இருந்த அனைத்து சக்தியையும் திரட்டிக்கொண்டு குச்சியைப் பிடித்து இழுத்தேன். அப்போது ஒரு வழிப்போக்கர் விரைந்து வந்து எனக்குக் கை கொடுத்தார். இருவரும் சேர்ந்து சிறுவனைக் காப்பற்றினோம். அச்சிறுவனின் நன்றி பெருக்கை அவன் முகம் ‘அடுத்தது காட்டும் பளிங்கு’ போலத் தெளிவாகக் காட்டியதைக் கண்டவுடன் நான் மனம் பூரித்துப் போனேன்.

 2. அன்று பள்ளி விடுமுறை. சூரியன் தன் செங்கதிர்களை பூமி எங்கும் திரட்டினான். நானும் என் குடும்பத்தினரும்,இந்தியாவில் உள்ள மதுரை என்ற நகரத்தில் வசிக்கும் என் மாமாவை காணச் சென்றோம். வழியில், காலை உணவைச் சாப்பிட ஒரு உணவகத்துக்கு சென்றோம். அந்த உணவகத்துக்கு பக்கத்தில் ஒரு கண் தெரியாதவர் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது. அப்போது என் தாத்தா கூறிய வாரத்தைகள் என் மண்டைக்குள் எட்டியது, “மாற்றுதிறனாளிகளுக்கு உதவி செய்வது ஒவ்வொருவரின் முக்கியமான கடமை ஆகும்.” அந்த உணவகத்தில் உள்ள சாப்பாட்டை நான் வாங்கி அந்த கண் தேறியாதவறுக்கு கொடுத்தேன்.அவர் மகிழ்ச்சியுடன் உணவை பெற்றுக் கொண்டார். அவருடைய சிரிப்பில் இறைவனை கண்டது போல் இருந்தது. நான் அன்று செய்த உதவியை நினைத்து பெறுமை அடைகிறேன். என் முகம் சூரியனை கண்ட தாமரைப் போல் மலர்ந்தது. அன்று என் தாத்தா கூறிய வாரத்தைகளின் அர்த்தம் மட்டும் இல்லாமல் “தானத்தில் சிறந்த தானம் அண்ண தானம்”என்ற பழமொழியின் அர்த்தமும் தெரிந்தது.
  -நீகேத்னா, உயர்நிலை ஒன்று விரைவுனிலை,
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 3.  “நித்யா! நித்யா!” என ஒரு இனிமையான குரல் என்னை பின்னாலிருந்து அழைத்தது. நான் திரும்பியபோது ராமுவின் தாயார் புன்னகையான முகத்துடன் நின்று கொண்டிருந்தார். “ ரொம்ப நன்றி நித்யா, நீ ராமுவுக்கு செய்த உதவியை மறக்கமாட்டேன்!” என்று என்னை பாராட்டிவிட்டு சென்றார். இதை பார்த்துகொண்டிருந்த என் தாயாருக்கு ஒன்றும் புரியவில்லை . “என்ன விசயம் என்று என்னிடம் கேட்டார்” என் நினைவலைகள் பின்னோக்கி சென்றன. நான் என் அம்மாவிடம் நடந்தவற்றை கூற ஆரம்பித்தேன்…
  அன்று …
  “டிங்… டிங்… டிங்…” என்று பள்ளி மணி அடித்தது வகுப்பறைகளை விட்டு மாணவர்கள் சிட்டாய் பறந்தனர். நானும் மகிழ்ச்சியாக என் தோழிகளுடன் வகுப்பறையை விட்டு பள்ளி உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்து வகுப்பில் படிக்கும் ராமு உணவகத்தின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான். நான் அவனிடம் சென்று “என்னாச்சி ராமு?” என்றவுடன் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொல எனக் கொட்டியது. அவன் “ நித்தி, உனக்கு சிவாவை தெரியுமா, அவன் எப்பொழுதும் என்னை எல்லோர் முன்பும் கேலிசெய்கிறான். இன்று சற்று அதிகமாகி என்னை கை ஓங்கிவிட்டான். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது!” என கூறினான் ராமு.
   “என்னது ! சிவா-வா? அவன் ஒரு சட்டாம் பிள்ளையாச்சே (Student Counselor)!? அவன் ஏன் இப்படி செய்தான்? நீ கவலைபடாமல் வீட்டிற்குப்போ ,” என கூறிவிட்டு வேகமாக சிவாவை நோக்கிச் சென்றேன். அங்கு சிவ தன் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தான். “சிவா இங்கே வா!” என்றேன். “என்னா?” என்று திமிராக எழுந்து வந்தான். “சிவா நீ ராமுவை கேலி செய்தது தவறு ! அதுவும்மில்லாமல் நீ ஒரு சட்டாம் பிள்ளை, உன்னால் சட்டாம் பிள்ளையாகிய எனக்கும் அவமானமாக இருக்கிறது ! நாம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கவேண்டும்!”, என சிவாவுக்கு எடுத்து கூறினேன். சற்று நேரம் அமைதியாக இருந்தான். பிறகு தன் தவறை உணர்ந்து “ என்னை மன்னித்துவிடு நித்யா ! அவன் எங்க இருக்கிறான் ? ” எனக் கேட்டான். “அவன் வீட்டுக்குச் சென்றுவிட்டன் சிவா ! ” என பதிலளித்தேன். சிவா உடனே தன் கைத்தொலைபேசியை எடுத்து “என்னை மன்னித்துவிடு ராமு” என்று குறுந்தகவல் அனுப்பி தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டான்….
  என்று நடந்த வற்றை என் அம்மாவிடம் கூறினேன்.
  “நித்தி உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது “ என்று என் அம்மா கூறினார்.
  நித்தியஸ்ரீ
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி (உயர்நிலை ஒன்று)

 4. உதவிய அனுபவம்
  கடந்த ஜூன் மாத விடுமுறையின்போது என் அப்பா எங்கள் குடும்பத்தினரை தமிழகத்தில் இருக்கும், அவர் வாழ்ந்த கிராமத்திற்கு
  அழைத்துச் சென்றார். அங்கு வாழ்ந்து வருகின்ற என் தாத்தா, பாட்டியுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும்போது, என் தாத்தா வீட்டு அருகாமையில் இருந்த குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த , என் வயதையொத்த ஒரு பையனின் வாழ்க்கை என்னை யோசிக்க வைத்தது. ஏழ்மை காரணமாகவும், படிக்க போதிய வசதி இல்லாததாலும் அவன் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடன் நெருங்கிப்பேசியதில் அவனுக்குள் இருந்த படிக்கும் ஆர்வத்தைத் தெரிந்து கொண்டு என் தந்தை மூலமாக அவனுக்கு ஒவ்வொரு வருடமும் புத்தகம், சீருடை வாங்கித்தர முடிவு செய்தேன். என் உதவும் எண்ணத்தை ஊக்குவித்த என் தந்தை, அந்த சிறுவனுக்கு உதவியதோடு, அவனது தந்தைக்கும் பஞ்சாலையில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு உதவிய என் அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

 5. ஒரு நாள் நான் பள்ளி முடிந்து வீட்டீற்கு வந்துக்கொண்டிருந்த வழியில் எனது பணப்பையை தொலைத்துவிட்டு, அதை அங்கும் இங்குமாய் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த ஓர் சிறுமி என்ன ஏது என்று என்னிடம் வினவிவிட்டு என்னுடன் சேர்ந்து பணப்பையை தேடினாள். அறை மணி நேரம் கழித்து அவள் என்னுடைய பணப்பையை தேடிக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைத்தால். தனது பொன்னான நேரத்தை செலவழித்து உதவியதற்காக அவளுக்கு நன்றி சொன்னவாறே தெரியாத நபர் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு உதவினாய் என்று கேட்டேன். அதற்கு அவள் ” உன்னை எனக்கு இதற்கு முன்பே தெரியும். உன்னால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்.” என்று கூறினாள். எதுவும் புரியாமல் குழப்பத்தோடு நின்ற எனக்கு ஒரு சில நிமிடங்கள் கழித்து தான் எல்லாம் நினைவுக்கு வந்தன.
  அன்றோ, நான் காதுகளுக்கு விருந்தளிக்கும் குயிலின் சங்கீதத்தை கேட்டு ரசித்தவாறே பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்துக்கொண்டிருந்த அந்த சிறுமி இரும்பை கண்ட காந்தம் போல தனது கையடக்கத்தொலைபேசியில் கவனம் செலுத்தி மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தாள். நாங்கள் இருவரும் நடந்துக்கொண்டே ஒரு தெருமுனையை வந்தடைந்தோம்.
  அப்போது விரைந்துச் செல்லும் வாகனங்கள் ஓய்வதற்கு காத்துக்கொண்டிருந்த வேளையில் எனது காலணிகள் அவிழ்ந்துவிட்டதை அறிந்து அதை சரி செய்ய நான் குனிந்தேன். அச்சமயத்தில் அந்த சிறுமியோ தன் தொலைப்பேசியை மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே சாலையை கடக்க முயன்றாள்.
  அப்போது ‘பீர்’ என்று காதைப்பிளக்கும் அளவிற்கு ஒரு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் நாங்கள் திரும்பி பாரத்த எங்களுக்கு ஓரே அதிர்ச்சி. துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாவைப்போல வேகமாக அவளை நோக்கி வந்த வாகனத்தை கண்ட அச்சிறுமி, பனியால் உறைந்துப்போன சிலையைப்போல் என்ன ஏது செய்வதன்றி தெரியாமல், ஆடாமல் அசையாமல் நின்றாள். நான் உடனே சிட்டாய் பறந்துச்சென்று அவளை இழுத்துக்கொண்டு தெரு முனைக்குச் ஓடி சென்றேன். அவளை நான் இழுத்து வந்த வேகத்தில் தக்க நேரத்தில் நிறுத்த முடியாமல் அந்த புல் தரையில் விழுந்து புரண்டதால் ஏற்பட்ட சிறிய காயங்களோடு, நாங்கள் இருவரும் உயிர் தப்பினோம்.
  அதிர்ச்சி நிலையில் இருந்த அவளுக்கு ‘நன்றி’ என்ற வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கி வெளியே வர தவித்தன. எதுவும் பேச முடியாத நிலைமையில் இருக்கும் அவளுக்கு அந்த நேரத்தில்அறிவுரை கூறுவது சரியல்ல என்று எண்ணி நான் என் வீட்டை நோக்கி தொடர்ந்துச்சென்றேன்.
  அன்று நடந்த சம்பவத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு எனக்கு நன்றி கடன் செலுத்த தான் இந்த சிறுமி எனக்கு கஷ்டப்பட்டு உதவினால் என்பதை அறிந்தேன். பின்பு அவள் எனக்கு நன்றி கூறினாள். அச்சமயத்தில் நான் அவளிடம் “நானே அச்சம்பவத்தை மறந்துவிட்டேன். நீ ஏன் அதை நினைவில் வைத்துக்கொண்டு என்னிடம் நன்றி கூற வாய்ப்புகளை தேடினாய்?” என்று கேட்டேன். அதற்கு அவள் ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்ற குறலிற்கேற்ப கருத்தை நாம் செய்த உதவியை மறந்து மற்றவர் செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண்டும் என்று எளிய முறையில் கூறினாள். அன்று தான் நான் சிறு துளி பெறு வெள்ளம் என்பது போல ஒரு சின்ன செயலும் மற்றொருவருக்கு உயிரையே காப்பாத்தும் பெரிய உதவியாக திகழும் என்பதை அறிந்துக்கொண்டேன்.
  Rifayah Jumana
  Tanjong Katong Girls School

 6. உதவிய அனுபவம்
  பள்ளி விடுமுறையின் போது நான் என் குடும்பத்தோடு இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் பாட்டி கோயிலுக்கு சென்று வரலாம் என்று வற்புறுத்தினார். எனக்கு முதலில் விருப்பம் இல்லாமல் தான் இருந்த்து. ஆனால் பாட்டி சொல்வதை தட்ட கூடாது என்று நானும் கோவிலுக்கு சென்றேன்.
  கோவில் மிகவும் தொலைவில் இருப்பதால் அதற்கு ரயிலில் தான் செல்ல வேண்டும். ரயில் நிலையத்தின் வாசலில் அவர்களை பார்பதற்கு அப்பாவும் பொண்ணுமாகத்தான் இருந்த்து. அவர்கள் ரயிலில் ஏறும் வேகத்தில் கையில் வைத்திருந்த ஒரு கோப்பிலிருந்து ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை கவனிக்காமல் அவர்கள் ரயிலில் ஏறி சென்றார்கள்.
  கீழே விழுந்த கடித உறையை நான் எடுத்து திறந்து பார்த்தேன். அதில் சில பள்ளி சான்றிதழ்களும் நேர்முகத்தேர்வுக்கான ஓரு விண்ணப்பமும் இருந்தை நான் பார்தேன். நான் உடனே அதில் இருக்கும் விலாசத்தை வைத்து அதை அஞ்சலில் அனுப்பினேன். சில நாட்களுக்கு பிறகு யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தபோது ஒரு பெரியவரும் ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள்.
  ”நாங்கள் இந்த விலாசதை வைத்து தான் வந்தோம். நீங்கள் செய்த உதவியை எந்நாளும் மறக்கமாட்டோம்,”என்று சொல்லி அவர்கள் என்னை பாராட்டினார்கள். அதை கேட்ட என் பாட்டி மிகவும் பெருமிதம் அடைந்தார். இதுவே நான் உதவிய அனுபவம் ஆகும்.
  க. வேதா விக்னேஷ்வரி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 7. ‘உதவும் மன்ப்பான்மை என்பது வானில் இருக்கும் நட்சத்திரத்தைப் போல வானம் இருக்கும் வரை இருக்கும்’,
  இதிலிருந்தே நமக்கு தெரிவது என்னவென்றால் மற்றவற்களுக்கு உதவுவது மிகவும் முக்கியம். இதுபோல்
  எனக்கு ஒருவர் உதவி செய்தார்.அதை பற்றி நான் எழுதப்போகிறேன்.இதை படித்து அந்த உதவி என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்.
  அன்று நான் பள்ளி முடிந்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு ஓடிவந்தேன்.இதற்கு காரணம் என்னவென்றால், என் பள்ளியில் உள்ள அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்டன!!
  தேர்வுகள் முடிந்தாலே அனைவருக்கும் ஆட்டமும் பாட்டமும் அல்லவா.ஒடியதால் நான் மிக…இல்லை.. இல்லை.. மிக மிக சோர்வடைந்தேன்.ஆதலால் நான் சாப்பிட சென்றேன்.உணவை உண்டவுடன் நான் பணத்தை எடுக்க பணப்பைக்குள் கையை விட்டேன்.அப்பொழுதுதான் பண்பையை எடுத்து வர மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன்!!என் பதற்றத்தை கண்டு ஒருவர் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.நான் பிரச்சனையை கூறினேன்.அவர் எனக்கு உதவினார்.இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்.

 8. `உதவும்  மனப்பான்மை   என்பது  மலரல்ல,ஒரு  நாளில்  உதின்வதற்கு.அது விரல்களில்  இருக்கும்  நகங்களை  போல,விரலிடமிருந்து  இனைபபிறியாமல்  எப்போதும்  இருக்கும்.`
  இதிலிருந்து  தெரிகிறது  என்னவென்றால்  உதவுவது  மிகவும்  முக்கியம்.இதுபோல  என்  நெருங்கிய……..,இல்லை,இல்லை
  ,உயிர்  நண்பன்  எனக்கு  செய்த  மறக்க  முடியாத  உதவியை  பற்றி  விளக்கப்  போகிறேன்.நான்  எழுதும்  இந்த  கதை யிலிருந்து  நீங்கள்  உதவியின்  முக்கியத்தை  அறிவீர்கள்.படித்து  மகிழ்ச்சியும் ,பயனும்   அடைவீர்கள்  என்று  நம்புகிறேன்.
  நான்  எப்போதும்போல்,இடைவேளி  நேரத்தின்  போது,பள்ளி  உணவகத்திற்கு  சென்று  சாப்பாடு  வாங்கினேன்.அன்று  நான்  நிறைய  பணம்  எடுத்து  வந்தேன்,,ஏனென்றால்  அன்று  நான்  என்  பேருந்து  அட்டையில்  பணம்  ஏற்ற  வேண்டிருந்தது.என்  பணப்பையை  நான்  தொலைத்தேன்..அதை  என்  உயிர்  நண்பன் கண்டு  எடுத்து  தந்தான்.அவன்  ஒரு  நல்ல ,,பொறுப்புள்ள,அன்பான,உயிர்  நண்பனாக  இருந்து  எனக்கு  அதை  கண்டுபிடித்து  தந்தான்.உதவி  மிகவும்  முக்கியம் ..நான்  இந்த  உதவியை  மறக்க  மாட்டேன்..

Leave a Reply to yasri Cancel reply

Your email address will not be published.


*