உணவகக் கதை

ங்கள் தந்தை ஓர் உணவுக்கடை உரிமையாளர். ஒருநாள் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட, உங்களைக் கடையில் என்ன நடக்கிறது என்பதை, அங்கிருந்தபடி கண்காணித்து, தகவல் தந்து உதவச் சொல்கிறார். அந்த நாளில் அவ்வுணவகத்தில் பல ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவை என்னென்ன என்பதைப் பற்றி, உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 11 பிப்ரவரி 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
அக்டோபர் 2017, வெற்றியாளர்களின் பட்டியல்

Tharun Pongol Secondary School
Athif Bukit Bathok Secondary School (UPTLC)
Durai Kumaran Riverside Secondary school

19 கருத்துரை

 1. மழை பெய்து கொண்டிருந்தது.நிறைய பேர் ஈரமான குடையை கடைக்குள் தூக்கி வந்தார்கள்.குடையிலிருந்து வடிந்த தண்ணீர் தரையை ஈரமாக்கியது.சிப்பந்தி ஒருவர் கால் தவறி கீழே விழுந்தார்.மேலும் எல்லாருடைய சப்பாத்து சகதியாக இருந்தால் கடை அசுத்தமானது.
  இதைப் பாரத்தபோது,சில யோசனைகள் வந்தன.நான் பிளாஸ்டிக் பைகள் மறுபயனீடு செய்ய எண்ணினேன்.பிளாஸ்டிக் பைகளை எடுத்து சேர்ந்தேன்.இந்த பிளாஸ்டிக் பைகளைக் கடைக்கு வெளியே வைத்தேன்.வாடிக்கையாளர் குடையை பிளாஸ்டிக் பையில் வைக்கலாம்.குடையிலிருந்து வடியும் தண்ணீர் தரையை இனி ஈரமாக்காது.
  நான் கடைக்கு வெளியே ஒரு பணியாளரை நிறுத்தி வைத்தேன்.வாடிக்கையாளர்கள் சாப்பாத்தை வெளியே வைக்க வேண்டும்.அவர்கள் உள்ளே போகும்போது தரை அசுத்தமாகாது.சில நாள்கள் கழித்தது,கடையில் நல்ல கட்டுப்பாடு காணப்பட்டது.கூட்டமும் நிறைந்தது.மேலும் நிறைய புதிய வாடிக்கையாளர்கள் வரத் தொங்கினர்.
  அப்பா என் செயலைப் பார்த்துப் பெருமைப்பட்டார்.

 2. அன்று சனிக்கிழமை.என் அப்பாவுக்கு உடல் நல சரி இல்லாத்தால் அவர் என்னை கடையில் என்ன நடக்கிறிது என்பதை கண்காணிக்க சென்னார்.அதை போல நான் கடைக்கு சென்று அங்கு விஷயங்களை நான் ஒன்று விடாமல் குறிப்பிட்டேன்.
  அன்று கனத்த மழை பெய்துகொண்டிருந்த்து.மதிய உணவு சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்கள் நிறைந்தனர்.அவர்கள் எடுத்து வந்த் குடைகள் தரையை ஈரமாக்கைன.இதனால் தரையில் கால்தடங்ள் பதிந்து கடை அழுக்கானது. ஈரமான குடைகளை வாடிக்கையாளர்கள் பக்கத்து நாற்க்காலியிலும் மேசையிலும் வைப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.மற்ற வாடிக்கையாளர்கள் எப்படி எங்கே அமர்வார்கள்? யாரும் இதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை! மேலும் தரை மிகவும் வழுக்கல இருந்தது அதை கவனிக்காமல் அங்கு உணவு பரிமாற வந்த பணியாளர் ஒருவர் வழுக்கி கீழே விழுந்தார்.அவர் எடுத்து வந்த உணவு எல்லாம் விணாகிவிட்டது.உடனே மற்ற பணியாளர்கள் உதவிக்கு ஓடி வந்து அவரைத் தூக்கிவிட்ட பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.
  இதுபோல் ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க எங்கள் உணவகத்தில் குடைகள் வைக்க ஒர் இடத்தை ஒதுக்க வேண்டும்.அது மட்டும் இல்லாமல் தரையில் கால் தடங்கல் பதியாமல் இருக்க உணவக நுழைவாயிலில் மிதியடியைப் போட்டு வைக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை தந்தையுடன் பகிர்ந்து கொண்டேன்.நான் கண்காணித்துக் கூடிய தகவல்களும் யோசனைகளும் என் தந்தைக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  Mubasheer
  Queenstown secondary school

 3. அன்று சனிக்கிழமை.காலையிலிருந்தே மழை,’சோ’என்று பேய்துக் கொண்டிருந்தது.எனது தந்தையோ தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுபபி,’கண்ணா,எனக்கு இன்று கடைக்குச் சென்று வியாபாரத்தை பார்த்துக்கொள் மற்றும் எனக்கு உடலுக்குடன் அங்கு நடப்பவைகளை தெரிவிக்கவும் என்று கேட்டுக் கொண்டார்.
  நானும் அதற்கு சம்மதித்து,’நீங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்,நான் சென்று கடையை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி கடைக்கு புரப்பட்டேன்’.அன்று நான் பலவிதமான சம்பவங்களை காண நேர்ந்தது.அதில் என்னை கவர்ந்த நிகழ்ச்சி என்னவென்றால்,எங்கள் கடைக்கு ஒரு மூதாட்டி வந்திருந்தார்.அதே சமயம் இரண்டு சிருவர்களும் வந்திருந்தார்கள்.
  அப்போது அந்த மூதாட்டி மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.அவர் தனக்கு எந்ந உணவு வேண்டும் என்று என்னிடம் வினவிக்கொண்டிருந்தார்.அந்த சிரார்களும் உணவு வாங்கும் முறைக்காக பணத்தை எடுக்க முயன்றபோது அவரது பையில் பணப்பை இல்லாததை அப்பேதுதான் உணர்ந்தார்.
  அந்த மூதாட்டியோ,’ஐயோ!,எனது பணப்பையை எங்கேயோ தவரிவிட்டேனே’,என்று அழுதவாறு அதை தேடி சென்றார்.அப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.அச்சமையத்தில் அந்த சிருவர்கள் அந்த மூதாட்டுயை பார்த்து,’பாட்டு நீங்கள் பதட்டபடாதீர்கள்,உங்கள் பணப்பையை தேடி அலைய வேண்டாம்,ஏர்கனவே களைப்பாகயிருக்கீரீர்கள்.’சிருவர்கள் மூதாட்டிக்கு கொடுத்த ஐந்து வெள்ளியை பல நன்றிகள் கூறி இன்பத்தோடு வாங்கிக்கொண்டு உணவு வாங்கினார்.இதிலிருந்து தக்கசமையத்தில் உதவுபவனே நல்லவன் என்பதை உணர்ந்தேன்.
  ஹனீஷ்
  யுனிட்டி உயர்நிலைப் பள்ளி

 4. உணவகம் அன்று முதலில அமைதியாக காணப்பட்டது . ஒரு காபி அருந்திக் கொண்டிருந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி முட்டை பாராட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என் விழிகள் வாடிக்கையாளர்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தான் .திடீரென ‘ டும் டும் சாங் ‘ என்ற ஒலி என் செவிகளில் கேட்டன.
  மறுநிமிடம் சிங்க நடனம் குழு எங்கள் உணவகத்தின் நுழைவாயிலில் நடமாடின.எணக்குச் சற்று குழப்பமாக இருந்தது. அடுத்துக் காட்சி என்னை மலைக்கவைத்தது. சிங்க நடனக் குழுவுடன் சுகாதார மேம்பட்டு வாரிய அதிகாரிகள் இருவர் வந்திருந்தனர்.அவர்கள் என்னை நோக்கி வந்து என் கைகளைக் குழுக்கி என்னிடம் சான்றிதழ் ஒன்றைக் கொடுத்தனர். என்கள் உணவகத்திற்குத் தூய்மை விருது கிடைத்தது. நான் மகிழ்ச்சி கடலில் மூழ்கினேன்.உடனே இந்த நல்ல செய்தியை என் தந்தையிடம் தொலைபேசி மூலம் தகவல் கூறினேன்.

  தஷினி
  யுனிட்டி உயர்நிலை பள்ளி (Unity Secondary School)

 5. உணவகங்கள் இருக்கும் இடத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு கொல்லை பசி. “அண்ணா, உங்களுக்கு சுவையான கோழி சோறு வேண்டுமா?” என்று ஓர் இளைஞன் கேக்கும் சத்தம் என் செவிகளை தொலைத்தது. நான் திரும்பிபார்த்தபோது ஓர் இளைஞன் ஒரு கடையில் நின்றுகொண்டிருந்தான். அவனை பார்க்க சிறியவனாக இருந்தான். ஆர்வத்தினால், நான் அவனிடம் சென்று பேச ஆரம்பித்தேன்.”நீ இந்த கடையில் பணி புரிகிறாயா?” என்று நான் அவனிடம் கேட்டேன். அவன் அதற்கு, “நான் என் தந்தைக்கு உதவ வந்தேன், என் தந்தை இக் கடையின் முதலாளி”, என்று பணிவோடு கூறினான்.
  அதை கேட்ட எனக்கு இரண்டு வருடங்கள் முன்பு நடந்தது என் நினைவுக்கு வந்தது. நான் மெய்மறந்தேன். அன்று, ஞாயற்று கிழமை, என் தந்தை உடல்நிலை செரியில்லாமல் படுக்கையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தேன், தந்தை என்னிடம் “இன்று என்னால் கடைக்கு செல்ல முடியாது நீ சென்று கடையை பார்த்துக் கொள்கிறாயா ?” என்று கேட்டார் . நானும் ஒத்துக்கொண்டு, கடைக்கு சிட்டாய்ப் பறந்து சென்றேன்.
  அன்று, விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. பணியாளர்கள் மிகவும் கடுமையாக உழைத்தனர். நானும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன்.சுமார், நான்கு மணி இருக்கும். அப்போது, நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. என் இதயம் ஒரு கணம் நின்றது போல் இருந்தது.திடீரென்று, ஓர் விளக்கு வெடித்து தீ பிடித்துக் கொண்டது.
  நான் உடனே மின்சார விநியோகத்தை அனைத்து விட்டு, நான்அணைப்பான்களை எடுத்து மின்னல் வேகத்தில் தீயை அனைத்தேன். என் செயலால், பெரிய அபத்தில் இருந்து தப்பித்தோம்.
  அனைவரும் என்னை பாராட்டினார்கள். இதைக் கேள்விப் பட்ட என் தந்தை என்னை பாராட்டினார். நான் அனைவரையும் காப்பாற்றிய மனநிறைவோடு அன்று இரவு உரங் சென்றேன்.
  “அண்ணா கடைக்குள் வாருங்கள்” என்ற சத்தத்தை கேட்டு நிகல் காலத்திற்கு நான் வந்தேன். நான் கடைக்குள் சென்று ருசி மிகுந்த கோழிச் சோறை வாங்கி திருப்தியாக சாப்பிட்டு விட்டு அந்த சிறுவனிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
  Yeswanth Balasubramanian
  St. Hilda’s Secondary School , 1D

 6. நான் மின்னல் வேகத்தில் என் பொருட்களை எடுத்து எடுத்துக்கொண்டேன். அன்று என் அப்பாவுக்கு காய்ச்சளாக இருந்த்ததால் நான் அவருடைய உணவு கடையை நடத்த சென்றேன். நான் உணவரையை அடைந்த்தும் நான் கண்ட காட்சி என்னால் நம்ப முடியவில்லை. நான் கடையுள்ள நுழைய இடமை இல்லை. கடை நிரம்ப கூட்டமாக இருந்த்து. நான் உடனே வேலையை ஆரம்பித்தேன். நான் சமைத்த உணவை வாடிக்கையாளரிடம் கொடுக்க சென்றேன். அப்போது ஒரு வாடிக்கையாளர் என்னை அழைத்தார். ஏன் அவர் என்னை கூப்பிட்டார் என்று நினைத்துக்கொண்டே அவரிடம் சென்றேன். அப்போது, ‘என் உணவில் ஒரு மூடி இருக்கிறது!’ என்று கோபமாக கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே இல்லை. அது யாருடையது என்று யோசித்தேன். அப்போது அது என்னுடையது என உணர்ந்தேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.உடனே நான் அவரிடம் இன்னொறு உணவை எடுத்து வந்தேன். அவரிடம் இன்னொறு முறை மனிப்பு கேட்டேன். நான் அந்த சம்பவத்தை மனித்தில் வைத்துக்கொள்ளாமல் என் வேலையை மீண்டும் ஆரம்பித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து நான் கடையை மூட தயார் செய்தேன். அப்போது, ஒரு வாடிக்கையாளர் என்னிடம் வந்து, உன் தணவு அருமையாக இருக்கிறது.உன் அப்பாவின் மீது நீ பெறுமை படவேண்டும். அவருடைய சமையல் அருமையாக இருக்கும் அவர் உன்னை மாறி ஒரு பிள்ளை இவ்வளவுஒருநல்ல குணத்துடன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கினோம்.என்று கூறி என்னிடம் விடைபெறினார் அவர் சொன்னதை பற்றி யோசித்து மகிழ்ந்தேன்.அன்றிக்கு என்ன நடந்தது என்று என் அப்பாவிடம் கூற என் வீட்டுக்கு ஓடினேன்.
  P Pavithra Manjyot
  St. Hildas’s Secondary School

 7. வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருந்ததால், என் அப்பா என்னை கடைக்குப் போக சொன்னார். ஆனால் எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. தேர்வுகள் முடிந்து விட்டதால் சாக்கு போக்கு சொல்ல முடியாமல் வேறு வழியின்றி சென்றேன். அங்கே உள்ள ஊழியர்கள் சுறுசுறுப்பாகவும் சிரித்தமுகத்துடனும் திறமையாகவும் வேலை செய்தனர். அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
  நான் எப்போதும் என் வேலைகளை சிறிது அலட்சியத்துடன் செய்வதாக என் பெற்றோர் எண்ணுவதுண்டு. என் தந்தை இல்லாவிட்டாலும் கூட ஊழியர்கள் சுறுசுறுப்பாக தங்கள் வேலையைச் செய்ததை பார்க்கும்போது எனக்கும் உற்சாகமாக இருந்தது. நானும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன். என் தந்தையின் நிர்வாக திறமையை நினைத்து மெய் சிலிர்த்து போனேன்.
  தீடீரென்று, தொலைக்காட்சி நிலையத்திலிருந்து சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொலைக்காட்சி நடிகர் வந்தார். உணவு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க அவர்கள் வந்தனர். என் தந்தையின் கடையில் தயாரிக்கும் உணவுகளின் தரமும் சுவையும் சிறப்பாக இருந்ததால் அவர்கள் வந்தனர். என்னை பேட்டி எடுத்தனர். எங்கள் கடையை அவர்கள் தேர்ந்தெடுத்ததை நினைத்து பெருமையாக இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
  இரவு வீட்டிற்குச் சென்றதும் என் தந்தையிடம் நடந்ததை கூறினேன். அன்றிலிருந்து எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய ஆரம்பித்தேன். இனிமேல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடைக்குச் சென்று தந்தைக்கு உதவலாம் என்று மனதில் உறுதி பூண்டேன். என்னுடைய இந்த மாற்றத்தை என் அப்பா பாராட்டினார்.
  Heba Janet
  St.Hilda’s Secondary School

 8. “மகன், நீங்கள் சென்று கடை பார்த்துக்கொள்ள வேண்டும்” எண்று தந்தை என்னிடம் கூறினார்.நான் சரியென்று கூறினேன்.நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.
  வழியில் நான் ஒரு பேய் பார்த்தேன். என் வாய் அகலமாக இருந்தது.நான் ஒரு சிறுத்தை வேகத்தில் ஓடினேன். ஆனால்அது என்னை துரத்தியது.
  நான் சோர்வடைந்தேன் அதனால் நான் ஓடுவதை நிறுத்தி ஓரு பெரிய குச்சியை எடுத்தேன்.அதை பேய் மேல் வீசினேன்.அது பேய்க்குள் போனது.”உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டேன்.
  பேய், “நான் உன்னை கொல்லுவேன்.நீ என்னை பார்த்ததை அனைவரிடமும் சொல்லி விடுவாய்” என்றது. நான் வீட்டுக்குள் ஓடிவிட்டேன். ஆனால் நான் சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. அதற்குப்பின் பேய் என்னைத் தேடி வரவில்லை
  எஸ்.ஜெகதீஷ்
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 9. “ரவி!நீ இன்று கடைக்குச் சென்று வியாபாரம் செய்.எனக்கு உடல் நலமில்லை,”என்று ரவியின் அப்பா அவனிடம் கூறினார்.அதைக் கேட்ட ரவி உடனே கடைக்குச் சென்றான்.
  கடை கூட்டமாக இல்லை.ரவி கோழி சோறு சமைத்தான்.நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை.அந்த நேரத்தில் நிறைய பேர் உணவகத்துக்கு வந்தனர்.அப்போது மதிய உணவு நேரம் என்று அவனுக்குத் தெரிந்தது.
  கோழி சோறு கடையில் நீளமான வரிசை இருந்தது.ரவி சுறுசுறுப்பாக வேலை செய்தான்.நேரம் மூன்று மணி.எல்லா உணவும் முடிந்ததால்,ரவி கடையை மூடினான்.பின் அவன் விட்டுக்குத் திரும்பினான்.
  அவன் தன் அப்பாவிடம்”நீங்கள் எப்படி தினமும் வியாபாரம் செய்கிறீர்கள்?மிக சோர்வாக இருக்கிறேன்”என்று கூறினான்.அதைக் கேட்ட அப்பா சிரித்தார்.
  தாரா பிள்ளை
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 10. சூரியனின் ஒளி இனிய காலை பொழுதை அலங்கரித்தது. நான் என் படுக்கையிலிருந்து எழுந்து, பற்களை துளைக்க என் அறையிலிருந்த கழிவழையை நோக்கிச் சென்றேன்.திடீரென்று, என் அறையின் கதவை யாரோ தட்டுவதை நான் கேட்டேன். நான் கதவை திறந்தபோது, நான் என் தாயாரைப் பார்த்தேன். அவர், என் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், என் அப்பாவால் உணவகத்திற்க்கு செல்ல முடியாது என்று கூறினார்.
  உடனே, நான் தயங்காமல் உணவகத்தை பார்த்துக்கொள்ளும்படி நான் என் அம்மாவிடம் கூறினேன். சற்று நேரத்தின் தயக்கத்திற்க்கு பிறகு, எனக்கு அன்று சீனப் புத்தாண்டு விடுமுறை இருந்ததால், என் அன்னை அதற்கு சம்மதித்தார். நான் என் காலைக்கடண்களை செவ்வனே முடித்து, என் தந்தையிடம் நான் அவருக்கு பதிலாக உணவகத்திற்க்கு செல்வதாகே மொழிந்தேன். அவர் தன் மனமார்ந்த நண்றியை தெரிவித்தார்.
  அதிகம் தாமதிக்கால், நான் உணவகத்திற்க்குப் புறப்பட்டேன். சில நிமிடங்கள் கடந்தன. மக்கள் புன்னகை தவழும் முகத்துடன் உணவகத்தை நுழைந்தனர். அனைவரும் சாப்பிட்டு முடித்து, உணவகத்திலிருந்து கிளம்பினர். இப்படியே நடந்துக்கொண்டிருந்தது. மாலை நேரம் வந்தது. மக்கள் கூட்டம் நிரம்பிக்கொண்டிருந்தன. அனைவரும் சந்தோஷமாக பேசி, ‘கலகல’ என்று சிரித்துக்கொண்டிருந்தனர்.
  திடீரென்று, ஒரு பருமணாகவும் உயரமாகவும் தோற்றம் உடைந்த ஆடவர் ஒருவர், உணவகத்தில் வந்தான். அவர் என்னை பார்த்த, “என்னிடம் உனக்கு இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடு. இல்லையென்றால்… இன்று நீ மரணம் அடைவாய். ” பயம் என்னை ஆட்கொள்ள என் நெஞ்சு ‘படக், படக்’, என தாளம் போட்டது. ஆனால், நான் என் பயத்தை காட்டவில்லை. நான் அவரிடம் உறுதியாக ‘இல்லை’ என்று மொழிந்தேன். கோபக்கனல் அவர் கண்களில் தெரிந்தது. அவர் என்னை அடிக்க முயன்றார்.
  ஆனால் அதிர்ஷ்டவசமாக, என்னால் ‘டேக்வாண்டோ’ மிகவும் சிறப்பாக செய்ய முடியும். ஆதலால், நான் டேக்வாண்டோவை செய்தேன். சில வினாடிகளில், அவர் வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்தான். நடந்ததை அறிந்த வாடிக்கையாளர் ஒருவர், காவலரை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டார். சில நிமிடங்களுக்குள் காவலர்க் வந்தனர், அந்த ஆடவரை காடியில் அழைத்துச் சென்றனர்.
  அதற்கு பின், அவர் என் தைரியமான செயலை பாராட்டினார். அவர் என் பெற்றோர்களை தொலைபேசியின் மூலம் நடந்தவற்றை கூறினார். இருவரும் ஆவலான தோற்றத்துடன் உணவகத்திற்கு வந்தனர். அவர் எனக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாததை கண்டு மகிழ்ந்தனர். இருவரும் என் வேகமான யோசனையை பாராட்டினார்கள். இந்த சம்பவம் என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கும்.
  Gloria Vadukkoot Chacko
  St. Hilda’s Secondary School

 11. கதை
  அன்று என் அப்பாவுக்கு உடல் நலமில்லை. என் தந்தையார் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார். அன்று அவர் உடல் நலம் குன்றியிருந்ததால், என்னை கடையை பார்த்துக்கொள்ள கூறினார். நான் தயங்கி ஏற்றுக்கொள்வதைக் கவனித்த என் தந்தை, “மாறன், நீ ஒரு தலைசிறந்த மாணவன். உன்னால் எளிதாக கடையைக் கவனிக்க முடியும்,” என்று கூறினார்.
  நான் உணவகத்திற்கு உற்சாகமாகச் சென்றேன். மதியம்வரை உணவகம் நன்றாக செயல்பட்டது. அப்போது, திடீரென ஓர் ஆடவர் அவரது மேசையில் அடித்து கூச்சலிட்டார். என்ன செய்வது என்று அறியாது உணவக உதவியாளருடன் அவர் அருகில் சென்றேன். அவர் உணவின் சுவை சரியில்லை என்று குறை கூறி புகார் செய்யப் போவதாக மிரட்டினார். உடனே, நான்,”ஐயா, உங்கள் வருத்தத்தை உணர்கிறேன். இன்று நீங்கள் சாப்பிட்ட உணவிற்கு பணம் செலுத்த வேண்டாம். உங்களது குறைகளை இந்தப் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுங்கள். மேலும் எங்கள் உணவக பற்றுச்சீட்டுக்களை இலவசமாகக் கொடுக்கிறேன். நாளை வந்து சாப்பிட்டு உங்களது கருத்தைக் கூறுங்கள்,” என்றேன். எனது செயல் கண்டு அந்த ஆடவர் கூனிக் குறுகி நின்றார். மற்ற வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு வாழ்த்தினர். என் தந்தைக்கு பிறகு தொலைபேசியில் அழைத்து கூறியபோது அவர் பாராட்டினார். இந்த அனுபவம் என் மனதில் பசுமரத்தாணிப் போல ஆழமாகப் பதிந்தது.
  ரஞ்சித் குமார்
  RANJITH KUMAR, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 12. கதை
  அன்று மாலை மங்கி லேசாக இருள் கௌவும் நேரம். நாளையிலிருந்து என் தந்தையின் உணவகம் மீண்டும் அதிக நாள் கழித்து திறக்கப்போகிறது. ஆனால் கவலையாக, என் தந்தையின் உடல் நலம் சரியில்லை. அதனால், அவர் என்னையும் என் தம்பியையும்
  அனுப்பி கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.
  அடுத்த நாள் நானும் என் தம்பியும் உணவகத்தை நோக்கி விரைந்தோம். காலையில், காலை உணவு உண்ண பல பேர் வந்திருந்தனர். அன்றுதான் நாங்கள் முதல் முறையாக வேலைச் செய்வதால் , பதற்றத்தில் உணவில் சில குறைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் எங்களைத் திட்டினர்.
  சிலர் கத்திக் கூச்சல் எழுப்பத் தொடங்கினர். நாங்கள் மன்னிப்பு கேட்டு அவர்களை சமாதனப் படுத்தி அனுப்பினோம்.ஆனால் நாங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உழைத்தோம். அன்றைய நாள் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
  பிரதீப்
  SUDHAGAR PRADEEP, 2C1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 13. கணேசா, சில நாளாக எனக்கு உடல் நலக் குறைவினால், என்னால் கடையை சரியாக கவினிக்க முடியவில்லை சில சமயத்தில், வாடிக்கையாளர்கள் கூறும் உணவை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. உன்னால் எனக்காக கடையை ஒரு முன்று நாள்களுக்கு கவனிக்கமுடியும்மா?” என்று கேட்டார். அதற்கு நான்,”நிச்சயமாக அப்பா” என்று கூறினேன். அடுத்த நாளே நான் கடையை திறந்தேன்.
  சிறிது நிமிடம் கழித்து, கடைக்கு ஒருத்தர் வந்து தோசையை கேட்டார். சிறிது நேரம் கழித்து, நான் அவரிடம் சென்று தோசையை கொடுக்கும் பொது, அவர் என் கண்ணுக்கு தென்படவில்லை. முப்பது நிமிடம் ஆகியும், அவர் கடைக்கு திரும்பி வரவில்லை. அதனால், நான் தோசையை வீசி யெரிந்தென்.
  மறுநாள் காலையில்,அவர் அதே நேரத்தில் வந்து,”நான் சற்று முன்பு தோசையை கேட்டேனே அது எங்கே?” என்று கேட்டார். நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் திரும்பி கொடுக்கும் முன்னாடி அவர் கடையை விட்டு
  கிளம்பினார்.
  வீட்டுக்கு சென்றதும், நான் என் அப்பாவடம் இச்சம்பவத்தைப்பற்றி கூறினேன். அதற்கு அவர்,”நான் உன்னிடம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அவருக்கு டிமென்ஷியா இருக்கு. டிமென்ஷியா ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. அது ஒரு மனிதனின் சிந்தனை திறனை பாதிக்கும்.” என்று கூறினார்.
  எனக்கு அப்பொழுது தான் டிமென்ஷியா என்றால் என்ன தெரிந்துக்கொண்டேன். அதனால் அந்த நபர் வருவதற்குமுன், அவருக்கு
  தோசையை செய்தேன். அவர் வந்ததும், தோசையை பரிமாறினேன். அவரும் உண்டதும் பணத்தை கொடுத்துக் கிளம்பினார். இச்சம்பவத்தை என் மனதுக்குள் எப்போழுதும் இருக்கும்.

  கணேஷ் பெரியசாமி – 4N2
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 14. அன்று என் அப்பா உடல்நலக் குறைவாக இருந்தார். அதனால் நான் முதல்முறையாக எங்கள் கடைக்குச் சென்றேன். கடையில் சிப்பந்திகள் மும்முரமாக வேலை செய்துக்கொண்டு இருந்தனர். அப்போது இரண்டு மாணவர்கள் எங்கள் கடைக்கு வந்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவை வாங்கினார்கள். பின் அங்கேயே உண்ண ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் அவ்விடத்தில் இருந்து கிளம்பினார்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். எனக்கு கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை. ஒரு பெற்றோர் ஒரு மாணவன் வாங்கி உண்ட உணவால் அவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்று கூறினார். உடனே நான் சமையலறையை நோக்கிச் சென்றேன். அங்கு சமையல்காரர் கையில் உறை போடாமல் வேலை செய்வதை கண்டு பிடித்தேன். சுத்தம் சுகம் தரும் என்னும் அறிவுரையைக் அவருக்கு கூறினேன். அப்பெற்றோர்களும் என்னிடம் நன்றி கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றனர்.
  நார்வின்ட்
  உயர்நிலை 2 வழக்கம்
  தெக் வாய் உயர்நிலைப்பள்ளி

 15. அந்நாளில் நான் நிறைய பண்புகளைக் கற்றுக்கொண்டேன். பண்பு மட்டும் இல்லாமல் நான் பணத்தையும் வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகளையும் பார்த்தேன். என் வாழ்க்கையில் இதுவரை ஏற்படாத மிகப் பெரிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. கடை சரியான நேரத்தில் திறக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் கடை மிகவும் அசுத்தமாக இருந்தது. கடையில் இருந்தவர்கள் தொலைப்பேசியைப் பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள். அப்பா இந்நேரம் இங்கிருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும் என நினைத்துக்கொண்டேன். திடிரேன எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் தந்தைக்கு இங்கு நடப்பவற்றை காணொளி எடுத்து அனுப்பினேன். அடுத்த நிமிடம் என் தந்தை அனுப்பிய பதிலைத் தொலைக்காட்சியில் போட்டேன். வேலையாட்கள் தந்தை தான் நேரே வந்து பேசுகிறார்கள் என நினைத்து வேலையை வேகமாக செய்ய தொடங்கினார்கள்.
  அடில்
  உயர்நிலை -2
  தெக் வாய் உயர்நிலைப்பள்ளி

 16. அன்று நான் கடைக்குச் சென்றேன். கடையின் அருகே போகும் போது வேலையாட்கள் மிகவும் பதற்றமாக இருந்தார்கள். அனைவரும் எந்த வேலையும் செய்யவில்லை. எல்லோரும் கைத்தொலைப்பேசியை பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள். கடையில் உள்ள பொருள்கள் தரையில் கிடந்தன. எனக்கு கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை. நான் உள்ளே சென்று பார்த்தேன். கடையில் உள்ள பணப்பெட்டியைக் காணவில்லை. கடையில் வேலை செய்பவர்களை கேட்டால் திரு திரு என அவர்கள் விழித்தார்கள். அனைவரும் பதற்றத்துடன் இருந்தார்கள். என் நெஞ்சம் படக் படக் என்று அடித்தது. உடனே என் தந்தையை அழைத்தேன். சிறிது நேரத்தில் காவலர்கள் அங்கு வந்தனர்.
  அதிரா
  உயர்நிலை 2 வழக்கம்
  தெக் வாய் உயர்நிலைப்பள்ளி

 17. என்றுமே சுறுசுறுப்புடன் எழுந்து தன் உணவகத்தை சிறப்பாக நடத்தி வந்த என் தந்தை , அன்று என்னவென்று தெரியவில்லை தன் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை.என்ன நடந்தது என்று என் தாயாரிடம் கேட்டபோது தந்தைக்கு உடல் நலமில்லை என்று கூறினார்.என் தந்தைக்கு உடல் நலமில்லை என்பதால் அவரின் பொறுப்பை தலைமேற்கொண்டு செய்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று நான் சூளுரைத்தேன்.நான் உடனே என் தந்தையின் உணவகத்திற்கு விரைந்து சென்று அதை பார்த்துக்கொண்டேன்.அன்றுதான்,என் தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று எனக்கு புரிந்தது. அவர்களையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை.கடையில் வேலைசெய்ய என்னை சேர்த்து மூன்று பேர் மட்டுமே இருந்தோம் .வெறும் மூன்று பேரால் இவ்வளவு கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் நான் என் நண்பர்களிடம் உதவி கேட்டான். அவர்களும் கடைக்கு வந்து எனக்கு உதவி செய்தார்கள். அப்போது என்னுடைய தோழி மீரா தவறான உணவை உணவு உன்னவந்த ஒருவருக்கு பரிமாறிவிட்டதால் அவர் மிகவும் கோபத்துடன் கடையைவிட்டு கிளம்பிவிட்டார்.அதனால் அந்த உணவு வீணாகிவிட்டது.பிறகு ஒருவர் என்னிடம் வந்து உணவகம் சுத்தமாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.என் தந்தை இல்லையென்பதால் எந்த வேலையையும் சரியாக நடக்கவில்லை.என் தந்தை இருந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்குமோ அவ்வாறு பழையபடி ஆக்க நிறைய முயற்சி செய்தேன்.’முயற்சி திருவினையாக்கும்,முயன்றால் சாதிக்க முடியும்.’ என்ற பொன்மொழி உண்மையாகியது.நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உணவகத்தை நன்கு சுத்தம் செய்தோம்.அடுத்ததாக,கடைக்கு வரும் உணவு உண்பவர்களிடம் பணிவாகவும் பொறுமையாகவும் அவர்கள் கேட்டவற்றை சரியாக பரிமாறவும் வேண்டும் என்று நான் என் நண்பர்களிடம் கூறினேன்.அவர்களும் அதைபோல் செய்தனர்.எல்லோரும் வயிறார சாப்பிட்டு எங்களை பாராட்டியது எங்களுக்கு மனதிருப்தியை அளித்தது.
  ரெபேக்கா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 18. அன்று பள்ளி விடுமுறை . என் தந்தை என்னை அழைத்து” நரேன், இன்று உனக்குப் பள்ளி விடுமுறைதானே, எனக்கு உடல்நலம் சரியில்லை . இன்று எனக்காக நீ கடைக்குச்சென்று பார்த்துக் கொள்கிறாயா? என்று கேட்டார். நான் அவர் பேச்சைத் தட்டாமல் உடனே, “சரியப்பா” என்று கூறி விட்டு க் கடைக்குக் கிளம்பினேன்.
  கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல வாடிக்கையாளர்கள் பரோட்டாவையும் எங்கள் கடையின் பிரபலமான கோழிக்கறியையும் வாங்கி ருசித்து உண்டார்கள். சனிக்கிழமை என்பதால் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் தாய்மார்கள் இடம்பிடித்து உட்கார வரிசையில் நின்றனர். வரிசையில் ஒரு பதின்ம வயது மாணவன் தனியாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு இரண்டி ஆள் தள்ளி ஒரு கரப்பிணிப் பெண் தனது இரண்டு வயது மகளுடன் நின்று கொண்டிருந்தார். அந்த சிறுமி எனக்குப் பசிக்கிறது என அழுது கொண்டிருந்தாள். வரிசையில் நின்று இருபது நிமிடங்கள் கழித்து அந்த பதின்ம வயது மாணவனின் முறை வந்தது. அவன் சற்றும் யோசிக்காமல் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அந்தக் கர்பிபணிப் பெண்ணை அழைத்து தன் இருக்கையில் அமரச்சொன்னான். இந்நிகழ்ச்சியைக் கண்ட என் கண்கள் கலங்கின. அம்மாணவனுக்கும் பசிதான் ஆனாலும் மனித நேயத்தின் காரணமாக அவன் செய்த இந்த சிறிய செயல் என்னை ஆச்சரியப்பட் வைத்தது. வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே நான் கண்ட இச்செயல் என் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
  நரேன்குமார்
  ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி

 19. என் தந்தை உடல்நலக்குறைபாட்டினால் படுத்த படுக்கையாய் இருந்தார்.அதனால் அவர் என்னிடம் தன் உணவுக்கடையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைத் தந்தார். நானும் எனது கடமையைச் செய்யக் கடையைத் திறந்தேன். ஏதோ அங்கு சரியில்லாததுபோல் உணர்ந்தேன். நான் கடைக்குள் நுழைந்த அடித்த நிமிடம் மின்சாரம் பட் என்ற சத்தத்துடன் வெடித்து அதைத் தொடர்ந்த வினோதமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. நான் கிலியிடன் திரும்பிப் பார்த்தேன். கோழிகளும், ஆடுகளும், மீன்களும் குழம்புச்சட்டியிலிருந்து எழும்பி எஙக்ளைச்சுற்றி நடனமாடின. இது கண்கட்டு வித்தையோ எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டு மறுபடிக் கண்ணைத் திறந்தபோது என் தந்தை கூறிய வார்த்தைகள் . அச்சம் என்பது மடமையடா. இது வெறும் கனவு கனவு தான். நானும் இப்படித்தான் அடிக்கடி எழுந்து உட்காருவேன். நம் கடை கட்டப்பட்டிருக்கும் இடம் முன்பு ஒருகாலத்தில் சுடுகாடாக இருந்தது. எல்லாம் மனப்பிரமைதான் எதையும் யோசிக்காமல் உன் கடமையைச் செய்” என் செவிகளில் ஒலித்தது. நான் கனவில் இருந்து விடுபட்டு கடமை வீரனாகப் புறப்பட்டேன்
  ஹர்மிதா -உயர்நிலை இரண்டு
  ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*