இளையர்களின் கதைகள்

நண்பர்களோடு பொழுதைக் கழிக்க நமக்கு மிகவும் பிடிக்கும். குழுவாகப் படிப்பது, உணவகங்களுக்குச் செல்வது, சிறு சுற்றுலாக்களுக்குச் செல்வது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது என்று நண்பர்களோடு கழிக்கும் பொழுதுகள் இனிமையானவை. அப்போது நடக்கும் சுவையான சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. அப்படி நண்பர்களோடு நடந்த சுவையன சம்பவங்களை, கதைபோல் எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 5 ஜூன் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஏப்ரல் மாத, கதைப் போட்டியின் வெற்றியாளர்கள்
Dhejal – Chua Chu Kang Secondary School
Sushmitha Krishnan – Fajar Secondary School
Rethinam Rebecca – Chua Chu Kang Secondary School
****

2 கருத்துரை

 1. நண்பர்களோடு கழித்த பொழுது
  நண்பர்கள் நம் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகப் படிப்பது, உணவகங்களுக்குச் செல்வது, சிறு சுற்றுலாக்களுக்குச் செல்வது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது என்று நண்பர்களோடு கழிக்கும் பொழுதுகள் இனிமையானவை. நான் என் நண்பர்களுடன் நிறைய மகிழ்ச்சியான நேரங்களில் கூட இருந்திருக்கிறேன். அதில் ஒன்றை நான் என் கதையில் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.
  பள்ளியில் அன்று நான் என்னுடைய நண்பர்களுடன் “பவரிங் லைவ்ஸ்” போட்டிக்குச் சென்றேன். அந்தப் போட்டி வேறு ஒரு பள்ளியில் நடைபெற்றதால் ஆசிரியர் எங்களை அங்கு அழைத்துச் சென்றார். அங்குச் சென்றவுடன் நானும் என் நண்பர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். அதில் முதல் பாகம் நம் ஆர்வத்தை தூண்டியது. குழுவில் நான் என் நண்பர்களுடன் அந்த விடையை கண்டறிய பல கணக்கு போட தேவையிருந்த்து. அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்த்து. இதே போல மற்ற பாகங்களிலும் அறிவியல் பிரச்சனைகள் தீர்ப்பது போன்ற ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் நடைப்பெற்றன. இந்த நடவடிக்கைகளை என் நண்பர்களுடன் இணைந்து செய்யும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, சிரித்துப் புன்னகையுடன் செய்வது என் மனதில் மறவாமல் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இதுப் போலவே இன்றும் நான் என் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் பழகி வருகிறேன்.
  ஹேமந்த்
  உயர்நிலை மூன்று விரைவுநிலை
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 2. “நண்பனில்லா வாழ்க்கை வண்ணமில்லா வானவில் போலாகும்”.அதுபோல நண்பர்கள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளனர்.நண்பர்களே நம் வாழ்வினை ஒளியூட்டும் விளக்காகவும் விளங்குகின்றனர்.ஆதலால் நண்பர்களோடு பொழுதைக் கழிக்க பலருக்கும் பிடித்தமானவை ஒன்றாகும்.நண்பர்களுடன் படிப்பது, உணவங்காடிகளுக்குச் செல்வது ,பிறந்தநாள் கொண்டாடுவது என்று நண்பர்களோடு கழிக்கும் பொழுதுகள் மறக்கயிலாதவை. அதில் ஒன்றை நான் இக்கதையில் எழுதப்போகிறேன்.
  நான் என் நண்பர்களுடன் ஒரு புதிர் போட்டிக்குச் சென்றோம். அப்போட்டி ராபில்ஸ் பள்ளியில் நடைப்பெறவிருந்ததால் நாங்கள் அனைவரும் எங்கள் ஆசிரியருடன் அவ்விடத்திற்குச் சென்றோம். இடத்தை அடைந்தவுடன் நாங்கள் எங்களுடைய பெயர்களை பதிவு செய்துவிட்டு போட்டிக்குச் சென்றோம். புதிர்ப்போட்டி தொடங்கியது. நாங்கள் அனைவரும் குழுவுணர்வோடு இணைந்து செயல்பட்டோம். சில கேள்விகளுக்கு தீவர சிந்தனை தேவைப்பட்டது.தமிழ் வரலாறு மற்றும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.ஆனால்,நாங்கள் அனைவரும் துவண்டுவிடாமல் விடாமுயற்ச்சியுடன் செயல்பட்டோம்.
  அதற்கு ஏற்ப நாங்கள் அப்போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றோம். அதுவே எங்களுக்கு பெரிய சாதனையாகயிருந்தது. நாங்கள் அனைவரும் உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தோம். புன்னகை பூத்த முகங்களோடு நாங்கள் ஒருவருக்கொருவரை கட்டி அணைத்துக்கொண்டோம். ஒற்றுமையின் பலன் எனக்கு அப்பொழுதுதான் தெளிவாக தெரிந்தது. அன்று எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுமட்டுமில்லாமல் நண்பர்களோடு பொழுதுப் போனதே தெரியவில்லை.
  சமிக்ஹா
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*