இளமை எனும் பூங்காற்று

பறவைகள் மட்டுமா சிறகடித்துப் பறக்கின்றன? நல்ல நண்பர்களும், நேரமும், விரும்பிய வண்ணம் விளையாட நல்ல களமும் கிடைத்து விட்டால், நாமும் உற்சாக வானில் பறந்து செல்லத் தயாராகி விடுவோம்தானே? இந்தப் படத்தைப் பார்க்கும்போது, அந்த உற்சாகம் உங்களுக்கும் வரும். அதை ஓர் அழகிய கவிதையாக்குங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 5 செப்டம்பர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

ஜூலை மாத வெற்றியாளர்கள்

Chinmayi Marsiling Secondary School (TLC) Poem
Prathiba D/O Palanivelu Bendemeer Secondary School Poem
Mithra Balamurugan Unity Secondary School Poem

5 கருத்துரை

 1. இளமையெனும் பூங்காற்று
  கங்கை நதிக்கு
  தீயினில் அணையிட்ட
  மகரந்த சேர்க்கை… யாம்
  காட்டுவெளியில் பயணங்கள்
  தேகம் துடிக்கும்
  யௌவன வனத்தில்
  தன்னைமறந்து விழுந்திட
  நீர்தேவதை அருந்தினாள்,
  ஒருபொழுதின் ஆவலை… ஆம்
  பளபளத்த விண்மீன்கள்
  முன்னிரவில் உதிர
  கண்ணை இழந்த வண்டுகளும்
  பாடியதாம் ஓர் பாட்டு.
  இந்த நிலைதான்
  என்ன விதியோ?
  பகலும் இரவும்
  கைகுலுக்கிகொள்ளும்
  வேளை

  கூடு தேடி கூட்டம் கூட்டமாய்
  பறவைகள் செல்லும் வேளை

  காலை அவசரம் விடுத்து
  ஆசுவாசமாய்
  நாமும் வீடு திரும்பும் வேளை

  தன் ஆயிரம் கால் குதிரைகளை
  அவிழ்த்து விட்டு
  சூரியனும் ஓய்வெடுக்க
  கிளம்பும் வேளை

  மல்லியும் , முல்லையும்
  மொட்டவிழ்த்து
  இரவுதோழியை
  வரவேற்க
  காத்திருக்கும் வேளை அழகான
  இந்த அந்திமாலை
  Prathiba D/O Palanivelu(2R1)
  Bendemeer Secondary School

 2. தானாக உயரும் வயது
  விடாமல் துரத்தும் காலம்
  தடுக்க முடியாத நேரம்
  கடக்கத் துடிக்கும் இளமை
  காலைத் தடுக்கும் சமூகம்
  தொடவேண்டிய இலக்கு
  இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை
  -Lufina Zohar
  St.Hilda secondary school

 3. முடிந்த பால்யத்தை நினைத்து கவலையில்லை
  வரும் முதுமைப் பற்றி கனவுகளில்லை!
  நடக்கும் வாழ்வை இனிமையாக
  நடத்த நினைப்பது இளமை !

  உழைப்பை உதவியாகவும்
  முயற்சியை நண்பனாகவும்
  தன்னம்பிக்கையை ஊன்றுக் கோளாகவும்
  வாழ்க்கை பாடத்தை சொல்லுவது இளமை !!

  இயற்கையின் முக்கியத்துவத்தை
  உணர்ந்தது இளமை !
  ஒவ்வொரு மரங்கள் வெட்டப்படும் போது
  வாதாட துடிப்பது இளமை !

  உயிர் காப்பான் தோழன்
  முயற்சி திருவிணையாக்கும்
  இன்னும் பல பழமொழிகளுக்கு
  உயிர் கொடுத்துக் கொண்டு இருப்பது இளமை !!

  நாம் வாழும் போதே
  அனுபவிக்கு அதிசயம் இளமை!

  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL

 4. இளமை எனும் பூங்காற்று!

  இளமை எனும் பூங்காற்று!
  இளமை பூவைப்போன்றது,
  பூவினும் மெல்லிய காற்றைப் போன்றது!
  காற்று எங்கும் எதிலும்
  தங்கு தடையின்றி நுழையும்!
  இளமையும் யார் தடுத்தாலும்
  துள்ளித் துள்ளி உலா வரும்!!
  காற்றை, பூங்காற்றை
  கட்டுப்படுத்த நினைத்தால்
  வெடித்து வெளியேறும்!
  இளமையை அணைக்கட்டி தடுத்தால்
  தடையை தகர்த்தெறுந்து
  சிறுதுவாரம் கிடைத்தாலும்
  முன்னேறி வானையே முட்டும்!!!!
  பூங்காற்றை உணர்ந்தால் மட்டுமே
  அதன் இனிமையை உணரலாம்!-
  அவ்வாறே,
  இளமையை இரசித்து உணர்ந்தால்
  அது என்றுமே இனிக்கும் கனாக்காலம்!! ஆதலால்,
  இளமை என்றுமே பூங்காற்றுதான்!- ஆம்
  இளமை எனும் பூங்காற்று!!!!
  இளமை எனும் பூங்காற்று!!!!
  மித்ரா‌ பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலை பள்ளி
  3E1

 5. கேளுங்கள், நானும் குழந்தையாக இருந்தேன்!
  நீ தெரிந்து கொள்ள விரும்பியதை நான் அறிவேன் –
  அறிவாற்றலை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,
  அந்த அறிவு, ஆனால் ஒரு வழிகாட்டி
  அறியாமையின் பாதையில்.
  நானும் குழந்தையாக இருந்தேன்!
  நீ கட்டியணைத்து,
  நீ வேண்டிக்கொண்டிருந்தாலும்,
  உம்முடைய மகிழ்ச்சியின் அதிபதியே ஆண்டவர்.
  உண்மையான சுதந்திரம் ஒரு மறைக்கப்பட்ட மன அழுத்தம்,
  இதன்மூலம் வரம்பில் விருப்பம் குறைவாக வளர்கிறது.

  உண்மையான தைரியம் ஒரு பயங்கரமான தீமை –
  குருட்டுப் போர் திட்டத்தின் மூலம் குருட்டு வழிகாட்டி!
  கேளுங்கள், நான் குழந்தையாக இருந்தேன்!
  நான் நேசிக்கிறேன், நான் பிரயோஜனமான நரம்புகளுடன் சேவை செய்கிறேன்,
  உமது பாரத்தைத் துதித்து,
  உன்னுடைய வேதனைகளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
  உண்மையான அன்பும் சேவையும் வெற்றி பெறுகின்றன
  நான் அதிலே சம்பாதிக்கக்கூடும்.

  உன்னுடைய எதையும் நான் வெறுக்கவில்லை,
  ஆர்வம், செயல், கற்பனை அல்ல;
  பார்! ஆத்துமாவின் வருஷங்கள் எழும்பும்
  மற்றும் இந்த முறைகேடான குற்றச்சாட்டுடன்
  உன் பகைவரின் வல்லமையை பெருமைப்படுத்துவாய்

  ஏனெனில் இளமை எனும் பூங்காற்று

Your email address will not be published.


*