இரவு

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
நாள் முழுவதும் உழைத்துவிட்டு உறங்கச் செல்லும் இரவு நேரம் மிக அழகானது. நிலா, நட்சத்திரங்கள் போன்ற இயற்கை அழகு ஒரு பக்கம். தெரு விளக்குகள், விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடங்கள் மறுபக்கம் என்று செயற்கை அழகும் நம்மைக் கவர்கிறது. அப்படிப்பட்ட இரவு நேரத்தைப் பற்றிய உங்கள் கவிதைகளை இங்கே பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10  ஏப்ரல் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

14 கருத்துரை

 1. இரவு நேரமோ ஒரு தனி அழகு
  அதனின் நிறமோ ஒரு மாதரியான கருப்பு
  விண்மீன்கள் வானத்தில் மின்ன
  காற்று இதமாக வீச
  அம்மா மடியில் உறங்க
  இரவின் நிம்மதியை பெறுவோம்
  ஜனனி
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 2. இரவு….
  இருளே தன்னை மறக்கும் அளவிற்கு
  வெளிச்சம்!
  மெரினா பெயில் வெளிச்சத்திலும்் வியாபாரத்திலும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள்
  சுறுசுறுப்பாக இரவு முழுவதும் இயங்கும் துறைமுகம்
  மக்கள் கடலில் மூழ்கிருக்கும் பேரங்காடிகள்
  சாலைகள் எங்கும் விறுவிறுவென சீறி பாயும் வாகனங்கள்
  அடுக்குமாடிக் கட்டடங்களில் கூட வெளிச்சப் பாய்ச்சல் தான்
  தூங்க மறக்கும் பிள்ளைகள்
  தூங்கி விட்ட முதியவர்கள்
  தூக்கம் போன இளையர்கள்
  தகவல் தொடர்புச் சாதனங்களால் அல்ல
  தடதடவென ஏறும் வாழ்க்கை செலவுகளாலும்
  தொண்டையைப் பிடிக்கும் வீட்டுச் செலவுகளாலும் தான்
  இரவு விடிய கூடாதா?
  இவர்களின் வாழ்க்கையின் சூழ்ந்த
  இரவு
  விடிய கூடாதா?
  ரில்வான்
  நன்யாங் தொடக்க கல்லூரி

 3. இரவு மணி எட்டு
  மெல்லிய காற்று வீச
  மழையில் நனைந்த மணல் மணம் வீச
  தாத்தா பூங்காவில் மெல்ல நடக்க
  இரவு பூச்சிகள் இன்னிசை கச்சேரி வைக்க
  நிலவின் ஒளி அரவணைப்பில்
  ஒரு இடத்தில் அவர் அமர
  தனது சதுரங்க விளையாட்டு பலகையை
  விரிக்க
  தன் நண்பருக்காகக் காத்திருக்கும்
  அவர்
  தன்னைக் கைவிட்ட அடுக்குமாடிக் கட்டடத்தின் அறிவிப்புப் பலகையைப்
  பார்த்தார்.
  இனி சதுரங்கம் விளையாடக் கூடாது
  என்றது.
  இரவு……
  நாட்டின் சுதந்திர இரவு விடிந்துவிட்டது
  ஆனால்,
  அவரது இரவு?
  அர்ஜன் 
  நன்யாங் தொடக்க கல்லூரி

 4. இரவு – என் சத்ரு!
  வெளிச்சத்தைத் திருடிய திருடியே,
  ஏன் என் வாழ்வை இருட்டினாய்?
  ஈக்களாய் மொய்த்த மக்களை மனதில் ஈரமின்றி துரத்தினாய்,
  கரும் காட்டேரியே …
  நிசப்தமும் சூழ்ந்தது,
  இருள் வானம் கூடுது,
  கதிரவனின் உதித்தலுக்கு ஏங்குது என் மனமே …
  இருளைத் தூவும் இரவே, நீ என் எதிரி!

  ராஜேந்திரன் ராஜேஷ்
  விக்டோரியா தொடக்கக்கல்லூரி

 5. இரவு இல்லாவிட்டால்,
  நிலவு இருக்காது,
  அம்மா ஊட்டும் நிலாச்சோறு இருக்காது,
  அம்மாவாசை இருக்காது,
  கிரகணம் இருக்காது,
  நட்சத்திரங்கள் இருக்காது,
  நிலம் காற்று இருக்காது,
  அதனால், நாம் இரவை ரசிக்க வேண்டும், நன்றியுணர்வாக!
  வர்ஷா (Varsha)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 6. தாயின் மடியில் தலை வைத்து
  இனிய கதைகள் சில கேட்டு
  அதில் நல்லொழுக்கம் பல கற்று
  பின் அன்றைய செயல்களை தாயிடம் பகிர்ந்து
  நல்ல செயலுக்கு பாராட்டு பெற்று
  மற்றவைக்கு அறிவுறை பெற்று
  நாளைய செயலை மனதில் கொண்டு
  இனிதாய் உறங்கினேன்
  அன்றைய இரவில்…
  நிவேதா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 7. கொஞ்சம் மெதுவாக வர மாட்டாயோ
  வேலையை முடிக்க இன்னும் அவகாசம் வேண்டுமே
  என்ற பதற்றம் பலருக்கு
  சற்று தாமதமாக வர மாட்டாயோ
  நண்பர்களோடு தொடர்ந்து ஜோராக இருக்க முடியாதே
  என்ற வருத்தம் சிலருக்கு
  ஆனால் உன் வருகையை எப்படியாவது தடுக்க
  நீ ஒரு முதலாளியும் அல்ல
  பெற்றோரும் அல்ல
  மறு பக்கமோ வேறொரு கதை
  கொஞ்சம் விரைவாக வர மாட்டாயோ
  கவலையில்லாமல் ஓய்வெடுக்கலாமே
  என்ற எதிர்ப்பார்ப்பு பலருக்கு
  நீ எப்போது வருவாயோ
  சந்தோஷமாக இருக்கலாமே
  என்ற ஆசை சிலருக்கு
  ஆனால் உன் வருகையை மாற்ற
  நீ ஒரு பள்ளி மணியும் அல்ல
  காதலியும் அல்ல
  யார் எப்படி நினைத்தாலும்
  பொறுட்படுத்தாமல் வந்து வந்து போவாய்
  உலகம் எதார்த்தமாக தொடர
  ஆணி வேறாக இருப்பாய்
  உன் இஷ்டம்போல் இருளை பரவு
  நீ தான் அதிசயமான இரவு

  அஜ்மினா பானு
  சிரங்கூன் தொடக்க கல்லூரி

 8. அந்தி வானம் சிவந்து போகையில்
  இவள் ஒளிர்கிறாள்
  அடிவானத்தில் முத்தமிட்டு நிலாவை வரவேற்று விட்டு
  மறைந்து விடுகிறான் கதிரவன்
  இரவெனும் கவிதையின் நாயகியே இவள்
  நட்சத்திர பிருந்தாவனத்தில் எழில்மிகு அரசியே இவள்
  இரவும் நிலாவும் கைகோர்த்து கொண்டு
  களிநடனம் புரிவதைக் காணாது
  கண்ணுறங்குவது
  என்
  தம்பிச் செல்வமே!
  சாமீர்
  செங்காங் உயர்நிலை பள்ளி

 9. இரவு, அதுவே ஒரு தனி அழகு.
  பரந்த வானிற்கு ஒளியூட்டும் வட்ட நிலவு.
  பளிச் பளிச் என மின்னும் நட்சத்திரங்கள்.
  மெதுவாக மிதந்து செல்லும் வெள்ளை மேகங்கள்.
  இதமாக வீசிக்கொண்டிருக்கும் காற்று.
  மிதமாக அடித்ததுக்கொண்டிருக்கும் அலைகளின் ஓசை.
  இதுவே இரவின் இயற்கை அழகு.
  இரவு, அதுவே ஒரு தனி அழகு.
  வானளாவிய கட்டடங்களிலிருந்து வீசும் ஒளி.
  சாலையோரத்து மின் விளக்குகள்.
  தூரத்தில் நிற்கும் கப்பல்களின் ஒளி.
  உயரப் பறக்கும் விமானத்தின் வண்ண விளக்குகள்.
  கூடாரங்களிலிருந்து வெளி வரும் இலேசான வெளிச்சம்.
  இதுவே இரவின் செயற்கை அழகு.
  இரவு, அதுவே ஒரு தனி அழகு.
  மனதில் எழும் ஒரு நிம்மதி.
  கவலைகள் அனைத்தும் பறந்து செல்லும் ஓர் அமைதி.
  அனைவரும் கண் மூடி உறங்க,
  கனவுகள் மெல்ல பின் தொடரும்.
  மனமும் இயற்கையை லைத்திருக்கும்.
  இரவு, அதுவே ஒரு தனி அழகு .
  நுஸ்ரத் ஹாஜரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 10. மழை இரவு
  வான் தீபங்கள் தோன்றியதே ,வானிலை மாறியதே ,
  கார் இருள் என்னை சூழ்ந்ததே , காற்றில் மார்பு நடுங்கியதே,
  என் மனதில் கலகம் தோன்றியதே.
  மின்னல் மின்னியதே ,இடி இடித்ததே ,
  பட் பட் என்று அடித்ததே ,ஜன்னல் மீது மாரியே .
  லப் டப் என்று அடித்ததே,கூரை கீழ் காத்திருந்த என் நெஞ்சமே .
  பகலில் சென்ற என் வாழ்வாதாரங்கள் ,இரவில் வருவார்களே,
  அவர்களை காண காத்திருந்தேனே ,எதிர்பார்த்திருந்தேனே,
  செலவிடும் நேரத்தை, நினைத்தேனே,தவித்தேனே,ஏங்கினேனே.
  அவர்கள் வரவை தாமதமாக்கிய மழையை சபித்தேனே ,
  மணியோசை அடித்ததே ,மனதில் உற்சாகம் பிறந்ததே.
  தருண்
  DPS International School

 11. அப்படி நேற்று இரவு
  சூரியனை என்ன தான்
  செய்தாய் நிலவே …
  இன்னும் இவன் உறங்குகிறான்..
  “மழைக்காலத்தில் ஒரு நாள்”..
  ஜனனிப்ரியா
  Tanjong Katong Girls School

 12. அன்று,
  வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்து,
  இரவு தந்த தென்றல் காற்றை ரசித்தனர்.
  இன்று,
  மின்விசிறிக்கு முன் அமர்ந்து,
  தொலைக்காட்சியைக் கண்டல்லவா ரசிக்கிறோம்!
  அன்று,
  சந்திரன் இருளை நீக்கி,
  வெளிச்சம் நல்கினான்.
  இன்று,
  கைத்தொலைபேசியின்
  திரையைக் காண்பதற்கல்லவா,
  விழித்திரைகள் மூடாமல் உள்ளன!
  அன்று,
  நிலாவின் அழகை,
  தரிசிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர்.
  இருள் சூழ்ந்த வானில் அங்கும் இங்கும்,
  நட்சத்திரங்கள் பூத்து குழுங்கவே,
  அந்தக் காட்சி மனதிற்கு
  இதமாக இருந்தது.
  ஆனால் இன்று,
  எல்லாரும் விடியல் நன்றாக அமைய வேண்டுமென்று,
  இரவை நேசிக்க தவறிவிட்டனரே!
  ஆதலால் விடியலை எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு,
  இரவு வழங்கும் ‘சிறு சிறு’
  நிகழ்வுகளையும் அதன் அழகையும் நேசியுங்கள்.
  விடியல் தானாகவே இனிமையாக அமையும்!

  மோகன பாரதி
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 13. அயராத அம்மாவிற்கு அமைதி
  உழைக்கும் கைகளுக்கு உறக்கம்
  எட்டாத வானிற்கு விண்மீன்கள்
  ஒப்பற்ற கவிஞர்களுக்கு கற்பனை -என்று
  பலவற்றை தந்துவிட்டு சென்றாயே!
  தேயும் நிலவை வளர வைப்பது
  நட்சத்திரங்களை மின்ன வைப்பது
  கொதிக்கும் பாறையைக் குளிர வைப்பது
  கோடை நாட்களில் விரைந்து செல்வது- ஏன்
  என்ற ரகசியம் சொல்லடி
  உன் அழகை மறைத்துக் கொண்டு
  மற்றவைக்கு அழகு சேர்த்து
  உன்னை காட்டி கொள்ள வெட்கமா?
  இல்லை தியாகம் நிறைந்த சோகமா?
  எதுவாக இருந்தாலும் சரி
  நீதானடி அழகு சுந்தரி

  C H Sanjana
  Yishun Junior College

 14. மேற்கில் வெய்யோன் மறைந்தான்
  வானில் நிலவு ஒளிர்ந்தான்
  பறவை பூச்சி கூட்டை
  நோக்கி பெயர்ந்தன
  இரவு வந்தது !
  இரவு வந்தது !
  இரவு வந்தால்
  மின்மினிப்பூச்சிக்கு மட்டுமா
  கொண்டாட்டம் – எனக்கும்
  சேர்த்துத் தான்
  இரவு வந்தது !
  இரவு வந்தது !
  வானில் மினுங்குதல்
  விண்மீன் மட்டுமல்ல
  என் உள்ளமும்
  சேர்த்துத்தான் மிளிர்ந்தது
  இரவு வந்தது !
  இரவு வந்தது !
  மாலைப்பொழுதில் வீடு
  வந்த அப்பாவுடன்
  கொஞ்சி விளையாட
  உண்டு மகிழ
  இரவு வந்தது !
  இரவு வந்தது !
  நீ எப்போது வருவாய் என
  சந்தோசத்தில் குதூகலமானேன்
  தந்தையின் மடியில்
  கண்மூடி உறங்க
  இரவு வந்தது !
  இரவு வந்தது !

  ஸ்ரீஹர்ஷிதா
  CHIJ St Joseph Convent

Your email address will not be published.


*