இரண்டு கற்பனைக் கதைகள்

பின்வரும் இரண்டு கற்பனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கதையாக எழுதலாம்…
1. உங்களுக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். நீங்கள் சிறந்த விளையாட்டு வீரரும்கூட. ஒரு நாள் தேசிய அணியில் விளையாட (கால்பந்து, கிரிக்கெட், பாட்மிட்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாகவும் இருக்கலாம்) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் கலந்து கொள்ளும் அந்தப் போட்டியைப் பற்றிய கற்பனைக்கதையை எழுதுங்கள்.
2. நீங்கள் ஒரு இசைக்கலைஞர் ( பாடகர், இசையமைப்பாளர் என எப்படியும் இருக்கலாம்). உங்களுக்கு மேடையேற ஒரு பிரமாண்டமான வாய்ப்பு கிடைக்கிறது. அந்த முதல் மேடை அனுபவத்தைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை எழுதுங்கள். இந்தக் கதையை எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 செப்டம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஜூலை மாத, வெற்றியாளர்களின் பட்டியல்

Suriya Nilavan Unity Secondary School
Sameera Begum Yuan Ching Secondary School
Suriya prashan Jurong Secondary School

10 கருத்துரை

 1. நமக்கு பிடித்த விளையாட்டில் ஒரு சிறந்த வீரராக வேண்டும் என்று நாம் அனைவருக்கும் ஆசை உண்டு. எனக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம். என் முயற்சியால் நான் இப்பொழுது ஒரு கிரிக்கெட் வீராரக திகழ்கிறேன். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நானும் என் குழு உறுப்பினர்களும் எங்கள் முழு கவனிப்பை கொடுத்து குழு ஒற்றுமையுடன் பயிற்சி செய்தோம். பல கடுமையான போட்டிகளுக்கு பின் நாங்கள் இறுதிச் சுற்றை அடைந்தோம். பாகிஸ்தான் அணியுடன் போட்டி இட்டோம். வெற்றி எங்களுக்குத்தான் என்று என் குழுவினர் அனைவரும் முழு நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், என் குழு நண்பர்கள் அனைவரும் அன்று நன்றாக விளையாடவில்லை. வெற்றி பெறாமல் நாங்கள் சென்றாலும் குழு தலைவனாகி நான் என் குழுவை நினைத்து தலை நிமிர்ந்து நடந்தேன். நான் வேறு யாரும் இல்லை , உங்கள் தோணி தான்.
  Noorin Ayisha
  St Hildas’ secondary

 2. ஒவ்வொரு வருடமும் ,என் பள்ளியில் விளையாட்டு தினம் நடக்கும் .அந்த விளையாட்டு தினத்தின் மூலமாகத்தான் எனக்குள் ஒளிந்திருந்த திறமையை கண்டுபிடித்தேன் .ஒவ்வொரு வருடமும் நடக்கும் விளையாட்டு தினத்திலும் நான்தான் முதல் பரிசை தட்டி செல்வேன் .என் திறமையை கண்ட என் ஆசிரியர் என்னை தேசிய அளவில் நடக்கவிருக்கும் ஒட்டப்பந்தைய போட்டியில் கலந்துகொள்ளுமாறு கூறினார் .நானும் என் பெயரை அந்த போட்டிக்காக பதிவு செய்தேன் .’நமக்கு இருக்கும் திறமைக்கு பயிற்சியெல்லாம் தேவையில்லை .பயிற்சி இல்லாமலேயே வெற்றிபெற்றுவிடலாம்’ என்று பகல் கனவு கண்டேன் .ஒரு வழியாக நான் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது .எனக்கு அன்று அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இருந்தது .போட்டி ஆரம்பித்ததும் நான் ஓட தொடங்கினேன் .என்ன அதிர்ச்சி , என்னால் வேகமாக ஓடவே முடியவில்லை .பயிற்சி இல்லாததால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை .அதில் நான் மூன்றவதாக வந்தேன் .எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது .என் பள்ளியிலிருந்து நிறையபேர் வந்திருந்தனர் .அவர்களை இப்படி தலைகுணிய வைத்துவிட்டதை நினைத்து மிகவும் கவலை அடைந்தேன் .
  அன்று நான் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன் .முயற்சி வெற்றிக்கு மிகவும் முக்கியம் என்பதை நான் கற்றுக்கொண்டேன் .பயிற்சி இல்லையேல் வெற்றிபெறவே முடியாது .தன்னம்பிக்கை இருக்கலாம்;ஆனால் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இருப்பது நல்லதல்ல என்றும் நான் அறிந்தேன் .
  ரெத்தினம் ரெபேக்கா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 3. ஒரு குழந்தை, ஒரு பொருளை அடம்பிடித்து அதை அடையும்போது ஏற்படும் அளவற்ற சந்தோஷம்தான் அன்று எனக்கு இருந்தது. ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. சிங்கப்பூரில் நடந்த, ‘தமிழர்களின் கலாச்சாரம்’ விழாவில் வீணை வாசிக்க எனக்கு அழைப்பு வந்தது. மனத்துக்குள் விதையாக விழுந்து மரமாக உருவெடுத்து இருந்த, மேடையில் இசைக் கருவி வாசிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேற போவதை நினைத்து நான் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினேன். அன்று, ‘ஸ்ரீ திண்டுதூபணி’ கோவிலிலிருந்த மண்டபத்தில் இவ்விழா நடைப்பெற்றது. அங்கு, பலர் கூடியிருந்தன. நான் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் வீணை வாசிப்பது முதல் முறையாக இருந்ததால், எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது.பிறகு, நான் வாசிக்க வேண்டிய நேரமும் வந்தது. நான் நம்பிக்கையுடன் வீணையை வாசித்தேன். நான் சிரிய தவறு செய்தாலும், அது மிகவும் வெளிப்படையாக இல்லை. கலைநிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் என்னை மெச்சினர். எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

 4. நான் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தேர்வானது என்னை மகிழ்ச்சியின் எல்லையில் நிறுத்தியது.இம்மகிழ்ச்சியை என் குடும்பத்தாரிடமும் ,உறவினர்களிடமும் ,நண்பர்களிடமும்
  தெரிவித்த போது அவர்கள் என்னை பாராட்டியதுடன் எனக்கு ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டினர் .அடுத்து வருகின்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் நன்றாக விளையாடி நாட்டிற்கு பதக்கத்தை பெற்றுதர வேண்டும் என்ற எண்ணத்தை என்னில் விதைத்தார்கள்.என் குழுவில் உள்ள அனைவரின் முகபாவங்களையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் நாங்கள் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டோம்.எங்களின் பயிற்சியாளர் வாயிலாக எங்களுக்டையே விட்டுக்கொடுத்தல் ,விளையாட்டின் சூட்சமத்தையும் நன்றாக தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு நாளும் எங்கள் அணியின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காக அதிகாலை 4 .30 மணிக்கெல்லாம் எழுந்து எனது உடற்பயிற்சி முடித்துவிட்டு கைப்பந்திற்கானபயிற்சியை தொடங்கினோம் . நாங்கள் பல்வேறு அணியினருடன் பலச்சுற்றுகளில் விளையாடி ஒவ்வொரு முறையும் வெற்றியையே தழுவி இறுதி போட்டியில் நுழைந்தோம் . மறுநாள் என் மனதில் இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது.எதிர் அணியின் குழு தலைவி என்னுடைய சிறு வயது தோழி . அவளும் நானும் சமமாக விளையாடுவோம்.என் தந்தையின் பணி மாறுதலினால் நான் சிங்கப்பூர் வந்து விட்டேன். அவள் அடிக்கும் ஒவ்வெரு பந்தையும் திருப்பி அனுப்பும் வலிமை என்னிடம் உள்ளதா? என்ற சந்தேகத்துடன் கண் அயர்ந்தேன்.மறுநாள் காலை நாங்கள் அனைவரும் சேர்ந்து வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினோம் .இறுதி சுற்றின் ஆரம்பம் நன்றாக சென்றது.ஆனால் நடுவில் ஆட்டம் 10-15 என்று இருந்தபோது எங்கள் அணியில் ஒருவருக்கு கையில் பலத்த அடி.ஆனாலும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை . பிறகு ஆட்டம் 24-24 இருந்தபோது பார்வையாளர்கள் அனைவரும் ‘சிங்கப்பூர் ‘ என்று ஆரவாரமாக கத்தினார் . கடைசி ஸ்பைக் என்னுடையது . போட்டி எங்களுக்கு சாதகமாக அமைந்தது.இந்த நாள் என் வாழிவில் மறக்க முடியாத நாளாக அமைந்தது .
  லுபிஃனா ஜோஹார் ரபீக் முகமது
  செயின்ட் ஹில்டா உயர்நிலை பள்ளி

 5. இசையில்லா வாழ்வை என்னால் நினைத்துக் கூட பார்க்கக் கூட முடியவில்லை. நான் எப்போதும் இருண்ட உலகத்தை மட்டுமே பார்க்கிறேன். காரணம் நான் கண் பார்வை பெறாத அதிர்ஷ்டசாலி. சிறுவயதிலிருந்தே எனக்குத் தாயின் அன்பும் கிடைத்ததில்லை. எனக்கு உயிரைக் கொடுத்து விட்டு தன் உயிரை விட்டவர் என் தாய் இருப்பினும், தாய் இல்லாத குறையை நிவர்த்தி செய்தவர் என் தந்தை. கல்விக்குப் பின் என் தந்தையைப்போல் நானும் சம்பாதிக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். இசையின் மீது நான் கொண்ட ஆர்வத்தினாலும், திறமையினாலும் பல கச்சேரிகள், போட்டிகளுக்குச் சென்றாலும் என்னால் அதிகப் பணம் ஈட்ட முடியவில்லை. இதை எண்ணி நான் வருந்தாத நாட்களே இல்லை. என்னிடம் உள்ள குறையினால் எங்கே நான் வாழ்க்கையில் தோற்று விடுவேனோ என்ற பயம் எனக்குள் வர ஆரம்பித்தது. என்னிடம் இருக்கும் திறமையை மேம்படுத்திக் கொள்ள பல வழிகளை மேற்கொண்டேன். பலநாள் முயற்சிக்குப் பின் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. மேலும், அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்த வாய்ப்பினை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இராபகலாக உழைத்தேன் நடிகர் தனுஷ் வருவதாக இருந்தது. நிகழ்ச்சி நாள் வந்தது. என்னால் நடிகர் தனுஷைப் பார்க்க முடியவில்லை. என் நெஞ்சம் படபடத்தது. ஆனாலும் ஆரவாரத்தின் அளவை வைத்து என்னால் கூட்டத்தின் அளவைக் கணிக்க முடிந்தது. கிலி என் மனதைக் கௌவியது. எனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னால் முடிந்த மட்டும் சிறப்பாகப் பாடினேன். அதுவரை யாருக்கும் கிடைக்காத கைதட்டலும் ஆரவாரமும் காதைப் பிளக்கும் வண்ணம் கேட்டது.
  முடிவுகளை அறிவிக்கும் நேரம்……… என் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. முதல் பரிசு ……….. என் பெயர் அறிவிக்கப்பட்டது. என் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது. பின் தொகுப்பாளர், நடிகர் தனுஷ் என்னை நோக்கி வருவதாகக் கூறினார். தனுஷ் ஒலிபெருக்கியில் என்னைப் பற்றியும் நான் பாடிய “ ஒவ்வொரு பூக்களுமே…………… “ என்ற பாடலைப் பற்றியும் பெருமையாகப் பேசினார். அவர் அடுத்து எடுக்கவிருக்கும் திரைப்படத்தில் எனக்குப் பாடுவதற்கு ஒரு வாய்புப்க் கொடுப்பதாகவும் வாக்களித்தார். அத்தருணத்தில் நான் வானத்தில் பறப்பதைப் போல் உணர்ந்தேன். இம்மகிழ்ச்சியான தருணத்தில் என்னைப் பெற்ற தாய் என்னுடன் இல்லையே என வருந்துகிறேன். ஆனால் அவர் வானால் ஏதோ ஓர் இடத்தில் நட்சத்திரமாய் இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
  SANKARAMANI KEERTHANA
  Riverside Secondary School

 6. எனக்குச் சிறுவயதிலிருந்தே மேடை ஏற வேண்டும் என்ற அவா இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பை என் பாடசாலை எனக்கு அமைத்துக் கொடுத்தது. அத்திப் பூத்தாற் வரும் இம்மாதிரியான வாய்ப்பைப் பற்றித்தான் நான் எழுதப்போகிறேன். என் ஆசான் எனக்குள் இருக்கும் அற்புதமான பாட்டுத் திறனைக் கண்டறிந்து அதைப்பற்றி வாயாரப் புகழ்ந்தார். பிறகு அப்பிரமாண்டமான பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள என்னைப் பரிந்துரைப்பதாகக் கூறினார். எனக்குக் கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை. இச்செய்தி என் காதுகளுக்குத் தேனாக இனித்தது. போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. ஆனால் எனக்கு அது ஒரு வருடம் போல் தோன்றியது. என் விழிகள் எப்போதும் நாட்காட்டியின் மேலேயே இருந்தது. நான் இரவு பகல் பாராமல் அப்போட்டிக்காக பலமுறை பாடிப் பழகினேன். என் கனவுகளை நிறைவேற்றும் அந்த நாள் வந்தது. என் பெயர் அழைக்கப்பட்டதும் நான் மேடையில் ஏறினேன். அங்கு அமர்ந்திருந்த திரளான கூட்டத்தைப் பார்த்தும், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. ஒரு கணம் பாடாமல் நின்றேன். என் முன்னால் அமர்ந்திருந்த என் ஆசிரியர் என்னை உற்சாகப் படுத்தினார். என் பாடல் வரிகள் என் கண்முன்னால் தோன்றின. நான் பாட நினைத்தை எனது மயக்கும் இனிமையான குரலில் பாட ஆரம்பித்தேன். அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல் ஒலி என் காதைப் பிளந்தது. என் உவகைக்கு அளவேயில்லை.எனக்குக் கிடைத்த கைதட்டல் ஒலி எனக்குப் பல கோப்பைகளைப் பெற்றுத் தந்த மன மகிழ்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியது. நாம் ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாம எந்தக் காரியத்தையும் மனதார செய்தால் அது நமக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும் என்பதை உணர்ந்தேன். முதல் பரிசு……………….. கிறிஸ்மிதா ……………… என என் பெயர் அறிவிக்கப்பட்டதும் என் மனம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.
  கிறிஸ்மிதா
  Riverside Secondary School

 7. “இசைக்கலைஞர் மாலாவை மேடைக்கு அழைக்கிறோம்” என இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அறிவித்தார். நான் உற்சாகத்துடன் எழுந்து மேடையை நோக்கி நடந்தேன். பார்வையாளர்களின் கரவோசை என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இது என் முதல் மேடை அனுபவம். பதற்றமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில் நான் முன்னோக்கிச் செல்கையில் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
  தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி என்றாலே எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு மெய்ம்மறந்து இரசிப்பேன். பல நாட்களாக இதைக் கவனித்துக் கொண்டிருந்த என் அம்மா இசை வகுப்பில் சேரும்படி என்னை ஊக்கப்படுத்தினார். ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் என்னால் முடியுமா? என்ற சிந்தனை என்னைத் தயங்க வைத்தது. ஆனால் அம்மா தந்த தைரியத்தால் அந்த எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஒருகை பார்த்துவிடலாம் என எண்ணி இசை வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் நான் நினைத்தது போல இசையைக் கற்பது அவ்வளவு எளிதாக இல்லை. நிறைய சவால்களைச் சந்தித்தேன். மனம் தளர்ந்த போதெல்லாம் அம்மா பின்வாங்கக் கூடாது என்று என்னை ஊக்கப்படுத்தினார்.
  என் பலநாள் உழைப்பு வீண்போகவில்லை. இதோ இன்று இந்தப் பிரம்மாண்டமான மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. “சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள் மாலா!” என்ற தொகுப்பாளரின் குரல் என்னை நினைவிற்குக் கொண்டு வந்தது. இறைவனை வேண்டி என் திறனை வெளிப்படுத்தினேன். பாடி முடித்ததும் எழுந்த கரவொலி அரங்கத்தையே அதிர வைத்தது. அது என் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. மற்ற பாடகர்கள் என்னைக் கைகுலுக்கி பாராட்டினர். கனவோ நனவோ என பிரம்மிப்பில் மெய்ம்மறந்து நின்றேன். விடா முயற்சியும், கடின உழைப்பும், தடை வந்தாலும் தளராத உள்ளமும் இருந்தால் கனவுகள் கைகூடும் என்பதை உணர்ந்தேன். ஆனந்த கண்ணீருடன் நின்ற அம்மாவின் முகம் என் கண்களில் தெரிந்தது.
  ஷமீரா
  செம்பவாங் உயர்நிலைப் பள்ளி

 8. “விஷ்ணு – நீ ஒரு பயந்தபேடி, நான் உன்னை கண்டிப்பாக ஜெயித்துவிடுவேன்… நீ ஒரு கோழை உன்னால் நிச்சயம் என்னை வெல்ல முடியாது….”
  என்ற குரல், என் காதுகளில் விழுந்தவுடன் கண்கள் குளமாகி காதுகள் அடைத்தன. வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருந்த என் விரல்கள் சோர்வடைந்தன. பிறகு பந்துகள் இரும்புக் குண்டுகளாக என்னை நோக்கி வந்தன………..
  எனக்குப் பூப் பந்து விளையாடப் பிடிக்கும் நான் எப்போதும் பள்ளி முடிந்து பூப் பந்து விளையாடச் செல்வேன். நான் விடுமுறையையும் பயன்படுத்தி பூப் பந்து விளையாடுவேன். பூப் பந்தே என்னுடைய கனவு. அதில் சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. எனக்கு எப்போது நேரம் கிடைக்குமோ, அப்போதெல்லாம் பூப் பந்து விளையாடுவேன். ஒரு வருடக் கத்திருப்பிற்குப்பின் என் பள்ளியில் பூப் பந்துப் போட்டி வைத்தார்கள்.
  அந்தப் போட்டிக்கு என்னைப் பதிவு செய்தேன். நான் அந்தப் போட்டிக்காக கடினமாகப் பயிற்சி செய்தேன். போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது சக போட்டியாளர் ஏதோ சொல்லித் திட்டினாள், என்கவனம் சரிந்தது. சில வினாடிகளில் நான் கோப்பையைத் தவற விட்டேன். மனம் மிகவும் வேதனையடைந்தது. என் ஆசிரியர்களும் பெற்றோரும் என்னை தேற்றினார்கள்.
  தோல்வியே வெற்றிக்கு முதல் படிக்கட்டு என்று நான் உணரத் தொடங்கினேன். விரைவிலேயே பள்ளிகளுக்கிடையிலான பூப்பந்துப் போட்டி வந்தது. நான் அந்தப் போட்டியில் விளையாடினேன். நான் என்னுடைய முழு முயற்சியையும் அந்த விளையாட்டிற்குக் கொடுத்தேன்.
  இதோ என் புகைப்படம் அனைத்து நாளிதழ்களிலும் வெற்றிக் கோப்பையுடன்…
  என் பெற்றோர் என்னைப் பற்றிப் பெருமைப்பட்டனர். அந்த நாள் எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருந்தது.
  ———————
  விஷ்ணுப்பிரியா
  சாங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி

 9. சிறுவயதிலிருந்தே எனக்கு பாட்டு பாடுவதென்றால் கொள்ளை ஆசை.இது ஒர் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.ஒரு நாள் நான் என்றும் போல் பள்ளிக்குச் சென்றேன்.முதல் பாடம் தமிழ்ப்பாடம் என்பதால் நான் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன்.தமிழ்ப்பாடத்தின்போது ஆசிரியர் என்னிடம் “கிருத்திக்கேஷ்,பாட்டு போட்டி இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கிறது.போட்டியில் நீ கலந்துக்கொள்வாய் என நம்புகிறேன்.சம்மதமா?”என்று வினவினார்.நான் அந்த பிரமாண்டமான வாய்ப்புக்கு உடனே சம்மதித்தேன்.
  பள்ளி முடிந்ததும் நான் வீட்டிற்கு சிட்டாய் பறந்துச் சென்றேன்.நான் அம்மாவிடம் போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவரும் அதற்கு உடனே சம்மதித்தார்.நான் “திருடாதே பாப்பா திருடாதே” என்ற பாடலை தேர்ந்தெடுத்தேன்.நான் அல்லும் பகலும் விடாமுயற்சியுடன் பாடல் வரிகளை கரைத்துக் குடித்துப் பாடிப் பாடிப் பயிற்சி செய்தேன்.நான் இத்தப் போட்டியில் ஒரு கை பார்த்து விடலாம் என நம்பினேன்.என் ஆசிரியர் என் முயற்சியைப் பாராட்டினார்.அதனால் நான் இன்னும் கண்ணும் கருத்துமாக பயிற்சி செய்தேன்.நான் கொட்டமடித்துக் கொண்டிருக்கவில்லை.நான் என் காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.நான் போட்டியில் வெற்றி வாகை சூடுவேன் என நம்பினேன்.ஒரு மாதம் உருண்டோடியது.
  அன்று போட்டி நாள்.நான் என் காலைக்கடன்களை பம்பரமாக சுழன்று செய்தேன்.என் மனதில் மகிழ்ச்சிப் பொங்கியது.நான் என் அம்மாவுடனும் ஆசிரியருடனும் போட்டி நடக்கும் அரங்கத்திற்கு சென்றேன்.அங்கே என்னைப் போலவே பல மாணவ பாடகர்கள் இருந்தார்கள்.அறை மணி நேரத்தில் போட்டித் தொடங்கியது.பலர் சிறப்பாகப் பாடினர்.ஆனால்,சிலர் பயத்தில் பாடல் வரிகளை மறந்து விட்டனர்.இறுதியில்,என் முறை வந்தது.மேடையில் ஏறியதும் என் இருதயம் தாளம் போட்டது.அனைவரும் என்னை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டதும் நான் என் பாடல் வரிகளை மறந்து விட்டேன்.எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.எனக்கு மேடை பயம் வந்நுவிட்டது.நான் மூச்சை நன்றாக இழுத்து விட்டேன்.நான் என்னை பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்தேன்.பிறகு,நான் பாடத் தொடங்கினேன்.நான் சத்தமாகவும் தெளிவாகவும் சிறந்த ராகத்துடன் பாடினேன்.இறுதியில்,அனைவருக்கும் நன்றி சொல்லி மேடையை விட்டு கீழே இறங்கினேன்.பார்வையாளர்களின் கரவொலி என மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
  முடிவுகள் தெரிவிக்கப்போகும் நேரம் வந்தது.அறிவிப்பாளர் “முதலிடத்தில் கிருத்திக்கேஷ்!”எனக் கூறியதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன.நான் பரிசை வாங்க சிட்டாய்ப் பறந்தேன்.”முயற்சி திருவீணையாக்கும் ” என்பதை நான் கற்றேன்.இது எனக்கு ஓரு புதிய அனுபவமாகத் திகழ்ந்தது.
  Lavanya Ganesan Kiruthekesh
  St Hilda’s Secondary School

 10. நான் கிரிக்கேட் அரங்கத்திலுள்ளே நுழைந்தேன். அரங்கமே
  கரவோஷத்தால் அதிர்ந்தது.கதைக்குள் போவதற்கு முன் சில தேவைப்படும் பின்னனி தகவல்களை கூறிவிடுகிறேன். என் பெயர் கரிகாலன். நான் சிங்கப்பூரின் தேசிய கிரிக்கேட் அணிக்கு விளையாடுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பு சில வாரங்களுக்கு முன் தான் கிடைத்தது. நான் ஒரு பேட்ஸ்மன் மட்டும் சுழற் பந்து வீச்சாளர். சிங்கப்பூர் கிரிக்கேட் ஆணி கிரிக்கேட உலக கிண்ண கோப்பையில் கலந்துகொண்டது நான் இந்த உலக கோப்பையில் இரண்டு ஆட்டங்கள் மட்டும் தான் ஆடினேன். ஆனால், அவ்விரண்டு ஆட்டங்களில் நான் சிறப்பாக ஆடவில்லை. எல்லோரும் எனக்கு திறமையில்லை என்று கூறினர். இந்த இறுதியாட்டம் தான் எனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு, எனது திறமையை காட்ட.
  சிங்கப்பூர் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி வந்தது. அவர்கள் முதலில் பேட் செய்தார்கள். அவர்களது தொடக்க வீரர்ரகள். சிறப்பாக விளையாடினார்கள். எனக்கு பந்து வீச கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தோடக்க வீரர்கள் இருவரையும் தூக்கினேன். நான் சில கேட்ச்சுகளை பிடித்து எல்லோரையும் அசத்தினேன். எங்கள் அணி கடினமாக ஈடுகொடுத்து விளையாடினாலும் இங்கிலாந்து 300 ரண்கள் குவித்து விடைப்பெற்றனர்.
  அடுத்த எங்கள் அணி கலமிரங்கியது. எங்களது தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடாமல் சொற்ப ரண்களில் வெளியேறினார்கள். அடுத்த இரங்கிய சிங்கப்பூர் அணியின் தலைவர் சிறப்பாக ஆடி எங்களது அணியின் நிலையை சீர்படுத்தினார். அடுத்து இரங்க வேண்டியது நான். நான் களமிரங்கியபோது என் அணிக்கு, 100 ரண்கள எழுபது பந்துகளில் தேவைப்பட்டது. ஆட்டம் எங்கள் கையை விட்டு நழுவிக்கொண்டிருந்தது. வாழ்வா சாவா என்ற நிலை ஏற்பட்டது. எனது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வெறியில் நான் விளையாடினேன். எனக்கு சோர்வு ஏற்பட்டாலும் நான் விளையாடினேன். நாங்கள் ஓரளவுக்கு சமாளித்து கடைசி ஆறு பந்துகளில் பத்து ரண்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்தோம்.
  முதல் ஐந்து பந்துகளில் நான் ஐந்து ரண்கள் அடித்துவிட்டேன். இறுதி பந்தில் நான் ஐந்து ரண்கள் அடிக்க வேண்டியது இருந்தது. நான் தான் பேட்ஸ்மனாக இருந்தேன். எனது முகத்திலிருந்து வேர்வை துளிகள் விழுந்தன. மக்களின் ஆரவாரம் அதீகரித்தது. இறுதி பந்தை நான் பலமாக அடித்தேன். அந்த பந்து அரங்கத்தை விட்டே வெளியே சென்றது. நான் ஆறு ரண்கள் பெற்று இந்த அட்டத்தை முடித்தேன். சிங்கப்பூர் வென்றது . நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். நான் ஆனந்தத்தில் திலைத்தேன். எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அந்த ஆட்டம் எனது மனதில் ஆழமாக பதிந்தது.
  சுப்பிரமணியன் கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*