இணையத்தில் தேடுவது என்ன?

நாம் அனைவரும் இணையத்தை அடிக்கடி பயன்படுத்துகிறோம். சிலர் செய்திகளைப் படிக்க, சிலர் கல்விக்கான தரவுகளைத் திரட்ட, சிலர் சமூக வலைத்தளங்களில் உரையாட, சிலர் இசை கேட்க, சிலர் யூடியூப் பார்க்க என்று ஒவ்வொருவரும் இணையத்தைப் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எதற்காக அதிக அளவில் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள்? அப்படிப் பயன்படுத்துவதால் நீங்கள் அடைந்த பெரிய பயன் என்ன? இதைப் பற்றி உங்களுக்குத் தோன்றும் கருத்துகளை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதி நீங்கள் இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 12 ஆகஸ்ட் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஜூன் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Rebecca – Chua Chu Kang secondary school
Dharshan Nayar – Commonwealth secondary school
Dheekshitha – Chua Chu Kang secondary school

8 கருத்துரை

 1. இணையம் இல்லாத வாழ்க்கை மிகவும் கடினமான வாழ்க்கை என்று சொல்லலாம். இன்றைய தலைமுறையில் நண்பர்கள் இல்லாமலேயே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இணையத்திலேயே தங்களுடைய பாதி நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு உலகளாவிய கணினி நெட்வொர்க் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறது. இணையத்தை வைத்து பள்ளி வேலைக்கான செய்திகளைத் தேடலாம். இணையத்தில பல செய்திகளைத் திரட்டலாம். உலகத்தில் நடக்கும் எந்நிகழ்ச்சியையும், தகவல்களையும் படிக்கலாம். சலிப்பாக இருந்தால் படமும் பார்க்கலாம். இணையத்தில் சமையல் குறிப்புகள் தேடலாம். இசைக்கருவிகள் விளையாட கற்றுக்கொள்ளலாம். இப்படி பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கவே செய்கின்றன.
  மாணவர்கள் பல மணிநேரம் கணினியில் நேரத்தைக் கழிக்கிறார்கள். நேரம் போவதே தெரியவில்லை. மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. பல நோய்கள் தேடி வருகின்றன. கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. பெற்றோர்கள் உறவினர்களுடன் செலவிடும் பயனுள்ள நேரம் குறைகின்றது. பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தனித்தனித் தீவாக வாழ வகிக்கிறது. மாணவர்கள் அவர்களையே அறியாமல் பல தீய இணையப்பக்கங்களைப் பார்க்க வழி வகுக்கிறது. மாணவர்கள் தீயவற்றைப் பிரித்து நன்மைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  கீர்த்தனா
  Riverside Secondary School

 2. நம் வாழ்வியலில் இணையத்தளம் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இணையத்தளம் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகு போன்று ஆயிற்று. சிலர் இப்போதெல்லாம் வீடு இல்லாமல் கூட வாழலாம். ஆனால் இணையம் இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது என்கிறார்கள். இந்த அத்தியாவசியத் தேவை நமக்கு நன்மைகளையும் தீமைகளையும் அளிக்கிறது. பல ஆராய்ச்சிகளைப் பற்றியி தகவல்களை நாம் ஒரு கிளிக் மூலம் அறிந்து கொள்ளலாம். இணையம் இல்லா விட்டால் நாம் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே நமக்குப் பல நாட்கள் எடுக்கும். ஆனால் ஒரு மணி நேரத்திலேயே நம்மால் ஆராய்ச்சியையே முடித்து விட முடியும். அது மட்டுமா ஜி.பி.எஸ் மூலம் எவ்வாறு ஒரு இடத்திற்குப் போக முடியும் என்பதை அறியலாம்.
  பலர் பலவிதமான பொருட்களையும் இணையத்தின் மூலம் வாங்கலாம். சந்தையில் கிடைக்கும் பொருட்களை வீட்டில் இருந்து கொண்டே வாங்கலாம். உலகளாவிய செய்திகளை அடுத்து கொண்டு நம் மதிநுட்பத்தை வளர்த்துக் கொள்ளலாம். நாம் விரும்பிய இசை கேட்டு மனதை இலேசாக மாற்றிக் கொள்ள முடியும். ஆக்கப்பூர்வமான பல சிந்தனைகளையும் புத்தாக்க சிந்தனைகளையும் கணினி விளையாட்டுகளின் மூலம் பெற முடியும். பக்கத்து வீட்டில இருப்பவர்களுடன் பேசுவதே சிரமமாக இருக்கும் காலத்தில் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவருக்கு மின்னஞ்சல் கடிதம் செய்தி அனுப்பலாம். இது ஒரு பக்கம் இருக்க, மையோப்பியா, கண் பார்வை நோய்கள், உடல் பருமன் எனப்பல தீமைகளும் விளைகின்றன. “ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதியாரின் வாக்கிற்கேற்ப மாணவர்கள் உடல் பயிற்சியுடன் அளவோடு கணினையைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, பண்பு, கலாசாரம் ஆகிய இவை எதையும் பறி கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி மகிழ்ச்சியாக மன உளைச்சலின்றி வாழ்வோம். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”
  கிறிஸ்மிதா
  Riverside Secondary School

 3. நான் இணையத்தில் தேடியவை…..
  இன்று இணையம் இல்லா வாழ்க்கை இல்லை என்ற நிலை வந்துவிட்டது. நான் கூகில் என்ற இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்துவேன். அதை நான் முக்கியமாக அறிவியல் பாடத்திற்கு தேவைப்படும் தகவல்களை கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்துவேன். கூகில் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் தளமாக உள்ளது. உதாரணத்திற்கு உலகச் செய்தியைப் பற்றிய அதிக தகவல் பெருவதற்கும் பயன்படுத்தலாம். இணையம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இக்காலத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது அனைவருமே இணையத்தையே சார்ந்திருக்கிறார்கள். அறிவை வளர்க்கும் களஞ்சியமாக இணையம் இருக்கிறது. பொது அறிவு சார்ந்த செய்திகளை இணையத்தில் சேகரித்து என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன். மேலும் இணையத்தில் இருக்கும் யூடியூப் என்ற காணொலி வளைதளத்தில் அறிவியல் சார்ந்த காணொளிகளைப் பார்த்து புதிய இசாயண எதிர்வினைகளைப் பற்றி கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் படிக்கும் போது புரியாத சில செய்திகள் காணொளிகளைப் பார்ப்பதால் தெளிவாகப் புரிகிறது. ஆகவே நான் காணொளிகளின் மூலமாகவும் படிப்பிற்குத் தேவையான தகவல்களைக் கற்றுக்கொள்கிறேன். இணையத்தில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. ஆகவே அவற்றைப் பயன்படுத்துபவரின் கையில் தான் உள்ளது. நன்மையும் தீமையும்.
  கோவிந்தராஜலு ரோஹன்.
  Govindharajalu Rohan
  Jurong Secondary School

 4. எனக்கு நான்கு வயதாகும்போது முதன் முதலில் இணையத்தில் ‘ஸ்பைடர்மேன்’னைப். ஒரே வினாடியில் அத்தனைப் புகைப்படங்கள், காணொளிகள், படங்கள் திரையை நிரப்பியது. அதைப் பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அன்றிலிருந்து எனக்கு இணையத்தின்மீது ஆர்வம் தோன்றியது. ‘சூப்பர் ஹீரோக்கள்’ தவிர்த்து பிறகு ‘ஹரி பாட்டர்’ப் பற்றித் தேட ஆரம்பித்தேன். நான் புத்தகங்கள், திரைப்படங்களைத் தாண்டி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொண்டேன். எதுவானாலும் இணையத்தில் தேடும் பாழாக்கத்தைத் துவாக்கிக்கொண்டேன். சொந்தமாக சிந்திக்கும் திறனை இழந்து வந்தேன்.
  இணையத்தில் தேடுவதில் எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதற்க்கு ஈடாக கேட்ட குணங்களும் இருக்கிறது. இன்றய இளைஞர்கள் ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் இணையத்தில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இது மட்டுமின்றி பலருக்கு கண்கள் பாதிக்கப்படுகிறது. பல பள்ளிக்கூடங்களில் சுமார் என்பது சதவீத மாணவர்கள் மூக்குக்கண்ணாடி அணிகின்றனர். இணையத்திலேயே இருப்பதால் பிடிக்காமலும் விளையாடப்போகாததாலும் உடம்பும் சரியாக செயல்படாது, மூளையும் சரியாக செயல்படாது.
  நான் இணையம் இல்லாத உலகைப் பற்றி யோசிக்கிறேன். அன்பும், பரிவும், அறமும் தேவை. இவையெல்லாம் இயலுமா?

  சூரியநிலவன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 5. இன்றைய உலகில் இளமை முதல் முதுமை வரை அனைவரும் இணையத்திற்கு அடிமையாகிவிட்டோம். இணையத்தால் தேவையான தகவல்களை ஒரு விநாடிலேயே காட்ட கூடிய தன்மை உடையது. நான் இணையத்தை என் வீட்டுப்பாடம் செய்வதற்கு முக்கியமாக பயன்படுத்துவேன். எனக்கு தெரியாத ஒரு வார்த்தை இருந்தால் புத்தக அகராதியில் இரண்டு நிமிடங்களுக்கு கண்டுபிடிப்பதர்க்கு பதிலாக சில வினாடியில் இணையத்தில் கண்டுபிடிப்பது எவ்வளவு சுலபம்! ”சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்க்கேற்ப ஒரு வார்த்தையின் பொருளை தேடுவதற்கு இரண்டு நிமிடங்களை சில வினாடிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு சிறிது நேரமாக தெரிந்தாலும், அதுவே பத்து வார்த்தைகளாக இருந்தால் இருப்பது நிமிடங்கள் ஆகுமே! ஆகவே , என் நேரத்தைச் சேமிக்க இணையம் எனக்கு பெரும் துணை கொடுக்கிறது. மேலும் ,நான் எதாவது ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றால் நான் இணையத்தைத்தான் பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவேன். இதற்கான காரணம் என்னவென்றால், இணையத்தில் நிறைய இணையதளங்கள் இருப்பதால் என்னால் தேவையான தகவல்களை பல விதமான தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இது என் வாழ்க்கையை மிகவும் சுலபமாகிறது. மேலும், நான் ஓய்வெடுக்க யூட்யூபில் நான் காணொளிகளை கண்டு என் நேரத்தை கழிப்பேன். ஆனால், தேவையற்ற தகவல்களை வழங்கும் காணொளிகளை பார்க்காமல் எனக்கு தெரியாத, புதிய விஷயங்களை அறியமுடியும் காணொளிகளையே காண்பேன். இவ்வாறு என்னால் என் அறிவு வளத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது. ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதின் பழமொழிக்கேற்ப நாம் கற்பதை நிறுத்தாமல் நம்மால் முடிந்தவரை கற்க வேண்டும்!

 6. மனிதர்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ,அதே அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தில் முக்கியமாகிவிட்டது.தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என்றுகூட சிலர் நினைப்பர்.அந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் முக்கியமாகியுள்ளது. அதிலும்,இணையத்தை பயன்படுத்தாத ஆளே இல்லை.பலரும் பல்வேறு வேலைகளுக்காக இணையத்தை பயன்படுத்துவர்.அதைபோல்,நான் இணையத்தை எதற்காக பயன்படுத்துவேன் என்பதை பற்றி இக்கட்டுரையில் எழுதப்போகிறேன்.
  எனக்கு படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.நான் பல மொழிகளில் படங்கள் பார்ப்பேன்.இப்போதெல்லாம் புரியாத மொழிகளில் படம் பார்க்கும்போது,நமக்கு புரிந்த மொழியில் வசன வரிகளை பார்த்து படித்து படத்தை புரிந்துகொள்ளலாம்.படங்களிலிலிருந்து நான் வாழ்க்கை பாடங்கள் பலவற்றை கற்றுக்கொள்வேன்.அதுமட்டுமல்லாமல்,படத்தில் எனக்கு தெரியாத பொது அறிவு சம்மந்தப்பட்ட செய்தி எதையாவது வந்தால்,அந்த செய்தி உண்மையா என்று இணையத்தில் பார்ப்பேன்.பிறகு,அதைப்பற்றி சில ஆராய்ச்சிகள் செய்வேன்.அதிலிருந்து நான் நிறைய புது செய்திகளை கற்றுக்கொள்வேன்.என் பொது அறிவை வளர்வதால்,அது எனக்கு பல வழிகளில் உதவியுள்ளது.அவை என் பள்ளி திட்டவேளைகளுக்கும் உதவுகின்றன.
  அடுத்ததாக,யூடியூப் என்னும் இணையத்தில் நான் பல பாடல்களை கேட்டு என் மனவுளைச்சலை போக்கிக்கொள்வேன்.எனக்கு பிடித்த பாடல்களை கேட்கும்போது என் மனம் நிம்மதியாக இருக்கும்.அதனால் நான் யூடியூபிலிருந்து எனக்கு பிடித்த பாடல்களை கேட்பேன்.நான் என் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் அனுப்பும் பதில்களை இணையத்தின்மூலம் மிக விரைவாக சென்றடைகிறது.இதனால் எல்லோரும் மிக விரைவாகவும் சுலபமாகவும் கற்றுக்கொள்ளலாம்.அதுமட்டுமல்லாமல்,இளமைத்தமிழ் என்னும் இணையத்தளம்போல் பல இணையதளங்கள்,மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும் தளமாக அமைகின்றன.அவற்றில் நிறைய போட்டிகள் உள்ளன.நான் அவற்றில் ஒவ்வொரு மாதமும் கலந்துகொண்டு, பரிசுகள் பெறுவேன்.நான் இவற்றையே இணையத்தில் தேடுவேன்.
  ரெத்தினம் ரெபேக்கா
  சூவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 7. இணையம் இன்று உலகில் மிகவும் பரவளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 3 பில்லியன் பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். சிறு குழந்தையிடம் கேட்டால் கூட இணையம் என்றால் என்னெவென்று தெரியும். இணையத்தை நாம் பல வழிகளில் பயன்படுத்தலாம். கேளிக்கை காரணங்களுக்காகவிலிருந்து படிப்பு காரண்ஙகளுக்காக வரை பலர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.
  இணையத்தை நான் பயன்படுத்துவதற்கான முக்கியமான காரணம், என் படிப்பிற்காகவேயாகும். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பல குழு மற்றும் தனி நபர் பள்ளி வேலைகள் இணையத்தில் தான் தரப்படுகின்றன. இணையத்தில் எனது வீட்டுபாடங்களையும் முடிக்கிறேன். இணையத்தில் மைக்ரோசாப்ட் போன்றவற்றின் உதவியில் இவையை முடிக்கிறேன்.
  இணையத்தின் உதிவியன் மூலம் என்னால் எனது பாட வேலைகளை எளிதில் முடிக்க முடியும். மேலும், எனக்கு பாடங்களில் வினா இருந்தால், அதற்கான பதிலை அடுத்த வினாடியே என்னால் தெரிந்துகொள்ள முடியும். மேலும், பல புதிய தகவல்களையும் என்னால் கற்றக் கோள்ள முடியும்.
  இணையம் நமது வாழ்க்கை யில் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. முக்கியமாக, நமது நேரத்தை பாதுகாக்கிறது. இணையத்தை எல்லா வயதினரும் பயன்படுத்தி பயனடையலாம். இளைஞர்கள் படிக்க, பெற்றோர்கள் பொருள்கள் வாங்க, முத்தோர் புதியனவை கற்றக்கொள்ள போன்ற பலவற்றிற்காக இணையத்தை பயன்படுத்தலாம்.
  S.Karthikeyan
  Bendemeer Secondary School

 8. இன்றைய காலத்து இளைஞர்களின் வாழ்க்கையில் இணையம் என்பது ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது.இணையம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்றுக்கூட சொல்லலாம். இணையம் நமக்கு எந்நேரமும் ஒரு துடுப்புப் போன்றதாகும். அதனால்தான் நாம் அதை நம் தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். நம் தேவைகளை ஒரே ஒரு நொடியில் நிறைவேற்றக்கூடிய இணயத்திற்கு பலரும் அடிமையாகியுள்ளோம் என்பது உண்மையாகும். மேலும், இணையத்தை அடிக்கடி பயன்படுத்துவோர்களில் நானும் ஒருவளாகும். நான் பெரும்பாலும் இணையத்தில் பார்க்கக் கூடியவை யூட்டியூப்,கூகல் போன்ற பல்வேறு தளங்களாகும்.
  நான் அடிக்கடி, ஆங்கில மற்றும் அறிவியல் பாடங்களுக்கு கூகலில் ஆராய்ச்சி செய்து, எனக்கு போதுமான குறிப்புகளை நோட்டமிட்டுக்கொள்வேன். பிறகு, பள்ளியில் கொடுக்கும் கணினி வீட்டுப்பாட்களை செய்ய இணையத்தை பயன்படுத்துவேன். பிறகு, படைப்பு மற்றும் தேர்வுகளுக்கு முன்னதாகவே தயார் செய்ய இணையத் தளங்கள் எனுக்கு உருதுணையாக இருக்கின்றன. மேலும் என்னுடைய பொது அறிவையும் மதிநுட்பத்தையும் வளர்க்க இணையம் ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன். என்னை சுற்றி நடக்கும் நாட்டு நடப்பை பற்றி அறிந்துக்கொள்ளவும் என்னுடைய திறன்களை வளர்க்கவும் இணையத் தளங்கள் எனக்கு உதவுகின்றது. உதாரணத்திற்கு, எனக்கு மனித உருவங்களை வரைவதென்றால் கொள்ளை ஆசையாகும். அதனால் நான் யாருடைய உதவியுமின்றி இணையத் தளங்களில் மனித உருவங்களை சுலபமாக வரையக் கற்றுக்கொண்டேன்.
  பின்னர், நான் அளவில்லா மன உளைச்சளுடன் இருக்கின்ற போது, அச்சோர்வை போக்க இணையத் தளங்களில் பாட்டு கேட்பதுண்டு. மேலும், இளைப்பாறும் நேரத்தின் போது நான் ‘இன்ஸ்டகிராம்’ போன்ற தளங்களில் என் நண்பர்களுடன் கலந்துரையாடுவேன். அதுமட்டுமல்லாமல், யூட்டியூப் என்கிற தளத்தில் நான் என் அறிவை வலுப்படுத்தவும் என் ஓய்வு நேரத்தை களிக்கவும் பயன்படுத்துவேன். எனக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லையாம் நான் ஒரே ஒரு கிளிக்கில் மின்னல் வேகத்தில் நான் தேடிட முடியும். நம்முடைய தேவைகளை நிறைவேற்றி, நமக்கு நன்மை விளைவிக்கும் இணையத் தளங்களை நம் கண்ணும் கருத்துமாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டும். மற்றும் நாம் இணையத்தை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்பதை எப்பொழுதுமே கவனத்திற்குள் கொள்ள வேண்டும். நாம் எல்லாவற்றையும் ஒரு அளவோடு மற்றும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்தபின்னரே செயல்பட வேண்டும். ”அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பதை நாம் மனதில் கொண்டு நடந்துக்கொண்டாலே அது நம் எல்லாருக்கும் நன்மையை விளைவிக்கும்.

  M.Samiksha
  Common wealth secondary

Your email address will not be published.


*