இணைந்த கைகள்

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதை என்ன? எழுதுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து,  இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்துகொள்ள இறுதி நாள் – 3 மே  2015. வாழ்த்துகள்!

25 கருத்துரை

 1. யானையின் பலம் தும்பிக்கை .
  மனிதனனின் பலம் நம்பிக்கை.
  வேந்தன்
  விட்லே உயர்நிலைப்பள்ளி

 2. தந்தையின் பாசம் வளரும் வரை
  தாயின் பாசம் திருமணம் வரை
  நண்பனின் பாசம் சாகும் வரை
  இது தான் வாழ்கை முறை
  அரவிந்த்
  விட்லே உயர்நிலை பள்ளி

 3. மனதில் உறுதி வேண்டும்.
  ஆனால் முக்கியமாக நம்பிக்கை வேண்டும்.
  உறுதியும் நம்பிக்கயைுமே
  வாழ்க்கையின் உச்சகட்டத்திற்கு
  உன்னை அழைத்துச் செல்லும்.
  தாரணி செல்வகுமார்
  சூவா சூ காங் உயர்நிலை பள்ளி

 4. பல இனங்கள் சேர்ந்து
  நாட்டை உருவாக்கு
  நீயும் இந்த நட்டின் அடையாளம்
  அதை நீ மறந்துவிடாதே
  உன் பங்கினால் நன்மை அடைவோம்
  அதையும் நீ மறந்துவிடாதே

  ஜனனி

  சூவா சூ காங் உயர்நிலை பள்ளி

 5. வேற்றுமைகளை மறந்துவிடு
  ஒன்றுபட்டு வாழ்ந்துவிடு
  இந்நாட்டை உயர்த்துவிடு
  நாட்டுக்கு பெறுமைகளை சேர்த்துவிடு
  பயனுள்ள மனிதனாக வாழ்ந்துவிடு
  பயனுள்ள பாதையைக் காட்டிவிடு
  அன்பினால் பிறரைக் கட்டிவிடு
  சிங்கப்பூர் வளர்வதைப் பார்த்துவிடு
  ஹரினி
  சைன்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளி

 6. பல இன மக்கள்
  பல தோல் நிறங்கள்
  வெவ்வேறு எண்ணங்கள்
  ஒன்றிணைந்த நாங்கள்
  இங்கிருப்பது பல நிறம்
  அன்பானது எங்களது மனம்
  எல்லோரும் எங்களுக்கு சமம்
  என்பதுதான் எஙகளது குணம்
  ஜாஸ்மின், உயர்நிலை 2
  சையிண்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளி

 7. நாம் ஒன்றாக உருவாக்கியதோ, நம் சிங்கை நாடு
  நாம் ஒன்றாக பாதுக்காக்குவோம், உழைப்போடு
  நாங்கள் பன்புடன் பழகிறோம், நம் மக்களோடு
  இணைந்த கைகளுடன் இருப்போம், ஓன்றோடு
  இதற்க்கு துனையாக இருப்பார் நம் நாட்டின் தந்தை, எங்களோடு
  ஹரேஷ்
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 8. இதயம் என்பது வைரம் போல
  அதை பாதுகாக்க வேண்டும்
  அன்பு என்பது நறுமணம் போல
  அதை உலகத்தோடு பரவ வேண்டும்
  உணர்வு என்பது அருவி போல
  அதன் ஓட்டம் குறையாமல்
  பார்த்துக் கொள்ள வேண்டும்
  நட்பு என்பது கப்பல் போல
  அது கரை அடைய வேண்டும்
  அணைத்து கைகளும் ஒன்றாக சேர்ந்து
  உயர செய்வது நட்பு
  சாபியா 1C
  செயின்ட் ஹில்தாஸ் உயுர்நிலை பள்ளி

 9. நாம் தமிழைப் பேசுவோம்.
  நாம் தமிழை நேசிப்போம்.
  நாம் தமிழ் புத்தகத்தைப் படிப்போம்.
  நாம் தமிழைத் தினமும் கொண்டாடுவோம்.
  தமிழ் எங்கள் பேச்சு.
  தமிழ் எங்கள் மூச்சு !
  கிலுர்
  செயின்ட் ஹில்டாஸ் உயிர்நிலைப் பள்ளி

 10. மதங்கள் வேறு வேறு,
  ஆனாலும் நாம் ஒன்று,
  உன் நிறம் பழுப்பு,
  ஆனாலும் நீ இனிப்பு,
  நீயில்லாமல் நாம் எதுவும் செய்யமுடியாது,
  ஆனால் நாம் ஒன்று சேர்ந்தால்
  யாராலும் நம்மை அசை்சுக்க முடியாது.
  அனிருத்
  சேன்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளி

 11. திரு.லீ.குவான்.யூ மிகவும் நல்லவர்.
  அவர் வல்லவர்.
  இந்த நாட்டை உருவாக்கிய மன்னவர் !
  ஜெரட்
  செயின்ட் ஹில்தாஸ் உயுர்நிலை பள்ளி

 12. நீயும் நானும் ஒன்னு
  இது லீ குவான் யூ பிறந்த மன்னு
  கைக் கோர்த்து நின்னு
  நம்மை எதிர்பவர்களை வெல்லு
  இப்படியே வாழு
  பிரிவினையை ஒதுக்கு
  நீயும் நானும் சேர்ந்தால்
  நம் நாடு மலரும் மலராய்
  வெற்றி என்பது ஒரு கை
  தோல்வி என்பது ஒரு கை
  இது இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை
  அகத்தியன் 2E3
  யோன் சிங் உயர்நிலை பள்ளி

 13. சீனரோ மலாயோ
  இந்தியரோ வேறு இனத்தவரோ
  ஏழையோ பணக்காரனோ
  வயதானவரோ குழந்தையோ
  நெட்டையோ குட்டையோ
  எந்த வித எதிர்ப்பும் இல்லாத உள்ளம்
  நம் திரு லீ குவான் யூவின் உள்ளம்!
  நம் நாட்டின் பெருமையுமே!
  ரா ஸ்ரீஆண்டாள்
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 14. சேர்ந்தது பல இனம்
  கோர்த்தார்கள் கைகளை
  உருவாக்கின நாட்டை
  நம் கூட்டை
  நம் சிங்கப்பூரை
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 15. இன மதப் பேதமின்றி
  வாழ்கிறோமே நாம் கவலையின்றி
  இணைகிறதே மனம் நம்பிக்கை மூலம்
  கொடுப்போமே கரம் வாழ்நாள் முழுவதும்
  இன்னல் இல்லா எதிர்காலம் அமைப்போமே
  வையமே மாறும் நம்பிக்கையிலேயே!
  -கனிஷ்கா
  பாயா லேபார் மெதோதிஷ்த் பேண்கள் உயர்நிலலை பள்ளி

 16. உன் எண்ணச் சிறகுகளை விரித்திடு
  எல்லா மதங்களுடன் சேர்ந்திடு
  மற்ற இனங்களுடன் சமமாகப் பழகிடு
  நீயும் அவர்களிடமிருந்து பாசத்தைப் பெற்றிடு
  மற்ற மதங்களுடன் ஒற்றுமை கொள்
  உன் இனத்துடனும் பற்றுக் கொள்
  நான்கு இனங்களும் ஒன்றுப்பட
  வழி வகுத்தார் சிங்கையின் தந்தை
  அவர் வழியில் செல்வதே
  நாம் கொண்ட கொள்கை
  எல்லா இனங்களின்  கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்
  வேற்றுமை நமக்குள் இல்லை ஒத்துக்கொள்
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 17. இணைந்த கைகள் ஒற்றுமையைப் பிரதபலிக்கும்
  இணைந்த கைகள் நம்பிக்கையைப் பிரதபலிக்கும்
  இணைந்த கைகள் புரிந்துண்வைப் பிரதபலிக்கும்
  ஆக மொத்த்தில் இணைந்து விடு
  அந்த கைகளில் உன் கையை
  அதே உணர்வுடன் ஆற்றிடு உன் பங்கை…
  வேதா விகேஸ்வரி
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 18. ஐந்து கரங்கள் ஒன்றாக இணைந்தால்,
  என்ன ஆகும்?
  நட்பு , அன்பு , பாசம் , அக்கரை
  ஆனால் அது மட்டும் போதுமா?
  ஒற்றுமை.
  அது ஒன்றே எல்லாவற்றயும் இணைக்கிறது,
  அது இல்லாமல் இ்ந்த உலகமே நி்ற்காது.
  ரோசிணி
  சுவா சு காங்கு உயர்நிலைப் பள்ளி

 19. கைகள் இணைந்தால் முடியாது என்பது எதுவும் இல்லை
  கைகள் பிரிந்தால் முடியும் என்பது எதுவும் இல்லை
  கைகள் இணைந்தால் வெற்றி அனைவரையும் தேடி வரும்
  கைகள் பிரிந்தால் தோல்வி எவரையும் தேடி வரும்
  இணைந்த கைகள் பலமான கைகள்
  பிரிந்த கைகள் வலுவற்ற கைகள்
  எனவே இணைந்தே இருப்போம்
  என்றும் வாழ்வில் உயர்ந்தே நிற்போம்!!!
  தேஜல்
  சுவா சு காங் உயர்நிலைபள்ளி

 20. இணைந்த கைகள் –
  கருப்பு, வெள்ளை, மாநிறம்
  வண்ணங்கள் கிடக்கட்டும் ஒருப்புறம்
  மனங்கள் சேரும் இந்நாட்டில்
  மதங்கள் விலகட்டும் தூரத்தில்
  உதவி என்று வந்துவிட்டால்
  எங்கள் கைகள் இணைந்துவிடும்
  ராமன், யூஹாங், ரஹமது
  பெயர்கள் வேறு கொண்டாலும்
  மனதால் நாங்கள் ஒருவர் தான்..
  க.ஹர்ஷிதா
  St . Hildas’ செகோண்டரி
  Secondary 2

 21. ஒருகைக் கொண்டு இயலாச் செயலை
  இருகைக் கொண்டு செயலாம் அன்றோ?
  சிலகை சேர்ந்து செய்வதைக் காட்டிலும்
  பலகை சேர்ந்தால் உலகம் உயரும்!
  உலகம் உயர்ந்தால் உள்ளோர்க் கெல்லாம்
  உயர்வும் சிறப்பும் உண்டாகாதா?
  இணைந்த கைகளால் ஏற்படும் நன்மைகள்
  எண்ணில் அடங்கா! ஏராளம்! ஏராளம்!
  நித்தியஸ்ரீ(1E3)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 22. சிங்கை உயர்ந்தது!
  சிங்கை உயர்ந்தது!
  எப்படி உயர்ந்தது? எதனால் உயர்ந்தது?
  உழைபாளர்கள் ஒன்று
  முதலாளிகள் இரண்டு
  அரசாங்கம் மூன்று
  இணைந்த கைகளால்!
  இணைந்த கைகளால்!
  இணைத்தவர் யார்?
  திரு லீ குவான் யூ!
  சிங்கை உயர்ந்தது !
  சிங்கை உயர்ந்தது !
  நித்தியஸ்ரீ(1E3)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 23. இனணந்த கரங்கள்
  வெற்றியின் முதல்படி!
  இனணந்த கரங்கள்
  ஒற்றுமையின் விளைவு!
  இனணந்த கரங்கள்
  நட்பின் சின்னம்!
  இனணந்த கரங்கள்
  வாழ்க்கையின் தூன்!
  இனணந்த கரங்கள்
  வாழ்வின் அஸ்திவாரம்!
  இனணந்த கரங்கள்
  நமது நம்பிக்கை!
  இனணந்த கரங்கள்
  நம் நாட்டின் வெற்றிக்கான இரகசியம்!
  தாஹிரா (3/5)
  Tanjong Katong Girls School (sec)

 24. கரங்கள் ஒன்றுசேர்ந்தனின் விழைவு
  கலகங்கள் நின்றுபோயின
  அண்டைவீட்டுடன் அன்புக் கொண்டனர்
  அண்ணன் தம்பிபோல் பிணைந்துநின்றனர்
  அறிஞர்கள் ஒன்றுசேர்ந்து விண்ணில் செலுத்தினர்
  இனமத பேதமின்றி இணைந்துநின்றனர்
  மத கலவரங்களோ மடிந்துசென்றன
  இயற்கை சீற்றத்தில் இன்னலுற்றனர்
  துயர்துடைப்பிற்கோ விரைந்து சென்றனர்
  நல்லிணக்கம் நம்மில் தலைத்தோங்கின
  நம் சிங்கை நாடு நட்புப் பூங்காவாகின
  அமீரா
  பாயா லேபார் மெதோதிஷ்த் பேண்கள் உயர்நிலலை பள்ளி

 25. நீ விழுந்த போதெல்லாம்
  தாங்கிப் பிடிக்கும்
  இந்தக் கை
  மனம் உடையும்போதெல்லாம்
  தட்டிக் கொடுக்கும்
  இந்தக் கை
  தனியே நீ அழும்போதெல்லாம்
  உன் கண்ணீரைத் துடைக்கும்
  இந்தக் கை
  அது வேறு யார் கையும் அல்ல
  உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை

  UNITY SECONDARY SCHOOL
  1E1

Your email address will not be published.


*