இசை, நடன விருந்து

சையும் நடனமும் நம் மனதிற்குப் பிடித்த ஒன்று. நாதஸ்வரம், மிருதங்கம், பறை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் இசையாகட்டும், நவீன நடனம் அல்லது நவீன இசையாகட்டும், அவை நம் மனத்தை ஊடுருவி, நம்மை மயக்கிவிடும். இப்படத்தைப் பார்த்ததும், இசையைப் பற்றி, நடனத்தைப் பற்றி, உங்களுக்குள் சிறகடிக்கும் கற்பனையை, கவிதையாக எழுதுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  11 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
டிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Senthilkumar Harishwaran Umaru Pulavar Tamil Language Centre
Vishnu Gan Eng Seng Secondary School
Banu Priya Unity Secondary School

 

14 கருத்துரை

 1. எவ்வளவுதான்
  மின்சாரஊடகத்தைப் பயன்படுத்தி
  இசை செய்தாலும்
  நம் பாரம்பரிய
  ஆடல் பாடல் நிகழ்ச்சி கொடுக்கும்
  புலலரிப்பை அவற்றால் தரஇயலாது.

  -M.NEELAKANDAN
  YUHUA SECONDARY SCHOOL

 2. பாரு பாரு படம் பாரு
  ஆடு ஆடு ஆட்டம் ஆடு
  பாடு பாடு பாட்டு பாடு
  என்று பாட்டு ஒலிக்க
  தாளமும் அடவும் ஒன்றோடு
  ஒன்று கலந்து உறவாட
  பாவமும் முத்தாய்ப்பும்
  அருமையாகக் கூடி வர
  கண் அசைவும் கழுத்து
  அட்டமியும் பொருந்தி வர
  டப்பாங் குத்து ஆட்டம் போல்
  தொனிக்க முதலில்
  பாட்டு அவ்வாறிருக்க
  நேரம் கடக்க அது
  நல்ல பயிற்சியின்
  விசாலமான நாட்டியமே
  அற்புதமான நடனமே
  என்று தெளிந்து
  நின்று கண்டு களிக்க
  நிகழ்ச்சி ஒன்று அழகாக
  அரங்கேறியது கோர்வையாக.

 3. நாட்டியம் காணும் போது,
  நாட்டம் கொள்ளுதே என் மனது,
  நானும் ஆட விழைகின்றேன்,
  நாளும் பொழுதும் தவிக்கின்றேன்.
  நதி நடந்துபோகும் சங்கீதம் மழை,
  அவரோகண சங்கீதம் மழலை பிள்ளைகளின்,
  சங்கீதம் மோனம் கூட உறைந்துபோன,
  சங்கீதம் பூமி சுற்றி கற்று கற்று சுற்றி,
  இசை இசைக்குள் மிதக்கும் ஜீவராசிகள்.
  ரபீக் முகமது லுபிஃனா ஜோஹார்
  St.Hilda secondary school

 4. ஸ்வரங்களில் எழும் ராகமாய் மட்டுமல்ல – நீ…
  என் தேகத்தை தீண்டிச் செல்லும் காற்றாய் – நீ…
  மலர்களை தேடும் வண்டுகளின் ரீங்காரமாய் – நீ…
  மாதவர் மணிக்கரத்தில் வலையோசையாய் – நீ…
  கொஞ்சி விளையாடும் குழந்தையின் மழழை மொழியில் நீ…
  மேடு பள்ளம் பாய்ந்தோடும் அருவியின் சத்தமாய் நீ…
  சோலையில் சாய்ந்தாடும் மரங்களின் அசைவில் அழகாய் – நீ…
  செடி கொடிகளை வாழ்விக்கும் மழையின் இரைச்சலாய் – நீ …
  இந்த பார் முழுதும் பரவசமாய் ஒலிக்கும்
  ஓசை முழுதும் எழிலான இசை – நீ…
  Senthilkumar Harieswaran 2HT1
  Umar Pulavar Tamil Language Centre

 5. பொண்ணு மாப்பிள்ளை
  வருவதைப் பாரு
  பின்னாலேயே வரும்
  மேளதாளத்தைப் பாரு
  தாளத்திற்கேற்ற
  ஆட்டத்தைப் பாரு
  மேடையில் ஆடும்
  பெண்களைப் பாரு
  அவர்களை ஆடச் செய்யும்
  இசையைக் கேளு
  துள்ளிக் குதிக்கும்
  மக்களைப் பாரு
  அவர்களை கையை ஆட்டி
  போடும் தாளத்தைக் கேளு
  பாட்டுப் பாடுபவரும்
  ஆடுவதைப் பாரு
  அவரை ஆட்டி வைக்கும்
  இசையைக் கேளு
  மேள தாளத்தின்
  இனிமைக் கேற்ப
  ஒரு ஆட்டத்தைப் போடு
  கண்ணன் சுபஸ்ரீ
  உயர்நிலை ஒன்று (விரைவு)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 6. தமிழ்நாட்டில்
  பரதநாட்டியம் ,
  புலியாட்டம்,
  கரகாட்டம்,
  ஒயிலாட்டம்
  மற்றும் பறையாட்டம்.
  ஆந்திராவில்
  குச்சிப்புடி.
  கேரளாவில்
  ஒயிலாட்டம்.
  மணிப்பூரில்
  மணிப்புரி நடனம்.
  இசையில்
  கர்நாடக இசை,
  இந்துஸ்தான் இசை
  மற்றும் கிராமப்புற இசை.
  ஆனால்
  மனம் போடும் நடனத்திற்கு
  பாடும் பாட்டிற்கும்
  மாநிலம் இருக்கிறதா?
  மொழிதான் இருக்கிறதா?

 7. அம்மா பாடும் பாட்டு
  சின்ன குழந்தையே அதை கேட்டு
  உன் தலையை ஆட்டு
  பறவை பாடும் பாட்டு
  குறிவியே நீ அதை கேட்டு
  நீ கிச் கி்ச் என்று கூவு
  நாவினால் பாடடும் பாட்டு
  காதுக்கு கேட்கும் பாட்டு
  என்னை ஆடச் செய்யும் பாட்டு
  நாட்டை ஆட்டி வைக்கும் பாட்டு
  கண்ணன் சுபஸ்ரீ
  உயர்நிலை ஒன்று (விரைவு)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 8. இசை, நடன விருந்து கவிதை
  செவிகளின் பயன் இசையன்றோ!
  விழிகளின் விருந்து நாட்டியமன்றோ!
  கண்மூடி இசை பருக உள்ளம் உருகும்
  விழி திறந்து நடனம் பார்க்க உவகை கொள்ளும்
  இன்பத்தின் இரட்டைப் பிறவி இசையானால்
  துன்பத்தைத் துரத்தி விரட்ட நடனம் வேண்டும்
  சோகம் கொல்லும் சாகசம் இசைக்கு உண்டு
  பெரு மோகம் கொண்டு மகிழ்ச்சியுற நடனம் உண்டு
  மழலையின் மொழியிலும் பண் உண்டு
  சிறு குழந்தையின் நடையிலும் நடனம் உண்டு
  இசையும் நடனமும் இயைந்து இணைந்தால்
  உடலும் உள்ளமும் மகிழ்வுராதோ!
  இவையிரண்டும் இப்புவிமேல் போதுமப்பா
  பிற இன்பம் தேடி சொல்வோமோ நானிலத்தில்!
  CHINMAYI (102)
  MARSILING SECONDARY SCHOOL TAMIL LANGUAGE CENTRE

 9. இசையும் நடனமும் இனிய விருந்து
  பார்க்கக் கேட்கப் பரவசமூட்டும்,
  துள்ளாத மனமும் துள்ளும்
  ஆடாத மனம் கூட ஆடும்.
  நாதஸ்வர இசையின் தில்லானாவும்,
  பறை இசையின் குத்தாட்டமும்,
  கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து.
  பாடி ஆடிக் களிப்பது மனதிற்கும் விருந்து.
  தாலாட்டிசையில் குழந்தை உறங்கும்.
  மகுடியின் இசையில் பாம்பும் ஆடும்.
  தேனீக்களின் ரீங்கார இசையால்
  மலர்கள் தேனைக் கக்கும்.
  இசையும் நடனமும் மகிழ்வைச் சொரியும்.
  அஃப்ரின் பாத்திமா
  யுவான்சிங் உயர்நிலைப் பள்ளி

 10. செல் ஏதேனும் ஒரு திசை
  அங்கு நிச்சயம் இருக்கும் இசை!
  மூழ்கிவிடு இசையில்,
  அந்த அற்புதமான களையில்
  செவிக்கு தேன்மாறி
  மனதுக்கு திருப்தி
  உரத்த இடியோ,
  நயமான மழைத்துளியோ,
  எல்லாம் இறை,
  கொடுத்த இசை

  Suresh Babu Akash
  Anglo-Chinese School (Independent)

 11. தமிழின் முதல் உயிரெழுத்து அ
  என் அம்மாவிடம் நான் கட்டுவது அன்பா
  தமிழ் மொழி மிகவும் சிறப்பு
  நீ எல்லோரிடமும் அன்பை பரப்பு
  பிள்ளைகள் அம்மா காக்கும் புதையல்கள்
  நிறைய அன்பு காட்டுவது நம் தமிழர்கள்
  அன்பு எனும் மருந்தை கொடுத்துவிடு
  மகிழ்ச்சியாக உன் வாழ்வை கழித்துவிட்டு
  பெயர்: நரேஷ்
  வகுப்பு: 2B1
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 12. பெயர்: நரேஷ்
  வகுப்பு: 2B1
  அணைத்து இடங்களிலும் இருக்கும் இசை
  அதை வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை
  இசையின் முள்ளம் வரும் இன்பம்
  இசையை நேசிக்கும் என் நெஞ்சம்
  இசை என் கவலைகளை போக்கும்
  மற்றும் என் இதயத்தை நிரப்பும்
  இசையை கற்றுக்கொலாதது என் குற்றம்
  அதை கற்றுக்கொண்டு படைப்பேன் ஓர் மாற்றம்
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 13. காற்றின் கவிதையாய் மிதந்தாய்
  இடியின் தாளமாய் இசைத்தாய்
  மழையின் பாடலாய் தோன்றினாய்
  அலையின் சுருதியாய் சேர்ந்தாய்
  மீண்டும் குழந்தையாய் பிறந்தாய்
  தாயின் தாலாட்டாய் வளர்ந்தாய்
  இளமையில் நண்பனாய் வந்தாய்
  பருவ மாற்றத்தில் இணைந்தாய்
  காதலுக்குத் தூதாய் சிறகடித்தாய்
  காதல் தோல்விக்கும் தோள்கொடுத்தாய்
  எங்கும் இருந்த இசையே
  எனக்குள் ஏனோ இறந்தாய்!
  க விஷ்ணு [3G]
  கான் யெங் செங் பள்ளி

 14. அன்னையின் தாலாட்டில் – ஆரிரோ ஆராரிரோ….
  குழவியின் மொழியில் – ஹி ஹிஹி ஹீ….
  மரக்கிளை அசைவில் – கிராக்க்….
  பறவையர் பாட்டில் – குக்கூ குக்குகூ….
  வண்டுகளின் ரீங்காரத்தில் – பஸ் பஸ்ஸ்….
  மணிகளின் ஒலியில் – டிங்ங் டாங்ங்ங்….
  அலைகளின் அதிர்வில் – வ்ஹுஷ் வ்ஹுஷ்….
  துடிக்கும் இதய துடிப்பில் – லப் டப் லப் டப்….
  எங்கும் நிறைந்துள்ளாய்
  இசையே!
  வாழ்க்கையே மாறும்
  உன்னை ஒரு கணம்
  நாடினால்! அதனாலேயே
  உன் ‘இ’ என்ற எழுத்தில்
  இவ்வுலகமே அடங்கும்!
  மொத்தத்தில் தனிமையின்
  இனிமையே நீ!
  உன்னாலேயே இசைக்கிறோம்
  உன்னை இசை என!
  மா.அஸ்மிதா
  மெத்தடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*