அப்பா, அம்மா, நீங்கள்!


 
அப்பா, அம்மா – இவர்கள் நம்மீது செலுத்தும் அன்பு அளவிட முடியாதது. அதே நேரத்தில் அவர்கள் தேவையான நேரத்தில் கண்டிக்கவும், தீமைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கவும் தவறுவதில்லை. அவர்களுடைய அன்பை, கண்டிப்பை, அவர்கள் நம்மீது காட்டும் அக்கறையை உணரும் பல சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும். அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் கதைகள் ஆகின்றன. அந்த சம்பவங்களை இங்கே பகிருங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள் – 31 மே2015. வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ஆன்றோர் வாக்கு. நம் கண் முன் திகழும் தெய்வங்களாக மட்டுமல்லாமல் தங்கள் வாழ்க்கைகளே நமக்காக அர்ப்பணிக்கின்றனர். அவர்களே நமது தாயாரும் தந்தையாரும் ஆவர். நம் நன்மையை கருத்தில் கொண்டு பல்வேறு காரியங்களை செய்வார்கள். அவ்வாறுதான் என் அன்னையும். படிப்பில் துளியளவுக்கூட விருப்பம் இல்லாத நான் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் செலுத்தினேன். மற்ற பெற்றோர்களைப் போல் என் தாய் இல்லை. என்னை சிறிதும் அதட்டாத அவர் என்னிடம் ஒன்று கூறினார்.
  ‘ நீ உன் தேர்வுகளில் நன்றாக செய்தால், நான் உன்னை கூடைப் பந்தாட்ட வகுப்பில் சேர்ப்பேன்,’ என்றார்.
  அவர் கூறியவாறு நானும் கடினமாக உழைத்து தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றேன். தற்போது நான் பல்வேறு கூடைப் பந்தாட்ட போட்டிகளில் கலந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். ஆனால், அவை என் சாதனைகள் அல்ல – என் தாயாரின் வெற்றி.
  Aswini D/O Kandthey
  Paya Lebar Methodist Girls School (Secondary)

 2. பிள்ளைகள் கண்ணாடிகளைப் போல, அழுத்தமாகப் பிடித்தாலும் உடைந்துவிடுவார்கள். இலேசாகப் பிடித்தாலும் நழுவி விழுந்து உடைந்துவிடுவார்கள். ஆனால், பெற்றோர்கள் பத்தரமாகப் பிள்ளைகளைப் பார்ப்பார்கள். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நம்முடைய பெற்றோர்கள்தான் நம்மைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள். என்னுடைய வாழ்க்கையில் என் பெற்றோர்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் இன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
  காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைத்தொழும் தெய்வங்கள் என் அம்மாவும் அப்பாவும். எனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். நான் தவளான வழியில் போனால், அவர்கள் இருட்டில் வழிகாட்டும் குத்துவிளக்காகத் திகழ்வார்கள்.
  வாழ்க்கையில் வெற்றி அடைய அவர்கள் என்னை ஊக்குவிப்பார்கள். நான் எரிகிற விளக்காக இருந்தாலும் எனக்குத் தூண்டுகோலாக அமைபவர்கள் என் பெற்றோர்களே. எனவே நாம் பெற்றோர்களை மதிக்க வேண்டும்; அன்புடன் பழக வேண்டும்.
  வர்ஷா (Varsha)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 3. அண்ணையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.அப்பா வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் எ்று கற்றுக் கொடுப்பார்.அம்மா தன் நேசத்தைக்காட்டி நம் குடும்பத்துக்கு சோறு போட்டு நம்மளை அன்போடு பார்த்துக்கொள்வார்.தந்தை தாம் செய்யும் வேலை மூலம் அன்பு செலுத்துவார்.தாயார் வெளிப்படையாகவே செலுத்துவார்.கோபம் நம் கண்ணையும் கருத்தையும் மறைக்கும்போது நாம் நம் பெற்றோர்களின் மீது திட்டும் வார்த்தைகள் நம் பெற்றோரை காயப்படுத்தும்.நாம் சிறிது நேரம் கழி்து நிதானமாக இருக்கும்போது நாம் திட்டிய வார்த்தைகளை திருப்பி வாங்கும்படி தோன்றும்.அதுதான் நம் பெற்றோருக்கும் நமக்கும் இரிக்கும்மாய மந்திரம்.நாம் தனியாக வாழும் நேரம் வரும்போதுதான் அவர்களின் துன்பங்கள் தெரியும்.நாம் நம் பிறந்த விட்டலிருந்ந்து செல்லும்போது நாம் கண்ணீர் விடும் ஒவ்வொரு துளியும் நம் பெ்றோருக்கும் நம்கும் இருக்கும் நேசம்.

 4. S. Siva Ranjana இளந்தென்றல் வீசும் காலை நேரம். தேர்விற்காக மிகவும் சிரத்தையுடன் பள்ளிப் பாடங்களைக் கற்றுக் கொண்டிறுந்தேன். ஓயாது நகரும் கடிகார முட்கள் காலை மணி பத்து எனக் காட்டின. எதையும் பொருட்படுத்தாமல் என் படிப்பினைத் தொடர்ந்தேன். சில பொருட்களை வாங்குவதற்காக கடைத்தொகுதிக்கு சென்றிருந்த என் அன்னை, என்னருகே வந்தார். மணி பத்தாகிவிட்டதே, காலைச் சிற்றுண்டியை உண்டுவிட்டாயா? என அன்போடு வினவினார். படிக்கும் ஆர்வத்தில் இருந்த நான், உணவு உண்டேனா  அல்லது உண்ணவில்லையா என்ற ஐயத்தில் திளைத்தேன். அதைப் பார்த்த என் தாயார், இவ்வாறு நீ கூற இயலாது திளைத்தால் நிச்சயமாக உண்டிருக்கமாட்டாய் எனக் கூறி என்னை அழைத்துச் சென்று உணவு  பரிமாறினார். நான் உண்ணவில்லை என்பது அப்போது தான் என் நினவுக்கு வந்தது.நான் உண்டேனா அல்லது உண்ணவில்லையா என்று எனக்கே தெரியாத போது, நான் உண்டிருக்க மாட்டேன் என் சரியாக என்  தாயார் கனித்தார்.என்னை நன்கு அறிந்து எவ்வளவு அன்பாக நடந்து 
  கொள்கின்றார் என்பதை எண்ணி வியப்படைந்தேன்.
  சீ. சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி.

 5. அப்பா, அம்மா, நீங்கள்!
  ” தாயிற்சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
  ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை, அன்னை தந்தையே அன்பின்
  எல்லை,” என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்பப் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும், அன்பு செலுத்த வேண்டிய நேரத்தில் அன்பு செலுத்தினால்தான், அவர்கள் வாழ்வு சிறக்கும்.
  என் வாழ்க்களையிலும் இது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில்தான் நடந்தது. பள்ளியில் ஆசிரியர்களிடம் நற்பெயருடனும் நன்கு படிக்கக் கூடிய மாணவனும் ஆகிய நான், சிறிது நாட்களாக படிப்பிலும் இதர பள்ளி நடவடிக்கைகலிலும் பின்தங்கி இருந்தேன். என் அம்மா இதை அறிந்துக்கொண்டார். அதற்குக் காரணம் நான் கொண்டிருந்த கூடா நட்பே காரணமாகும். அடிக்கடி தொலைப்பேசியில் வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பதையும் பள்ளி முடிந்தும் நேரம் களித்து வருவதையும் கவனித்த என் அம்மா முதலில் எனக்கு அறிவுரைக் கூறினார்; கண்டிக்கவும் செய்தார்.
  அதையெல்லாம் நான் காதில் வாங்கிக்கொள்ளாமல் பாடங்களின் கவனம் செலுத்தாமல் இருந்தேன். தேர்விற்காக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே என்னை என் அம்மா தயார்படுத்திவிடுவார். ஆனால், இம் முறை என்னை அவர் வருப்புரத்தவில்லை; என் போக்கிலேயே விட்டுவிட்டார். அதன் விளைவாக இரண்டாம் பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களையே எடுத்தேன். ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுத்த நான், அவர்களின் முன்னாள் தலை குனிந்து நிற்க வேண்டிய தாயிற்று. ”எதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தாள்தான் மறுமுறை அந்த தவறை செய்யமாட்டாய். உன் தவறான சேர்க்கையால் ஏற்பட்ட விளைவை நீ உணர்ந்திருப்பாய்,” என்று கூறிய என் அம்மா தக்க சமயத்தில் வழி காட்டினார்.
  C.Nishikanth 2C
  Teck Whye Secondary School.

 6. அப்பா,அம்மா,நீங்கள்
  அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தவர் என் தாயார்.என் சிறு வயது முதலே,என் தாயார் என்னை நிறையப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்குவிப்பார்.நானும் என் தாயாரின் பேச்சை செவிசாய்த்து கதை சொல்லும் போட்டி,மாறுவேடப் போட்டி என்று பல விதமானபோட்டிகளில் பங்குபெற்று நிறையப் பரிசுகள் பெற்றிருக்கிறேன்.பங்குபெற்ற போட்டிகளில் அன்றும் இன்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டே இருப்பது என்னையே வியப்பில் ஆழ்த்தியது.இந்தவெற்றிக்குக் காரணம் என் தாயாரே ஆவார்.
  “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்ற பழமொழியின் பொருளைசிறுவயதில் ல் நான் அறியமாட்டேன்.ஆனால்,அவர் அறிவார்.அதனால்,என் தாயார் எனக்கு ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் அதற்கான பயிற்சிகளை கொடுப்பார்.அப்படி அவர் பயிற்சி கொடுக்கும்போது நான் எந்த நேரத்திலும் எரிமலைப் போல் வெடித்து விடுவேன் என்று அவர் அறிவார்.ஆனால்,வெற்றிக்கு எனக்கு பயிற்சி அவசியம் என்று நம்பிய என் தாயார் தொடர்ந்து பயிற்சிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.இதே மேடையில் பரிசு வாங்கப் போகும்போது மகிழ்ச்சி வெள்ளம் மனதில் கரைபுரண்டோடும்.வெற்றிப்பாதைக்கு முயற்சியும் பயிற்சியும் மிக முக்கியம் என்று நான் உணர்ந்தேன்.
  என் தந்தையார் என்னுடைய ஒழுங்கு முறைகளில் மிகவும் கண்டிப்பானவர்.அதை நான் மிகச் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.படித்து முடித்தவுடன் புத்தகங்களை முறையாக புத்தக அலமாரியில் வைக்க வேண்டும்,பள்ளியிலிருந்து
  வந்தவுடன் சீருடையை ஒழுங்காக மடித்து துணி அலமாரியில் வைக்க வேண்டும்,சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவ வேண்டும் போன்ற நிறைய ஒழுங்கு முறைகளை அவர்
  எதிர்பார்க்கிறார்.இவற்றையெல்லாம் நான் காதில் வாங்கிக்கொண்டு நடந்துக்கொள்ளவில்லையென்றால் எண்ணையில் விழுந்த பணியாரம் போல் குதிப்பார் அடுத்ததாக,என் தந்தையார் என்னை தினமும் படிக்க சொல்லி ஊக்குவிப்பார்.அவர் படிப்பைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எனக்கு மூக்கிற்கு மேல் ஆவேசம் வரும்.நான் படிக்கவில்லையன்றால் அது என் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்று எனக்குச் சிறு வயதில் அறியமாட்டேன்.இதனாலும்,அவருக்கு கோபம் வந்து என்னைக் கண்டிப்பார்.
  என் பெற்றோர்களின் அருமை பெருமைகளை நான் புரிந்துகொள்ளவில்லை.
  “மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்கனியும்
  முன்னால் கசக்கும் பின்னால் இனிக்கும்”
  என்பதை மற்றவர்கள் என்னைப் பாராட்டும்போது உணர்ந்து கொண்டேன்.

Your email address will not be published.


*