அன்பு மழை

ன்பே இந்த உலகை நலமாக வைத்திருக்கும் நல்ல மருந்து. இந்தப் படத்தில் வெளிப்படும் அன்பைப் பாருங்கள். அதைப் பார்த்ததும் உங்களுக்குள் சிறகடிக்கும் கற்பனையை, தோன்றும் கருத்துக்களைக் கவிதையாக எழுதுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 11 பிப்ரவரி 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
அக்டோபர் 2017, வெற்றியாளர்களின் பட்டியல்

Neelakandan Yuhua Secondary School
Subathra Jurong West Secondary School
Sankarramani Keerthana Riverside Secondary School

38 கருத்துரை

 1. இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலம்
  அன்பு
  குழந்தைக்கும் தாய்க்கும் பாலம்
  அன்பு
  கவிதை எழுதி முழுமையாய்
  முடிக்க முடியாமல்
  தவிக்கின்றேன்
  முழுமையாய்
  கிடைக்கப்பெறாத
  அன்பிற்காக!
  Harish
  Yuhua Secondary School 2N2

 2. நட்பு
  நட்பு என்றால் பரிவு
  நட்பு என்றால் பாசம்
  நட்பு என்றால் பிரிவு
  நட்பு என்றால் பீடு
  நட்பு என்றால் புன்னகை
  நட்பு என்றால் பூரிப்பு
  நட்பு என்றால் பெருமை
  நட்பு என்றால் பேணுதல்
  நட்பு என்றால் பைபிள்
  நட்பு என்றால் பொறுமை
  நட்பு என்றால் போராட்டம்
  டேவ், Dev, 1E2
  யூனிட்டி உயிர்நிலைப்பள்ளி

 3. உண்மையான அன்பை
  மற்றவர்களுக்கு கொடுத்து பார்…
  அதை விட அதிகமான அன்பை
  ஒரு நாள் அவர்களிடம் இருந்து நீ பெறுவாய்!
  எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல…
  எப்போதும் வெறுக்காமல் இருப்பதுதான்
  உண்மையான அன்பு…
  நம் உறவினர்களைப்போன்று…
  பிரதிபா
  பெண்டிமியர் உயர்நிலைப்பள்ளி

 4. அம்மா ….
  ஒரு அழகிய காட்சி – அம்மா
  ஒரு குழந்தை – நான்
  தாயின் காலில் அமர்ந்து
  பாச நீரில் – குளிர்வித்தாள் – அன்னை
  என் பாச உறவு – அக்காள்
  பரிவுடன் பார்த்து – எனக்கு
  களிப்பூட்டுகிறாள்
  என்றும் உறவுடன்- பாதுகாப்பு
  SHAMEERA BEGUM (4T1)
  YUAN CHING SECONDARY SCHOOL

 5. சிலர்
  அன்பை
  வார்த்தைகளால் உணர்த்தலாம்.
  சிலர்
  அன்பை
  உணர்வுகளால் உணர்த்தலாம்.
  சிலர்
  அன்பு புரியாமல்
  அதைக் காலம் உணர்த்தும்போது
  கண்கள் கலங்கும்.
  சிறையில்
  கருவின் இருட்டைப்போல
  அது இருக்கிறது..
  துடிப்பை துணையே தனியே..
  ஷரோன் கோபிகிருஷணா
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 6. நான் இந்தக் கவிதையை
  உனக்காக எழுதுகிறேன்
  என் சிறந்த நண்பன் நீ.
  எதையும் மறைக்காமல்
  உன்னிடம் பகிர்ந்துக்கொள்வேன்.
  எப்போதும் உன்னிடம்
  கோபமாக இருக்க மாட்டேன்.
  எப்போதும் உனக்கு உதவுவேன்.
  எப்போதும் உன்னை வெறுக்காமல்
  உனக்கு ஒரு நல்ல நண்பனாக
  இருப்பேன்.
  நான் உன் நட்பை
  நேசிக்கிறேன் என்பதை
  நீ அறிவாய் என்று
  என் சிறந்த நண்பன் நீ!
  கணேஷ் பெரியசாமி
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 7. ~அன்பு~
  அன்பாக இருந்தீர்கள் என்றால்
  நீங்கள்தான் சிறந்தவர்!
  நீங்கள் அன்பாக இருந்தால்
  நீங்கள் உங்கள் வாழ்க்கையை
  திருவிழாவாக அனுபவிப்பீர்கள்
  அன்பாக இருந்தீர்கள் என்றால்
  எந்த பிரச்சனையையும்
  நீங்கள் சமாளிக்கலாம்
  அன்பாக இருந்தீர்கள் என்றால்
  அனைவரும் உங்களை
  மதித்து நடத்துவார்கள்
  அன்பினால்
  நீங்கள் மற்றவர்களைவிட
  வேறுபட்டவர்
  அன்பாக இருந்தீர்கள் என்றால்
  நீங்கள்தான் சிறந்தவர்!
  கைலாசன் பூஜா
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி – 2E3

 8. அன்பு என்றால் பாசம்.
  அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
  அன்பு மிகவும் அவசியம்.
  அன்பு இல்லையேன்றால் எதையும் சாதிக்க முடியாது.
  அன்பு என்றால் பரிவு
  ஜீவா,Jeeva,1E3
  unity secondary school,யுனிட்டி உயர்நிலைப்பள்ளி

 9. தாய்-பிள்ளை பாசத்திற்கு அளவில்லை.
  இவ்விரண்டு ஜீவன்களின் நெருக்கத்திற்கு
  நிகரில்லை.
  நட்பை அடிப்படையாக வைத்து
  சாதித்தவர்கள் பலர்.
  இவ்வுலகில் நட்பு இல்லையென்ற
  ஏக்கத்துடன் வாழ்பவர்கள் சிலர்.
  அன்பினால் திருத்தமுடியாததோ
  குணப்படுத்தமுடியாதோ
  எதுவும் இல்லை.
  அதனால்தான் கூறினார் புத்தர்,
  ‘அன்பே தெய்வம்’என்று.
  ‘நீ உலகத்தை மாற்றலாம்.
  அதற்கு ஓர் ஆயுதம் தேவை.
  அதுதான் அன்பு!’
  இர்ஃபான் மீரா
  யுவான்சிங் உயர்நிலைப் பள்ளி

 10. அன்பு என்றால் அம்மா
  காலம் மாறினாலும்
  மாறாது அவளின் மனம்
  மரணமே வந்தாலும்
  நம்மை நேசிப்பதே அவளின் குணம்..
  அதுதான் அம்மா!
  தனது பிள்ளைகளுக்கு தியாகம் செய்ய
  தயாராக இருக்கும் அம்மா
  கண்கள் பனிக்கும் போதெல்லாம்
  நெஞ்சம் நினைக்கும் ஒரே உறவு அம்மா
  அம்மா என்றால் நிலா
  அம்மா என்றால் உலகம்
  நம்மைப் பெத்த அம்மா
  ஓர் அருமையான அம்மா
  வானத்தின் அழகு நிலா
  பூமியின் அழகு அம்மா
  அம்மா என்றால் ஓர் அழகான கவிதை
  பூவைப்போல் மலரும் என் அம்மா
  பிறரை சிரிக்க வை என் அம்மா
  ஓர் இனிய அம்மா!
  நவித்தா
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

  • எனக்கும் வேண்டும் கடன்
   ஈடில்லா அன்பின் உடன்
   இடை தொடை கடைபோல்
   நேரசை நிறைய சையாக
   வெண்பா கலிப்பாகத்
   தேமா புளிமாவாகத்
   தெவிட்டாத தீந்தமிழே
   விதையாக வா
   காடு முளைக்க
   காகம் விதைக்கும் விதையாகக்
   கவிதையாக வா
   அன்பென்ற விழுதுகள்
   ஆழப் பதியட்டும்
   அன்பு
   Viswanatha Babu Banupriya
   Unity Secondary School

 11. அன்பு பகிர்ந்து கொள்ளும் போது
  பல மடங்காக பெருகும்
  முகம் காட்டும் கண்ணாடி நீ
  அழகான ஒருவரா எண்பதை
  மடடும் காட்டும்.
  ஆனால் நீ அன்பானவர் ஏன்பதை
  நீ நடந்து கொள்ளும் விதமே காட்டும்
  இதுவே அன்பு!
  ஷிவானி,Shivaani,1E4
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 12. அன்பு உலகத்தில் சிறந்த பண்பு.
  அது,
  நம்வாழ்கையை மாற்றும் நன்று.
  நம் ஆனந்தத்தை
  உச்சிக்கு கொண்டுபோகும் என்றும்.
  மனித இதயத்தை திறக்க உதவும் ஓரே சாவி
  அன்பு மட்டுமே.
  எப்போதும் மறக்காமல் இருப்பது
  அன்பு அல்ல..
  என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது
  உண்மையான அன்பு.
  ஷ்யாம் நிதிஷ்,SHYAM NITHISH 1E2.
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 13. தாலாட்டு சத்தம் கேட்டு
  நானும் உறங்கிட தாயே
  எனக்கு நீயும் வேண்டும்
  அன்பு எனும் உயிர் தந்து
  உதிரம்யெனும் பந்தத்தை
  ஏற்படுத்தினாய்…
  உன் உயிரில் பாதி
  தந்தது அம்மா.
  நான் விடும் மூச்சிலே
  உன் கருவறை வெப்பம்
  உணர்கிறேன்.
  உலகானவளே
  உன்னையும் ஒரு தரம்
  சுமக்கக் கேட்கிறேன்
  இறைவன் வரம் தருவாரோ…?
  என் சிரிப்பினிலே
  நீ பட்ட துன்பம் காண்கிறேன்.
  அவளது கருவில் நான்
  உருவான நாள் முதல்
  அவள் என்னை விட்டு பிரியும்
  தருணம்வரை
  அவள் என் மீது சுமத்திய அன்பு..
  அவள் போன பின்பு
  எங்கே தேடுவேன் அந்த அன்பை?
  பவதாரணி/Bavatharani/1E2
  Unity Secondary School

 14. கனவில் வந்திடு அன்பே.
  கண்களை திறக்கும் முன்னே.
  நீ வரவேண்டும் கண்னே.
  உயிர் பிரியும் முன்னே.
  உன் பாச மழையில்
  நித்தம் உருக
  தவமாய் காத்திருப்பேனே.
  என்னுடன் சொப்பன உலகில்
  வந்துவிடு உடனே.
  பிரித்திகா
  M PREETHIKHA, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 15. தாயின் சிறப்பு
  அம்மா, ஓர் உயிர்வாழும் கவிதை.
  அவர் முகத்தைப் பார்த்தேன்.
  அன்பு பொங்கி வழிந்தது.
  அவர் கண்ணைப் பார்த்தேன்.
  அக்கறை பெருக்கெடுத்தது.
  பத்து மாத வலி…
  ஆயிரக்கணக்கான தியாகங்கள்…
  அளவில்லா பொறுமை…
  எந்த மகனாலும்
  அம்மாவிடம் பெற்ற கடனைத்
  திருப்பிக் கொடுக்க இயலுமா?
  அதுதான் ஒரு தாயின் சிறப்பு!

  பார்த்திபன்
  PAARTHIBAN NADIMUTHU, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 16. என்னை கஷ்டப்பட்டு சுமந்து வளர்த்தது நீயே.
  நான் வாழ்நாளில் பாதைகளைக்
  காட்டுவதும் நீயே.
  மற்றவர்கள் என்னைப் பாராட்டும்போது ,
  பெருமைப்படும் முதல் ஆள் நீயே.
  நான் பார்த்த முதல் கடவுள் நீயே.
  உலகில் வேறு எங்கும் இல்லாத நீயே.
  கஷ்டமான நேரங்களிலும்
  எனக்குத் துணையாக இருக்கும் நீயே.
  நீதான் என் அன்பு அம்மாவே.
  தருண்
  SARAVANAN TARUN, 2D1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 17. இளமைத்தமிழ் கவிதைப் போட்டி
  தலைப்பு: அன்பு மழை

  கவிதை:
  அன்பு என்றால் பாசம்.
  அன்பு என்றால் நேசம்
  அன்பு என்றால் சமர்பணம்.
  அன்பு என்றால் மரியாதை.
  அன்பு என்றால் உண்மை.
  அன்பு என்றால் நம்பிக்கை.
  அன்பு இல்லை என்றால்
  இவ்வுலகத்தில் வேறெதுவும் இல்லை.
  பொன்னி அருண் 2A1
  கிளிமெண்டி டவுன் உயர்நிலை பள்ளி

 18. தமிழின் முதல் எழுத்து அ.
  என் வாழ்வின் உயிரெழுத்து அம்மா.
  தமிழ் மொழி மிகவும் சிறப்பு.
  நீ எல்லோரிடமும் அன்பை பரப்பு.
  பிள்ளைகள் அம்மா காக்கும் புதையல்கள்.
  நிறைய அன்பு காட்டுவது நம் தமிழர்கள்
  அன்பு எனும் மருந்தை கொடுத்துவிடு.
  மகிழ்ச்சியாக உன் வாழ்வை கழித்துவிட்டு

  ராஜேந்திரன் நரேஷ்
  RAJENDRAN NARESH, 2B1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 19. Title : அன்பு (Love)
  அந்தரத்தில் சுழலும் பூமியின் எரிபொருள் நீ…
  அம்மா என்ற வார்த்தையின் மறுபொருள் நீ…
  பல கோடி உயிர் தோன்றி
  அழியும் உலகத்தின் ஆணிவேர் நீ…
  இன்று சுயநல சூறாவளியின்
  ஆதிக்கத்தால் மறைந்திருந்தாலும்
  தக்க தருணத்தில் தென்றலாய்
  எம்மை தழுவுவாய் நீ…
  உறவுகளே நட்புகளே,
  அன்பைக் கொடுத்துப் பல மடங்காய்
  அன்பைப் பெறுவோம் அனுதினமே!
  சுவாதி ரவி சிவசங்கர்
  SWATHI RAVI, 4C1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 20. அன்பு என்பது அப்பாவின் அன்பு பரிசு
  அன்பு என்து அன்னையின் ஆனந்த முத்தம்
  அன்பு இல்லை என்றால் நிமதியும் இல்லை
  அன்பு உன்னைச் சுற்றியே வரும்.
  அன்பை பெருவதற்கும் காட்டுவதற்கும் தகுதி தேவையில்லை.
  தகுதி பார்த்து கொடுப்பது அன்பல்ல.
  அன்பு என்பது மனிதனின் பலவீனம்.
  ஏமாற்றப்படும் அன்பு மனிதனை ஒரு மிருகமாக்கும்
  சுதர்ஷினி
  SUDARSHINI SAKTHIVEL, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 21. அன்பின் பொது மொழி
  பழ மொழியும் உண்டு.
  புது மொழியும் உண்டு.
  வேத மொழியும் உண்டு.
  விளங்காத மொழியும் உண்டு.
  வேற்று மொழியும் உண்டு.
  மழலை மொழி போல்
  களங்கம் இல்லாத மொழி அன்பு மொழி.
  அதையே பொது மொழியாய் ஏற்போம்.

  சண்மிதா
  SHUNMITHA SENTHIL KUMARAN, 2D1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 22. அம்மா
  அம்மா நீ தேன்
  நான் சுவை
  நீ கவிதை
  நான் சொற்கள்
  நீ மழை
  நான் மழையின் துளி
  நீ வானவில்
  நான் வானவில்லின் வர்ணம்
  நீ கடவுள்
  நான் உனது படைப்பு
  அமிர்தா
  DEENADAYALAN AMIRTHAA
  JURONG SECONDARY SCHOOL
  ஜூரோங் உயர்நிலைப் பள்ளி

 23. அன்பு மழை
  அன்புக்குப் பொருள் தேடி – அதுவே
  தெய்வம் – அன்பே அம்மா
  அம்மா வாசனையில் அன்பு அறிந்த – பிள்ளை
  அம்மாவின் கால் அன்னையின் மடி – அதுவே
  எனது நம்பிக்கைத் தூண்
  காலில் குளிக்கும் இன்பம் – அதுவே
  அன்பு பொழியும் இன்பம்
  அன்பு நிறைந்த குடும்பம் – அதுவே
  அம்மா என்ற நந்தவனம்
  அஃப்ரின் ஃபாத்திமா (1E4
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 24. சின்னையா அம்சவர்த்தினி ( யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி)
  February 9, 2018 at 6:15 am

  அம்மா என்றால் என்ன?
  உலகில் தோன்றிய முதல் ஒலி ‘அ’
  உயிர்களின் முதல் வெளிப்பாடு ‘அம்மா’
  உலகம் தோன்றிய போதும் – உயிர்கள்
  தோன்றிய போதும் உருவானது – அம்மா
  நீ …. மட்டுமே !! – அதனால்
  அன்பு என்ற சொல்லின் – முதல்
  எழுத்தது அம்மா – ‘அ’ ஆனதோ
  உங்களிடம் கேட்கிறேன் – உயிர்களிடத்தில்
  கேட்கிறேன் …. அம்மா?. அம்மா?..
  அன்பு தானே !! – ஆம்
  சின்னையா அம்சவர்த்தினி (2E3)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 25. அன்பு என்ற வார்த்தையை கேட்டாலே மனத்தில் புன்னகை பூக்கும்.
  நம் வாழும் இந்த நவீன உலகத்தில் எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டும்.
  ஆனால் அன்பையும் உறவுகளையும் விலை கொடுத்து வாங்க முடியாது.
  தாய்,தந்தை,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் கல்வி முதலியவற்றைப் பேணி காக்க வேண்டும்.
  அன்பான வாழ்க்கையை வாழ ஆடம்பரம் தேவையில்லை,
  பாசமான மக்கள் இருந்தால் போதும்…
  அனீக்கா ரீமா,2/5
  Greenridge secondary school

 26. தித்திக்கும் அன்பு மழைவுடன் தெவிட்டாத திணை
  தேர்ந்து வெண்பாவில் மாலை தொடுக்கும்
  அம்மாவின் குரலோசை கொஞ்சும் பைங்கிளி
  சிந்திடும் சந்தத்தை மிஞ்சிடும் …
  ஆழமாய் பதியும் எத்தணிக்கும் கருவிற்கு
  அன்புமை தீட்டி ஏட்டினில் வார்த்திடும்
  குரலோசை அழுதிடும் மழலை
  குளிர்ந்திடும் தாலாட்டை கொஞ்சிடும் ..
  என்றும் அன்பு மாழையில் அம்மாவுடன்
  ஹரிஹரன் (2N2)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 27. அம்மா…
  அம்மா என்பது மூன்று எழுத்துக்கள் தான்
  ஆனால் அதற்குறிய அர்தம் மிக பெரியது
  அதை எவராலும் விவரிக்க முடியாது…
  அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிறிக்க அல்ல
  அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்…
  அன்றிலிருந்து எந்த திசையிலும் உன்
  முகமே
  என்னை அரவனைத்திட பார்த்திடுதே
  அன்னை உந்தன்மடி சாய்ந்து
  கிடந்திட நூறு ஜென்மம் வந்து
  ஏங்குகிறேன் நித்தம் நித்தம்
  உந்தன் அன்பை பெற்றுவிட
  ஏழு ஜென்மம் எனக்கு
  வேண்டும் என்பேன்
  Palanisamy Sujithra
  Jurong Secondary School

 28. அக்கா என்ற அழகுதாய்
  அன்பு என்ற நீரிலே தம்பியை குளிப்பாட்டி…
  ஆசை முகம் அருகே காட்டி…
  பாசத்தோடு வேடிக்கை ஊட்டி…
  பொறுப்பாய் வந்த குட்டி தேவதையே!
  குழந்தை உருவம்;அன்னை உள்ளம்;
  இரண்டும் ஒன்றான மாயம் நீயோ…
  உன் போன்ற அன்பு அக்காக்களை பெற்ற
  தம்பிகளுக்கு எந்நாளும் திருநாளே!
  வசந்தங்கள் வாழ்த்தும் பெருநாளே!
  காளிமுத்து சுஸ்மிதா
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 29. அன்பு மழை
  ஓர் வானில் இரு நிலவுகள் காண்பது
  சாத்தியமில்லை.
  ஓர் உடலில் ஈர் உயிர் இருப்பதற்கு
  வாய்ப்பில்லை.
  ஆனால்
  நீயோ கொடுத்துவைத்தவன்
  ஆம்!
  அக்காவும் இன்னொரு தாய்தான்
  நீ நனைவது அந்த ஒரு குவளை தண்ணீரில்
  மட்டுமல்ல
  இரு தாயின் அன்பு மழையிலும் தான்!
  ஶ்ரீநிதி
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 30. மலரின் குளியல்
  —————-
  அக் காலை பூத்த பூக்களின் மத்தியில்
  அழகான பூ ஒன்று பூத்தது
  அதை சீண்ட வந்த தேனியின் மீது
  தன்மேல் விழுந்த பனித்துளிகளைத் தெளித்தது
  பூ மேல் விழுந்த பனித்துளி
  தன்மேல் விழுமா என்று
  வாடியிருந்த இலைகள் ஏங்கின
  சூரியன் பார்த்த காட்சியை
  தன்னால் பார்க்க முடியவில்லையே என
  நட்சத்திரங்கள் தவித்தன
  இக் காட்சியை
  மெளனமாக ரசித்த மேகம் ஒன்று
  சட்டென மழையைப் பொழிந்தது.
  G Vishnu
  Gan Eng Seng School

 31. அன்பு மழை
  அன்புக்குப் பொருள் தேடி அலைந்தேன்.
  அன்பே தெய்வம் – அன்பே அம்மாவென விடை கிடைத்தது.
  அம்மாவின் வாசனையில் அன்பு தெரிந்தது பிள்ளைக்கு.
  அம்மாவின் அணைப்பில் அன்பு தெரிந்தது பிள்ளைக்கு.
  அம்மாவின் காலிடுக்கில் அமர்வதிலும் அன்பு தெரிந்தது.
  அன்பு மழையில் நனைந்து கும்மாளமிட்டது குழந்தை.
  குழந்தையின் கும்மாளம் ஆனந்தமாகத் தெரிந்தது அருகிருந்த அக்காவுக்கு.
  அன்பு மழை பொழியும் இல்லம் ஆனந்தமானது.
  அன்பு நிறை குடும்பம் நந்தவனம்; அஃதிலார்க் குடும்பம் பட்டமரம்.
  அம்மா என்றால் அன்பு! அன்பு! அன்பு!
  அஃப்ரின் பாத்திமா (1E4)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 32. அன்பிற்கு ஈடில்லை
  எவ்வளவு அன்பு காட்ட முடியுமோ காட்டுங்கள்
  ஏன்னென்றால் இவ்வலகத்தில்
  அன்பை விட சிறந்தது வேர் எதுவும்
  இல்லை
  எல்லோரிடம் அன்பாக இருஙங்கள்
  -M.NEELAKANDAN
  YUHUA SECONDARY SCHOOL

 33. ஆராரோ பாடும்போது
  ஆகாய நிலாவை
  அள்ளித் தருவேன்னு
  சொன்னீங்கலே அம்மா
  அந்த அன்புக்கு எல்லை
  ஆகாயம் கூட இல்லை.
  ஆம்…, பார்க்க முடியாதாம்
  அன்பையும் ஆண்டவனையும்
  நினைக்கவே முடியும் என்பர்
  அதையும் மீறி…
  அருந்தவம் வேண்டுமாம்
  ஆண்டவனை பார்க்க
  ஆனால் நான் என்னதவம்
  செய்தேனோ
  அன்பே உருவமாய் என்
  அன்னையைக் கண்டேன்.
  யோகலெட்சுமி
  Jurong secondary school (1-4)

 34. அக்கறை
  நடிப்பினால் வராத ஒன்று
  ஜொலிக்கும் புன்னகை
  அகத்திலிருந்து வரும் ஒன்று
  அதிகாரம்
  பாசமில் வராத ஒன்று
  நல்ல வாழ்க்கை
  அன்பைப் பொழிவதால் வரும் ஒன்று
  நீங்கா சொந்த பந்தங்கள்
  ஒற்றுமையால் வரும் ஒன்று
  “அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்”
  ஹர்மிதா -உயர்நிலை இரண்டு
  ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி

 35. அன்பே ஊக்கம், அன்பே கவசம் அன்பே எல்லாம்
  அகந்தமை அன்பு அகற்றிவிடும், அகத்தில் அன்பு புலப்படும்
  நல்லன்பில் விளைவது வாழ்வு, அவ்வாழ்வில் இணைவது அன்பு
  பத்துமாதம் சுமந்து ஈன்றெடுத்த நம் தாயை நாம் மறப்பதுவுமில்லை
  அத்தாயிற்கிணையாகும் அன்பை மறப்பதும் நியாயமில்லை
  அன்பிற்கு எல்லையே இல்லை
  அது ஒரு துளி இல்லை
  மழையாய் பொழியும் பெரு வெள்ளம்
  பணத்தால் வரும் உறவை விட அன்பால் வரும் உறவே சிறப்பு!
  அதுவே உயிரினும் மேலானது
  அன்பு கிடைப்பதும் கடினம், அதைக் காப்பதும் கடினம்
  கிறிஸ்மிதா சிவ்ராம் – உயர்நிலை இரண்டு
  ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி

 36. அன்பு என்றால் உயிர் !!
  அன்பு இல்லை என்றால், வாழ்க்கையே பிரயோஜனம் இல்லை.
  தந்தை என்றால் அன்பு,
  அன்னை என்றால் அன்பு.
  நண்பன் என்றால் அன்பு,
  ஆசிரியர் என்றால் அன்பு.
  பள்ளி என்றால் அன்பு,
  வீடு என்றால் அன்பு.
  இறைவன் என்றால் அன்பு.
  ஆனால், இந்த அன்பே அன்பானது ஆகும் !!!!!
  காய்த்ரிஸ்ரீ , Gayatrishree 1E1, Unity Secondary School,யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 37. நான் பிறந்தபோது இந்த உலகம்
  – என் கையில்
  நான் தவழ்ந்தபோது இந்த மேகம்
  -என் அருகில்
  நான் நடந்தபோது இந்த நதிகள்
  -என் அடியில்
  ஓ! அப்படிதான் தோன்றுமோ!
  மழலையின் மனதில்…
  செந்தில்குமார் ஹரீஸ்வரன்
  உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

Your email address will not be published.


*