அன்பு, பயம், ஏமாற்றம் பற்றிய கதைகள்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
இம்மாதப் போட்டிக்கு நீங்கள் மூன்று வகையான அனுபவங்களைக் கதையாகப் பகிரலாம்

1. யாராவது உங்களை அல்லது உங்கள் நண்பர்களை ஏமாற்றி இருக்கலாம். ஏமாற்றம் என்பது பலருக்கும் நடக்கும் அனுபவம்தான். அப்படிப்பட்ட அனுபவத்தைக் கதையாக எழுதுங்கள்.

2. அதைப் பார்த்தால் பயம், இதைப் பார்த்தால் பயம் என்று கமலஹாசன் பேசிய திரைப்பட வசனம் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் எதையாவது பார்த்துப் பயந்திருக்கிறீர்களா? அந்த அனுபவத்தைக் கதையாக எழுதுங்கள்.

3. அடிபட்டால்கூட அழாத பலர், யாராவது அன்பு காட்டும்போது நெகிழ்ந்து அழுது விடுவார்கள். அப்படி மற்றவர்கள் உங்களிடம் காட்டிய அன்பைப் பற்றிய சம்பவங்களைக் கதையாக எழுதுங்கள்.

உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10  ஏப்ரல் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

8 கருத்துரை

 1. அன்பு
  செடி போல் என்முகம் வாடியதே , ஆசை ஆசையாய் வளர்த்த செடி, இராப்பகல் அதை அரவணைத்தேன்,உயிருடன் காத்தேன் ,ஆனால் உழைத்ததெல்லாம் வீண் ,உயிருடன் காத்த தாவிரத்தை காப்பாற்ற உதவியின்றி தவித்தேன் .செடியைப் போல் மானமும் மண்ணுடன் மண்ணில் புதைந்தது .தாவிர போட்டியில் வெல்வேன் என்றும்,தாவிரம் வளர்ப்பதில் நான் கில்லி என்றும் ,கூறிய சவாலில் நிச்சய தோல்வி .
  தளர்ந்த மனதுடன் பள்ளிக்கு கிளம்பினேன்,கீழே என் நண்பனை கண்டேன் .என் நிலை அறியாத அவன் ஏதோ உளறினான் , தளர்ந்த மனதுடன் பள்ளி சென்றடைந்தேன்.
  விஷயம் அறிந்த என் பரம எதிரி என் முன் நின்றான் , என்னை கேலி செய்தான் . ஒவ்வொரு வார்த்தையும் என் நெஞ்சை கத்திப் போல் கிழித்தது.தலை குனிந்த நான் தடுமாறி வகுப்பிற்குச் சென்றேன் .
  இடைவேளையில் என்னை ஆட்டிப்படைத்த மனக்குமுறலை, நண்பனிடம் கொட்டினேன் .அவன் என்னை திட்டினான், ஆனால் அவன் முகத்திலோ ஆழ்ந்த பரிதாபம் .உள்ளே என் மனம் மெழுகுவர்த்திபோல் உருகியது ,வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாய் இருந்தது .
  மறுநாள் விடியலில் என் நண்பன் என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்தான் ,என்னால் வர இயலாது என்ற நான் “என்னால் வெல்ல இயலாது ,நீயாவது வென்று வா” என்று கூறினேன் .
  அதற்கெல்லாம் அவசியமில்லை ,”என் செடி ,உன் செடி ,கோப்பையை வென்று பகைவனை தலை குனிய செய் ,அதுவே போதும்” என்று முகத்தில் கவலையில்லாமல் புன்னகையுடன் கூறி செடியை கொடுத்தான் .
  என் கண்களிலோ ஆனந்த கண்ணீர் செடியை கண்டோ ,வெற்றி கோப்பையை நினைத்தோ அல்ல , அன்பின் மறு உருவமான என் நண்பனை நினைத்து .
  ஒரு தாயின் மறு உருவமாக என் நண்பனை கண்டேன் ,அவனின் உண்மையான அன்பிற்கு என்னால் கொடுக்க முடிந்த பரிசு என் கண்ணீரே .
  தருண் 
  DPS International School

 2. “ஏமாற்றாதே, ஏமாறாதே”.
  மற்றவர்கள் மீது நாம் அதிக நம்பிக்கை வைத்து ஒரு விஷயத்தைக் கூறும்போது, அவர்கள் நம்மை கைவிட்டால், அதுவே ஓரு பெரிய ஏமாற்றமாக திகழும். இதை நான் எனது அனுபவத்திலிருந்துக் கூருகிறேன். மீரா, அயிஷா அகிய என் இரு நெருங்கிய தோழிகளை பற்றிய கைத இது.சில நாட்களாக அயிஷாவின் நடைமுறை செரி இல்லை. அவள் எளிதில் மற்றவர்களை பார்த்து பொராமைக் கொண்டாள். இதை பற்றி நான் மீராவிடம் கூரினேன். என் எண்ணத்தை வைத்து மட்டுமே எதையும் தீர்மானிக்ககூடாது என்ற என் மனப்போக்கினால் என் உணர்வுகளைப் பற்றி அயிஷா அறியக்குடாது என்று தெளிவா மீராவிடம் கூறினேன். இருப்பினும், அவள் அயிஷாவிடம் இதைப்பற்றிக்கூரினாள்.மனம் உடைந்த நான் எமாற்றத்தில் தவித்தேன். ஒரு உயிராக வாழ்த எங்களுக்கு இது தான் முடிவா?எங்கள் நடப்பின் தலைவிதி இதுதானா?அழுது, மன்னிப்பு கேட்டு அதிகமாக நான் போராடினேன். இருதியில் அயிஷாவிடம் ஏர்ப்பட்ட சன்டை தீர்வடைந்தாலும், மீரா மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அந்த சம்பவத்தில் அடைந்த ஏமாற்றம் என்னுடன் எப்போதும் வாழும். அதனால் ஏர்பட்ட வலி இதையத்தை குத்திய ஆணியை போல் என் உள்ளத்தில் பதிந்தது.
  அஸினா
  St Margaret’s secondary school

 3. அன்பு (Part 1)
  “ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
  அம்மாவ வாங்க முடியுமா..” என்ற திரைப்பட பாடலைத் தான் நாம் அனைவரும் செவியுற்றிறுப்போம். ஆனால், அப்பாவைப் பற்றி ஏன் நாம் போற்ற மாட்டுகிறோம்? தாயார் நமக்கு எவ்வளவு தியாகம் செய்து, பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாரோ, அதே போல, நம்மீது அளவு கடந்த பற்றை வைத்தருக்கிறார் நம் தந்தை. அம்மா நமக்கு அன்பையும் அறவணைப்பையும் காட்டி வளர்க்கிறார் என்றால், அப்பா நமக்கு நல்லதையும் கெட்டதையும் விளக்கி கற்றுக்கொடுத்து, நாம் நல்வழியில் செல்ல ஊக்குவிக்கிறார்.
  “அடிக்கிற கை தான் அணைக்கும்” என்று பெரியோர்கள் இயம்புவது எனக்கு என் அப்பாவின் மூலமாகத்தான் புரிந்தது. என் அப்பா,நான் எந்தவொரு சிறு தவறை செய்துவிட்டாலும் வசைப்பாடுவார். “பெண் பிள்ளை என்றால் அடக்க உடக்கமாக இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…அப்படி இருக்க வேண்டும்..” என்று தொட்டதெற்கெல்லாம் சத்தம் போடுவார். அதனால், “அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிறாராம்” என்று அம்மா கூறும்போதெல்லாம் விளையாடி கொண்டிருக்கின்ற நான், துண்டக் காணும் துணியைக் காணும் என்று தலைதெறிக்க ஓடிப்போய் என் அறையில் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு, படிப்பது போல் பாசாங்கு செய்வேன். எத்தனை தடவையொ செய்துருக்கிறேன்
  இப்படியெல்லாம் இருக்கின்ற அதே தந்தை தான் என் மேல் அளவு கடந்த பற்றும் பாசமும் பொழிகின்றவராகிறார். என் தாயார் நான் பிறப்பதற்கு முன் என்னை பத்து மாதம் சுமந்தவர் என்றால், என் தந்தையார் நான் பிறந்த நொடியிலிருந்து இப்போதுவரை அவர் நெஞ்சியில் சுமக்கிறார். நான் குழந்தையாக இருக்கும் நாள்களில், என் அம்மா நான் மழலை மொழியில் பேசுவதற்கு கற்றுக் கொடுத்தார் என்றால், என் அப்பா, என்னுடைய பிஞ்சுவிரல்களை அவருடைய கைகளில் பிடித்துக்கொண்டு எனக்கு நடக்க கற்றுக்கொடுத்தார்.
  அரசர் தான் வாரி வழங்குகிற வள்ளல் என்று யாராவது கூறினால், எனக்கு என் கண்களுக்கு தெரிகிற அரசர் என் தந்தையார் தான். நான் ஆசையாசையாக கேட்கிற பலவற்றையையும் நானே கேட்காதவையையும் எனக்கே எனக்காக பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பார், என் தந்தை.
  தேர்வு சமயங்களில், நான் இரவு வேளைகளில் கண் விழுத்து படித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம், நான் இன்னும் இரவு உணவு உண்ணவில்லையே என்று என் தந்தையார் தான் நான் படித்துக்கொண்டிருக்கும்போது ஊட்டிவிடுவார். எனக்கு ஊட்டிவிட்ட பிறகு தான் அவர் தன் வாயில் பச்சைத்தண்ணீரையே அருந்துவார். அப்போது தான் எனக்கு தோன்றும். எவ்வளவு கண்டிப்பு உடையவராக என் தந்தை இருந்தாலும், அதெல்லாம் என்னுடைய நலனுக்காகத்தான் என்று. என்னுடைய அப்பா, எனக்கு இன்னொரு அம்மாவைப்போல தான் என்று கூறினால், அதில் சிறிதும் ஐயமில்லை.
  அமானுல்லா ஹாஜிரா (Amanulla Hajira )
  தஞ்சோங் கத்தோங் பெண்கள் பள்ளி (Tanjong Katong Girls ‘ School )

 4. அன்பு
  ராமுவும் பாலவும் உயர்நிலை ஒன்றில் படித்து வந்தார்கள்.இருவருக்கும் பல வேருபாடுகள் இருந்தாலும் வகுப்பிலே அவர்கள்தான் மிக புத்திசாலி மற்றும் வசதியனவன். ஆனால் ராமு படிப்பில் தின்டாடினான் மற்றும் நடுதர குடும்பதிலிருந்து வந்தான். இவ்வளவு வித்தியாசங்களை பொருட்படுததாமல் இருவரும் ஒருவரை மற்றொருவர் அன்பாகவும் அக்கரையாகவும் பார்த்துக்கொன்டனர்.
  இறுதிஆண்டு தேர்வுகள் நெருங்கிகொண்டிருந்தது. விலையாட்டுகளை ஒதுக்கிவிட்டு இரு நன்பர்களும் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினர். பாலா நிம்மதியாக படித்தான் ஆனால் ராமுவுக்கு ஏகப்பட்ட பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. பாலா எவ்வளவு உதவினாலும் ராமுவுக்கு எதுவும் புரியவில்லை. அதுமட்டும் இல்லாமல் ராமுவுக்கு குடும்பபிரச்சனை இருந்ததால் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
  பள்ளியில் ஒரு சேட்டை கும்பல் இருந்தது. பள்ளீயே அதை கண்டு அஞ்சியது. ராமுவின் கஷ்டங்களை தெரிந்த கும்பலின் தலைவன் ராமுவை சந்தித்தான். “இந்த மாத்திரையை எடுத்துக்கொள் உனக்கு பிரசனை வராது ஹா ஹா” என்று சிரித்துக்கொண்டெ அந்த தலைவன் போதைப்பொருளை நீட்டி சிரித்தான். அந்த சிரிப்பின் ராமுவுக்கு புரியாவிட்டாலும் அவன் மாதிரையை எடுதுக்கொண்டான். ராமு மாத்திருத்தை எடுத்ததை பாலாவிடம் சொல்ல்வில்லை.
  ராமு வீட்டுக்கு சென்று நீண்ட் நேரம் யோசித்தான். கடேசியில் அவன் ஒரு மாதிரத்தை சாப்பிட்டான்.அவ்வலுவுதான்
  அவன் உலகமே மாறியது அவன் தன் படுக்கை அறையில் பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிவிட்டான்.அவன் எப்பொதும் தன் உலகத்திலேயே இருப்பான். அந்த மாத்திரை இல்லாமல் அவனால் ஒரு நாள்கூட வாழ முடியவில்லை. அவன் மாத்திரை தீர தீர கும்பலின் தலைவரிடம் மாத்திரை வாங்கிக்கொண்டே இருந்தான். இது கொஞ்சம் கொஞ்சமாக பாலாவுக்கு தெரியவந்தது.
  ராமு வகுபில் கவனம் செலுத்தவில்லை. ஆசிரியர் யெவ்வளவு கேட்டாலும் அவன் உன்மையை ஒப்புக்கொள்ளவில்லை. பாலாவுக்க்கு உன்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒரு நாள் போதைபொருலை வாங்க ராமு கும்பலின் தலைவரை சந்திக்க, குறுக்கு சந்துக்கு சென்றான். அவனை பின்தொடர்து பாலாவும் அங்கே சென்றான். அவன் ஒரு செடியின் பின்னல் ஒழிந்து ராமு போதை பொருலை வாங்குவதை பார்த்து அவன் உடனடியாக காவல் துறையுடன் தொடர்புக்கொண்டான்.
  ஐந்து நிமிடங்களில் காவல் வண்டியின் சத்தத்தை கேட்ட அனைவரும் ஓடினர். இவர்களுக்கு தகவல் கொடுத்தது பாலாதான் என்று தெரிந்தபோது அவன் பாலவிடம் “நீ நல்ல நண்பன் என்று நினைத்தேன் ஆனால் நீ ஒரு துரோகி” என்ரு சினதுடன் கூறிவிட்டு காவல் வண்டியுல் ஏறினான்.
  ரவி புனர்வாழ்வு மையத்தில் பல வாரங்கள் இருந்தான். அவன் பாலாவை பற்றியும் தனது வாழ்க்கை பற்றியும் நினைத்து பார்த்தான். அவன் அங்கிருந்து வெளியெ வந்தபோது அவன் குடும்பத்தினருடன் பாலாவும் இருந்தான். உன்மையான நட்பின் பாசத்தை உணர்ந்த ராமு பாலாவை இறுக்கி அனைத்தான்.
  விஷ்ணு
  கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி

 5. அன்பு மனம்
  “ரிங் ரிங்” என்று பள்ளி மணி அலறியது. பள்ளி இடைவேளை நேரம் ஆரம்பித்துவ்ட்டது. அந்த சத்தத்தை செவியுற்ற மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். மான்களைப் போல் துள்ளிக் குதித்து பள்ளி உணவகத்திற்கு மாணவர்கள் விரைந்தனர். நான் மீ சுப் கடையை நோக்கி ஓடினேன். கடைக்காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு என் வகுப்பின் எண் குறித்த மேசைக்கு சுடான மீசு்பை தூக்கிச் சென்றேன். அப்போது தரையி்ல் ஒரு வாழைப்பழத் தோலை நான் பார்க்கவில்லை.
  திடீரென்று என் கால் சறுக்கிக்கொன்றே போனது. மின்னல் வேகத்தில் நான் “தொப்” என்ற சத்தத்துடன் கீழே விழுந்தேன். என் பக்கத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து சிலையாய் நின்றனர். சிலருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.சூடான மீ சுப் எனது சட்டையில் பட்டுவிட்டது. “ஐயோ!”வலி தாங்க முடியாமல் நான் அழ ஆரம்பித்தேன். கண்ணீர் தாரை தாரையாக கண்களிலிருந்து விழுந்தன. உடனே சில மாணவர்கள் என்னை சூழ்ந்து உதவிக்கு வந்தார்கள்.
  அச்சமயம் உணகவத்தைப் பார்வையிட்டு நடந்து வந்துக் கொண்டிருந்த திரு பாலன் என்ற ஓர் ஆசிரியர் என்னைக் கண்டார். வில்லிலிருந்து கிளம்பிய அம்பு போல் ஓடி வந்து “நான் நலமாக இருக்கேனா?” என்று விசாரித்தார். பின், அவர் என் மேல் கொட்டியிருந்த மீயை தட்டி விட்டார். என்னைத் தூக்கிக்கொண்டு பள்ளி முதலுதவி அறைக்கு அழைத்து சென்றார். என் சட்டையைக் கழற்றி ஈரத் துணியால் என் உடலைத் துடைத்து மருந்துயிட்டார். பள்ளி அலுவகத்திலிருந்து ஒரு சுத்தமான பள்ளி சீருடையை கொடுத்து என்னை அணியச் செய்தார். நான் அவருக்கு மனதார நன்றி கூறினேன்.
  மீண்டும் பள்ளி உணவகத்திற்கு வரும்போது, என்னை பார்த்த என் நண்பர்கள் பலாப்பழத்தைக் கண்ட ஈக்கள் போல ஓடி வந்தார்கள். என்னிடம் அன்பாக நலம் விசாரித்தனர். என் மனம் சூரியனின் ஒளிபட்டு இளகும் பனிபோல் இளகியது.
  “ரிங் ரிங்” மீண்டும் பள்ளி மணி ஒலித்தது. திரு பாலனுக்கு மீண்டும் நன்றியைக் கூறி என் நண்பர்களுடன் வகுப்புக்குச் சென்றென். எல்லாரிடமும் அன்பாக இருப்பது எவ்வளவு இன்றியமையாதது என்று அறிந்துக்கொண்டேன். இவர்களுடைய அன்பு என் உள்ளத்தை உருகியது.
  தனேஷ் கவி அழகன்
  கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி

 6. ஏமாற்றம்
  ‘ஒருவரின் ஆடை அலங்காரத்தைப் பார்த்து நம்பிவிடாதே!’
  இதை நம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பலமுறை கூறி இருப்பார்கள். ஆனால், அதை நாம் பொறுத்படுத்தாமல் இருந்திருப்போம். அறிவுரைகளை பின்பற்றாதவர்களுக்கு, பட்டுதான் புறியும் என்ற விதி அவர்களுக்கு இருக்கும். இந்த விதி என் தோழிக்கு இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
  ஒரு நாள், என் தோழியும் நானும், பள்ளி படைப்புக்காக, இணையத்தில் தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது, பெரிதாகவும் அயகாகவும் ஒரு விளம்பரம், வந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த உடனேயே அது ஒரு மோசடி செய்யும் பக்கம் என்று எனக்கு தெரிந்தது. ஆனால், அது என் தோழிக்கு தெரியவில்லை. அந்த இணையப்பக்கத்தில் பொருள்களின் விலை மளிவாக இருந்ததால், அவள் அந்த பொருள்களை வாங்கினாள். நான் எவ்வளவு கூறினாலும் அவள் அதைக் கேட்கவில்லை.
  ஒரு மாதம் சென்றது. அவளது பொருள்களை இன்னும் வரவில்லை. அந்த இணையப்பக்கத்துக்கு மீண்டும் சென்றுப் பார்க்கலாம் என்று முயற்சி செய்த போது, அவ்வாறு ஒரு இணையப்பக்கம் இல்லை என்று தகவல் வந்தது. அப்போதுதான், அவள் மோசடி செய்யப் பட்டாள் என்று அவள் உணர்ந்தாள். அவள் மிகவும் வருந்தினாள். அவள் தனது பணத்தை இழந்தாள். ஆனால், அவள் தனது பாடத்தை சரியான முறையில் கற்றுக்கொண்டாள் என்று நான் நம்புகிறேன்.
  இந்த கதையில் ஏமாற்றம் மனிதன் உருவத்தில் வரவில்லை. ஆனால் ஒரு விளம்பரம் மூலம் வந்தது. பார்ப்பது பொய், பேசுவது பொய், கேட்பது பொய், பேசுவது பொய், தீர விசாரிப்பதுதான் மெய் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  அவந்திகா MJ
  St Margaret ‘s Secondary School

 7. 2) வாழ்க்கையில் நாம் அனைவரும் எதாவது ஒரு தருணத்தில் பயந்து நடுங்கியிருப்போம். நானும் பற்பலத் தருணங்களில் பயந்துள்ளேன். ஆனால், அவை அனைத்திற்கும் மேலாக சேன்ற ஆண்டு எனது நண்பர்கள் என்னிடம் விளையாட்டாக நடத்தியக் குறும்பு (Prank), வார்த்தைகளால் சொல்லமுடியா அளவுக்கு என்னை பயத்தில் கதர வைத்துவிட்டது.
  அன்று எனது பிறந்தநாள். நான் தினமும்போல அதிகாலையில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்தின் வாயில் எனது நண்பர்கள் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தனின் கையில் ஒரு டப்பா இருந்தது. அது என்னவாக இருக்கும் என்று எண்ணியவாரு அவர்களின் அருகில் சென்றேன்…
  நான் அவர்களை நெருங்கியவுடன், எனது தோழர்கள் அப்பெட்டியைத் திறந்து, ஓர் அழகான கேக்கை என்னிடம் நீட்டினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை எனக்காகப் பாடினர். எனக்கு இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்திருக்கிறார்களே என்று எண்ணி அத்தருணத்தில் நான் சந்தோஷப்பட்டேன்.
  பாடல் முடிந்தவுடன் நான் தலைக்குணிந்து கேக்கிலிருந்த மெழுகுவர்த்திகளை ஊதிவிட்டு நிமிர்ந்தேன். அப்போது, எதோ ஒன்று எனது தோளில் விழுந்ததுப்போலிருந்தது. நானும் அது என்னவாக இருக்குமென்று எனது கழுத்தைத் திருப்பிப் பார்த்தேன்.
  நான் சிறுவயதிலிருந்தே கண்டு பயந்த ஒரு மிருகம் எனது தோல்பட்டையிலிருந்தது. ஆம்! ஒரு பாம்பு அங்குக் கிடந்தது! நான் அதைக் கண்ணுற்றவுடனேயே, அதை தட்டிவிட்டுத் தலைத்தெறிக்க அச்சத்தில் கத்தியவாரு ஓடினேன். சற்று தூரம் சென்றப்பிறகு எனது நண்பர்களின் சிறிப்புச் சத்தம் என் காதில் விழுந்தது. நானும் திரும்பிப்பார்த்தேன். அவர்களுள் ஒருவன் அப்பாம்பு ஒரு பொம்மைத்தான் என்றும் அதைத் தான்தான் என்மீது போட்டதாகவும் சிறித்துக்கொண்டே சொன்னான். அதைக்கேட்டவுடன் அவர்களுடன் நானும் அடக்கமுடியாமல் எனது முட்டாள்தனத்தை நினைத்துச் சிறிக்க ஆரம்பித்தேன்…
  குமரவேல் விக்னேஷ்
  ஐந்தாம் ஆண்டு (5.03 Leviticus)
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப்பள்ளி

 8. அச்சம் என்பது மடமையடா!
  “டிங் டிங்” என்று கடிகாரம், இரவு பன்னிரெண்டு மணி ஆனதும் அடித்தது. வியர்வை முத்துக்கள் என் நெற்றியிலிருந்து வழிந்தோடின. என் இதயம் படக் படக் என்று அடித்தது. என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு விசித்திரமான பேய் வந்து கலாவின் கழுத்தை நெருக்கிப் பிடித்தது. “ஆ” என்று நான் அலறினேன். என் தாயார் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார். “இதற்குத் தான், உன்னை இரவில் பேய்ப்படம் பார்க்கக் கூடாது என்று சொல்கிறேன். ஆனால் நீயோ கேட்க மறுக்கிறாய். நீ இப்பொழுது போய் உறங்கு,” என்று மொழிந்தார். நான் நித்திரைக்குச் சென்றேன். நான் பார்த்த படம் என் மனதில் கல்லில் செதுக்கிய எழுத்துப்போல் பதிந்தது. திடீரென்று இரவு மூன்று மணிக்கு எழுந்தேன். என் மனதில் அந்த பயங்கரமான காட்சிதான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் நான் தூங்காமல் பயத்தினால் உட்கார்ந்துகொண்டிருந்தேன். பிறகு என் கண்கள் இருட்டின. அவை மூடின. ஒரு அமைதியான இடத்தில் இருக்கும் போதெல்லாம் சுவரிலிருந்து கைகள் என்னை நோக்கி வருவதுபோல் ஓர் உணர்வு என் மனதை உலுக்கியது. சுற்றிச் சுற்றிப் பார்ப்பேன். ஒன்றும் இருக்காது. ஆனால் ஒரு பயம் என் மனதில் குடிக்கொண்டது. நாட்கள் உருண்டோடின. என் மனதிலிருந்து அந்த பயம் மெதுவாக மறைந்து வந்தது. பின்னர், இனிமேல் நான் பேய்ப் படங்களே பார்க்கமாட்டேன் என்று உறுதி பூண்டேன். அன்றிலிருந்து அச்சம் என்பது என் மனதிலிருந்து அகன்றது. இறுதியில், அச்சம் என்பது மடமையானது என்பதை நான் உணர்ந்தேன்.
  Balaji Priyanka
  Yuan Ching Secondary School
  2E1

Your email address will not be published.


*