அன்பு, அழகு, அமைதி …

ஒரு மாலை, ஓர் அமைதி, ஓர் அன்பு, இயற்கை, எளிமை … என எத்தனையோ விஷயங்களைச் சொல்லும் புகைப்படம் இது. இப்படத்தைப் பார்க்கும்போது, உங்கள் மனதில் கவிதை ஊற்றெடுக்கும். அதை ஓர் அழகிய கவிதையாக்குங்கள்.

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 18 நவம்பர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

8 கருத்துரை

 1. பனி உறைந்த மலை அழகு
  சிலந்தி பின்னிய வலை அழகு
  துள்ளியோடும் புள்ளிமான் அழகு
  நட்சத்திரங்கள் சிதறிய வான் அழகு
  சிறகடித்துப் பறக்கும் கிளி அழகு
  என் அன்பு தம்பியின் விழி அழகு
  அவனுடன் மகிழ்ச்சியாக இருப்பது அழகு
  சூரியனின் கதிர் வீச்சு அழகு
  தவழும் மழலையின் பேச்சு அழகு
  பசுமை நிறைந்த மரம் அழகு
  வண்ணத்துப் பூச்சியின் நிறம் அழகு
  தாவித் திரியும் முயல் அழகு
  பயிர் விளைந்த வயல் அழகு
  மலர்கள் பூத்த செடி அழகு
  எண்ணி வியக்க வைக்கும் கடல் அழகு
  அமைதி நிறைந்திருந்த இயற்கையில் இருப்பது அழகு

  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL

 2. நீயும் நானும்
  அது ஒரு மலையடி ஓரம்
  கதிரவன் மறையும்
  அப்பொன்னான நேரம்
  தென்றல் காற்று வீசும்
  இயற்கையின் வாசம்
  அதோடு இலைகளின் மெல்லிசையும்
  என் அருகில் நீயும்
  உன் அருகில் நானும்
  இரு மனங்கள் கோர்ந்து
  அங்கு பூத்தது அன்பாகும்!

  Keethana
  Riverside Secondary School

 3. அக்கா தம்பி
  வானிலையை நம்பி
  மறையும் கதிரவனை காண
  அமர்ந்தார்கள் விரும்பி

  ஓடியது மனதில்
  எண்ண அலைகள்
  என்னா அலைகள்
  எண்ண அலைகள்
  எண்ணா அலைகள்
  எண்ணிய அலைகள்

  வேலையிருப்பதால் கவலை
  விளையாடாதிருப்பதால் கவலை
  வீட்டுப்பாடமிருப்பதால் கவலை
  சர்கார் போகமுடியாததால் கவலை

  கவலை கவலை கவலை
  இதுவே வாழ்க்கையின் ரகளை
  வாழ்க்கை உருட்டும் பகடை
  அதைப் பற்றி அடிக்கலாம் அரட்டை

  பச்சை பசேளென்று வயல்
  உடலை சிலிர்க்க வைக்கும் தென்றல்
  நிம்மதி தரும் அமைதி

  இயற்கை போர்வையின் மேல்
  கவலைகளை மறந்து
  மகிழ்ச்சியல் திளைத்து
  நிம்மதியை அனைத்து
  அமர்ந்தார்கள்
  அக்கா தம்பி

  சு. கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி
  S.Karthikeyan
  Bendemeer Secondary School

 4. அன்பு
  ஒரு அழகான மாலையில்
  சூரிய மறைவை பரிதிபலிக்கும்
  நீரில்
  கண் விழித்து காத்திருக்கும்
  செடிகளில் அன்பு
  எதையும் எதிர்பார்க்காமல்
  காத்திருக்கும் அச்சிறுவர்களில் புத்தது
  அன்பு
  இயற்கையின் ஒற்றுமைக்கு காரணம்
  அன்பு
  அன்பை வர்னிக்க என்னிடம் வார்த்தைகள்

  இல்லை
  R.K.Lakshmi Srinithi
  Punggol secondary school

 5. விழிகளுக்கு முன்னே இதுவரை பாராத உலகம்,
  விழித்திடும் முன்னே தோன்றும் கனவுகளிலிருக்கும் உலகம்,
  வில்லிலிருந்து புறப்பட்ட அம்புப்போல் சீக்கிரமே,
  என்னை கவர்ந்ததற்கு காரணம் அதனுடைய அழகே!

  தென்றலின் மென்மை என் வியர்வை முத்துக்களை,
  தெரியா அளவுக்கு சீராட்டி,
  பிரியும் வண்ணமாய் குளிரான உணர்வை,
  தந்து சென்றது, மகிழ்வைக் காட்டி!

   மென்மையான புல்லின் கூசும்  அமைப்பு,
  கால் பதங்களை தொட்டு முத்தம் இட,
  சுறுசுறுப்பும் சக்தியும் மெல்ல மலர்ந்தது
  ரசிக்க ஆசை நிறம்ப!

  அகத்தில் அடைந்திருந்த எண்ணங்கள் அனைத்தும்,
  அந்த நொடியில் சிறகடித்து பறந்து சென்றன!
  அக்காவின் கைப்பிடியை மெதுவாக பிடித்து,
  அசைந்தேன், பறவைகளின் இசையிலே!

   சாந்தமான அமைதியின் குதூகலம்,
  என் மனதின் கவலைகளைவிட சத்தமாக!
  கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த ஆதவனுடன்,
  கண்ணா மூச்சி ஆடினேன், மகிழ்ச்சியாக

  இப்படி அன்பு, அழகு, அமைதி,
  என் பக்கத்தில் இருக்கமாக உட்கார,
  உள்ளத்தில் ஒன்று தோன்றியது,
  சற்றே சிந்தித்து பார்க்க!

  எப்படி கதிரவன் எப்படியும் மறைவானோ,
  அது போல என்றென்றும் நிலைக்காது ஆனந்தம்!
  இருக்கும் வரை அதை மெல்ல அணைத்து,
  இல்லாதபோது அதை வரவழைக்க வேண்டும்!

  சட்டென விழிகளை மூடினேன்,
  தென்றல் காற்றை சுவாசித்தேன்,
  ஆதவனும் சீக்கிரமே மறைந்து போனான்,
  அக்கா என்னை வீட்டிற்கு கொண்டு சென்றாள்!

 6. விண் திறந்த புத்தகமாம்
  மாலை சூரிய ஒளி
  அதன் அமைதியையை ஆழ்ந்து உணர
  புறப்பட்டோம்
  குலக்கரைக்கு
  பள்ளி முடிந்து
  நீயும்
  நானும்
  அன்பெனும் மிதிவண்டியில்…

 7. அமைதி

  அடைமழையிலும்
  பெரும்புயலிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…

  வறுமையிலும்
  ஏழமையிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…

  கொடிய வெயிலிலும்
  நடுங்கும் குளிரிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…

  ஏமாற்றத்திலும்
  அவமானத்திலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…

  வன்முறைக்கிடையிலும்
  தீவிரவாத வன்மத்திலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…

  அசுத்தக் காற்றிலும்
  அழுக்குத் தண்ணீரிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…

  இந்த அமைதியை நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்…
  நீங்கள் ஒரு வாழும் தெய்வம்…
  எங்களுக்கு தவணைமுறையாலாவது
  அமைதியை கடனாகத் தரக்கூடாதா?

 8. அமைதி
  அடைமழையிலும்
  பெரும்புயலிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…
  வறுமையிலும்
  ஏழமையிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…
  கொடிய வெயிலிலும்
  நடுங்கும் குளிரிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…
  ஏமாற்றத்திலும்
  அவமானத்திலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…
  வன்முறைக்கிடையிலும்
  தீவிரவாத வன்மத்திலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…
  அசுத்தக் காற்றிலும்
  அழுக்குத் தண்ணீரிலும்
  உங்களுக்கு கிடைத்திட்டால்…
  இந்த அமைதியை நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்…
  நீங்கள் ஒரு வாழும் தெய்வம்…
  எங்களுக்கு தவணைமுறையாலாவது
  அமைதியை கடனாகத் தரக்கூடாதா?

  Nandhakumar Ragavi
  Commonwealth Secondary School

Your email address will not be published.


*