அண்டை வீட்டு அன்பும் நட்பும்


நம் வீட்டைச் சுற்றி பல இனத்தைச் சேர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மோடு அன்பாக, ஆதரவாகப் பழகுகிறார்கள். அந்த அண்டை வீட்டுக்காரர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் / சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 செப்டம்பர்  2015. வாழ்த்துகள்!

11 கருத்துரை

 1.                                       அண்டை வீட்டு அன்பும் நட்பும்
  ————————————————–
  “டேய் ராமு! வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடத்தை முடித்து விடுவோம். அப்பொழுதுதான் நம் அம்மாக்கள் மாலையில் விளையாட அனுமதி தருவார்கள்,” என்று அகமது ராமனிடம் பேசிக்கொண்டே வந்தான்.
  ராமனும், அகமதும் ஒரே பள்ளியில் மட்டுமல்ல, ஒரே அடுக்குமாடிக்கட்டிடத்தில், ஒரே மாடியில் வசிக்கும் அண்டை வீட்டினர். இவ்விருவரும் ஒன்றாகவே சேர்ந்து பள்ளிக்குச் செல்வார்கள், ஒன்றாகவே சேர்ந்து படிப்பார்கள், விளையாடுவார்கள். இவர்களது நட்பைப் போலவே இவர்களது பெற்றோரிடமும் நல்ல உறவுமுறை இருந்தது. அகமது வீட்டு பண்டிகையானாலும் சரி, ராமன் வீட்டு பண்டிகையானாலும் சரி ஒரே குடும்பத்தினர் போல் சேர்ந்தே கொண்டாடுவார்கள். பிரியாணியும், இட்லிகளும் இவ்விருவர் வீட்டிலும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் பட்சணங்களாகும். அந்த இருவர் வீட்டு நட்பை அக்கட்டிடத்திலுள்ள பலரும் வியந்திருக்கிறார்கள்.
  அவ்வாறு இருக்கையில் அவ்விரு வீட்டாருக்கும் நடுவில் சீனரான திரு. தான் குடியிருந்தார். அவரது ஒரே மகனான ரயனை கண்டிப்புடன் வளர்த்தார். ஆனால் ராமன் மற்றும் அகமது வீட்டாருடன் எந்தவித நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், ரயனையும் அவர்களோடு பழகவிடாமல் தனித்தீவு போல் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் புத்தகத்தைத் தவிற வேறு எந்த சிந்தனையிலும் இருக்கக் கூடாதென நினைப்பார். ஆனால் ரயனுக்கு ராமனுடனும், அகமதுடனும் விளையாட ஆசைப்படுவான். அவன் அப்பாவிற்குத் தெரியாமல் ஜன்னல் வழியாக இவ்விருவரிடமும் பேசிக் கொள்வான். இப்படியே நாட்கள் நகர்ந்தன.
  ஒருநாள் சனிக்கிழமை இரவில், ராமன் மற்றும் அகமதின் குடும்பத்தினர், ராமன் வீட்டில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில், வீட்டிற்கு வெளியே யாரோ அலறும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தனர். அந்த அலறும் சத்தம் திரு. தான் வீட்டிலிருந்துதான் வந்தது. இருவரும் திரு. தான் வீட்டுக் கதவைத் தட்டினர். யாரும் கதவைத் திறக்காததால் அவர் வீட்டு ஜன்னலை உடைத்தனர். ஜன்னல் வழியாக அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்தது. வீட்டினுள் திருடர்கள் திரு. தான் குடும்பத்தினரை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர். அவர் வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட அகமதின் தந்தை காவலர்களை கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காவலர்கள் உதவியுடன் திரு. தான் குடும்பத்தாரைக் காப்பாற்றினர். காவலர்களும், ” இப்படிப்பட்ட அண்டை வீட்டார் உங்களுக்குக் கிடைத்ததற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,” என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.
  திரு. தானிற்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. கண்ணீரோடு அக்குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
  ராமனின் தந்தை, “திரு. தான் அவர்களே, சொந்த பந்தங்கள் நம் எல்லோருக்கும் இருந்தாலும், அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டுவதே நம் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரும். நம் முன்னோடித் தலைமுறையினர் ஜாதி, மத பேதமில்லாமல் ஒன்றாக உழைத்தே வளர்ச்சி பெற்ற சிங்கப்பூரை உருவாக்கினர். அவர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்து நமக்கு வழிகாட்டியுள்ளனர். நாளைய சிங்கப்பூரை உருவாக்கக்கூடிய கடமை நம் பிள்ளைகளுக்கு இருக்கிறது. அவர்கள் மனதிலும் நட்பு, ஒற்றுமை இவற்றை விதைப்பது நம் கடமையாகும்,” என்றார்.
  இதைக் கேட்டதும் திரு. தான் புன்னகை பூத்த முகத்துடன் அவருடைய வீட்டிற்கு அனைவரையும் வரவேற்றார். இந்த உரையாடலில் பங்கு கொள்ளாத சிறுவர்கள் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அந்த மூன்று சிறுவர்களின் அன்பைப் பார்த்து பெற்றோர்கள் அகமகிழ்ந்தார்கள்.

 2. நமது தாய்நாட்டான சிங்கப்பூரில் நிறைய இனத்தைச் சேர்ந்த குடிமக்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். அதில் சீனர்கள், மலாக்காரர்கள் மற்றம் இந்தியர்கள் ஆகியவர்களை நாம் அதிகம் காண்கிறோம். நாம் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களைக் கூடக் காண்கிறோம். வேறு நாட்டைச்சேர்ந்தவர்கள் எல்லாம் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.அதுமட்டுமா! அழகு மற்றம் பாதுகாப்பு மிகுந்த இந்நாட்டில் சிலர் இங்கேயே தங்கிவிடுவர். இப்பொழுது நம் அண்டை வீட்டைப் பற்றி உரையாடலாம். நம் வீட்டைச் சுற்றி பல இனத்தைச் சேர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மோடு அன்பாக, ஆதரவாகப் பழகுகிறார்கள்.அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத அனுபவம் ஒன்று அமைந்துள்ளது. அதை நான் இப்பொழுது உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நானும் என் குடும்பமும் சென்ற ஆண்டுதான் புகிட் படோக் வட்டாரத்திலிருந்து டோகுவான் வட்டாரத்துக்கு வீடு மாறினோம். கடந்த தீபாவளி அன்று, நாங்கள் அதிகாலையில் விரைவாக எழுந்தவுடன் எங்கள் தலையில் நல்லெண்ணையை தடவி கடவுளை வணங்கினோம். என் அம்மா விதவிதமாக பலகாரங்களை செய்து கதிரவனுக்கு படைத்தார். அதன் பின்பு நாங்கள் சுவையான உணவை உண்டோம். மதியம் தீபாவளி உடைகளை வாங்க தேக்கா சந்தைவுக்குச் சென்றோம். அங்கே கூட்டம் வழிந்துக் கொட்டியது. எப்படியோ கூட்டத்திலிருந்து அழகான ஆடைகளுடனும் ருசியான மதிய உணவுடனும் வீடு திரும்பினோம். சற்று ஓய்வெடுத்தப்பின், மாலையில் பகலவனை கும்மிட எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்துக்கு புதிய துணியை அணிந்து கிளம்பினோம். வீட்டை அடைந்த்தும், எதிர்ப்பார்த்தாத ஒன்று நடந்த்து. ஒரு குரல் எங்கள் செவிகளுக்கு எட்டியது. நாங்கள் திரும்பிப் பார்த்தபோது, எங்கள் அண்டைவீட்டுக்காரர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததுமில்லாமல், என் அப்பாவிடம் பட்டாசு தப்பாவையும் இனிப்பு தீனிகளையும் கொடுத்தார். நாங்கள் ஒரு தருணம் சிலைப்போல் நின்றோம்!!என்ன ஆச்சிரியம்! ஒரு வருடத்திலேயே அவர்கள் எங்களுடன் அன்பாகப் பழகினர்.என் அப்பா எவ்வளவு சொல்லியும் அண்டைவீட்டுக்காரர் வர்ப்புத்தியதால் அப்பா அவர் கொடுத்ததை வாங்கிக்கொண்டு நன்றி கூறினார். அன்றிலிருந்து ஒருவரிடம் பொருள் எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்யக்கூடாது என உணர்ந்தேன். இதுவே, என் அண்டை வீட்டுக்காரர்களுடன் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாதச் சம்பவமாகும். இப்படிப்பட்ட அண்டை வீட்டுக்காரர் அமைய நான் பலஜென்மங்கள் புன்னியம் செய்திருக்க வேண்டும் .
  சுவாத்தி, 1E1 புக்கிட் வியு உயர்நிலை பள்ளி

 3. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” என்று பாட்டுக்கு புலவரான பாரதியார் பாடியுள்ளார். பல இன மக்கள் வாழும் நமது சிங்கப்பூருக்கு இது நிச்சயமாக பொருந்தும். எனது அண்டைவீட்டார்கள் வேறு இனத்தவர்களாக இருந்தாலும் நாங்கள் நெருக்கமாக பழகி வருகிறோம். என்னால் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று இருக்கிறது.
  கடந்த ஆண்டு எனது பெற்றோர் ஒரு முக்கியமான வேலையாக வெளிநாடு சென்றிருந்தார்கள். அப்போது எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.இதை நான் எனது பெற்றோரிடம் கூறவில்லை. எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நான் ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்ததை கண்ட எனது அண்டை வீட்டார் என் வீட்டிக்கு வந்து நலம் விசாரித்தார்கள். என் நிலையை அறிந்த அவர்கள் எனக்கு கஞ்சி வைத்துகொடுத்து மருத்தவரிடம் அழைத்து சென்றார்கள். நான் அவர்களின் அன்பாலும் அரவனைப்பாலும் என் பெற்றோர் என்னோடு இல்லாததையே நான் மறந்துவிட்டேன். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது” என்று வள்ளுவர் கூறியது போல அன்று அவர்கள் எனக்கு செய்த உதவி இன்றும் என் மனதில் பசுமறத்தாணி போல் பதிந்தது.
  அன்று வரை அண்டை வீட்டார்களாக மட்டுமே இருந்த அவர்கள் அன்று முதல் குடும்பத்தினர்களாக மாறினார்கள். நமது சிங்கப்பூரில் இது போன்ற உறவானது மிகவும் அவசியம். இதுவே சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
  Elangovan Gayathri
  Paya Lebar Methodist Girls’ Secondary School

 4. அண்டை வீட்டு அன்பும் நட்பும்
  “தேஜல், கவனமாக ஆடு!” என்று எனது பக்கத்து வீட்டு ரூபா அத்தை என்னை செல்லமாகக் கண்டித்தார். தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன. இந்தத் தீபாவளி மிகவும் சிறப்பான தீபாவளியாக இருக்கப் போகிறது என்று என் மனம் குதூகலித்தது.
  ஏனென்றால், முதன்முறையாக நான் தீபாவளி நிகழ்ச்சியில் மேடையி்ல் ஆடப்போகிறேன். நான் மட்டுமில்லை! மொத்தம் ஆறு குழுக்கள்! ஒவ்வோரு குழுவிலும் வயதுக்கேற்ப மூன்று அல்லது நான்கு பேர். ஒவ்வொரு குழுவின் நடனப் பயிற்சிக்கான பொறுப்பு வெவ்வேறு அம்மாக்களிடம் கொடுக்கப் பட்டிருந்தது.
  தீபாவளியும் வந்தது. நாங்கள் மட்டுமில்லாமல் அம்மாக்கள் தனியாக விளக்கு நடனத்தை மேடையேற்றினார்கள். தீபாவளி முடிவதற்குள் பிள்ளைகளிடமும், பெற்றவர்களிடமும் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
  தீபாவளி முடிந்து பத்து நாட்கள் முடிந்த வேளையில், ரூபா அத்தை அனைவரையும் தொலைபேசியில் அழைத்தார்.
  இந்த நட்பை இதோடு நாம் விட்டு விட்டுவிடக்கூடாது, தொடரவேண்டும் என்று கூறினார். மேலும் அவர், ஒவ்வோரு குழுவையும் ஏதாவது ஒரு அறிவியல் சோதனையைப் பயிற்சி செய்து, அனைவரின் முன்னிலையிலும் செய்து காட்டவேண்டும் என்று கூறினார்.
  அவருக்கு மட்டும் எப்படித்தான் இப்படிப்பட்ட புதுப் புது உத்திகள் வருகின்றதோ? என்று எனக்கு அடிக்கடி வியப்பாக இருக்கும்.
  ஆறு குழுவும் ஒவ்வொரு அறிவியல் கருத்தை மையமாக வைத்து அதை செய்து காட்டி விவரித்தனர். இப்பொழுது அனைவருக்கும் ஆறு விதமான அறிவியல் கருத்துகள் தெரியும். ஆனால் அவர்கள் பயிற்சி செய்ததோ ஒன்று தான். எவ்வளவு ஆக்கப்பூர்வமான சிந்தனை!
  எங்கள் பிளாக்குக்குப் பக்கத்தில் இரண்டு பூப்பந்து மைதானங்கள் புதிதாகக் கட்டினார்கள். ரூபா அத்தை இதற்காக ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்தார். யாருக்கு விளையாட நேரம் இருக்கிறதோ அவர்கள் செய்தி அனுப்புவார்கள். பிறகு குழுவாக இணைந்து விளையாட ஆரம்பிப்பார்கள். இதில் தந்தையரும் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் நாங்கள் அதில் விளையாட ஆரம்பித்தோம். பிறகு ஒருநாள் போட்டிக்கு ஏற்பாடு செய்து, வெற்றி பெற்ற குழுவுக்கு கோப்பை அளித்தது, சேர்ந்து விருந்து உண்டது தனிக்கதை!
  நட்புணர்வு, குழு உணர்வு, அறிவியல் ஆர்வம், உடல்திறன் மேன்மை, ஆக்கத்திறன் மேன்மை ஆகியவற்றை எங்களுக்கு உணரச் செய்த ரூபா அத்தை எனது அண்டை வீட்டாராகக் கிடைத்ததற்கு நான் பூரிப்படைகிறேன்.
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 5. “ராமு, எனக்கு இந்த மிதிவண்டியை சரி செய்ய உதவு டா!” என்று நான் என் உயிர் தோழனான ராமுவிடம் உரக்க கத்தி கூறினேன்.
  “வருகிறேன்!” என ராமு என்னிடம் பதில் அளித்தான்.
  ஒரு காலத்தில் எனக்கு அவன் யார் என்றும் அவனுக்கும் நான் யார் என்றும் தெரியாது. ஆனால் இன்று எங்கள் வட்டாரத்தில் உள்ள எல்லோருக்கும் எங்கள் நட்பைப் பற்றி தெரியும். இந்த நட்பு இது மாதிரியே உள்ள ஒரு மிதி வண்டியால் தான் துவங்கியது. அவ்வாறே என் நினைவலைகள் என்னை கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்கு அழைத்துச் சென்றன.
  அன்று மழைப் பெய்து முடிந்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆயிருக்கும். மிதிவண்டி ஓட்டுவதில் இருக்கும் ஆர்வத்தால் என் தாயாரின் வாக்கை மீறி மிதிவண்டி ஓட்ட என் வீட்டின் கீழ் உள்ள பாதைக்குச் சென்றேன். மிதிவண்டியை மெதுவாக ஓட்ட துவங்கிய சில நிமிடத்திலேயே என் மிதிவண்டியை வேகமாக ஓட்ட துவங்கினேன். திடீரென தரையில் உள்ள மழை நீரால் என் மிதிவண்டியின் சக்கரம் வழுக்கி மிதிவண்டியிலிருந்து நான் கீழே விழுந்தேன்.
  “ஆ!” என்று தாங்க முடியாத வலியால் அலறினேன். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லையா? என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது.
  திடீரென்று ஒரு சிறுவன் என் அருகே வந்து, “இங்கையே இரு, நான் சுமார் இரண்டு நிமிடத்தில் வருகிறேன்,” என்றுக் கூறி என் பின் திசையை நோக்கி ஓடினான். வலியால் என் கண்களில் இருந்து கண்ணீர் குற்றால அருவிப்போல பெருக்கெடுத்து ஒடியது.
  சில நிமிடத்தில் ஒரு பெட்டியுடன் அச்சறுவன் என்னருகே வந்தான்.
  “இது சிறிதாக வலிக்கும்,” என கூறி அந்தப் பெட்டியிலிருந்து ஒரு துணியை எடுத்து, அடிப்பட்ட என் கால்களில் வைத்தான்.
  அவ்வாறே காயம் ஏற்ப்பட்ட இடம் எல்லாம் மருந்தினை தடவி என்னை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சில நாட்களில் அவன் என் புதய அண்டை வீட்டுக்காரர் என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.
  “என்ன பகல் கனவா?” என்று ராமு என் தோளை குலுக்கிக்கொண்டே கேட்டான்.
  அப்பொழுது தான் நான் நினைவிற்குத் திரும்பி வந்தேன்.
  “ஆம், நீ சில வருடங்களுக்கு முன் நான் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்தப்போது என்னை எவ்வாறு உதவினாய் என்பதைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.”
  அவ்வாறு பேசிக்கொண்டே எங்கள் மிதிவண்டி பயனத்தை தொடர்ந்தோம்.
  ஜாஸ்மின் சித்திக் 2G
  St. Hilda’s secondary school

 6. அண்டை விட்டு அன்பும் நட்பும்
  என் வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் பல இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஒரு நாள் கூட மற்ற இனத்தவர்களுடன் பேசமாட்டார்கள். ஆனாள் , ஒரு நாள் ஒரு சம்பவம் எல்லோரையும் ஓன்றுக்கூட வைத்தது.
  நம் வீட்டின் பக்கத்தில் ஒரு விளையாட்டு பூங்கா உண்டு. அங்கே எல்லோரும் சென்று விளையாடுவார்கள். ஒரு நாள் அன்று வெளியூரிலிருந்து ஐந்து ஆடவர்கள் படிப்பதற்கு வந்திருந்தார்கள். வந்த ஒரு வாரத்தில் அந்த ஆடவர்கள் மலேய் காரர்களிடம் வம்பு இழுத்துக்கொண்டிருந்தார்கள். நம் தாய்நாட்டை பற்றி தவறாக கூறினார்கள். இதைப் பார்த்த மற்ற இனத்தவர்கள் ஒன்றுக்கூடி அவர்களை எதிர்த்து நின்றோம். நம் நாட்டை பற்றி கூறினாள் , நாம் விட்டுக்கொடுக்காமல் போராடுவோம்.
  அவர்களை நம் வட்டாரத்திலிருந்து மற்றும் நாட்டிலிருந்து வெளியாக்கினோம். பிறகு எல்லோரும் இணைந்து மகிழ்ச்சியுடன் இருந்தோம்.

 7. நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்ற இனியத்தொடருக்கு ஏற்றார் போல் நம் நாட்டில் பல்வேறு இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.ஒவ்வொருவரும் தங்களின் அண்டை வீட்டாருடன் தநட்புடனே பழகி வருகிறார்கள்.நமது அரசாங்கமும் இதனை தான் வலியுறுத்துகிறது.
  சிறு வயதிலிருந்தே உதவி செய்வதை பண்பாககிக் கொண்டுள்ள அஷ்வினி, இவ்வாண்டுக் கான ‘நல்ல அண்டை வீட்டார்’ விருதை வென்றுள்ளார்.
  வீடமைப்பு வளர்ச்சி கழகமும் மக்கள் கழகமும் இணைந்து நடத்திய நல்ல அண்டை வீட்டார் போட்டியில் 2,500க்கும் மேற்பட்ட நியமனங்கள் குவிந்தன.
  இதில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் ‘நல்ல அண்டை வீட்டார்’ விருதை அஷ்வினி பெற்றார்.
  இவ்விருதுக்கு இவரை நியமனம் செய்தவர் மாணவி தஷினா தியாகராஜா. ஜூரோங் வட்டராதில் உள்ள வெஸ்ட்குரோவ் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் அஷ்வினி, ஒரே பள்ளியில் பயிலும் தமது நெருங்கிய தோழி தஷினாவுக்குப் பல வழிகளில் உதவியுள்ளார்.
  எதிர் கட்டடத்தில் வாழும் தஷினாவின் வீட்டுக்குச் சென்று அவருக்குப் பாடம் கற்பித்தல், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால் தஷினா வீட்டின் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல் என அஷ்வினியின் உதவி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
  புன்னகையுடன் எதையும் எதிர்கொள்ளவேண்டும் என்ற கொள்கை யுடன் வாழும் அஷ்வினியின் தாய், திருமதி கவிதா தென்னரசு, வீட்டிற்கு அருகில் வசிக்கும் முதி யோரை நலம் விசாரிப்பது வழக்கம்.
  “தெரியாதவர்களுக்கும் நான் உதவுவதையும் பார்த்து வளர்ந்த என் மகளுக்குக் காலப்போக்கில் அந்தப் பண்பு இயல்பாகிவிட்டது.

 8. என் அன்டை வீடுகாரர்
  நான் ஒரு தமிழ் குடும்பத்தில் செர்ந்த பையன். நான், இப்போது குடியிருக்கும் வீட்டிற்கு வந்து 7 வருடங்கள் அகி விட்டன. எனது பக்கத்து அன்டை வீட்டுக்காரர் ஒரு சீனர். அவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் மீது பாசமாகவும் அன்பாகவும் பழுகுவார்கள். வருடம் வருடம், அவர்கள் எங்களோடு தீபாவளி கொண்டாடுவார்கள். அதை போல நாங்களும் அவர்களோடு சீனப் பெருநாள் கோண்டாடுவோம். சில சமையங்களில், என் பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது அவர்கள் எங்களோடைய வீட்டிற்கு வந்து எங்களை பார்த்துகோள்வார்கள். ஒரு முறை, அவர்கள் எங்களுக்கு உணவு சமைத்து கொடுத்தார்கள்.
  ஒரு முறை, யாரோ அவர் வீட்டுக்கு புதிதாக வருவதை கண்டென் ஆனால் முகத்தை பார்க்கவில்லை நான் அவர் யார் என்று தெரிந்துகொல்ல ஆசைப்பட்டென். நான் ஓடி வந்த வெகத்தில் நான் கால் தவரி கீழே விழுந்தென். நான் ஆழ துடங்கிநென். என் அழறல் சத்தத்தை கெடு வெளியெ வந்த என் அன்டை வீட்டுக்காரர் பதர்ட்டத்துடன் என்னை நிற்க்க வைத்தார். அவர் என்னை தன் வீடிற்கு அழைத்து சென்று என் காயங்களுக்கு மறந்தலித்தார்.
  அந்த நெரம், என் தாயார் வெலை முடிந்து வீடு திரும்பினார். அவர் என் காலிலுல் கட்டை பார்த்து எண்ண நடந்தது என்று கெற்க ஆரம்பித்தார் நானும் நடந்தவற்றல்லாம் கூறினென். என் தாயார் உடனெ அன்டை விட்டுகாரரிடம் சென்று நன்றி கூறினார்
  Ananth / ஆனந்த்
  St. Hilda’s Secondary School
  2C (Normal Academic)

 9. அன்பான அண்டை வீட்டுக்காரர்
  ‘அவர்களிடம் பேச வேண்டுமா? ஏன் அம்மா?’ என்று, நான் என் அம்மாவிடம் மிகவும் கோபமாகக் கத்தினேன். ‘எனக்கு அவர்களை பிடிக்காது!’ என் குடும்பம், ஒரு புதிய இடத்திற்குக் குடி வந்தோம். எனக்கு இந்த முடிவு பிடிக்காததால், எந்த வேலைகளையும் செய்யப் பிடிக்கவில்லை. எனக்கே என் மேல் வெறுப்பாக இருந்தது. என் தாயார் எங்களுடைய புது அண்டை வீட்டுக்காரர்களிடம் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார். ‘நான் அவர்களிடம் பேசமாட்டேன்!’ என்று மீண்டும் மீண்டும் கூறினேன். கோபம் அடைந்த என் அம்மா, என்னை விட்டுவிட்டார். உடனே, நான் ‘விறு விறு’ வென்று என் அறைக்குள் ஓடிச் சென்று என் படுக்கையில் படுத்துக் கொண்டு அழுதேன். ஏன் அம்மா என்னைப் புரிந்து கொள்ளமாட்டேங்கிறார் என்று எண்ணிக் கொண்டே தூங்கிப்போனேன். ‘இந்த புதிய வீடு எனக்கு பிடிக்கவில்லை! என் பழைய வீட்டுக்கு திரும்பி போகவேண்டும்!’ என்று நான் நினைத்தேன். இப்படியே, சில நாட்கள்கள் சென்றன. நான் இப்போது இருக்கும் இடம் ஒரு மோசமான இடம். இங்கே இருப்பவர்களும் மோசமானவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.
  அப்போது, ஒரு நாள், நான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தேன்.. வீட்டை அடைந்ததும், என் வீட்டின் சாவியைத் தேடினேன் ஆனால், என் சாவி, என் பையில் இல்லை! உடனே, எனக்கு என்ன செய்வத்தென்று தெரியவில்லை. நேரம் கொஞ்ச கொஞ்சமாக நகர ஆரம்பித்தது. என் மனதிற்குள் பயம் தொடர ஆரம்பித்தது. இதயம் தடக் தடக் என்று துடிப்பதை உணர்ந்தேன். சிங்கப்பூரில் என்ன பயம் என்று என் மூளை சொன்னாலும் என் மனது அதை ஏற்க மறுத்தது. அப்போது யாரோ நடந்துவருவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். என் அண்டை வீட்டுக்காரர். அவர் வருவதைப் பார்த்தவுடன் நான் என் பையில் எதையோ தேடுவது போல் பாவனைச் செய்தேன். அவர் என் அருகில் வந்து ஏன் ரெம்ப நேரமாக இங்கே நின்று கொண்டு இருக்கிறாய். ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டார். பரவாயில்லை என்று கூறினேன். அவர், ‘நீ எங்கள் வீட்டிற்கு வா! பயப்போடாதே ! உன் பெற்றோர்கள் வரும்வரை என் வீட்டில் வந்து இருந்து கொள். உன் பெற்றோர்கள் வந்தவுடன் போகலாம்.’ என்று கூறினார். நான் யோசித்தேன். எவ்வளவு நேரம்தான் இங்கே நிற்பது. பெற்றோரும் மலேசியாவிற்குச் சென்று உள்ளார்கள். அவர்கள் வருவதற்கு நள்ளிரவு ஆகும். அதனால் வேறுவழி தெரியாமல் அண்டை வீட்டுக்காரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். என் அண்டை வீட்டுக்காரர் நடந்ததையெல்லாம் தன் மனைவியிடம் கூறினார். எனக்கு மைலோவும், ரொட்டியும் கொடுக்கச் சென்னார். எனக்கு இருந்த பசியில் அது அமிர்தமாகத் தொன்றியது. அந்தரொட்டியும், மைலோவும் என் கொடும் பசியை அடக்கியது. அன்று ஒரு உண்மையைப் புரிந்து கொண்டேன். யாரையும் தப்பாக நினைக்க்க்கூடாது. மற்றவர்களுக்குநம்மால் முடிந்த உதவியினைச் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அந்த அண்டை வீட்டுக்காரர்எனக்கு உதவ வேண்டும் என்பது கிடையாது. ஆனால் அவர் எனக்கு உதவினார். என் பெற்றோர்களும் இரவு 12. 30 வந்தார்கள். நான் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். அவர்களும் எங்களின் அண்டை வீட்டுக்காருக்கு நன்றி கூறினார். தக்க சமயத்தில் உதவியதற்கு முக்க நன்றி என்று கூறினார்கள். அப்பொது எனக்கு
  ‘’காலத்தினால் செய்த நன்றி சிறிதேயாயினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது’’. என்ற குறள் என் நினைவில் ஓடியது. இனிமேல் நானும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். அன்றிலிருந்து நாங்களும் எங்கள் அண்டை வீட்டாரும் மிக நெருக்கமாக பழகி வருகிறோம். அவர்கள் இல்லாத நிகழ்ச்சி எதுவும் எங்கள் வீட்டில் இல்லை. இதே போல் நாங்கள் இல்ல நிகழ்ச்சி எதுவும் நடக்காது.
  இன்னும் என் அண்டை வீட்டாரின் அனுபவத்தைச் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். ஒன்று பட்டால் ஒன்று வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே ! என்ற பழமொழிக்கு ஏற்ப நம் நாட்டில் பால இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த வருகிறோம். இனிமேலும் நாம் தொடர்ந்து ஒற்றுமையாக வாழ்வோம். இதுவே நமது நாட்டின் வளர்ச்சிக்கு இரு ஒரு முக்கிய காரமாகவும் உள்ளது.
  நன்றி!
  விஷாலினி வேல் (Sec 3 Exp)
  St. Hilda’s Secondary School.

 10. நல்ல அண்டைவீட்டுக்காரர்கள் அமைவது இறைவன் கொடுக்கும் ஒரு வரம். அந்த வரம் எனக்கு கிடைத்ததால் தான் இன்று எனது தம்பி நன்றாக இருக்கிறான். எனது அண்டைவீட்டுக்காரர்கள் எங்களது இனம், மொழி, மதம் இல்லையென்றாலும் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அளவுக்கடந்த அன்பும் அக்கறையும் காட்டி வந்தார்கள்.
  அதை நான் அன்று தான் அறிந்துக்கொண்டேன். அன்று தூங்கிக்கொண்டிருந்த எனது தம்பியை எனது கண்காணிப்பில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர் என் பெற்றோர்கள். நானும் எனது தம்பியும் மட்டும் தான் வீட்டில் இருந்தோம். அப்போது பசி என் வயிற்றை கிள்ளியதால் சமையலறைக்கு சென்றேன். தேநீர் தயாரிக்க அடுப்பில் தண்ணீரை வைத்து சூடுப்பண்ணினேன். அப்போது அலமாறியை திறந்துப் பார்த்த நான், தேநீர் தூள் முடிந்துவிட்டதை அறிந்து, பணப்பையை எடுத்துக்கொண்டு கடைக்குப் போக தயாரானேன். பின்பு கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றேன்.
  அந்த நேரத்தில் வீட்டிலுள்ள அடுப்பில் எறிந்துக்கொண்டிருந்த தீ, அனைக்கப்படாமல் இருந்ததால், தண்ணீரை மட்டுமின்றி அதை கொண்டிருந்த பாத்திரத்தையும் சுட்டெரித்து உருக்கியது. சமயலறை முழுவதும் பறவிய தீ, கருகும் வாடையை என் வீட்டில் மட்டுமின்றி அண்டைவீட்டுக்காரர்களின் வீட்டிலும் கூட நுழையச்செய்தது. இதை நுகர்ந்த என்னுடைய அண்டைவீட்டுக்காரர், திரு லீ, எனது வீட்டில் ஏதோ ஒரு பிரட்சனை என்பதை அறிந்தார். அவரிடம் நாங்கள் இக்கட்டாண சூழ்நிலைக்காக எங்கள் வீட்டு சாவி மட்டொன்றை கொடுத்து வைத்திருந்தோம். அதை கொண்டு எங்கள் வீட்டுக் கதவை திறந்தார் திரு லீ.
  அங்கே சிலையைப் போல் என்ன செய்வதென்றே தெரியாமல் பயத்தில் நின்றுக்கொண்டிருந்த எனது தம்பியை கண்டார் திரு லீ. அவர் உடனே தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக வீட்டினுள்ளே நுழைந்து எனது தம்பியை வெளியே தூக்கிச்சென்றார். பின்பு உடனே தனது கையடக்கத்தொலைப்பேசி மூலமாக தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்ப்புக்கொண்டு விவரத்தை கூறினார். அந்த சமயத்தில் வீட்டிற்கு திரும்பிய நான் பேய் அறைந்தது போல் மிரண்டுப் போய் நின்றேன். தீ அனைப்பவர்கள் வந்து தீயை அனைக்கும் போது, திரு லீ எனது பெற்றோர்களுக்கு தகவலை தெரிவித்தார். அவர்கள் வேலையை பாதியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
  நல்ல வேளையாக தீ வீட்டை முழுவதுமாக பாதிக்க வில்லை. எனது பெற்றோர்கள் திரு லீயிடம் இரு கை கூப்பி நன்றி கூறிய போது தான் எனது அலட்சிய புத்தியால் நிறைய பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தேன். அதே சமயத்தில் திரு லீ எங்கள் மீது வைத்திருந்த அன்பை அறிந்தேன். சிறுது நாட்களுக்கு பிறகு சிறந்த அண்டைவீட்டுக்காரர் விருதுக்கு உயிரையே பொருட்படுத்தாமல் என் தம்பியை காப்பாற்றிய திரு லீயின் பெயரை பரிந்துரைத்தேன். அன்று நடந்த சம்பவம் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது குடும்பத்திற்கு மட்டுமல்லால் குடியிருப்பு பகுதியில் வாழும் இந்த சமுதாயத்திற்கும் பொருந்தும் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியது.
  Rifayah Jumana
  Tanjong Katong Girls School

 11. ‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
  அகநக நட்பது நட்பு’
  என்ற திருவள்ளுவரின் மிக அருமையான வரிகளுக்கேற்ப நட்பு மிக ஆழமாகச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்றாகும். அப்படியாகபட்ட அருமையான நட்பு எனக்கு என் அண்டை வீட்டார் மூலம் அமைந்தது இறைவன் கொடுத்த வரமாகும்.
  “அரவிந்த் வா நேரமாகிவிட்டது. நாம் நீச்சல் குளத்திற்கு செல்லவேண்டும்” என்று கார்த்திக் அழைத்தான். கார்த்திக் என் பால்ய சிநேகிதன். நான் பாலர் பள்ளியில் படிக்கும் பொழுது அவன் குடும்பம் என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியேறினார்கள். கார்த்திக்கும் நானும் ஒரே பள்ளியில் படித்தோம். அன்று முதல் அவன் அம்மா, செல்வியும், அவன் அப்பா சிவராமனும் என் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்கள்.
  என் அம்மா வேலைக்கு செல்பவர். செல்வி அத்தை இல்லத்தரசி. நான் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது என் அம்மா வராவிட்டால், செல்வி அத்தை என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று எனக்கு தேவையானதை தந்து என்னை அவர் பிள்ளை போலவே கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்வார்.
  அதுமட்டுமில்லாமல் சிவராமன் மாமாவும் என் அப்பாவுக்கு, பண உதவிகளையும் மன ரீதியான பிரச்சனைகளுக்கும் நிறையவை உதவி செய்திருக்கிறார்கள். மேலும், என்னையும், கார்த்திக்கையும் விளையாட்டுதிடலுக்கு அழைத்து சென்று பூப்பந்து விளையாட கற்றுக்கொடுப்பார்கள். அப்படியாகப்பட்ட உறவு என்னால் பிரியக்கூடிய நிலைமை ஏற்பட்டதை நான் நினைவு கூர்கிறேன்.
  2 வருடத்திற்கு முன்பு நான் தொடக்கநிலை இறுதிதேர்வை முடித்தேன்.கார்த்திக் பரிட்ச்சையை சரியாக செய்யாததால் அவனும் நானும் வெவ்வேறு உயர்நிலை பள்ளிக்கு செல்லும்படி ஆகிவிட்டது.
  அதனால் நாங்கள் இருவரும் சந்திக்கும் நேரங்கள் குறைவாக அமைந்தது. நான் என் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு அவனை ஒதுக்க ஆரம்பித்தேன். கார்த்திக் என்னிடம் வந்து ஏண்டா என்னை ஒதுக்குகிறாய் என்று கேட்டான். நான் அதற்கு
  ‘தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
  நாவினால் சுட்ட வடு’
  என்பதை மறந்து நீ சரியாக படிக்கவில்லை. உன்னுடன் சேர்ந்தால் நானும் சரியாக படிக்கமாட்டேன் என்று என் பள்ளி நண்பர்கள் கூறினார்கள், அதனால் உன்னை ஒதுக்குகிறேன் என்று கூறிவிட்டேன்.
  அதை கேட்ட கார்த்திக் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகிவிட்டான். அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்ட்து. அவன் அவனுடைய அம்மாவிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறான். செல்வி அத்தை என்னை அழைத்தார். “அரவிந்த் இங்கே வா. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். சிறிது நேரம் கார்த்திக்கும், நீயும் நானும் காலாற நடந்து விட்டு வருவோம்” என்று கூறினார். நானும் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றேன்.
  செல்வி அத்தை என்னிடம் அரவிந்த் ”நீ கார்த்திக்கிடம் சேருவதில்லையாமே? அவன் சரியாக படிக்கவில்லையென்று கூறினியாமே? நீ அவ்வாறு கூறலாமா? அவன் உன் நண்பன் இல்லையா? அவன் படிக்க விட்டால் அவனை அப்படியே விடலாமா? அவனை படிக்க சொல்வது உன் கடமையல்லவா? நட்பு என்பது சிரித்து விளையாடுவதற்கு மட்டுமன்று, தவறு செய்யும் போது அதனைக் கண்டிப்பதாகும்.
  அதைத் தான் வள்ளுவர்,
  ”நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
  மேற்சென்று இடித்தற் பொருட்டு” என்று கூறியுள்ளார்” என்று கூறினார்.
  அதுமட்டுமில்லாமல் அவர்கள் நட்புக்கு இல்க்கணமாக வாழ்ந்த கோபெருஞ்சோழன், பிசிராந்தையார் கதையையும், கண்ணன், குசேலர் கதையையும் கூறினார்கள், மேலும், துன்பம் வருகையில் தோள் கொடுப்பதும் பழக பழக இனிமை தருவதும் நட்பு என்றும் கூறி எனக்கு நட்பின் மகத்துவத்தையும் அன்பின் ஆழத்தையும் புரிய வைத்தார்.
  நான் என்னுடைய தவறை உணர்ந்தேன். கார்த்திக்கின் குடும்பம் என் குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் பாசத்தையும் நினைத்து நான் அகமகிழ்ந்தேன். என்னுடைய கீழ்தரமான செயலை நினைத்து வெட்கமடைந்தேன்.
  என்னுடைய இச்செய்கையை பற்றி செல்வி அத்தை என் பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. என் பெற்றோருக்கு இச்சம்பவம் பற்றி எதுவும் தெரியாது. செல்வி அத்தையும், சிவராமன் மாமாவும் இன்முகம் மாறாமல் எப்பொழுதும் போலவே என் குடும்பத்தினருடன் பழகுகிறார்கள். அத்தையின் பெருந்தன்மையை நினைத்தால் என் மெய் சிலிர்க்கிறது.
  இவர்களை போல ஒரு அண்டைவீட்டார் கிடைத்ததற்கு நாங்கள் என்ன தவம் செய்தோமோ? என்று நினைத்து பார்க்கிறேன்.
  எங்களை போல நம் சிங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒற்றுமையுடனும் அன்புடனும் பழகினால் ஒரு நல்ல சமூதாயத்தை உருவாக்கமுடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
  அரவிந்தன்
  Unity Secondary School

Your email address will not be published.


*